Tamil News Today Updates: தமிழகத்தில் அடுத்தடுத்து ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரே நாளில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
நீட் அச்சம் காரணமாக ஒரே நாளில், அதுவும் நீட் தேர்வு தொடங்கப்படுவதற்கு முந்தைய நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் நிலைமையின் தீவிரத்தை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்; நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
ஆங்காங்கே போராட்டங்களும் வெடிக்க தொடங்கியுள்ளன.
காவிரி படுகையில் மேலும் 24 எண்ணெய் கிணறுகளை தோண்டுவதற்கான அனுமதியை நீட்டிக்க பரிந்துரை. ஓ.என்.ஜி.சி கோரிக்கையை ஏற்று சுற்றுச்சூழல் அமைச்சகம் நடவடிக்கை. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறுவதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்தவுடன் மாநிலங்களுக்கு இடையேயானா போக்குவரத்து தொடங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு இயக்கப்பட்ட பேருந்துகளில் 1 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களை மூன்று முறை விளம்பரப்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு புதிய நெறிமுறையை, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலிலும், அதிமுக-வுடனான கூட்டம் தொடரும் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
செப்டம்பர் 25 முதல் நாடு தழுவிய ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஒரு தகவல் வலம் வருகிறது. இந்த உத்தரவு போலி. முடக்கத்தை மீண்டும் அமல்படுத்த எந்த உத்தரவையும் வெளியிடவில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
நீட் தேர்வு தற்கொலை தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி ட்வீட் செய்துள்ளார். அதில், " நீட் தேர்வு பயத்தில் தருமபுரியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை என்ற செய்தியை கேட்கும் போது மனம் பதைக்கிறது.மாணவர்கள் இலட்சிங்களோடு இருக்கவேண்டும் என்பது உண்மை.ஆனால் தன் கனவு நிறைவேறும் முயற்சிக்கு முன்னாலேயே நம்பிக்கை இழந்து இவர்கள் இந்த முடிவை எடுப்பது அதிர்ச்சியளிக்கிறது. வாழ்க்கை என்பது பல வாய்ப்புகளைத் தரும் என்ற நம்பிக்கை வேண்டும். இந்த உலகத்தில் பல சாதனைகளை செய்த தலைவர்கள் சாதனையாளர்கள் பலநேரங்களில் தோற்றவர்கள்தான். எனது தந்தை தலைவர் கலைஞர் கூட தோல்விகளை தாண்டி வந்தவர்தான்.ஒரு தேர்வின் வெற்றி தோல்வி மட்டும் உங்கள் வாழ்க்கையை முடிவு செய்துவிடாது. தயவு செய்து நம்பிக்கையோடு இருங்கள். பெற்றவர்கள் உங்கள் நண்பர்கள் யாரும் நீங்கள் டாக்டர் ஆகவில்லை என்ஜினியர் ஆகவில்லை என்று உங்களை வெறுக்கப்போவது இல்லை. உங்களை இழந்த உங்கள் பெற்றோரின் வலியை எதுவும் சரிசெய்யாது. நம்பிக்கையோடு வாழ்ந்து காட்டுவதில்தான் அவர்களுக்கு நீங்கள் காட்டும் அன்பு இருக்கிறது" என்று தெரிவித்தார்.
இந்திய தொழில் மற்றும் வர்த்தக நிறுவன சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் புதுதில்லி எய்ம்ஸ்-உடன் இணைந்து, கொவிட்-19 சிகிச்சையை நாடு முழுவதும் அளித்து வரும் தனியார் மருத்துவமனைகளுக்கான மெய்நிகர் மாநாடு ஒன்றை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று நடத்தியது. கொரோனா நோய்த் தொற்று மேலாண்மையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், இழப்புகளை குறைப்பது பற்றியும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
நோயாளிகளைத் தொடர்ந்து அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறும் தனியார் மருத்துவமனைகள் அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டன. மாநாட்டை துவக்கி வைத்துப் பேசிய மத்திய சுகாதார செயலாளர், படுக்கைகள் இல்லை என்று கூறி நோயாளிகளை திருப்பி அனுப்பக் கூடாது என்றும் சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்க வேண்டும் என்றும் மருத்துவமனைகளைக் கேட்டுக்கொண்டதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா பெருந்தொற்று நிலவரம் குறித்து பிரதமரின் முதன்மை செயலாளர் விரிவான ஆய்வு நடத்தினார்.
முன்னெச்சரிக்கைகள் மற்றும் தயார் நிலையுடன் கூடிய ஊரடங்கு தளர்வில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும், தடுப்பூசி முன்னேற்றம் குறித்தும் ஆய்வில் விவாதிக்கப்பட்டது.
இன்னொரு நீட் மரணம். நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த தருமபுரி ஆதித்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அடிமை அதிமுக-பாசிச பாஜக சேர்ந்து செய்த கொலை. மாணவர்களே சற்றே பொறுமையாக இருங்கள். 8 மாதங்களில் தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சியில் உங்கள் கனவு மெய்ப்படும் #BanNEET_SaveTNStudents
— Udhay (@Udhaystalin) September 12, 2020
இன்னொரு நீட் மரணம். நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த தருமபுரி ஆதித்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவர்களே சற்றே பொறுமையாக இருங்கள். 8 மாதங்களில் மு.க ஸ்டாலின் ஆட்சியில் உங்கள் கனவு மெய்ப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 37 பேர்களும் அரசு மருத்துவமனைகலில் 39 பேர்கள் என 76 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,307 ஆக அதிகரித்துள்ளது
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 6,227-பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,649 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 88.85 % குணமடைந்துள்ளனர்
தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 12) ஒரே நாளில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது .
நாளை நீட் தேர்வு தொடங்கும் நிலையில், தமிழகத்தில் தருமபுரி அருகே நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
முன்னதாக, மதுரையில் நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தற்கொலை செய்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூத்தப் பத்திரிகையாளர் சுதாங்கன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். 50ஆண்டுகளுக்கு மேலாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்தார்.
நீட் தேர்வை ரத்து செய்யகோரி மத்திய-மாநில அரசுகளை கண்டித்து திருச்சி ரயில்வே நிலையத்தை முற்றுகையிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம். #Trichy #RailwayStation #NEET #TamilNadu #Students #Suicide pic.twitter.com/8RjuKYSPpG
— Jaya Plus (@jayapluschannel) September 12, 2020
பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக வெளியான செய்தி தவறு என்று தமிழக அரசு கூறியுள்ளது. ஏற்கனவே பயன்பெற்று வரும் தகுதியான விவசாயிகளுக்கு அடுத்த தவணைக்கான நிதி உதவி தொடர்ந்து வழங்கப்படும் என்று வேளாண் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நீட் தேர்வு என்பது சமூக அநீதி.. அதை அழிப்போம்" - ட்விட்டரில் கவிஞர் வைரமுத்து கருத்து
ஓ!
மாணவ மகன்களே! மகள்களே!நீட் என்பது தேர்வுமல்ல;
தற்கொலை என்பது தீர்வுமல்ல.பிறக்கும் யாருக்கும் தங்களை
அழிக்கும் உரிமை இல்லை.அழிக்க வேண்டியது அநீதியைத்தான்;
உயிர்களை அல்ல.நீட் தேர்வு என்பது சமூக அநீதி;
முதலில் அதை அழிப்போம்.நீங்கள் வாழப் பிறந்தவர்கள்.#NEET #BanNEET
— வைரமுத்து (@Vairamuthu) September 12, 2020
மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன? - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட்.
மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன?
மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும்.
நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை.
செய்வோம் அதை!
— Kamal Haasan (@ikamalhaasan) September 12, 2020
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த மாணவி குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல். மாணவியின் தற்கொலை செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவர்கள் விபரீத முடிவை எடுப்பது வேதனை தருகிறது . எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
’ஃபெயிலாயிடுவேனோனு பயமா இருக்கு.’ நீட் பயத்தால் தற்கொலைசெய்த மதுரை ஜோதிஸ்ரீ எழுதிய கடிதம் இது. தமிழக மாணவர்களை இப்படி பயத்துக்குள்ளாக்கி மருத்துவம் படிக்கவிடாமல்தடுப்பதும், ‘பிள்ளைகள் உயிரோடிருந்தாலே போதும்’ என பெற்றோரை நினைக்கவைப்பதுமே மோடி-எடப்பாடி சாதனை #BanNeet_SaveTNStudents
— Udhay (@Udhaystalin) September 12, 2020
உலக அளவில் அரசியல் கட்சியை சேர்ந்த அதிகம் பேர் பங்கேற்ற காணொலி கூட்டங்களில் திமுக பொதுக்குழு கூட்டம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு முதலிடத்தை பிடித்துள்ளது. அம்மாநாட்டில் காணொலி காட்சி மூலம் 3 ஆயிரத்து 979 பேர் கலந்து கொண்டதாகவும், திமுக பொதுக்குழு கூட்டத்தில் 2 ஆயிரத்து 774 பேர் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக பொதுக்குழு கூட்டம் சர்வதேச அளவில் பாராட்டை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு சென்ற விவகாரம். உரிமைக் குழு மீண்டும் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 7-ம் தேதி கூடிய உரிமைக்குழு தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. நாளை மறுதினம் பதிலளிக்க உரிமைக்குழு உத்தரவிட்ட நிலையில் திமுக இந்த மனுத்தாக்கலை செய்துள்ளது.
டெல்லி மெட்ரோ சேவையின் அனைத்து வழித்தடங்களிலும் இன்று முதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த ஏழாம் தேதி முதற்கட்டமாக மூன்று வழித்தடங்களில் இயக்கப்பட்ட ரயில் சேவை, தற்போது படிபடிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் சேவை நேரக்கட்டுப்பாடும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்கலைக்கழக இணைப்பு அனுமதிபெறாத மற்றும் அனுமதி ரத்து செய்யப்பட்ட 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 56 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மதுரையில் நீட் தேர்வு அச்சத்தால் ஜோதி துர்கா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெற உள்ள நீட் தேர்வை எழுத இருந்த ஜோதி துர்கா, மதுரை காவல் சார்பு ஆய்வாளரின் மகள்.
அண்மையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நிரந்தரமான முழு நேர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திறந்த கடிதம் எழுதினர். அப்போது, காங்கிரஸ் கட்சியில் புதிய பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights