பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 94-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ராகுல் ராஜினாமா ஏற்பு
வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட மக்களவை செயலகம் அதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jun 19, 2024 23:54 ISTயு.ஜி.சி நெட் புதிய தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் - மத்திய அரசு
யு.ஜி.சி நெட் தேர்வு செயல்முறையின் வெளிப்படைத் தன்மை, புனிதத்தை உறுதி செய்யௌம் நோக்கில் யு.ஜி.சி-நெட் 2024 தேர்வு ரத்து; புதிய தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
Jun 19, 2024 23:50 ISTகல்யாணராமன் பா.ஜ.க-வில் இருந்து ஓராண்டுக்கு நீக்கம்
பா.ஜ.க மாநில தலைமை பற்றி ஆதாரமின்றி சமூக வலைதளங்களில் அவதூறை பரப்பி வருவதால் சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் ஓராண்டுக்கு கட்சி பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதே போல, கட்சிக்கு களங்க விளைவிக்கும் செயலில் ஈடுபட்டுவருவதால் திருச்சி சூர்யா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
-
Jun 19, 2024 23:45 ISTதிருச்சி சூர்யா பா.ஜ.க-வில் இருந்து மீண்டும் நீக்கம்
பா.ஜ.க-வில் இருந்து திருச்சி சூர்யா மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க-வின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக, 2வது முறையாக தமிழக பா.ஜ.க அதிரடி முடிவெடுத்துள்ளது.
-
Jun 19, 2024 22:49 ISTகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: தவறை நியாயப்படுத்த விரும்பவில்லை - அமைச்சர் எ.வ. வேலு
அமைச்சர் எ.வ. வேலு பேட்டி: “கள்ளக்குறிச்சியில் விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. விஷச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் தவறை நியாயப்படுத்த விரும்பவில்லை. மெத்தனமாக செயல்பட்டதால் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
-
Jun 19, 2024 22:38 ISTமெத்தனால் கலந்த விஷச்சாராயம் அருந்தியுள்ளனர் - அமைச்சர் எ.வ. வேலு
அமைச்சர் எ.வ. வேலு பேட்டி: “கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தோம்; கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில் 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
-
Jun 19, 2024 22:34 ISTகள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அமைச்சர்கள் எ.வ. வேலு, மா.சுப்பிரமணியன் வருகை
கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து வருகின்றனர். விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 80 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிக்சை விபரங்கள் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர்கள் கேட்டு வருகின்றனர்.
-
Jun 19, 2024 21:35 ISTசமூகத்தைப் பாழ்படுத்தும் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் - மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
-
Jun 19, 2024 21:35 ISTசமூகத்தைப் பாழ்படுத்தும் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் - மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
-
Jun 19, 2024 20:22 ISTநெல் கொள்முதல் 1 குவிண்டால் விலை ரூ.2,300 ஆக அதிகரிப்பு
நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 117 உயர்த்தி ரூ. 2,300 ஆக மத்திய அரசு அறிவித்துள்ளது. நெல், ராகி, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட 14 வகை பயிர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
Jun 19, 2024 20:18 ISTகள்ளச்சாராய விவகாரம் சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைப்பு - ஸ்டாலின் உத்தரவு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கள்ளச்சாரய விகாரத்தை தீர விசாரிக்கவும், மேல் நடவடிக்கைக்காககவும் சி.பி.சி.ஐ.டி விசாரிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
-
Jun 19, 2024 20:15 ISTகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Jun 19, 2024 19:49 ISTகள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத்தை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
-
Jun 19, 2024 19:45 ISTகள்ளக்குறிச்சி விரையும் அமைச்சர் எ.வ.வேலு
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த குடும்பத்தினரை சந்திக்க மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களை காண கள்ளக்குறிச்சி விரைகிறேன். முதலமைச்சரின் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி விரைகிறேன் என அமைச்சர் எ.வ.வேலு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
-
Jun 19, 2024 19:23 ISTகள்ளக்குறிச்சி ஆட்சியர் பணியிடமாற்றம்; எஸ்.பி தற்காலிக பணி நீக்கம்
கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் குடித்ததாக கூறப்படும் விவகாரத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், ஆட்சியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.பி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சியில் 10 பேர் உயிரிழந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி தமிழநாடு அரசு உத்தரவிட்டுள்ளது
-
Jun 19, 2024 18:57 ISTகள்ளக்குறிச்சி விவகாரம்; பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பிரவீன், சேகர், மணிகண்டன், சுரேஷ், தனக்கொடி உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 14 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10-க்கும் மேற்பட்டோர் நிலை கவலைக்கிடமாக உள்ளது
-
Jun 19, 2024 18:20 ISTசந்துரு வழங்கிய அறிக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளன - அண்ணாமலை
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழங்கிய அறிக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்தினால் பள்ளி, கல்லூரிகளில் மேலும் ஜாதி ரீதியான பிரச்னைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
-
Jun 19, 2024 17:53 ISTசசிகலா என்ன வேலையா செய்கிறார்? ரீ என்ட்ரி கொடுக்க? – இ.பி.எஸ்
சசிகலா என்ன வேலையா செய்கிறார்? 3 வருடம் வேலையில் இருந்து நின்றுவிட்டு, மறுபடி வேலைக்குச் சேர்வதை போன்று ரீ என்ட்ரி கொடுக்க? என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் பேட்டி அளித்துள்ளார்
-
Jun 19, 2024 17:53 ISTசசிகலா என்ன வேலையா செய்கிறார்? ரீ என்ட்ரி கொடுக்க? – இ.பி.எஸ்
சசிகலா என்ன வேலையா செய்கிறார்? 3 வருடம் வேலையில் இருந்து நின்றுவிட்டு, மறுபடி வேலைக்குச் சேர்வதை போன்று ரீ என்ட்ரி கொடுக்க? என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் பேட்டி அளித்துள்ளார்
-
Jun 19, 2024 17:31 ISTமத்திய அமைச்சராகலாம் என்ற சுயநலத்தில் பா.ஜ.க.,வில் இணைந்து போட்டியிட்டார் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்
அ.தி.மு.க.,வை எதிர்த்தால் ஓ.பி.எஸ் நிலைமை தான். இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓ.பி.எஸ்-யை எப்படி கட்சியில் சேர்க்க முடியும். அ.தி.மு.க.,விற்கு எப்போதுமே விசுவாசம் இல்லாத நபர் ஓ.பி.எஸ். மத்திய அமைச்சராகலாம் என்ற சுயநலத்தில் பா.ஜ.க.,வில் இணைந்து போட்டியிட்டார். அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓ.பி.எஸ் நிலைமை தான் ஏற்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்
-
Jun 19, 2024 17:14 ISTகிளாம்பாக்கம் - திருவள்ளூர் இடையே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை அறிமுகம்
கிளாம்பாக்கம் - திருவள்ளூர் இடையே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருமுடிவாக்கம் சிட்கோ, பூந்தமல்லி பேருந்து நிலையம், திருமழிசை, மணவாளன் நகர் ஆகிய பகுதிகள் வழியாக இந்தப் பேருந்து இயக்கப்பட உள்ளது
-
Jun 19, 2024 16:29 ISTகள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 15 பேர் அனுமதி : கள்ளச்சாராயம் தான் காரணமா?
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் ஏற்கனவே 8 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 7 பேர் என மொத்தம் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் காவல் துறையினரால் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது உடற்கூராய்வின் முடிவிலேயே இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு முதலில் காது கேட்காமல் போனதாகவும், அடுத்து கண் பார்வை பறிபோனதாகவும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அரசு தரப்பில் இணை நோய் காரணமாக உயிரிழப்பு என்று கூறிய நிலையில், சிலருக்கு எந்தவித நோய்களும் இல்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
Jun 19, 2024 16:27 ISTலைகாவுக்கு எதிராக விஷால் வழக்கு : சமாதான பேச்சுவார்த்தைக்கு உத்தரவு
ஜிஎஸ்டி நிலுவைத் தொகையான ரூ.5.24 கோடியை வழங்க லைகா நிறுவனத்திற்கு உத்தரவிடக் கோரிய நடிகர் விஷாலின் வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பக் கோரி லைகா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நடிகர் விஷால் தாக்கல் செய்த வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jun 19, 2024 16:23 ISTஇலங்கையில் மீனவர்கள் கைது : மத்திய அமைச்சருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளர்.
-
Jun 19, 2024 15:41 ISTஅமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40-வது முறையாக நீடிப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40வது முறையாக ஜூன் 25 வரை நீடிக்கப்பட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14 ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனிடையே தற்போது அவரின் நீதிமன்ற காவல் 40வது முறையாக நீடிக்கப்படுவதாக நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
-
Jun 19, 2024 14:58 ISTஎடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் உயிரிழந்தது கவலையளிக்கிறது. ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
-
Jun 19, 2024 14:28 ISTதமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தி.மலை, கள்ளக்குறிச்சியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Jun 19, 2024 14:26 ISTஅன்புமணி வேட்புமனு தாக்கல்
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் NDA கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.அன்புமணி தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்
-
Jun 19, 2024 13:56 ISTகள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி சமய் சிங் மீனா பேட்டி
கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரத்தைச் சேர்ந்த 3 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
முழு விசாரணை முடிந்து, உடற்கூராய்வு அறிக்கை வெளிவரும் வரை இது போன்ற செய்திகளை நம்பி பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி சமய் சிங் மீனா தகவல்
-
Jun 19, 2024 13:56 ISTதமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
நீட் தேர்வை பொதுமக்கள் ஏற்றுக் கொண்டார்கள். நீட் தேர்வில் சில குளறுபடிகள் நடந்துள்ளது. அந்த குளறுபடிகள் தடுக்கப்படும் என மத்திய அரசு தெளிவாக சொல்லி உள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு மூலமாக பல பேர் பயனடைந்து வருகிறார்கள்.
யார் நினைத்தாலும் நீட்டை தவிர்க்க முடியாது இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. பிரச்னைகள் களையப்பட வேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
- சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
-
Jun 19, 2024 13:54 ISTகேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ராகுல்காந்தி
#WATCH | டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ராகுல்காந்தி#SunNews | #RahulGandhi | #HBDRahulGandhi | @RahulGandhi pic.twitter.com/T2zWjotopd
— Sun News (@sunnewstamil) June 19, 2024 -
Jun 19, 2024 13:26 ISTவிவசாயிகளை கண்ணை இமை காப்பது போல் காப்பாற்றியது அதிமுக அரசு
தமிழ்நாட்டு விவசாயிகளை கண்ணை இமை காப்பது போல் காப்பாற்றியது அதிமுக அரசு. 2018-ம் ஆண்டு கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்களை அனுப்பி நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு புயலின் தடமே இல்லாமல் பார்த்துக் கொண்டது அதிமுக அரசு
- நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
-
Jun 19, 2024 13:26 ISTகிருஷ்ணசாமி பேட்டி
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டேன் இதுவரை எனக்கு நேரம் கொடுக்கவில்லை.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் சட்டவிரோதமாக கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்ட இருக்கிறார்கள். சட்டப்படியாக 2028-ம் ஆண்டு தான் தொழிலாளர்களின் பணி நிறைவு பெற உள்ளது.
சென்னையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி
-
Jun 19, 2024 13:22 ISTநீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தல்
பின்லாந்தில் நடைபெறும் பாவோ நுர்மி சர்வதேச தடகள தொடரில் இந்தியாவைச் சேர்ந்த ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
-
Jun 19, 2024 12:57 ISTகள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழப்பு . 10க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி .
-
Jun 19, 2024 12:56 ISTமாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வெளியேறக் கூடாது
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அங்கிருந்து, அவர்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
-
Jun 19, 2024 12:17 ISTஅண்ணாமலை தலைமையில் கட்சியின் மையக்குழு கூட்டம் தொடங்கியது
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் மையக்குழு கூட்டம் தொடங்கியது. சென்னை, தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் ஆலோசனை கூட்டம் தமிழக பாஜகவின் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்பு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்பு.
-
Jun 19, 2024 12:11 ISTஅ.தி.மு.க-வுக்கும், பா.ஜ.க-வுக்கும் ஒட்டும், உறவும் இல்லை
அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் ஒட்டும், உறவும் இல்லை. காங்கிரஸ் கட்சியை கட்டி காக்க ராகுல்காந்தி விடா முயற்சி எடுத்து வருகிறார்" "ராகுல் காந்திக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் - மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.
-
Jun 19, 2024 11:21 ISTதி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
Jun 19, 2024 10:47 ISTஜெகதீப் தன்கருக்கு திமுக எம்.பி கடிதம்
தன்னிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சிஐஎஸ்எப் பணியாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு திமுக எம்பி அப்துல்லா கடிதம்
-
Jun 19, 2024 10:34 ISTதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு. ஒரு கிராம் தங்கம் ரூ.6,690க்கும், சவரன் ரூ.53,520க்கும் விற்பனை
-
Jun 19, 2024 10:34 ISTபல்கலை. போலி சான்றிதழ் தயாரித்த கும்பல் கைது
சிதம்பரத்தில், பல்வேறு பல்கலைக் கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ் தயாரித்த கும்பல் கைது
கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ் தயாரித்த தீட்சிதர் உட்பட இருவர் கைது
5,000க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள் அச்சிட்டு வழங்கியது கண்டுபிடிப்பு
2 கம்ப்யூட்டர்கள், லேப்டாப், பிரிண்டர் செல்போன் உள்ளிட்டவைகள் பறிமுதல்
-
Jun 19, 2024 10:33 ISTராகுலுக்கு ம.நீ.க தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து
நண்பர் ராகுல்காந்திக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். இரக்கம், பெருந்தனையுடன் தொடர்ந்து வழிநடத்தி உங்கள் நம்பிக்கையான அன்பு மற்றும் நல்லிணக்கத்தை பரப்புங்கள் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பதிவு
-
Jun 19, 2024 09:44 ISTகேப்டன் பொறுப்பில் இருந்து வில்லியம்சன் விலகல்
நியூசிலாந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் வில்லியம்சன்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் வில்லியம்சன். டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து நியூசிலாந்து அணி வெளியேறிய நிலையில் வில்லியம்சன் விலகினார். 2024-25-ம் ஆண்டிற்கான நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்தும் வில்லியம்சன் விலகல்
-
Jun 19, 2024 09:08 ISTராகுல் பிறந்தநாள்: ஸ்டாலின் வாழ்த்து
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
நாட்டு மக்கள் மீதான உங்களது அர்ப்பணிப்பு, உங்களை உயரிய இடத்திற்கு அழைத்து செல்லும். நீங்கள் தொடர்ந்து முன்னேறவும், வெற்றியடையவும் வாழ்த்துகள்- ராகுல்காந்தி பிறந்தநாளுக்கு ஸ்டாலின் வாழ்த்து
-
Jun 19, 2024 08:48 IST12-ம் வகுப்பு துணைத் தேர்வு: இன்று முதல் ஹால் டிக்கெட்
12-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதுபவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். செய்முறை தேர்வு தேதி குறித்த விவரத்தை முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிய வேண்டும்.
-
Jun 19, 2024 08:44 ISTசூப்பர் 8 சுற்று போட்டிகள் இன்று தொடக்கம்
டி20 உலகக்கோப்பை தொடரில், சூப்பர் 8 சுற்று போட்டிகள் இன்று முதல் தொடக்கம். முதல் போட்டியில் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை
-
Jun 19, 2024 07:55 ISTகாஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Jun 19, 2024 07:55 IST2வது நாளாக 26 விமான சேவைகள் பாதிப்பு
சென்னை விமான நிலையத்தில், 2வது நாளாக 26 விமான சேவைகள் பாதிப்பு
சென்னையில் நள்ளிரவில் சூறைக்காற்று இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில், 2வது நாளாக 26 விமான சேவைகள் பாதிப்பு. 12 வருகை விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. 14 புறப்பாடு விமானங்கள் தாமதாக புறப்பட்டு சென்றன.
கோழிக்கோடு, கோவை, மதுரை, டெல்லி, கோலாலம்பூர், மும்பை ஆகிய 6 விமானங்கள் தரையிறங்க முடியாமல் திணறல்
-
Jun 19, 2024 07:51 ISTசென்னை மற்றும் புறநகரில் கனமழை
சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை. சென்னை மற்றும் புறநகரில் கனமழை
தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, பம்மல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை. இரவில் திடீரென பெய்து வரும் மழையால் வாகன ஓட்டிகள் அவதி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.