Advertisment

Tamil News Updates: பாஜகவினர் பெரியார் வாழ்க என்று சொல்லட்டும்- அண்ணாமலைக்கு கனிமொழி பதில்

Tamil News Live Updates-06-06-2024: இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK MP Kanimozhi to North Indian political leaders to learn any South Indian language Tamil News

Tamil News Updates

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 86-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம். 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2966 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 104 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 319 மில்லியன் கன அடியாக உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 • Jun 07, 2024 07:03 IST
  அண்ணாமலைக்கு கனிமொழி பதில்

  பாஜகவினர் பெரியார் வாழ்க என்று சொல்லட்டும். அதன்பின் பாஜகவில் இணைவது பற்றி பார்க்கலாம். பாஜகவை வளர்ப்பது என் வேலை கிடையாது நான் இளம் வயதில் இருந்து பார்த்தது திமுக மட்டும் தான்.

  - கனிமொழி பாஜகவிற்கு வந்தால் நான் பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் எனக் கூறிய மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பதில் • Jun 06, 2024 22:23 IST
  நமது சிறந்த தலைவர்களை அவதூறு செய்வதை நிறுத்துங்கள்  - வி.சி.க எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள்

  வி.சி.க எம்.பி ரவிக்குமார் தனது முகநூல் பக்கத்தில், “நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி மற்றும் அரசியலமைப்புத் தந்தை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளை முன்மொழிந்த பிரேரனா ஸ்தலத்திற்கு வைப்பது அவர்களை இழிவுபடுத்தும் சதிதான். புதிய சபாநாயகர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை, ஆனால் வெளியேற்றத்தை தீர்மானிக்க முன்னாள் சபாநாயகர் அவர்களுக்கு யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை. இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன் மேலும் நமது தலைவர்களை அவதூறு செய்யும் இந்த முயற்சியை புதிய அரசு தடுத்து நிறுத்த வேண்டுகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார். • Jun 06, 2024 22:21 IST
  காந்தி, அம்பேத்கர் சிலைகள் இடமாற்றம்; முன்னாள் சபாநாயகருக்கு யார் இந்த உரிமையை தந்தது? -  ரவிக்குமார் கேள்வி

  நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி, அம்பேத்கர் சிலைகள் திடீர் இடமாற்றம் செய்யப்படுகிறது. அம்பேத்கர் சிலை அகற்றப்பட்ட நிலையில், காந்தி சிலையை எடுக்கும் பணி நடந்து வருகிறது. நொய்டாவில் உள்ள பிரேர்னா ஸ்தல் எனப்படும் தலைவர்கள் அருங்காட்சியக பூங்காவுக்கு சிலைகள் மாற்றப்படுகிறது. புதிய சபாநாயகர் பொறுப்பேற்காத சூழலில், முன்னாள் சபாநாயகருக்கு யார் இந்த உரிமையை தந்தது என வி.சி.க எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். • Jun 06, 2024 21:23 IST
  ராகுலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி; தமிழக காங்கிரஸ் தீர்மானம் - செல்வப்பெருந்தகை கடிதம்

  மக்களவையில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியைத் தேர்வு செய்யக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக செல்வப்பெருந்தகை தகவல்; தமிழக காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் தொடர்பாக மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு செல்வப்பெருந்தகை கடிதம் எழுதியுள்ளார். • Jun 06, 2024 21:17 IST
  தமிழகத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

  தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாமகல், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, மயிலாடுதுறை, வேலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், திருப்பூர், தேனி, தென்காசி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. • Jun 06, 2024 20:46 IST
  டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்து வீச்சு தேர்வு

  டி20 உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது • Jun 06, 2024 19:56 IST
  காங்கிரஸ் கட்சியில் இணைந்த சங்லி தொகுதி எம்.பி. விஷால் பாட்டில்

  சங்லி தொகுதி எம்.பி. விஷால் பாட்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதன் மூலம் மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 100 ஆக உயர்ந்துள்ளது • Jun 06, 2024 19:35 IST
  கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட்

  சண்டிகர் விமான நிலையத்தில் பா.ஜ.க எம்.பி நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் • Jun 06, 2024 19:05 IST
  நம்பர் ப்ளேட்டில் ஸ்டிக்கர்: வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவு

  நம்பர் ப்ளேட்டில் ஸ்டிக்கர்கள் ஒட்டிய வாகனங்களை பறிமுதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அரசியல் கட்சியினரின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. • Jun 06, 2024 18:20 IST
  பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜூன் 10ஆம் தேதி வரை காவல்

  கர்நாடகா ஹாசன் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜூன் 10ஆம் தேதிவரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலியல் வழக்கில் ரேவண்ணா கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார். • Jun 06, 2024 18:06 IST
  காங்கிரஸ் கூட்டணி வெற்றியை பறித்த மாயாவதி

  உத்தரப் பிரதேசத்தில் மாயாவதிக்கு விழுந்த வாக்குகளால் காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களில் தோல்வியை தழுவியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. • Jun 06, 2024 17:48 IST
  பங்குச் சந்தையில் ஊழல்; ராகுல் காந்தி குற்றச்சாட்டு

   

  “பங்குச்சந்தையில் லாபம் ஈட்டும் நோக்கில் கருத்துக்கணிப்பை திணித்துள்ளனர்; ஜூன் 3ம் தேதி பங்குச்சந்தை உச்சத்தை தொட்டதற்கும், கருத்துக்கணிப்பு வெளியானதற்கும் தொடர்புள்ளது.
  இந்திய வரலாற்றில் நடைபெறாத மிகப் பெரும் ஊழல் பங்குச்சந்தையில் நடந்துள்ளது; கருத்துக்கணிப்புக்கு முந்தைய நாள் ஒரே நாளில் அதிகளவு பங்குச் சந்தை முதலீடு நடந்துள்ளது எப்படி?” என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். • Jun 06, 2024 16:33 IST
  2026ல் என்ன கூட்டணி என்பதை இப்போது சொல்ல முடியாது : தமிழிசை

  அதிமுக - பாஜக கூட்டணி அமைத்திருந்தால் நிறைய இடங்கள் வென்றிருக்கலாம் என அதிமுக தலைவர்கள் இப்போது சொல்கின்றனர். நாங்களும் சொல்கிறோம் 2026ல் என்ன கூட்டணி என்பதை இப்போது என்னால் கூற முடியாது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். • Jun 06, 2024 16:31 IST
  கனமழையால் தரைப்பாலத்தில் அடித்துச்செல்லப்பட்ட பேருந்து

  ஆந்திராவின் நந்தியால் பகுதியில் பெய்த கனமழையால் ஆற்றின் தரைப்பாலத்தில் பெருந்து மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. • Jun 06, 2024 15:41 IST
  வேலுமணிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் உட்கட்சி பிரச்சனை : அண்ணாமலை

  அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்திருந்தால் 35 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்று எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார். தனியாக இருந்தே அதிமுக ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. வேலுமணிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் உட்கட்சி பிரச்சனை இருப்பது போல் தெரிகிறது என அண்ணாமலை கூறியுள்ளார். • Jun 06, 2024 15:37 IST
  நான் தலைவராக இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி இல்லை : அண்ணாமலை

  கோவை மக்கள் அ.தி.மு.க.வை நிராகரித்துள்ளனர். நான் தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியுள்ளார். • Jun 06, 2024 14:50 IST
  சந்திரபாபு நாயுடு ஆலோசனை

  மக்களவை தேர்தலில் வென்ற எம்.பி.க்களுடன் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை

  25 தொகுதிகளைக் கொண்ட ஆந்திராவில் 16 தொகுதிகளை தெலுங்கு தேசம் கட்சி கைப்பற்றியுள்ளது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைவதில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. • Jun 06, 2024 14:50 IST
  அக்னிவீர் திட்டத்தை பரிசீலனை செய்ய கோரிக்கை

  2022 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் அக்னிவீர் திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. பீகாரில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி, ரயில் பெட்டிகளுக்கு தீ வைப்பு சம்பவமும் நடைபெற்றது.

  பீகார் தேர்தலிலும் அக்னிவீர் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கருதும்  நிதிஷ் குமார் இத்திட்டத்தை பரிசீலனை செய்ய கோரிக்கை • Jun 06, 2024 14:21 IST
  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்

  தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதியம் 2.30 மணிக்கு கோவையில் இருந்து டெல்லி செல்கிறார்.

  கோவையில் போட்டியிட்ட அண்ணாமலையும், வெற்றி பெறவில்லை. • Jun 06, 2024 14:05 IST
  மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி?

  99 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் பலம் வாய்ந்த எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இதனால் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக வேண்டுமென, காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

  காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கோரிக்கையை ராகுல் காந்தி ஏற்பாரா? அல்லது மூத்த தலைவர்கள் யாரேனும் தேர்வு செய்யப்படுவார்களா? என கேள்வி எழுந்துள்ளது • Jun 06, 2024 13:40 IST
  வரும் 9ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பு?

  8ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரும் 9ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. • Jun 06, 2024 13:40 IST
  விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை?

  விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை  தொடர்பாக, இதுவரை புகார் எதுவும் வரவில்லை. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

  - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் • Jun 06, 2024 13:40 IST
  தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  தமிழ்நாட்டில் இன்று கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    • Jun 06, 2024 13:20 IST
  எஸ்.பி.வேலுமணி பேட்டி

  அண்ணாமலை பாஜக மாநில தலைவர் ஆன பிறகுதான், பாஜக - அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்திருந்தால் 30 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருப்போம்.

  2014ல் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்டு சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்குகளை விட குறைவான வாக்குகளையே அண்ணாமலை வாங்கியுள்ளார்.

  பாஜக கூட்டணியைவிட அதிமுக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அதிமுக பெறும்

  கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எஸ்.பி.வேலுமணி • Jun 06, 2024 13:03 IST
  21ஆம் தேதி மோடி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு

   வரும் 21ஆம் தேதி மோடி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக தகவல். மக்களவை தேர்தலில் 292 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. நாளை மறுநாள் மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல் பிரதமராக பதவி ஏற்ற பின், புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எம்பிக்களாக பதவி பிரமாணம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் ஜூன் 17ஆம் தேதி புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களின் பதவி பிரமாணம் இருக்கும் என எதிர்பார்ப்பு எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் இடைக்கால சபாநாயகர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. • Jun 06, 2024 12:52 IST
  செட் தேர்வு ஒத்திவைப்பு: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு

  நாளை நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான மாநில அளவிலான தகுதி தேர்வு ஒத்திவைப்பு தொழில்நுட்ப காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு தகுதி தேர்வில் கலந்து கொள்வதற்காக 99 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் திடீரென ஒத்திவைப்பு • Jun 06, 2024 12:33 IST
  ஆந்திர முதல்வராக வரும் 12ஆம் தேதி பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு

  ஆந்திர முதல்வராக வரும் 12ஆம் தேதி பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு. வரும் 9ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், 12ஆம் தேதி பதவியேற்கிறார். மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி, சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா தள்ளிவைப்பு என தகவல் .ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் மட்டும் 134 இடங்களைக் கைப்பற்றியுள்ளது கூட்டணி கட்சிகளான ஜனசேனா 21 இடங்களையும் பாஜக 8 இடங்களையும் வென்றுள்ளன. • Jun 06, 2024 11:51 IST
  விஜயபிரபாகர் திட்டமிட்டு சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளார்: பிரேமலதா விஜயகாந்த்

  விஜயபிரபாகர் திட்டமிட்டு சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளார், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி எனவும் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சட்டி உள்ளார்.  விருதுநகரில் விஜயபிரபாகர் தோல்வியடையவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார் - பிரேமலதா விஜயகாந்த்.  மிக மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே விஜய பிரபாகர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார் 2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தியது ஏன்? எனவும் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.  • Jun 06, 2024 11:47 IST
  பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் அமித்ஷா ஆலோசனை

   டெல்லியில் நட்டா இல்லத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.  நாளை தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பெறுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது .நாளை மறுநாள் 3வது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.  • Jun 06, 2024 11:19 IST
  இயற்பியல் பாடத்தில் குளறுபடி: மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்

  இயற்பியல் பாடத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.  எந்த ஆண்டும் இல்லாத வகையில் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று முதலிடம். நீட் தேர்வு எழுதியவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் காரணமாக முதலிடம் பிடித்த 44 மாணவர்கள். • Jun 06, 2024 10:59 IST
  கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின்

  சீன விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின்

  அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் வழங்கி, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

  பஞ்சாப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தொடர்பாக, சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக வழக்கு

  கடந்த 2022 மே மாதத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்த நிலையில், சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு

  வழக்கு விசாரணைக்காக, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான கார்த்தி சிதம்பரம் • Jun 06, 2024 10:52 IST
  போரூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

  சென்னை போரூரில் கடும் போக்குவரத்து நெரிசல். கனமழை, 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணி காரணமாக போக்குவரத்து பாதிப்பு.

  போரூர் - வளசரவாக்கம் செல்லக்கூடிய ஆற்காடு சாலையில் கடும் நெரிசல். 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள். • Jun 06, 2024 10:34 IST
  தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு

   சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 600 ரூபாய் உயர்வு. ஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 75 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  • Jun 06, 2024 10:25 IST
  குடியரசு தலைவர்- தேர்தல் ஆணைய குழு சந்திப்பு

  குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு

  புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பட்டியல், எந்தெந்த கட்சியில் எத்தனை எம்.பி.க்கள் என்பது குறித்த பட்டியலை வழங்க உள்ளனர்

  மத்திய அமைச்சரவை பரிந்துரைப்படி, 17வது மக்களவையை கலைத்து குடியரசு தலைவர் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்

  18வது மக்களவையை அமைப்பதற்கான பணிகளை குடியரசு தலைவர் தொடங்கியுள்ள நிலையில், பட்டியலை வழங்கும் தேர்தல் ஆணைய குழு

  அரசியல் சாசன சட்டப்படி, தேர்தல் ஆணையம் குடியரசு தலைவரை சந்தித்து புதிய எம்.பி.க்கள் பட்டியலை வழங்க வேண்டியது அவசியம்

  பட்டியலை அடிப்படையாக கொண்டு 18வது மக்களவை, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை குடியரசு தலைவர் தொடங்குவார்.  • Jun 06, 2024 09:31 IST
  ஒன்றிணைந்து செயல்பட ஓ.பி.எஸ் அழைப்பு

  அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

  ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்

  அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வர வேண்டும் என சசிகலா நேற்று அழைப்பு விடுத்த நிலையில், இன்று ஓபிஎஸ் அழைப்பு

  இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும் • Jun 06, 2024 09:09 IST
  மோடிக்காக பதவியேற்பை தள்ளிவைத்த நாயுடு

  பிரதமர் மோடிக்காக தனது பதவியேற்பு விழாவை ஜுன் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு.  ஆந்திர முதல்வராக  சந்திரபாபு நாயுடு ஜுன் 8-ல் பதவியேற்க இருந்த நிலையில் மோடி பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள தேதியை மாற்றியுள்ளார்.  • Jun 06, 2024 08:42 IST
  அண்ணாமலையார் கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்

  வைகாசி மாத அமாவாசை தினத்தையொட்டி அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த இசைஞானி இளையராஜா.

  கோயிலின் அறங்காவலர் குழு சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.  • Jun 06, 2024 07:54 IST
  4 மாவட்டங்களில் மிதமான மழை

  தமிழகத்தில் காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் 

  திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment