Advertisment

Tamil news today: கர்நாடகாவில் 24 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 26 -05- 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Karnataka

Karnataka Assembly

கர்நாடகாவில் இன்று புதிதாக 24 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். தினேஷ் குண்டுராவ், மகாதேவப்பா உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisment

பெட்ரோல்- டீசல் விலை

பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் – ரூ. 102.63க்கும், டீசல் – ரு. 94.24க்கும் விற்பனை.

நீர் நிலவரம்

புழல் ஏரியில் நீர்இருப்பு 2301 மில்லியன் கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 717 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 462 மில்லியன் கனஅடியாக உள்ளது.

ஐ.பி.எல்

டாடா ஐபிஎல் 2023 - குவாலிஃபயர் 2ல் குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதல்; இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 00:06 (IST) 27 May 2023
    கரூர் மாநகராட்சி துணை மேயர் வீட்டுக்கு சீல்: ஆதரவாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு

    கரூர் மாநகராட்சியின் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்துள்ளனர்.

    தொடர்ந்து, துணை மேயரின் ஆதரவாளர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளின் வாகனங்களை வழிமறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையில், அதிகாரிகள் வாகனம் செல்ல முடியாதபடி, மாட்டுவண்டியை குறுக்கே நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


  • 21:14 (IST) 26 May 2023
    மாணவர்கள் முன்பு பள்ளி தலைமை ஆசிரியை மீது சக ஆசிரியைகள் தாக்குதல்

    பீகாரில் பள்ளியின் ஜன்னல் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட வாய் தகராறில் பள்ளி தலைமை ஆசிரியையை சக ஆசிரியைகைள் மாணவர்கள் முன்பே சராமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்தாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது


  • 21:11 (IST) 26 May 2023
    157 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி இல்லை

    குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர் முடிவில் 157 பள்ளிகளில், தேர்வு எழுதிய மாணவர்கள் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை!


  • 20:27 (IST) 26 May 2023
    ஹிஜாப் விவகாரம் - பாஜக நிர்வாகி கைது

    நாகையில் ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி புவனேஷ்வர் ராம் வேளாங்கண்ணி அருகே தலைமறைவாக இருந்த நிலையில், அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்


  • 20:21 (IST) 26 May 2023
    தீட்சிதர்கள் குழந்தை திருமணம் - புகைப்படங்கள் வெளியீடு

    சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்ததாக தகவல் வெளியான விவகாரம் புகார்களை தீர்சிதர்கள் மறுத்த நிலையில், குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்த புகைப்படம் வெளியாகி பரபரப்பு


  • 19:45 (IST) 26 May 2023
    டெல்லி மாநகர எல்லைகளுக்கு சீல்

    வரும் 28ல் டெல்லி எல்லைகளுக்கு சீல் வரும் 28ம் தேதி, டெல்லி மாநகர எல்லைகளை சீல் வைக்கப்படும் புதிய நாடாளுமன்ற திறக்கப்படும் நிலையில், டெல்லி போலீசார் முடிவு நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல, மல்யுத்த வீரர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், போராட்டம் நடத்தவும் அனுமதி மறுப்பு


  • 19:40 (IST) 26 May 2023
    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு

    மும்பை பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு


  • 18:59 (IST) 26 May 2023
    ராகுல் காந்திக்கு என்ஓசி வழங்கிய நீதிமன்றம்

    ராகுல் காந்திக்கு 3 ஆண்டுகளுக்கு பாஸ்போர்ட் பெற டெல்லி நீதிமன்றம் தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) வழங்கியது.


  • 18:51 (IST) 26 May 2023
    காங்கிரஸ் அற்ப அரசியல் செய்கிறது: பசவராஜ் பொம்மை

    காங்கிரஸ் அற்ப அரசியலில் ஈடுபடுகிறது. நாட்டின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை என பசவராஜ் பொம்மை கூறினார்.


