Tamil News Today : நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13- ஆம் தேதி நடந்த நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று (16/10/2020) வெளியாகிறது.nta.ac.in, ntaneet.nic.in என்ற இணைய தளத்தில் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை (National Testing Agency) தெரிவித்துள்ளது.
ஈரோடு முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குநர் மகேஷ் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.60 ஆயிரம், ரூ. 33 லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல்.
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு தொடர்பாக இதுவரை 101 பேர் கைது. 105 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தகவல். கிசான் திட்ட மோசடி தொடர்பாக 100 அதிகாரிகள் சஸ்பெண்ட் என சிபிசிஐடி தகவல்.
தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயக்கம். பேருந்தில் 60% இருக்கைகள் பயன்படுத்தப்படும் என தகவல்.
தசரா பண்டிகையையொட்டி, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளைக்கு அக். 17 முதல் 27 வரை விடுமுறை. அவசர வழக்குகள் அக். 22-ம் தேதி விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil News Today: அரசியல், சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
நீட் தேர்வு முடிவில், திருப்பூர் மாணவர் ஸ்ரீஜன் 710 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 8வது இடமும் பிடித்துள்ளார். நீட் தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் முதல் 40 இடங்களில் தமிழகத்தில் இருந்து ஸ்ரீஜன் மட்டுமே இடம்பிடித்துள்ளார்.
மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை இன்று வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை nta.ac.in மற்றும் ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம். ஒரே நேரத்தில் பலரும் இணையதளத்தை அணுகுவதால் இணையம் முடங்கியுள்ளது.
என்னை தமிழினத்திற்கு எதிரானவன் போல சித்தரிப்பது வேதனை அளிக்கிறது என முத்தையா முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் பிறந்திருந்தால், இந்திய அணியில் சேர முயற்சி செய்திருப்பேன் எனவும், இலங்கையில் பிறந்தது எனது தவறா? எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகல். கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக இயான் மோர்கன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்டிங்கில் கவனம் செலுத்தவிருப்பதால், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
திமுக-வின் கடும் எதிர்ப்பு, #SaveAnnaUniversity போராட்டத்திற்குப் பிறகு #IoE தேவையில்லை என அதிமுக அரசு அறிவித்துள்ளது.
வெறும் அறிவிப்பு மட்டும் போதாது. மத்திய அரசிடம் கடிதம் வழியாகத் தெரிவிக்க வேண்டும்.#DismissSurappa என @CMOTamilNadu பரிந்துரைக்க வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) October 16, 2020
‘800’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது குறித்து புரிந்து செயல்பட்டால் அவரது எதிர்காலத்துக்கு நல்லது
நடிப்பது தனிப்பட்ட உரிமை என்றாலும் உணர்வை புரிந்து செயல்பட்டால் நடிகர் விஜய்சேதுபதி எதிர்காலத்திற்கு நல்லது
- மாண்புமிகு அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் பேட்டி.
— AIADMK (@AIADMKOfficial) October 16, 2020
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் முடிவு வெளிவரும் வரை மருத்துவ கலந்தாய்வு இல்லை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு உறுதி .7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் காலக்கெடு விதிக்க, உத்தரவிட முடியாது எனவும் தமிழக அரசு பதில்.
தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரிய தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் . ரவீந்திரநாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளதால் வழக்கு தொடர்ந்து நடைபெறும்என நீதிபதி கருத்து.
வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மனை, வணங்கி நினைவு கூர்கிறேன் முதலமைச்சர் பழனிசாமி ட்வீட்.
ஆங்கிலேயரின் அடக்கு முறையை எதிர்த்து 'என் நாட்டில் விளையும் பொருட்களுக்கு வரி செலுத்த முடியாது'என்ற நிலைப்பாட்டில் உறுதியாய், தூக்கு மேடை ஏறியபோதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு,வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மனை அவர்தம் நினைவு நாளில் வணங்கி நினைவு கூர்கிறேன். pic.twitter.com/iB5Dyy06l4
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 16, 2020
உயர் சிறப்பு அந்தஸ்து வந்தால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, கூடுதல் கல்விக்கட்டணம் வர வாய்ப்பு நேரிடும்.அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மாணவர்களுக்கான 69% இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும் என்று அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராக வீரமுழக்கமிட்டு, உயிரை துச்சமெனத் தியாகம் செய்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவுநாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து போற்றுவோம். pic.twitter.com/f8w2j4zZqF
— O Panneerselvam (@OfficeOfOPS) October 16, 2020
நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி தேனி தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கொரோனா சூழல் காரணமாக மூடப்பட்டிருந்த சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறக்கப்படுகின்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights