scorecardresearch

Tamil news today : நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியிலிருந்து 3வது நாள் நடை பயணத்தை துவங்குகிறார் ராகுல்

Tamil Nadu News, Tamil News , Petrol price Today – 08 Sep 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil news today : நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியிலிருந்து 3வது நாள் நடை பயணத்தை துவங்குகிறார் ராகுல்

பெட்ரோ- டீசல் விலை

பெட்ரோல் – டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோ ரூ.102.63-க்கும் டீசல் ரூ.94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நீட் தேர்வு மாணவி தற்கொலை

நேற்று நள்ளிரவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. ராஜஸ்தானைச் சேந்த தனிஷ்கா பிடித்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், திருவள்ளூர் : அம்பத்தூர், சோழபுரம் பகுதியில் லக்ஷனா ஸ்வேதா(19) என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் நாள்

இந்திய ஒற்றுமை பயணம்- 2வது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி. பயணத்தை தொடங்கு முன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் ராகுல்காந்தி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
23:22 (IST) 8 Sep 2022
பிரிட்டன் ராணி எலிசபெத் மரணம் : பக்கிங்காம் அரண்மனை தகவல்

உடல்நலக்குறைவால் பண்ணை வீட்டில் சிகிச்சை பெற்றுவந்த பிரிட்டன் ராணி எலிசபெத் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பால்மோரல் அரண்மனையில் அவரது உயிர்பிரிந்ததாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

20:55 (IST) 8 Sep 2022
டி20 போட்டிகளில் முதல் சதம் : சாதனை படைத்த விராட்கோலி

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கான் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விராட்கோலி டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

20:50 (IST) 8 Sep 2022
புதிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறுகிறோம் – பிரதமர் மோடி

ஆங்கிலேயர் ஆதிக்க காலத்தை விட்டு விலகி புதிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறுகிறோம். நேதாஜியை உலகமே தலைவர் என்று பாராட்டியது. நேதாஜியின் வாழக்கை சாகசங்கள் நிறைந்தது. இந்த கேட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அலங்கரிப்பது வலிமையாக பாரததத்திற்கு உதாரணம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

20:10 (IST) 8 Sep 2022
மதுரை மாநாட்டு மையத்தில் கலையரங்கம் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

தமுக்கம் மதுரை மாநாட்டு மையத்தில் கலையரங்கம், வாகன நிறுத்தம் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அப்பகுதிகளை திறந்து வைத்தார்

19:29 (IST) 8 Sep 2022
பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல்நிலை கவலைக்கிடம்

பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.

19:27 (IST) 8 Sep 2022
ஆசியக்கோப்பை கிரிக்கெட் : இந்தியாவுக்கு எதிராக ஆப்கான் பந்துவீச்சு

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கான் அணி தற்போது பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

19:24 (IST) 8 Sep 2022
டெல்லியில் நேதாஜி சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி

டெல்லி இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலை திறக்கப்பட்டுள்ளது. மோனோலித்திக் கிரானைட் கற்களால் ஆன இந்த சிலை 28 அடி உயரம் கொண்டது. நேதாஜியின் முப்பரிமாண சிலை அமைந்துள்ள இந்த சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செய்தார்

18:18 (IST) 8 Sep 2022
300 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா; அறநிலையத்துறை வரலாற்றில் முதல் முறை – சேகர் பாபு

இந்து அறநிலையத்துறாஇ அமைச்சர் சேகர் பாபு: “தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 300 கோயில்களின் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டிருப்பது அறநிலையத்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை” என்று தெரிவித்துள்ளார்.

18:12 (IST) 8 Sep 2022
பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு உடல்நலக்குறைவு

பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.

17:44 (IST) 8 Sep 2022
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம், முத்துராமலிங்கனார் குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு இந்த தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.

17:41 (IST) 8 Sep 2022
அதிமுக அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ். செல்லும் தேதி, விரைவில் அறிவிக்கப்படும் என ஜே.சி.டி.பிரபாகர் பேட்டி

ஓ.பி.எஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் மனு அளித்துள்ளார். மேலும், அதிமுக அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ். செல்லும் தேதி, விரைவில் அறிவிக்கப்படும் என ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.

17:23 (IST) 8 Sep 2022
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு; புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பாகுபாடின்றி வேலை வாய்ப்பு அளிப்பது குறித்து புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்; அடுத்த 3 மாதங்களில் அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பாகுபாடின்றி வேலை வாய்ப்பு வழங்க புதிய சட்டத்தை இயற்றலாம் எனவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது.

17:01 (IST) 8 Sep 2022
144 தடை உத்தரவு

இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

16:36 (IST) 8 Sep 2022
சுசீந்திரத்தில் ராகுல் காந்தி

ராகுல் காந்தி, உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் சுசீந்திரத்தில் நடை பயணத்தை தொடங்கினார்.

16:17 (IST) 8 Sep 2022
உச்ச நீதிமன்றம் உத்தரவு

கூடங்குளம் அணுக்கழிவுகளை சேகரித்து வைக்கும் கிடங்கியை உருவாக்க மேலும் 4 ஆண்டுகள் அவகாசம் கோரிய இந்திய அணு மின் கழகத்தின் மனுவின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

15:50 (IST) 8 Sep 2022
யார் வந்தாலும் சந்திப்பேன்.. சசிகலா

அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பதை பொதுமக்களும், கழக உடன்பிறப்புகளும் முடிவு செய்ய வேண்டிய விஷயம்; என்னை சந்திக்க ஓபிஎஸ் மட்டுமல்ல யார் வந்தாலும் சந்திப்பேன் என்று சசிகலா கூறியுள்ளார்.

15:26 (IST) 8 Sep 2022
தீப்பெட்டித் தொழிலாளர்களுடன் முதல்வர்

தீப்பெட்டித் தொழிலாளர்களுடன் உரையாடிய முதல்வர்

14:33 (IST) 8 Sep 2022
ஆன்லைன் ரம்மிக்கு தடை..

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

13:58 (IST) 8 Sep 2022
ஆளுநர் அறிவுரை

நீட் தேர்வின் தற்காலிக பின்னடைவை கண்டு பயப்பட வேண்டாம். மேம்பட்ட உத்தி, மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றுடன் மீண்டும் போராடுங்கள் என நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை கூறியுள்ளார்.

13:23 (IST) 8 Sep 2022
அதிமுக அலுவலக வழக்கு: செப்.12 மீண்டும் விசாரணை

அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு. செப்டம்பர் 12ம் தேதி மீண்டும் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.

13:10 (IST) 8 Sep 2022
18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் . நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .

13:09 (IST) 8 Sep 2022
கபடி போட்டிகள்; வீரர்களின் ஆடைகளில் அரசியல், ஜாதியை குறிக்கும் சின்னங்களோ இருக்கக் கூடாது

நெல்லையில் மாலை நேர கபடி போட்டிகளை அனுமதிக்க உத்தரவிட கோரிய வழக்கு. கடும் கட்டுப்பாடுகளை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. வீரர்களின் ஆடைகளில் அரசியல், ஜாதியை குறிக்கும் சின்னங்களோ அல்லது அரசியல் தலைவர்களின் படங்களோ இருக்கக் கூடாது – நீதிமன்றம்

12:49 (IST) 8 Sep 2022
பச்சோந்தியைவிட அதிகமாக நிறம் மாறுபவர் பன்னீர் செல்வம் – இபிஎஸ்

பச்சோந்தியைவிட அதிகமாக நிறம் மாறுபவர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவுக்கு விஸ்வாசம் இல்லாதவர் ஓபிஎஸ் . 1989 தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் பணியாற்றியவர் ஓபிஎஸ் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

12:42 (IST) 8 Sep 2022
அதிமுக தலைமை அலுவலகம் எங்கள் தரப்புக்கு தரப்பட்டுள்ளது

நீதிமன்ற உத்தரவுபடி அதிமுக தலைமை அலுவலகம் எங்கள் தரப்புக்கு தரப்பட்டுள்ளது . பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அத்துமீறி கட்சி அலுவலகத்தில் சிலர் நுழைந்தனர். அதிமுக அலுவலகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தோம் . திமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும் . அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படவில்லை – அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

12:12 (IST) 8 Sep 2022
கலை, வரலாறு, வீரத்திற்கு பெயர்போனது நெல்லை மாவட்டம் – ஸ்டாலின்

இலக்கியம், கலை, வரலாறு, வீரம், ஆன்மிகம் என அனைத்திற்கும் பெயர் பெற்ற நெல்லை மாவட்டம் . 1973ஆம் ஆண்டில் நெல்லை மாவட்டத்திற்கு ஈரடுக்கு பாலத்தை கட்டிக்கொடுத்தவர் கருணாநிதி. நெல்லையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

11:52 (IST) 8 Sep 2022
அதிமுக தலைமை அலுவலகத்தில்; எடப்பாடி பழனிசாமி

72 நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமிக்கு அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

11:51 (IST) 8 Sep 2022
நீட் தேர்வு: விஷம் குடித்து தற்கொலை முயற்சி

திருவள்ளூர் : திருத்தணியை சேர்ந்த ஜெயசுதா (17) என்ற மாணவி நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி. ஆபத்தான நிலையில் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதி

11:32 (IST) 8 Sep 2022
ஓணம் திருநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து

ஓணம் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் உள்ள மலையாள சமுதாய மக்களுக்கும், கேரள மாநில மக்களுக்கும் வாழ்த்துகள். ஓணம் திருநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து , நமது சமுதாயத்தில் நல்லிணக்க உணர்வை ஓணம் மேலும் வலுப்படுத்தட்டும் – பிரதமர்

10:36 (IST) 8 Sep 2022
கவிஞர் வைரமுத்து ட்வீட்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் தனித்துறை தொடங்க தமிழ்நாடு அரசு ரூ. 5 கோடி நிதி. முதலமைச்சரின் செந்தமிழ்ச் செயலால் அறிவுலகம் பெருமையுறுகிறது – கவிஞர் வைரமுத்து ட்வீட்

10:12 (IST) 8 Sep 2022
எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அனுமதிக்க கூடாது

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அனுமதிக்க கூடாது . டிஜிபியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் மனு . அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஈபிஎஸ் இன்று செல்லவுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு

09:49 (IST) 8 Sep 2022
அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் ராகுல் காந்தியுடன் சந்திப்பு

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் ராகுல் காந்தியுடன் சந்திப்பு. நடைப்பயணம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி உடன் அனிதாவின் சகோதரர் உரையாடல்.

08:46 (IST) 8 Sep 2022
ப.சிதம்பரம் ட்வீட் ; ”நாடெல்லாம் ஒரு பெருஞ்செயல் செய்வாய் வா”

ஒற்றுமையில் உய்யவே நாடெல்லாம் ஒரு பெருஞ்செயல் செய்வாய் வா. இந்திய ஒற்றுமைப் பயணம் வெற்றி பெற பாரத அன்னை வாழ்த்த வேண்டும். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்வீட்

08:45 (IST) 8 Sep 2022
ஓணம்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து

ஓணம் என்பது பாகுபாடுகளைக் கடந்து மனித மனங்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும். செழிப்பு, வளம், அமைதி போன்ற கனவுகளை நிறைவேற்றும் பண்டிகை ஓணம் . ஓணத்தை ஒட்டி மக்கள் வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட வேண்டும் . ஓணம் திருநாளை முன்னிட்டு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து

08:45 (IST) 8 Sep 2022
கர்தவ்ய பாதை; திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லியில் சகல வசதிகளுடன் கூடிய சென்ட்ரல் விஸ்டாவை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. ராஜ்பாத் என்ற பெயர், கர்தவ்ய பாதை என மாற்றப்படுகிறது.

08:44 (IST) 8 Sep 2022
நீட் தேர்வு; மாணவி தற்கொலை

திருவள்ளூர் : அம்பத்தூர், சோழபுரம் பகுதியில் லக்ஷனா ஸ்வேதா(19) என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை. நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் மாணவி லக்ஷனா ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை.

08:44 (IST) 8 Sep 2022
2வது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி

இந்திய ஒற்றுமை பயணம்- 2வது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி.பயணத்தை தொடங்கு முன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் ராகுல்காந்தி.

08:43 (IST) 8 Sep 2022
அதிமுக தலைமை அலுவலகம் வருகிறார் இபிஎஸ்

இடைக்கால பொதுச்செயலாளராக முதன்முறையாக இன்று அதிமுக தலைமை அலுவலகம் வருகிறார் எடப்பாடி பழனிசாமி . மாவட்ட செயலாளர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்க ஏற்பாடு

Web Title: Tamil news today live neet exam 2022 result rahul gandhi march eps admk office