  • 18:37 (IST) 26 May 2023
    யூடியூபர் இர்பான் கார் மோதியதில் மூதாட்டி பலி

    யூடியூபர் இர்பான் கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்தக் காரை யூடியூபர் இர்பானின் கார் ஓட்டுனர் அசாரூதீன் என்பவர் இயக்கியதாக கூறப்படுகிறது.


  • 18:34 (IST) 26 May 2023
    மத்திய ராணுவ படையுடன் ஐ.டி. ரெய்டு நடத்த வேண்டும்: செல்லூர் ராஜு

    செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ஆய்வு நடத்த வந்த வருமான வரித் துறை அதிகாரிகளை மிரட்டியுள்ளனர்.

    காரை உடைத்துள்ளர். ஆகவே, மத்திய ஆயுதப் படையுடன் வந்து ஐ.டி. ரெய்டு நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்தத் தலைவருமான செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.


  • 18:28 (IST) 26 May 2023
    விமான கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு

    கோடை விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து மற்ற நகரங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமானங்களில் கட்டணம் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது.


  • 18:27 (IST) 26 May 2023
    எவரெஸ்ட் சிகரம் ஏறி தமிழச்சி முத்தமிழ் செல்வி சாதனை

    முதல் முயற்சியிலேயே எவரெஸ்ட் சிகரம் ஏறி தமிழ்நாட்டை சேர்ந்த முத்தமிழ்செல்வி சாதனை படைத்துள்ளார்.


  • 18:01 (IST) 26 May 2023
    எவரெஸ்ட் சிகரம் ஏறி தமிழச்சி முத்தமிழ் செல்வி சாதனை

    முதல் முயற்சியிலேயே எவரெஸ்ட் சிகரம் ஏறி தமிழ்நாட்டை சேர்ந்த முத்தமிழ்செல்வி சாதனை படைத்துள்ளார்.


  • 17:53 (IST) 26 May 2023
    செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு: பதிலளிக்க மறுத்த கே.என் நேரு, கனிமொழி

    செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு நடந்த நிலையில் இது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி ஆகியோர் பதிலளிக்காமல் சென்றனர்.


  • 17:36 (IST) 26 May 2023
    விழுப்புரத்தில் பனை தொழிலாளர்கள் கைது; சீமான் கண்டனம்

    விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சியதாக பனை தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த பனைத் தொழிலாளர்கள் மீது கள்ளச்சாரயம் காய்ச்சுவதாகப் பொய் வழக்குப் புனையப்பட்டு, தமிழ்நாடு அரசினால் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். உடனடியாகப் பனைத் தொழிலாளர்களை விடுவிக்குமாறு தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

    விழுப்புரம் மாவட்டம் பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு மற்றும் ஜெபராஜ் ஆகியோரை இன்றும், செஞ்சி பகுதியை சேர்ந்த பழனி என்பவர் கடந்த வாரமும் காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு தொடர்ந்து பனைத் தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இதனை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    உண்மையாக கள்ளச்சாராயம் காய்ச்சுவோரைத் தடுக்கவோ, டாஸ்மாக் சாராய வியாபாரத்தை நிறுத்தவோ வக்கற்ற தமிழ்நாடு அரசு, பனையேறிகளை மிரட்டிக் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்நிலை மேலும் தொடர்ந்தால் நாம் தமிழர் கட்சி இதற்கெதிரானப் போராட்டங்களைக் கடுமையாக மேற்கொள்ளும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


  • 16:59 (IST) 26 May 2023
    ஆரூத்ரா மோசடி வழக்கில் 8 பேர் கைது

    “ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவன மோசடி வழக்கில் கிளை பொறுப்பாளர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஹிஜாவு வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என ஐ.ஐி ஆசியம்மாள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.


  • 16:46 (IST) 26 May 2023
    விழுப்புரத்தில் மது பாட்டில்கள் பறிமுதல்

    புதுச்சேரியில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் விழுப்புரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


  • 16:36 (IST) 26 May 2023
    டாஸ்மாக் கடைகளில் விற்பனை விலை பட்டியல்: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்

    அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை விலை பட்டியல் வைக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக செந்தில் பாலாஜி, “அனைத்து டாஸ்மாக் கடைகளும் நண்பகல் 12 முதல் இரவு 10 வரை மட்டுமே இயங்க வேண்டும்.

    மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதல் விற்பனை விலைப் பட்டியல் வைக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


  • 15:43 (IST) 26 May 2023
    அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!

    விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே கார் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


  • 15:40 (IST) 26 May 2023
    புதுச்சேரி: 9ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி!

    புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக புதுச்சேரி கல்வி துறை இயக்குனர் பிரியதர்சினி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    ஏற்கனவே 1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 9ஆம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


  • 15:25 (IST) 26 May 2023
    திடீரென தீப்பிடித்த பேட்டரி வாகனம்!

    ஆட்கள் மிகுந்த பகுதியான ஆவடி சந்தையில் பேட்டரி வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெயில் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மின்கசிவு காரணத்தினால் விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  • 14:38 (IST) 26 May 2023
    இ.பி.எஸ் மீது வழக்கு; விசாரணை அறிக்கை தாக்கல்!

    சொத்து விவரங்களை மறைத்ததாக எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கில் முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சேலம் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

    2021 சட்டமன்ற தேர்தல் வேட்புமனுவில் சொத்து விவரங்களை குறைத்து காட்டியதாக புகார் எழுந்தது குறிப்பித்தக்கது.


  • 13:58 (IST) 26 May 2023
    டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 13:46 (IST) 26 May 2023
    சென்னையில் மழைக்கு வாய்ப்பு

    சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 13:37 (IST) 26 May 2023
    எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ.வுக்கு புதிய பதவி

    மாநில திட்டக்குழுவின் பகுதிநேர உறுப்பினராக ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து, மாநில திட்டக்குழுவில் உறுப்பினராக இருந்த, மன்னார்குடி தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தொழில்துறை அமைச்சரான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.


  • 13:18 (IST) 26 May 2023
    சி.பி.ஐ., இ.டி.யை வைத்து மிரட்டல்: ஆர்.எஸ் பாரதி

    சிபிஐ, வருமான வரி, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டுகின்றனர். எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே ரெய்டுகள் நடத்தப்படுகின்றன.

    சோதனைகளை பார்த்து திமுக என்றைக்குமே அஞ்சியது இல்லை. தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடு தொடர்பான செய்திகளை திசை திருப்பவே ரெய்டு நடைபெறுகிறது என சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டியளித்தார்.


  • 12:47 (IST) 26 May 2023
    பொதுநல மனு தள்ளுபடி

    புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க உத்தரவிட கோரிய பொதுநல மனுவை விசாரிக்க மறுத்து உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


  • 12:44 (IST) 26 May 2023
    ஐடி ரெய்டு - அமைச்சர் விளக்கம்

    என் வீட்டில் சோதனை நடைபெறவில்லை, நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் தான் சோதனை நடைபெறுகிறது, ஐடி ரெய்டு முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்திக்கிறேன் – செந்தில் பாலாஜி விளக்கம்


  • 12:40 (IST) 26 May 2023
    செந்தில் பாலாஜி ஐடி சோதனை: கார் கண்ணாடி உடைப்பு

    செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடி திமுகவினரால் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  


  • 12:26 (IST) 26 May 2023
    சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமின்

    டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மருத்துவ காரணங்கள் அடிப்படையில் இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஜாமின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஆணையிட்டுள்ளது.


  • 12:22 (IST) 26 May 2023
    திருமாவளவன் அறிவிப்பு

    சாவர்க்கர் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா, மே 28ம் தேதி கறுப்பு நாளாகக் கடைபிடிப்போம்; இல்லந்தோறும் கறுப்புக் கொடியை உயர்த்துவோம்; கறுப்புச் சட்டையை உடுத்துவோம்- திருமாவளவன் அறிவிப்பு


  • 12:08 (IST) 26 May 2023
    வருமான வரித்துறையினர் சோதனை

    தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


  • 12:00 (IST) 26 May 2023
    ஜப்பானில் ஸ்டாலின்

    ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாண துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜியுடன், மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.


  • 11:57 (IST) 26 May 2023
    ஐடி ரெய்டு

    கோவையில் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திக் இல்லத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ஐடி ரெய்டு தொடர்கிறது. அவர் வீட்டின் முன் திமுகவினர் குவிந்து வருகின்றனர்.


  • 11:49 (IST) 26 May 2023
    பாமக பங்கேற்கும்

    டெல்லியில் வரும் 28ம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் திறப்பு விழாவில் பாமக பங்கேற்கும் என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.


  • 11:24 (IST) 26 May 2023
    சித்தராமையா ஆலோசனை

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக, முதலமைச்சர் சித்தராமையா டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்துகிறார்.


  • 11:19 (IST) 26 May 2023
    ஆட்சியை பிடிக்கவே பாஜக தமிழை தூக்கி பிடிக்கிறது

    நாடு சுதந்திரம் அடைந்த போது நேரு கையில் செங்கோல் வழங்கப்பட்டது. செங்கோல் வைப்பதால் தமிழர்களுக்கு என்ன பெருமை. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கவே பாஜக தமிழை தூக்கி பிடிக்கிறது. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது சரி தான்- சீமான்


  • 11:15 (IST) 26 May 2023
    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு

    தமிழகத்தில் வெயில் சுட்டெரிப்பதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படும். தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு, அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.


  • 10:25 (IST) 26 May 2023
    தூத்துக்குடியில் அனைத்து சாலைகளும் தார் சாலைகளாக மாற்றப்படும்

    “தூத்துக்குடியில் அனைத்து சாலைகளும் தார் சாலைகளாக மாற்றப்படும்; திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடிக்கப்படும்” - அமைச்சர் கே.என்.நேரு


  • 10:24 (IST) 26 May 2023
    500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வருமான வரித்துறையினரை முற்றுகையிட்டுள்ளனர்

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான ராமேஸ்வரபட்டியில் வருமான வரித்துறையினருக்கு கிராம மக்கள் எதிர்ப்பு; 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வருமான வரித்துறையினரை முற்றுகையிட்டுள்ளனர்.


  • 10:03 (IST) 26 May 2023
    வருமானவரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடி திமுகவினரால் உடைக்கப்பட்டதால் பரபரப்பு

    கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடி திமுகவினரால் உடைக்கப்பட்டதால் பரபரப்பு. பாதுகாப்பு கருதி வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்


  • 09:37 (IST) 26 May 2023
    டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

    டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை . சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு. தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது


  • 09:35 (IST) 26 May 2023
    ரூ. 75 நாணயத்தை வெளியிடவுள்ளது மத்திய அரசு

    புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதை கொண்டாடும் விதமாக, ரூ. 75 நாணயத்தை வெளியிடவுள்ளது மத்திய அரசு.


  • 09:34 (IST) 26 May 2023
    டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    ஜப்பானை சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. இதன் மூலம் திருப்போரூரில் டைசல் நிறுவனத்தின் ஆலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.


  • 08:33 (IST) 26 May 2023
    200க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை; சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை


  • 08:32 (IST) 26 May 2023
    செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 22 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

    கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 22 இடங்களில் வருமான வரித்துறை சோதனை; அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் மட்டும் 26 இடங்களில் சோதனை


  • 08:30 (IST) 26 May 2023
    டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

    வடசென்னையில் உள்ள நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இன்று அதிகாலை டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு


Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment