Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஐ.பி.எல் இன்று
ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார்? அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் பலப்பரீட்சை.
புதிய நாடாளுமன்ற கட்டிடம்
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. கட்டிடம் 970 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு சென்ட்ரல் விஸ்டா என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:34 (IST) 28 May 2023மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கைது; கனிமொழி எம்.பி கண்டனம்
மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்
- 20:21 (IST) 28 May 2023கரூர் மாநகராட்சி கவுன்சிலர் கைது
கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை தடுத்த வழக்கில், கரூர் மாநகராட்சி கவுன்சிலர் லாரன்ஸ் உட்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- 19:46 (IST) 28 May 2023மாணவர்களை சந்திக்கும் நடிகர் விஜய்
நடிகர் விஜய் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சென்னை, மதுரவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் வரும் ஜூன் 3ம் தேதி சந்திக்க உள்ளார். தொகுதிக்கு 6 மாணவர்கள், 2 பெற்றோர்கள் என 234 தொகுதிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட சுமார் 6,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
- 19:17 (IST) 28 May 2023மணிப்பூர் கலவரம்; 33 பேர் மரணம்
மணிப்பூர் மாநிலத்தில் கலவரக்காரர்களை அடக்க பாதுகாப்புப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 33 கலவரக்காரர்கள் சுட்டுக் கொலை என அம்மாநில முதல்வர் பீரேன் சிங் அறிவித்துள்ளார்
- 18:20 (IST) 28 May 2023சி.எஸ்.கே வீரர் அம்பத்தி ராயுடு ஓய்வு அறிவிப்பு
ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
- 17:59 (IST) 28 May 2023மல்யுத்த வீராங்கனைகள் கைது; செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது - ஸ்டாலின் ட்வீட்
நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா? என முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்
- 17:38 (IST) 28 May 2023மல்யுத்த வீராங்கனைகள் பலவந்தமாக கைது; ராகுல் காந்தி ட்வீட்
முடிசூட்டு விழா முடிந்தது, தற்போது கொடுங்கோல் அரசன் வீதிகளில் மக்களின் குரலை ஒடுக்கத் தொடங்கிவிட்டார் என நீதி கேட்டு போராடிய மல்யுத்த வீராங்கனைகள் பலவந்தமாக கைது செய்யப்பட்டது குறித்து ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்
- 17:09 (IST) 28 May 2023மல்யுத்த வீரர்களின் குரல் மிதிக்கப்படுகிறது - பிரியங்கா காந்தி
மல்யுத்த வீரர்களின் குரல் மிதிக்கப்படுகிறது. மல்யுத்த வீரர்களின் மார்பில் இருக்கும் பதக்கங்களால், நம் நாட்டிற்கு பெருமை அவர்களின் குரலை மத்திய அரசு இரக்கமில்லாமல் மிதித்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் கைதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார்
- 16:51 (IST) 28 May 2023பாஜக முதல்வர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
நாடு முழுவதும் உள்ள பாஜக ஆளும் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் சந்திப்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், பிரதமரின் 9 ஆண்டு கால ஆட்சியை மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது
- 16:18 (IST) 28 May 2023மல்யுத்த வீரர்கள் கைது; ராகுல் காந்தி கண்டனம்
டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்
- 16:00 (IST) 28 May 2023ஜப்பான் மொழிக்கும் தமிழுக்கும் நிறைய ஒற்றுமை - ஸ்டாலின்
ஜப்பானிய மொழிக்கும், தமிழுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. ஜப்பான் என்றால் உழைப்பு, சுறுசுறுப்பு. வீழ்ந்த நேரத்தில் எழுச்சி பெற்ற நாடு ஜப்பான். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வணிகத்திற்காக தமிழர்கள் ஜப்பான் வந்துள்ளனர். ஜப்பானியர்கள் தமிழை கற்க முயற்சிக்கிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்
- 15:24 (IST) 28 May 2023ஜப்பான் தமிழர்களின் அன்பை மறக்க மாட்டேன் -மு க ஸ்டாலின்
ஜப்பான் தமிழர்களின் அன்பை மறக்க மாட்டேன். ஜப்பானுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான தொடர்பு நீண்ட நெடியது. தமிழைக் காப்பது தமிழர்களை காப்பதற்கு சமம் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறினார். மு க ஸ்டாலின் 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
- 15:10 (IST) 28 May 2023சோழர் கட்டட கலை வெளிநாட்டவர்களை ஈர்த்துள்ளது; பிரதமர் மோடி
முகலாயர், சோழர் காலத்து கட்டட கலைகள் வெளிநாட்டவர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தால் ஒவ்வொரு இந்தியரும் கௌரவமாக உணர்கின்றனர் என புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார்
- 15:10 (IST) 28 May 2023வரும் 31ம் தேதி 5 மாவட்டங்களில் கனமழை
தமிழகத்தில் வரும் 31ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- 14:51 (IST) 28 May 2023சோழர் கட்டட கலை வெளிநாட்டவர்களை ஈர்த்துள்ளது; பிரதமர் மோடி
முகலாயர், சோழர் காலத்து கட்டட கலைகள் வெளிநாட்டவர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தால் ஒவ்வொரு இந்தியரும் கௌரவமாக உணர்கின்றனர் என புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார்
- 14:33 (IST) 28 May 2023அரிக்கொம்பன் யானையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது - வனத்துறை அமைச்சர்
அரிக்கொம்பன் யானையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேகமலையை நோக்கி யானை சென்று கொண்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என தேனியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களிடம் கூறினார்
- 14:06 (IST) 28 May 20236 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- 13:51 (IST) 28 May 2023இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும்: மோடி
புதிய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும்: பிரதமர் மோடி
இந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு சட்டமும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும், அடுத்த 25 ஆண்டுகளில் வறுமையை ஒழிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
- 13:16 (IST) 28 May 2023ரூ. 75 நாணயம், தபால் தலை வெளியீடு
75 ரூபாய் நாணயம் மற்றும் சிறப்பு தபால் தலை வெளியீடு
புதிய நாடாளுமன்ற திறப்பை நினைவு கூறும் வகையில் பிரதமர் மோடி வெளியிட்டார்
- 12:59 (IST) 28 May 2023நாடு முழுவதும் நடைபெறும் யுபிஎஸ்சி தேர்வு
யுபிஎஸ்சி தேர்வின் முதல் நிலைத்தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி 11.30 மணிக்கு முடிவடைந்தது
சிசேட் தேர்வு மதியம் 2.30 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு முடிகிறது
- 12:59 (IST) 28 May 2023நாடு முழுவதும் நடைபெறும் யுபிஎஸ்சி தேர்வு
யுபிஎஸ்சி தேர்வின் முதல் நிலைத்தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி 11.30 மணிக்கு முடிவடைந்தது
சிசேட் தேர்வு மதியம் 2.30 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு முடிகிறது
- 12:57 (IST) 28 May 2023துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் ஐ.டி. ரெய்டு
கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் ஐ.டி. ரெய்டு
ராயனூர் பகுதியில் உள்ள வீட்டில் 8க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
- 12:56 (IST) 28 May 2023முடிசூட்டு விழா போல் நடக்கும் திறப்பு விழா - ராகுல் தாக்கு
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி அடைந்ததும், திறப்பு விழாவை முடிசூட்டு விழா போல் நடத்துவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில், “நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முடிசூட்டு விழாவாக பிரதமர் கருதுகிறார்” என்று கூறியுள்ளார்
- 12:40 (IST) 28 May 2023சாவர்க்கர் படத்திற்கு மலர் தூவி மோடி மரியாதை
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா - 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் தொடக்கம்
நாடாளுமன்ற வளாகத்தில் சாவர்க்கர் படத்திற்கு மலர் தூவி பிரதமர் மோடி மரியாதை
பல்வேறு மாநில முதல்வர்கள் திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்பு
கரகோஷத்துடன் பிரதமர் மோடியை வரவேற்ற எம்.பி.க்கள்
25 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு - 19 கட்சிகள் புறக்கணிப்பு
- 11:59 (IST) 28 May 2023144 தடை உத்தரவு
புதிய நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு
மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் முன்னெச்சரிக்கையாக தடை உத்தரவு
- 11:59 (IST) 28 May 2023டோக்கியோ சென்றார் முதல்வர் ஸ்டாலின்
ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒசாகா நகரில் இருந்து புல்லட் ரயிலில் டோக்கியோ பயணம்
ஜப்பான் நாட்டிற்கான இந்திய தூதர் முதல்வரை வரவேற்றார்
டோக்கியோவில் தொழில் நிறுவன அதிகாரிகளை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
- 11:58 (IST) 28 May 2023கங்கா பூர்வாலா பதவியேற்பு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் கங்கா பூர்வாலா
புதிய தலைமை நீதிபதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
- 11:02 (IST) 28 May 2023வந்தே மாதரம் பாடல் ஒலித்தது
செங்கோலை இருக்கையில் மோடி பொருத்தும்போது, வந்தே மாதரம் பாடல் ஒலித்தது குறிப்பிடதக்கது. ஆதீனத்தை சேர்ந்த சாமியார்களும் , மந்திரத்தை சொன்னாரக்ள்.
- 10:57 (IST) 28 May 2023புதிய நாடாளுமன்ற கட்டடம்: சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு ராஷ்டிர ஜனதா தளம் ட்வீட்
பிரதமர் மோடி நாடாளுமன்றத்தின் கட்டிடத்தை திறந்து வைத்ததும். லல்லு பிரசாத் யாதவின், ராஷ்டிர ஜனதா தளம் கட்சி, புதிய நாடாளுமன்ற கட்டத்திற்கும் , சவபெட்டிக்கும் ஒற்றுமை இருக்கிறதா? என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டத்தின் புகைப்படத்தையும், சவப்பெட்டியின் புகைப்படமும் பகிரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஷ்டிர ஜனதா தளத்தின் தலைவர் சக்தி சிங் யாதவ் பேசுகையில் “ எங்கள் ட்வீடில் உள்ள சவப்பட்டி என்பது ஜனநாயகம் புதைக்கப்பட்டதன் எடுத்துகாட்டு, இதை இந்த நாடு ஏற்றுக்கொள்ளாது” என்று கூறினார்.
ये क्या है? pic.twitter.com/9NF9iSqh4L
— Rashtriya Janata Dal (@RJDforIndia) May 28, 2023 - 10:56 (IST) 28 May 2023புதிய நாடாளுமன்ற கட்டடம்: சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு ராஷ்டிர ஜனதா தளம் ட்வீட்
பிரதமர் மோடி நாடாளுமன்றத்தின் கட்டிடத்தை திறந்து வைத்ததும். லல்லு பிரசாத் யாதவின், ராஷ்டிர ஜனதா தளம் கட்சி, புதிய நாடாளுமன்ற கட்டத்திற்கும் , சவபெட்டிக்கும் ஒற்றுமை இருக்கிறதா? என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டத்தின் புகைப்படத்தையும், சவப்பெட்டியின் புகைப்படமும் பகிரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஷ்டிர ஜனதா தளத்தின் தலைவர் சக்தி சிங் யாதவ் பேசுகையில் “ எங்கள் ட்வீடில் உள்ள சவப்பட்டி என்பது ஜனநாயகம் புதைக்கப்பட்டதன் எடுத்துகாட்டு, இதை இந்த நாடு ஏற்றுக்கொள்ளாது” என்று கூறினார்.
ये क्या है? pic.twitter.com/9NF9iSqh4L
— Rashtriya Janata Dal (@RJDforIndia) May 28, 2023 - 09:47 (IST) 28 May 2023அதிகாரிகளை தடுத்த விவகாரம் 8 பேர் கைது
கரூரில் வருமான வரி சோதனைக்கு வந்த அதிகாரிகளை தடுத்த விவகாரம், 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
- 09:14 (IST) 28 May 2023புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை, இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்
ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம் "புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை, இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்" ஏழை, எளிய நடுத்தர மக்களின் பயணங்கள் எளிதாக வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
- 09:14 (IST) 28 May 2023சர்வமத பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்பு
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பை தொடர்ந்து நடைபெறும் சர்வமத பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்பு
- 08:48 (IST) 28 May 2023புதிய நாடாளுமன்றத்தையே கட்டியிருக்கிறோம்
”நாங்கள் என்ன செய்தோம் என்று மக்கள் கேட்டால், புதிய நாடாளுமன்றத்தையே கட்டியிருக்கிறோம் என்று சொல்வோம். ஒட்டுமொத்த கட்டிடமும் எங்கள் கண் முன்புதான், கட்டி எழுப்பப்பட்டது” என்று பணியாளர்களில் ஒருவரான ராம மூர்த்தி தெரிவித்துள்ளார்.
- 08:40 (IST) 28 May 2023புதிய நாடாளுமன்றம்: 2 வருடங்கள், 60,000 பணியாளர்கள்
புதிய நாடாளுமன்ற கட்டத்தை கட்டி முடிக்க 60,000 மேற்பார்வையாளர்கள், தொழிலாளர்கள் பணியாற்றியுள்ளனர். கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான அருண் பேசுகையில் “ ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்தேன். ரூ. 17,000 கிடைத்தது. கடந்த 2 வருடங்களாக 24 *7 மணி நேரம் வேலை செய்ய வேண்டி இருந்தது. இரண்டு ஷிப்ட்-களில் பணியாளர்கள் வேலை செய்தார்கள். கொரோனா தொற்று தீவிரமடைந்த காலத்தில் கூட வேலையை நிறுத்தவில்லை” என்று அவர் கூறினார்.
- 08:21 (IST) 28 May 2023கட்டுமான பணியாளர்களை கவுரவித்தார் பிரதமர் மோடி
நாடாளுமன்ற கட்டுமான பணியாளர்களை கவுரவித்தார் பிரதமர் மோடி கட்டுமான பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, பரிசு வழங்கி பிரதமர் மோடி கௌரவம்
- 08:12 (IST) 28 May 2023கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
- 08:12 (IST) 28 May 2023புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தமிழக செங்கோல் நிறுவப்பட்டது
புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தமிழக செங்கோல் நிறுவப்பட்டது. சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி செங்கோல் நிறுவும் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து 20 ஆதீனங்கள் பங்கேற்பு.
- 08:09 (IST) 28 May 2023ஆதீனங்களிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி
சிறப்பு பூஜைக்குப் பின் பிரதமர் மோடியிடம் செங்கோல் ஒப்படைப்பு தரையில் விழுந்து, செங்கோலை வணங்கிய பிரதமர் மோடி செங்கோலை ஏந்தியவாறு, ஆதீனங்களிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.