பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 92-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஐ.சி.சி கிரிக்கெட் இன்றைய போட்டி
ஐ.சி.சி டி20 கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான்- அயர்லாந்து அணிகள் மோத உள்ளன. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானத்தில் இரவு 8 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jun 16, 2024 21:10 ISTஇ.வி.எம். இயந்திரம் திறப்பதற்கு ஓடிபி தேவையில்லை : தேர்தல் அதிகாரி விளக்கம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திறக்க ஓடிபி எதுவும் தேவையில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வயர்லெஸ் தகவல் தொடர்பு திறன் இல்லை. ப்ரோக்ராமிங் செய்ய முடியாது என்பதால் அதனை திறப்பதற்கு ஓடிபி எதுவும் தேவையில்லை. இது குறிப்பிட்ட நிறுவனத்தால் பரப்பப்பட்ட முற்றிலும் பொய் செய்தி என்று தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்ஷி விளக்கம் அளித்துள்ளார்.
-
Jun 16, 2024 20:17 ISTதலைவர்கள் சிலைகளுடன் நாடாளுமன்றத்தில் புதிய பூங்கா அமைப்பு
பழைய நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்கள் சிலைகள் அகற்றப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்களின் சிலைகள் ஒரே இடத்தில் நிறுவப்பட்டு, பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.`பிரேர்னா ஸ்தல்' எனும் புதிய பூங்காவை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திறந்து வைத்தார். மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது
-
Jun 16, 2024 19:30 ISTஎம்.ஆர்.விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் கோரிய நில மோசடி வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போலி சான்றிதழ் கொடுத்து நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகாரில், 7 பேர் மீது கரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செயய்ப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை, ஏற்கனவே 19ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது கரூர் நீதிமன்றம்
-
Jun 16, 2024 19:29 ISTபாஜக பிரமுகர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய நபர் கைது
நாட்டு வெடிகுண்டு வீசிய பரபரப்பு சிசிடிவி
கேரளா கண்ணூர் அருகே பாஜக பிரமுகர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்தின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், நாட்டு வெடிகுண்டு வீசிய அருண் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
Jun 16, 2024 17:41 ISTமோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு
பிரதமர் மோடி ஜூன் 20ம் தேதி தமிழகம் வருவதாக இருந்த நிலையில், அவரது பயணம் திடீரென ஒத்திக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடியின் தமிழகம் வருகை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
-
Jun 16, 2024 17:38 ISTஅரசாங்கத்தை கேள்வி கேட்கும் துணிச்சல் எனக்கு இருக்கு - சசிகலா ஆவேசம்!
சசிகலா: “அரசாங்கத்தை கேள்வி கேட்கும் துணிச்சல் எனக்கு இருக்கு; எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. ஒரே கொடநாடு வழக்கை வைத்துக்கொண்டு இந்த தி.மு.க என்ன வேலை பண்ணிக்கொண்டிருக்கிறது. ஊருக்கே தெரிகிறது, உலகத்துக்கே தெரிகிறது. உங்களுடைய விசாரணை ஏன் ஆமை வேகத்தில் போகிறது. நீங்கதான் அரசாங்கம் என்கிறீர்கள். போலீசை அப்படி வைத்திருக்கிறோம், இப்படி வைத்திருக்கிறோம் என்கிறீர்கள். ஆனால், அந்த வழக்கை முடிப்பதற்குகூட உங்களுக்கு வக்கு இல்லை. தேர்தல் கொடநாடு என்று பேச்சு வருகிறது. ஒரு பொறுப்புள்ள முதலமைச்சர் சொல்கிறார். ஆனால், ஏன் அவர் அந்த வழக்கை நடத்தமாட்டேன் என்கிறார். அந்த வழக்கை நடத்த வேண்டியதுதானே, அதில் யார் பாதிக்கப்படுகிறார்களோ, நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. ஏன் நீங்கள் நடவடிக்கை எடுக்கமாட்டேன் என்கிறீர்கள். அதே போல, அரசாங்கம் சரியாக நடக்கவில்லை என்று நான் வெளிப்படையாக குற்றச்சாட்டாக வைப்பேன்.” ஆவேசமாகப் பேசினார்.
-
Jun 16, 2024 16:52 ISTஅ.தி.மு.க.,வில் ஜாதி பார்க்கப்படுவதாக முதன்முதலாக கேள்விப்படுகிறேன் - சசிகலா
அ.தி.மு.க முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம். என்னுடைய எண்ட்ரி ஆரம்பித்துவிட்டது. அ.தி.மு.க.,வில் ஜாதி பார்க்கப்படுவதாக முதன்முதலாக கேள்விப்படுகிறேன்; அ.தி.மு.க.,வில் இருந்துகொண்டு அவ்வாறு செய்வதை யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என சென்னை போயஸ் கார்டனில் ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
-
Jun 16, 2024 16:43 ISTஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஜாதி பாகுபாடு எதையும் பார்க்கவில்லை – சசிகலா
எம்.ஜி.ஆர் போல் தான் ஜெயலலிதாவும் திகழ்ந்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஜாதி பாகுபாடு எதையும் பார்க்கவில்லை. அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டனும் தலைமை பதவிக்கு வர முடியும். சாதி அரசியல் செய்திருந்தால் பெங்களூரு செல்லும்போது ஏன் இ.பி.எஸ்-யை முதல்வராக்கினேன். அ.தி.மு.க மீது பொதுமக்களுக்கு தனி பிரியம் உள்ளது. தானும் கெட்டு, கட்சியையும் கெடுக்க கூடாது என்பதுதான் எனது கோரிக்கை என சசிகலா தெரிவித்துள்ளார்.
-
Jun 16, 2024 15:54 ISTசென்னை பெயிண்ட் ஆலையில் தீ விபத்து
சென்னை, மணலி அடுத்த சிட்கோ பகுதியில் உள்ள பெயிண்ட் ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது. ஆலையை சுற்றிய பகுதிகளில் கரும்புகை சூழ்ந்தது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
-
Jun 16, 2024 15:41 ISTமன்னார்குடி பட்டாசு ஆலையில் பயங்கர தீவிபத்து; ஒருவர் மரணம்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஒருவர், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 2 பேர், மன்னார்குடி தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
Jun 16, 2024 15:19 ISTமணிமுத்தாறில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை விரட்டியடித்த கரடி
மணிமுத்தாறில், கரடி ஒன்று ஊருக்குள் புகுந்து பொதுமக்களை விரட்டியடித்தது. ஏராளமானோர் திரண்டதால் மரத்தின் மீது ஏறிய கரடியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தி கரடியை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்
-
Jun 16, 2024 15:01 ISTசென்னையில் 5 வயது பெண் குழந்தை தொட்டியில் விழுந்து உயிரிழப்பு
சென்னை: கொண்டித்தோப்பில் 5 வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர.
-
Jun 16, 2024 14:39 ISTபக்ரீத்: மெட்ரோ ரயில் முக்கிய அறிவிப்பு
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 17ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. -
Jun 16, 2024 14:07 ISTவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்; தே.மு.தி.க போட்டி இல்லை: பிரேமலதா அறிவிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தே.மு.தி.க போட்டி இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.
-
Jun 16, 2024 14:00 ISTதமிழ்நாட்டில் அடுத்த 7 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் ஜூன் 22-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Jun 16, 2024 13:34 ISTமு.க. ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து
“நபிகள் நாயகத்தின் அத்தகைய அறிவுரைகளை பின்பற்றி வாழ்கின்ற இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் இந்தப் பக்ரீத் பெருநாளை இனிதே கொண்டாடி மகிழ எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். -
Jun 16, 2024 13:03 ISTகேரளாவில் லேசான நில அதிர்வு
கேரள மாநிலம் திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் 2வது நாளாக நில அதிர்வு நேற்று நில அதிர்வு உணரப்பட்ட பகுதிகளில், இன்று அதிகாலையில் மீண்டும் நில அதிர்வு.
-
Jun 16, 2024 12:41 ISTநீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து தரப்பு மாணவர்களையும் பாதிக்கிறது: ஸ்டாலின்
நீட் விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் நீட் தேர்வில் உள்ள சமத்துவமின்மையை எடுத்துக்காட்டுகிறது; கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கு பதிலாக அந்த மாணவர்களின் வாய்ப்பை நீட் தடுக்கிறது. தகுதியின் அளவுகோலாகக் கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து தரப்பு மாணவர்களையும் பாதிக்கிறது; மாணவர்கள் விரோத, சமூக நீதிக்கு, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
-
Jun 16, 2024 12:05 ISTகோவை தொகுதியில் அதிகமான வாக்குகளை பா.ஜ.கவுக்கு மக்கள் அளித்திருக்கிறார்கள்: வானதி சீனிவாசன்
கோவை மக்களவைத் தொகுதியில் அதிகமான வாக்குகளை பாஜகவுக்கு மக்கள் அளித்திருக்கிறார்கள்; கூட்டணியில்லாமல் அதிகமான வாக்குகளை பெற்று மக்களை ஆதரவைப் பெற்று இருக்கிறோம்; பாஜக மாநில தலைவர் அண்ணாமலைமிகப்பெரிய எழுச்சியை பெற்றுள்ளார்” - கோவையில் தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேட்டி
-
Jun 16, 2024 11:38 ISTபக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
கன்னியாகுமரி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் அஷ்ரப் பள்ளிவாசலில் ஜாக் பிரிவு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை; இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
-
Jun 16, 2024 11:34 ISTவிக்கிரவாண்டியில் ஏன் போட்டியில்லை? இ.பி.எஸ் விளக்கம்
தேர்தல் ஆணையம், அதிகாரிகள், காவல்துறையினர் திமுகவுக்கு துணையாக இருக்கிறார்கள். பூத் வாரியாக பிரித்து பண மழை பொழிந்து ஜனநாயக படுகொலை நடைபெறும்" "விக்கிரவாண்டி தொகுதியில் எப்படி சுதந்திரமாக தேர்தல் நடைபெறும்? - இ.பி.எஸ்
-
Jun 16, 2024 11:03 ISTசமூகநீதியை வென்றெடுப்பதற்கான போர் இடைத்தேர்தல் : ராமதாஸ்
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் சமூகநீதியை வென்றெடுப்பதற்கான போர். திமுகவின் துரோகத்திற்கு கணக்கு தீர்ப்பதற்கான களம் தான் விக்கிரவாண்டி இடைத் தேர்தல். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த 3 முறை வாய்ப்பு கிடைத்தும் அதை சீர்குலைத்தது திமுக- பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
-
Jun 16, 2024 10:54 ISTதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி பலி
சென்னை - ஏழு கிணறு பகுதியில், தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு. சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, ஏழு கிணறு போலீசார் விசாரணை
-
Jun 16, 2024 10:42 ISTடிடிவி.தினகரன் பக்ரீத் வாழ்த்து
தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளை பக்ரீத் பண்டிகையாக உலகெங்கும் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைவனுக்கு இணை ஏதுமில்லை எனக்கூறி இறைவனின் விருப்பத்தையே தன் விருப்பமாக கொண்டு வாழ்ந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தன்னலமற்ற தியாக வாழ்க்கையின் மேன்மையைப் போற்றுவதே இந்த பக்ரீத் திருநாளின் நோக்கமாகும்- அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பக்ரீத் வாழ்த்து
-
Jun 16, 2024 10:27 ISTபுளியங்குடி அருகே விபத்து: 3 பேர் பலி
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே, அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு. விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 8 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பொதுமக்கள்
-
Jun 16, 2024 09:52 ISTஇன்று குடிமை பணிகளுக்கான முதல் நிலை தேர்வு
நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமை பணிகளுக்கான முதல் நிலை தேர்வு இன்று நடக்கிறது. காலை, மதியம் என 2 தாள்கள் நடைபெற உள்ளது.
-
Jun 16, 2024 09:50 ISTபக்ரீத் பண்டிகை - செல்வபெருந்தகை வாழ்த்து
தியாகப் பெருவாழ்வு கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டு வருகிற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு பக்ரீத் வாழ்த்துகள். சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பாதுகாவலனாக காங்கிரஜும், ராகுல் காந்தியும் செயல்பட்டு வருகிறார்கள்- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை
-
Jun 16, 2024 09:37 ISTநீட் முறைகேடு: 9 மாணவர்களுக்கு சம்மன்
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற 9 மாணவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மே 5ம் தேதி பீகாரில் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக பாட்னா போலீஸ் வழக்குப்பதிவு.
-
Jun 16, 2024 08:40 ISTஅ.தி.மு.க போட்டியிடாதது மேலிட உத்தரவு: ப.சிதம்பரம்
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு. மேலிட உத்தரவுப்படி அதிமுக செயல்படுகிறது என்பதற்கு இதுவே சான்று. பாஜக கூட்டணியில் பாமகவை வெற்ற பெற வைக்கவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு - காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம்
-
Jun 16, 2024 08:40 ISTதமிழ்நாடு என்றுமே திராவிடக் கோட்டை: ஸ்டாலின்
தமிழ்நாடு என்றுமே திராவிடக் கோட்டை. தமிழ்நாடு என்றைக்குமே திராவிடக் கோட்டை என்று 40க்கு 40 தீர்ப்பின் வழியாக தமிழ்நாட்டு மக்கள் உணர்த்தியுள்ளனர். எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.