Advertisment

Tamil news today : முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் மரணம்

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news today : முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் மரணம்

Petrol and Diesel Price:

Advertisment

 சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

மழை – விடுமுறை

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஆட்சியர் அமர்குஷ்வாஹா அறிவிப்பு.

விளக்கம் வேண்டும்: நயன் –விக்கி

வாடகை தாய் விவகாரம் குறித்து நேற்றைய தினத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் நயன் – விக்கி விளக்கம் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்தே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடியும் என்ற சட்டம் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.



  • 21:29 (IST) 11 Oct 2022
    இந்தி திணிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் - பினராயி விஜயன்

    “அரசியலமைப்பில் உள்ள அனைத்து தேசிய மொழிகளையும் ஒன்றிய அரசு ஊக்குவிக்க வேண்டும். உயர்கல்வியில் இந்தியை மட்டுமே பிரதான மொழியாக திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தி திணிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்” என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.



  • 21:15 (IST) 11 Oct 2022
    விரிவுரையாளர்கள் பணி நீக்கம் உண்மையில்லை - உயிர்கல்வித்துறை முதன்மை செயலாளர் விளக்கம்

    அரசு கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், கௌரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. கல்லூரி கல்வி இயக்குனர் பிறப்பித்ததாக வெளியான தகவல் பொய்யானது என்று உயிர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.



  • 20:25 (IST) 11 Oct 2022
    பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு; 13 கிராம மக்கள் நடைபயணம் அறிவிப்பு

    பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வரும் 17ம் தேதி சட்டப்பேரவையை நோக்கி நடைபயணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.



  • 19:51 (IST) 11 Oct 2022
    கொலை வழக்குகளை விசாரிக்க தனிப்பிரிவு அமைக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை

    கொலை வழக்குகளை விசாரிக்க தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பரிந்துரை செய்துள்ளது.



  • 19:49 (IST) 11 Oct 2022
    கோடநாடு வழக்கு தொடர்பான ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைப்பு

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது.



  • 19:46 (IST) 11 Oct 2022
    அ.தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்துவேன் - இ.பி.எஸ் சபதம்

    எடப்பாடி பழனிசாமி: உயிர் உள்ள வரை இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்; அ.தி.மு.க-வை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தே தீருவேன் என உளப்பூர்வமாக உறுதி ஏற்கிறேன் - அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழன்சாமி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.



  • 19:44 (IST) 11 Oct 2022
    முலாயம்சிங் யாதவ் உடலுக்கு டி.ஆர் பாலு, உதயநிதி நேரில் அஞ்சலி

    முலாயம்சிங் யாதவ் உடலுக்கு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.



  • 19:41 (IST) 11 Oct 2022
    இந்தியை பயிற்று மொழியாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு சீமான் கண்டனம்

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும். ஆரிய மொழியான இந்தியைத் திணிப்பதன் மூலம் இந்தியாவி இந்து நாடாகக் கட்டமைக்க இந்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று கூறினார்.



  • 18:58 (IST) 11 Oct 2022
    இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி

    இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய வர்த்தகத்தில் 1 சதவீதத்துக்கும் அதிகமாக சரிவை சந்தித்தன.



  • 18:45 (IST) 11 Oct 2022
    தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி வென்றது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    ஏற்கனவே டி20 தொடரையும் இந்திய அணி வென்றிருந்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு ஆட்டத்தில் மட்டும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.



  • 18:42 (IST) 11 Oct 2022
    உஜ்ஜைனி கோயிலில் பிரதமர் மோடி பூஜை

    உஜ்ஜைனி ஸ்ரீ மஹாகாலேஷ்வர் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு பூஜை நடத்தினார்.



  • 18:40 (IST) 11 Oct 2022
    தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும் - சீமான் எச்சரிக்கை

    இந்தி என்ற ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிறுத்த முற்பட்டால் தமிழ்நாட்டில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



  • 18:29 (IST) 11 Oct 2022
    ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சின்னம் ஒதுக்கீடு

    மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணிக்கு 'வாள் மற்றும் கேடயம்' சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

    முன்னதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான அணிக்கு சுடர்விடும் ஜோதி தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது.

    மும்பை அந்தேரி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் தனித்தனியே போட்டியிடுகின்றன.



  • 18:07 (IST) 11 Oct 2022
    டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நவம்பர் 15 முதல் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

    தொடர்ந்து, நவம்பர் 15 முதல் இரு மாதங்களுக்கு அமல்படுத்தி, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கேட்டுள்ளது.



  • 17:51 (IST) 11 Oct 2022
    பாலின் தரம் சோதனை.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

    உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யப்படும் பாலின் தரத்தை பரிசோதிக்கும் புதிய தொழில்நுட்பத்தை விரைந்து அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



  • 17:39 (IST) 11 Oct 2022
    சட்டப்பேரவை செயலருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

    சட்டப்பேரவை செயலாளருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    அந்தக் கடிதத்தில், “எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற அடிப்படையில் ஆர்.பி.உதயகுமாரை அலுவல் ஆய்வு குழுவில் அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

    இந்தக் கடிதத்தை சட்டமன்ற அதிமுக துணை கொறடா சு.ரவி, சட்டப்பேரவை செயலாளர் அலுவலகத்தில் வழங்கினார்



  • 17:29 (IST) 11 Oct 2022
    ட்ரெண்ட்ஸ் இழப்பீடு வழங்க உத்தரவு

    உள்ளாடையை எம்.ஆர்.பி., விலையை விட கூடுதல் விலைக்கு விற்ற ட்ரெண்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் இழப்பீடு வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    எம்.ஆர்.பி. விலை 260க்கு விற்க வேண்டிய உள்ளாடையை ட்ரெண்ட்ஸ் நிறுவனம் ரூ.278க்கு விற்பனை செய்துள்ளது. பாதிக்கப்பட்ட சிவபிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

    இதில் ரூ.2 லட்சம் தமிழக அரசுக்கும், ரூ.10 ஆயிரம் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கும் வழங்கப்பட உள்ளது.



  • 17:21 (IST) 11 Oct 2022
    கேரளாவில் தமிழக பெண் உள்பட 2 பேர் நரபலி

    கேரளாவில் தமிழக பெண் உள்பட இரண்டு பேர் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இடைத் தரகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • 17:02 (IST) 11 Oct 2022
    சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்

    சென்னை அண்ணாசாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் நோக்கில் மனித சங்கிலி பேரணி நடைபெறுகிறது.

    இதில், கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முதல் ஆயிரம் விளக்கு மசூதி வரை மனித சங்கிலி பேரணி நடைபெறுகிறது



  • 16:47 (IST) 11 Oct 2022
    உ.பி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உடல் தகனம்

    உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உடல் இதாவா மாவட்டத்தில் உள்ள சைபை பகுதியில் தகனம் செய்யப்பட்டது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்



  • 16:31 (IST) 11 Oct 2022
    கேரளாவில் 2 பெண்களின் தலையை துண்டித்து நரபலி

    கேரளா, எர்ணாகுளம் பகுதியில் 2 பெண்களின் தலையை துண்டித்து நரபலி கொடுத்த விவகாரத்தில், குற்றவாளிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்ட உடல்களை எடுக்க தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.



  • 16:03 (IST) 11 Oct 2022
    சென்னை ஐகோர்ட் வளாகத்திற்குள் ஒருவர் தீக்குளிப்பு - படுகாயம்

    சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் ஒருவர் தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுப்பட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். தீக்குளித்தவர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என போலீசார் தெரிவித்துள்ளனர். தன் மகனுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பதாக அவர் புகார் தெரிவித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்



  • 15:42 (IST) 11 Oct 2022
    உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தமிழ் தேர்வு கட்டாயம் - தேர்வு வாரியம் அறிவிப்பு

    உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு தமிழ் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது தமிழில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    மொத்தம் 1,021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை நியமிக்க மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், பிற மாநிலத்தவர்களை தவிர்க்கும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது



  • 15:26 (IST) 11 Oct 2022
    அ.தி.மு.க தொண்டர்களுக்கு இடைக்கால பொதுச் செயலாளர் இ.பி.எஸ் கடிதம்

    அ.தி.மு.க தொண்டர்களுக்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் அ.தி.மு.க.,வின் 51வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    மேலும், என் உயிர் உள்ளவரை அதிமுகவின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைத்தே தீருவேன். அரசியல் பயணம் கரடுமுரடானது என்ற ஜெயலலிதாவின் வாக்கை பின்பற்றுவேன் என்றும் இ.பி.எஸ் கூறியுள்ளார்



  • 15:14 (IST) 11 Oct 2022
    தமிழகத்தில் மதுவிலக்கு இதுவரை சாத்தியமாகவில்லை – ஐகோர்ட் கருத்து

    பார் உரிமம் வழங்குவது தொடர்பாக ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய டெண்டர் வெளியிட்டு, அதை திறக்கும்போது அனைத்து டாஸ்மாக் மையங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் மதுவிலக்கு இதுவரை சாத்தியமாகவில்லை என்றும் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது



  • 14:59 (IST) 11 Oct 2022
    செந்தில் பாலாஜி பேட்டி

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியத்துறை தயாராக பேரிடர் காலத்தில் மின்கம்பங்கள் சேதம் அடைந்தால், அதை சீரமைக்க புதிய கம்பங்கள் உள்ளன, மழை காலத்தில் சீரான மின் விநியோகம் செய்ய போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.



  • 14:27 (IST) 11 Oct 2022
    பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கைது

    சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் தாலி கட்டிய விவகாரத்தில், 2 நாட்களாக விசாரணை நடைபெற்ற நிலையில் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் மாணவனை போலீசார் கைது செய்தனர்.



  • 14:04 (IST) 11 Oct 2022
    ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

    அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் ஆலோசிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் 2வது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.



  • 13:46 (IST) 11 Oct 2022
    அதிமுக வழக்கு

    அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்ககூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது



  • 13:08 (IST) 11 Oct 2022
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிப். மாதம் திறப்பு

    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக ரூ. 400 கோடி செலவில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.



  • 12:53 (IST) 11 Oct 2022
    கேரளாவில் 2 பெண்களின் தலையை துண்டித்து நரபலி

    கேரளா, எர்ணாகுளம் பகுதியில் 2 பெண்களின் தலையை துண்டித்து நரபலி

    ஏஜென்ட் உட்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை



  • 12:41 (IST) 11 Oct 2022
    சொத்துவரி முன்வந்து செலுத்துவோருக்கு 5% சலுகை

    சென்னை மாநகராட்சியில் சொத்துவரி முன்வந்து செலுத்துவோருக்கு 5% சலுகை - சென்னை மாநகராட்சி அறிவிப்பு



  • 12:25 (IST) 11 Oct 2022
    16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் இடி, மின்னலுடன் கூட மழைக்கு வாய்ப்பு

    திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை. கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

    திருப்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 12:05 (IST) 11 Oct 2022
    கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு

    கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை ஆவணங்கள் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவிடம் ஒப்படைப்பு

    ஏற்கனவே தனிப்படை போலீசார் 316 பேரிடம் நடத்திய விசாரணை ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது



  • 11:43 (IST) 11 Oct 2022
    புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

    புதுச்சேரியில் குருப் 'பி' மற்றும் 'சி' பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

    குரூப் 'பி' மற்றும் 'சி' ஊழியர்களுக்கு ரூ. 6,908, முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ. 1,184 போனஸ் - புதுச்சேரி அரசு



  • 11:41 (IST) 11 Oct 2022
    உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பெயர் பரிந்துரை

    உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பெயர் பரிந்துரை

    டி.ஒய்.சந்திர சூட் பெயரை பரிந்துரைத்தார் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித்

    தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் நவம்பர் 8ம் தேதி ஓய்வு பெறுகிறார்



  • 11:03 (IST) 11 Oct 2022
    என்ஐஏ சோதனை

    ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை சட்ட விரோதமாக தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கு



  • 10:26 (IST) 11 Oct 2022
    ஆட்டோக்கள் செல்ல தடை

    தீபாவளியால் சென்னை தி.நகர் போக்குவரத்தில் அதிரடி மாற்றம் . அக்.24 வரை ஆட்டோக்கள் செல்ல தடை



  • 10:24 (IST) 11 Oct 2022
    ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்த இந்தியா

    உக்ரைன் மீதான வரைவு தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த ரஷ்யா கோரிக்கை. ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இந்தியா வாக்களிப்பு சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா உட்பட 24 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.



  • 09:12 (IST) 11 Oct 2022
    மிதமான மழை

    திருச்செங்கோடு, ஈரோடு, நாமக்கல் ஆகிய பகுதிகளில் கனமழை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை



  • 08:50 (IST) 11 Oct 2022
    10 குழந்தைகள் காயம்

    கடலூர், விருத்தாசலம் அருகே ஆதனூரில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து 10 குழந்தைகள் காயம் அடைந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்



  • 08:03 (IST) 11 Oct 2022
    முலாயம் சிங் யாதவ் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு

    உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பல மாநில முதல்வர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்கின்றனர்



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment