Advertisment

Tamil News Highlights: திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலம்.

Tamil news today live, N Sankaraiah, TN Public Exam Time Table 2024, Tamilnadu Rains Today, India vs New Zealand Highlights– 16 November 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tiruvannamalai

Tamil news

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates 

கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலம்.

அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது. Credit Sun News Twitter

திருச்செந்தூரில் அபிஷேக கட்டணம் உயர்வு: வானதி சீனிவாசன் கண்டனம்
கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில், “திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும், 'கந்த சஷ்டி விழா' புகழ் பெற்றது.
உலகெங்கும் இருந்து பல லட்சக்கணக்கான முருகப் பக்தர்கள் இதற்காக திருச்செந்தூர் வருவார்கள். கந்த சஷ்டியின் 6 நாட்களும் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டுமே அருந்தி விரதம் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் இக்கோயிலில் தங்குவார்கள்.
இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான 'சூரசம்ஹாரம்' வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசன கட்டணங்களை, இந்து சமய அறநிலையத்துறை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
ரூ. 100 ஆக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ. 2,000 ஆகவும், ரூ. 100 ஆக இருந்த சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 1,000 ஆகவும், ரூ. 500 ஆக இருந்த அபிஷேக கட்டணம் ரூ. 3,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. இது முருகப் பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடவுளை தரிசிக்க ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது  பெரும் அநீதி. பக்தர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்.
பண்டிகைகள், திருவிழா காலங்களில் தனியார் பேருந்துகள், தனியார் வணிக நிறுவனங்கள் பல மடங்கு கட்டணங்களையும், விலையையும் உயர்த்தி மக்களிடம் முடிந்த அளவுக்கு கொள்ளை அடிக்கின்றன. அதுபோல, இந்து கோவில்களை மட்டும் தங்கள் பிடியில் வைத்துள்ள மதச்சார்பற்ற தமிழ்நாடு அரசு, பக்தர்களிடம் கொள்ளை அடிப்பதை ஏற்க முடியாது. இது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, ஆயிரக்கணக்கில் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஏழை, எளிய மக்கள் இலவசமாக தரிசிக்கும் வகையில் ஏற்பாடுகளை, திருச்செந்தூர் கோயில் நிர்வாகமும், இந்து சமய அறநிலைத்துறையும் செய்ய வேண்டும். லட்சக்கணக்கில் பக்தர்கள் குவியும் திருச்செந்தூரில் கழிவறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற பயிற்சி மருத்துவர்களுக்கு உரிமை - ஐகோர்ட் தீர்ப்பு

 அரசு மருத்துவர்கள் தேர்வில் வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்களைப் பெற பயிற்சி மருத்துவர்களுக்கும் உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருப்பூர் தாராபுரம் அருகே பெட்ரோல் டேங்கர் லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்து; 5 பேர் பலி

திருப்பூர் தாராபுரம் அருகே பெட்ரோல் டேங்கர் லாரி - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் சென்ற 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அலங்கியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அம்பாசமுத்திரம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் - இ.பி.எஸ் கண்டனம்

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பேருந்து ஊழியர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போரை இருப்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மசோதாக்களை திரும்ப அனுப்ப ஆளுனருக்கு உரிமை இல்லை: மனோ தங்கராஜ்

சட்ட மசோதக்களை திருப்ப அனுப்ப ஆளுநருக்கு தார்மீக உரிமை இல்லை எனவும், இது மக்களுக்கான அரசு அதில் ஆளுநர் தலையிட எந்த அதிகாரமும் இல்லை எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

தென்காசி, குமரி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தென்காசி, குமரி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

அவசர கூட்டத்தொடரில் மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்படும்: அப்பாவு பேட்டி

சனிக்கிழமை கூடும் அவசர கூட்டத்தொடரில் மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் திருத்தம் செய்யாமல், மீண்டும் தாக்கல் செய்ய உள்ளதாக சபாநாயகர் அப்பாவு பேட்டி

குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்: கூட்டுறவுத்துறை உத்தரவு

 "நியாயவிலை கடைகள் உள்ளே, வெளியே சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும்" "தரம் குறைந்த அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது" "ரேஷன் கடை ஊழியர்கள் கனிவோடு, மரியாதையாக, கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்" - ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவு

சென்னை: தியாகி சங்கரய்யாவுக்கு அரசு மரியாதை

சென்னை, பெசன்ட் நகர் மின் மயானத்தில் தியாகி சங்கரய்யாவுக்கு அரசு மரியாதை. 10 ஆயுதப்படை காவல்துறையினர் 30 குண்டுகள் முழங்க சங்கரய்யாவுக்கு மரியாதை. 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அரசு சார்பில் இறுதி அஞ்சலி

 அ.தி.மு.க பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த விதித்த தடையை எதிர்த்து ஓ.பி.எஸ் மேல்முறையீடு வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த  விதித்த தடையை நீக்க கோரி ஓபிஎஸ் மேல் முறையீடு. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். கட்சியில் இருந்து நீக்கியதற்கு தடை விதிக்க மறுத்து ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்- ஓ.பி.எஸ். தரப்பு. உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய வழக்கில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது- ஓ.பி.எஸ். தரப்பு. அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த விதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பி.எஸ். தரப்பு

18-ம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டம்

தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் வரும் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு 

10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர் மாளிகை. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த மசோதாக்கள் தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைப்பு

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு. தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்.மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டம். தொடர்ந்து கால் மரத்துப் போவதாக செந்தில் பாலாஜி தெரிவித்த நிலையில் மீண்டும்  ஆஞ்சியோ மேற்கொள்ள முடிவு

வங்கக் கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல் 

வங்கக் கடலில் நிலை  கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற நிலையில் நாளை புயலாக மாற வாய்ப்பு .மாலத்தீவு பரிந்துரைத்த மிதிலி என்று புயலுக்கு பெயர் வைக்கப்பட்டள்ளது

குழந்தைகளுடன் விளையாடும் பிரதமர் மோடி

குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடும் பிரதமர் மோடி. ஒரு நாணயத்தை வைத்து 2 குழந்தைகளுக்கு மேஜிக் கற்றுக் கொடுத்த பிரதமர் மோடி.

பிரதமர் மோடியின் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது பாஜக. பிரதமர் குழந்தைகளுடன் இருக்கும் பொழுது குழந்தையாகவே மாறுகிறார் எனவும் பதிவு.வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை வெளியிடவில்லை

தொண்டாமுத்தூர் கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைக் கூட்டம்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மலை அடிவார கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைக் கூட்டம். தோட்டங்களில் புகுந்து வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தும் யானைகள். இரவில் இருந்து தற்போது வரை யானைகளை விரட்டும் பணியில் வனத்துறை தீவிரம். 3 குழுக்களாக பிரிந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறை. வனத்தில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியே வருவதால் பெரும் பீதியில் பொதுமக்கள்

மத்திய மேற்கு வங்கக் கடலில் நாளை புயல் உருவாகிறது

மத்திய மேற்கு வங்கக் கடலில் நாளை புயல் உருவாகிறது - இந்திய வானிலை மையம். மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்

சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் (84) காலமானார்

இயக்குநரும் நடிகருமான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் (84) பழையூர்பட்டியில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

உயிரிழந்த பாண்டியனின் இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு பழையூர்பட்டியில் உள்ள அவரது வீட்டில் நடைபெற உள்ளது. Credit Sun News Twitter

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

200ML  ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.50 காசுகள் உயர்வு

வழக்கமாக ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் வரும் 200ML ஆவின் பால் இன்று முதல் வயலட் நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும்- ஆவின் நிர்வாகம்

10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை

செய்முறை தேர்வு தேதி...

10th Std : 23-2-2024 - 29-2-2024

11th Std  : 19-2-2024 - 24-2-2024

12th Std  : 12-2-2024 - 17-2-2024

பொதுத் தேர்வு தேதி....

10th Std: 26-3-2024 - 8-4-2024           

11th Std: 4-3-2024 - 25-3-2024

12th Std: 1-3-2024 - 22-3-2024

தேர்வு முடிவுகள் வெளியீடு..

10th Std : 10-5-2024

11th Std : 14-5-2024

12th Std : 6-5-2024

சென்னையில் வருமான வரித்துறை சோதனை

சென்னையில் நுங்கம்பாக்கம், மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில், வசுத்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நீலகண்டன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

மத்திய மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது -இந்திய வானிலை மையம்

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

காவிரி கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது

10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்.

என்.சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் இன்று தகனம்

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவின் (102) உடல், சென்னை, பெசன்ட் நகரில் இன்று காலை 11 மணிக்கு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

இறுதிச் சடங்கில், சீதாராம் யெச்சூரி, கேரள அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது இந்திய அணி

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.

நடப்பு 50 ஓவர் உலககோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல், தொடர்ந்து 10வது வெற்றியை பதிவு செய்துள்ளது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி.

பயிர்க் காப்பீடு செய்ய அவகாசம் நீட்டிப்பு

சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்வது நேற்றுடன் முடிவடைந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டில் பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 22ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழை பெய்யும்- சென்னை வானிலை ஆய்வு மையம்

வணிக சிலிண்டர் விலை 57 ரூபாய் குறைந்தது

19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 57 ரூபாய் குறைந்தது.

ரூ.1999.50 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 57 ரூபாய் குறைந்து, 1942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதிமுகவால் தனித்து வெற்றி பெற முடியாது- ஓபிஎஸ் பேட்டி

பாஜக இல்லாமல் அதிமுக- வால் தனித்து வெல்ல முடியாது. ஒன்று பட்டால் தான் தேர்தல்களில் வெற்றி பெற முடியும். இபிஎஸ்-க்கு நான் தூது அனுப்பியதாக கூறுவது  வடிகட்டிய பொய்.

நானும், டிடிவி தினகரனும் இணைந்து செயல்படுகிறோம். சசிகலா எங்களுடன் வருவது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும்- ஈரோட்டில் ஓபிஎஸ் பேட்டி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment