Advertisment

Tamil Breaking News Highlights: வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 143 ஆக உயர்வு

Tamil Nadu News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kerala wayanad landslide

Tamil news today

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

வயநாட்டில் அடுத்தடுத்து நிலச்சரிவு: 8 பேர் இதுவரை உயிரிழப்பு

தொடர் மழையால் வயநாடு  மாவட்டம் மேப்பாடு அடுத்த முண்டக்கை என்ற இடத்தில் நள்ளிரவு 1 மணியளவு அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணிக்கு சுமார் 2 கி.மீ. தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் 2வது நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவில் சிக்கி பலர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Jul 30, 2024 20:38 IST
    முந்த்ரா துறைமுகத்தில் ரூ. 110 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்

    குஜராத்தில் அதானி குழுமத்துக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 110 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Jul 30, 2024 20:30 IST
    கேரள நிலச்சரிவு: மேலும் ஒரு தமிழர் உடல் கண்டெடுப்பு 

    கேரள வயநாடு நிலச்சரிவில் சிக்கியிருந்த மற்றொரு தமிழரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் ஐயங்கொல்லியைச் சேர்ந்த கல்யாண்குமார் (60) என்பவரின் உடல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கல்யாண்குமார் வயநாடு சூரல்மலையில் உள்ள கோயிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார்.



  • Jul 30, 2024 18:55 IST
    மினிமம் பேலன்ஸ்; ராகுல் காந்தி விமர்சனம்

     

    “இந்திய மக்கள் அபிமன்யூக்கள் அல்ல, அர்ஜுனர்கள். உங்களது எல்லா அட்டூழியங்களுக்கும் எப்படி பதில் தர வேண்டும் என மக்களுக்கு தெரியும்” என ராகுல் காந்தி கூறியுள்ளார்.



  • Jul 30, 2024 18:51 IST
    கேரள நிலச்சரிவு; தமிழக தொழிலாளிக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

    கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக தொழிலாளி காளிதாஸ் குடும்பத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.3 லட்சம் அறிவித்துள்ளார்.



  • Jul 30, 2024 17:59 IST
    பட்ஜெட்டில் பெயர் இல்லையென்றால் நிதி ஒதுக்கவில்லை என்று அர்த்தமா? தி.மு.க.வுக்கு நிர்மலா சீதாராமன் கேள்வி

    “பட்ஜெட்டில் பெயர் அறிவிக்காததால் அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று அர்த்தமா? என தி.மு.க.வுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் கேள்வியெழுப்பி உள்ளார்.



  • Jul 30, 2024 17:50 IST
    கேரளத்தில் இதுவரை இல்லாத பேரழிவு; பினராய் விஜயன்

    “கேரள மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. திடீரென பெய்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது” என வயநாடு நிலச்சரிவு குறித்து கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கூறியுள்ளார். வயநாடு நிலச்சரிவில் சிக்கி 93 பேர் உயிரிழந்துள்ளனர். 128 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



  • Jul 30, 2024 17:31 IST
    கேரளா; படகு சவாரி நிறுத்திவைப்பு

     

    தமிழ்நாடு, கேரளா எல்லைப் பகுதியில் உள்ள பாலருவி நீர்வீழ்ச்சி மற்றும் கல்லடா அணையில் மறு உத்தரவு வரும் வரை, படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.



  • Jul 30, 2024 17:10 IST
    குமரி, தஞ்சை உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Jul 30, 2024 16:58 IST
    கேரளா நிலச்சரிவு - உயிரிழப்பு 97ஆக உயர்வு

    கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. 



  • Jul 30, 2024 16:35 IST
    வயநாடு நிலச்சரிவு - உயிரிழப்பு 93 ஆக உயர்வு

    கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது 



  • Jul 30, 2024 16:19 IST
    வயநாடு நிலச்சரிவு - கூடலூரை சேர்ந்தவர் மரணம்

    கூடலூர், புளியம்பாறையை சேர்ந்த காளிதாஸ் கட்டட வேலைக்கு சென்ற நிலையில் கேரள வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார் 



  • Jul 30, 2024 16:01 IST
    வயநாடு நிலச்சரிவு; உயிரிழப்பு 80 ஆக உயர்வு

    கேரளா, வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் பலர் நிலச்சரிவுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. 



  • Jul 30, 2024 15:50 IST
    விஷால் - லைகா வழக்கு முடித்துவைப்பு

    ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட கோரி நடிகர் விஷால் தாக்கல் செய்த வழக்கு இருதரப்பிற்கும் சமரசம் ஏற்பட்டதால் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது



  • Jul 30, 2024 15:30 IST
    தலையில் ஈட்டி பாய்ந்து மூளைச்சாவு அடைந்த மாணவன் இன்று மரணம்

    கடலூர் தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்சியின்போது, தலையில் ஈட்டி பாய்ந்து, நேற்று மூளைச்சாவு அடைந்த மாணவன் இன்று உயிரிழந்துள்ளார்



  • Jul 30, 2024 15:10 IST
    கேரளாவில் மீண்டும் வலுக்கும் கனமழை

    நிலச்சரிவு நிகழ்ந்த கேரளாவில் வயநாடு பகுதியின் மேப்பாடி, முண்டகை, சூரல்மா, அட்டமலா பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது



  • Jul 30, 2024 14:36 IST
    வயநாடு நிலச்சரிவு: த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை

    கேரளா நிலச்சரிவு செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன என  தவெக தலைவர் விஜய் அறிக்கை  வெளியிட்டுள்ளார்.



  • Jul 30, 2024 14:32 IST
    ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்கள்: இந்திய வீராங்கனை சாதனை

    22 வயதான இந்திய வீராங்கனை மனு பாக்கர், 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவிலும், பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவிலும், வெண்கலப்பதக்கம் வென்றுள்ள நிலையில், ஒரே ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக 2 பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.



  • Jul 30, 2024 14:27 IST
    அடுத்த 24 மணி நேரத்தில் சென்னைக்கு மழை வாய்ப்பு

    சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில், ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!



  • Jul 30, 2024 13:57 IST
    வயநாடு நிலச்சரிவு: தமிழகத்தின் உதவிகள் பற்றி மலையாளத்தில் பதிவிட்ட மு.க.ஸ்டாலின்

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மலையாளி சகோதரர்களின் துயரத்தில் தமிழகம் பங்கு கொள்கிறது. மீட்பு மற்றும் மறுவாழ்வுக்காக ரூ.5 கோடி தருகிறோம். உதவிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் 2 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தவிர, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவையும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழுவையும் அனுப்புகிறோம். எங்கள் ஆதரவை வழங்க, தோழர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில் பேசினேன். ஒன்றாக இணைந்து இந்த நெருக்கடியை சமாளிப்போம்  என மு.க.ஸ்டாலின் தனக்கு எக்ஸ் பக்கத்தில் மலையாளத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Jul 30, 2024 13:14 IST
    வயநாடு நிலச்சரிவு: கேரளா முதல்வரிடம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

    வயநாடு நிலச்சரிவு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசிய நிலையில, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ₹5 கோடியை வழங்க உள்ளதாகவும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருவர் தலைமையில் ஒரு குழு அங்கு செல்ல இருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.



  • Jul 30, 2024 12:55 IST
    கேரளாவுக்கு விரையும் மீட்பு குழுவினர்

    பல்வேறு மாநிலங்களில் இருந்தும், கேரளாவுக்கு விரையும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் தமிழக மீட்பு படையை சேர்ந்த 60 பேர் ஈடுபட்டுள்ளனர் தமிழகத்தில் இருந்து மேலும் 200 பேர் கொண்ட மீட்பு குழு கேரளா விரைவு அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவில் இருந்து அதிகாரிகள் உட்பட 260 பேர் வயநாடு விரைந்துள்ளனர் பெங்களூருவில் இருந்தும் கூடுதல் தேசிய மீட்பு படை வீரர்கள் வயநாடு விரைவு



  • Jul 30, 2024 12:54 IST
    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு இந்திய ராணுவம் சென்றுள்ளதா ? : மல்லிகார்ஜுன கார்கே 

    “வயநாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?; நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு இந்திய ராணுவம் சென்றுள்ளதா?; மீட்பு பணி நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமை என்ன?; வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பான தகவல்களை மத்திய அரசு வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும்” - கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு விவகாரம் குறித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 



  • Jul 30, 2024 12:53 IST
    நிலச்சரிவு : மாநிலங்களவை தலைவர் நீங்கள் எங்களுக்கு தகவலை கொடுக்கிறீர்கள் ஆனால் நாங்கள் மத்திய அரசிடமிருந்து முழு தகவல்களை எதிர்பார்க்கிறோம்: மல்லிகார்ஜுன கார்கே

    நேற்று நள்ளிரவு கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிகிறது; நிலச்சரிவு காரணமாக மண்ணுக்கடியில் சிக்கியுள்ளவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை; மாநிலங்களவை தலைவர் நீங்கள் எங்களுக்கு தகவலை கொடுக்கிறீர்கள் ஆனால் நாங்கள் மத்திய அரசிடமிருந்து முழு தகவல்களை எதிர்பார்க்கிறோம்” - வயநாடு நிலச்சரிவு விவகாரம் குறித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 



  • Jul 30, 2024 12:41 IST
    வயநாடு நிலச்சரிவு: மீட்டுப் பணிகளில் துரிதமாக செயல்பட வேண்டும்: ராகுல்

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; மீட்டுப் பணிகளில் துரிதமாக செயல்பட வேண்டும்; மறுசீரமைப்பு பணிகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்; கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் இது போன்ற ஆபத்தான நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகிறது; நிலச்சரிவு விவகாரங்கள் பற்றி நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம் - மக்களவையில் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி பேச்சு



  • Jul 30, 2024 12:33 IST
    நிலச்சரிவில்உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50ஆக அதிகரிப்பு

    கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50ஆக அதிகரிப்பு



  • Jul 30, 2024 12:32 IST
    பஞ்சாப்பில் விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் : பாதி வழியில் நிறுத்தம்

    ஜம்முவில் இருந்து ஜோத்பூருக்கு சென்ற விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் காசு பேகு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயில் - வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை ரயிலில் இருந்து பயணிகள் பதறியடித்து வெளியேறிய நிலையில், போலீசார் மற்றும், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால், மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரணை.



  • Jul 30, 2024 12:13 IST
    நிலச்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழப்பு

    கேரளா மாநிலம் வயநாட்டில் மூன்று இடங்களில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 47 பேர் உயிரிழப்பு



  • Jul 30, 2024 12:08 IST
    வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: கேரள எம்.பி.க்கள் வலியுறுத்தல்

    வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள எம்.பி.க்கள் வலியுறுத்தல். 



  • Jul 30, 2024 11:53 IST
    நிலச்சரிவு : அண்ணாமலை இரங்கல்



  • Jul 30, 2024 11:47 IST
    சாலையில் மாடுகள் செல்லும் விவகாரம் : அபராத தொகை அதிகரிப்பு

    சென்னையில் சாலைகளில் சுற்றித்தியும் மாடுகளுக்கான அபராத தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்த தீர்மானம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்



  • Jul 30, 2024 11:39 IST
    வால்பாறை, பொள்ளாச்சி பகுதிகளில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வங்ழக ஸ்டாலின் உத்தரவு

    “கோவை: வால்பாறை மற்றுப் கொள்ளாச்சி ஆகிய இருவேறு இடங்களில் ஏற்பட்ட சம்பவங்களில் உயிரிழந்த ராஜேஸ்வரி (எ) முத்து (57), தனப்பிரியா (15), ஹரிஹரசுதன் (21) ஆகியோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை



  • Jul 30, 2024 11:30 IST
    நிலச்சரிவு - உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 44ஆக அதிகரிப்பு.



  • Jul 30, 2024 11:29 IST
    நிலச்சரிவு சம்பவத்தை தொடர்ந்து கேரளாவில் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து: கேரள முதல்வர் அறிவிப்பு

    நிலச்சரிவு சம்பவத்தை தொடர்ந்து கேரளாவில் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு. 



  • Jul 30, 2024 11:24 IST
    சென்னை: கொட்டிவாக்கத்தில் திரைப்பட தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை;

    அசோக் நகர் பகுதியில் உள்ள தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் கொட்டிவாக்கத்தில் உள்ள தயாரிப்பாளர் பாலாஜி என்பவரது வீட்டிலும் காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.



  • Jul 30, 2024 11:14 IST
    மீட்பு பணி: கேரள முதல்வரிடம் தொலைபேசியில் கேட்டறிந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

    மீட்பு பணிகள் குறித்து கேரள முதல்வரிடம் தொலைபேசியில் கேட்டறிந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்



  • Jul 30, 2024 11:13 IST
    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்



  • Jul 30, 2024 11:11 IST
    கேரளாவிற்கு தேவையான உதவிகளை வழங்க தமிழ்நாடு தயார்: ஸ்டாலின்

    “கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு சம்பவத்தில் உயிர்கள் பறிபோன செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்; முழுவீச்சில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் நிலச்சரிவில் சிக்கி உள்ளவர் அனைவரையும் மீட்கும் என நம்புகிறேன்; இந்த நெருக்கடியான நேரத்தில் நமது சகோதர மாநிலமான கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு 



  • Jul 30, 2024 10:51 IST
    கேரளாவில் இன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு

    தொடர் மழை காரணமாக கேரளாவின் வடக்கு மாவட்டங்களில் நிலத்தின் ஈரத்தன்மை அதிகரிப்பு

    இன்றும் அதி கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், வடக்கு கேரளா பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மிதமான அளவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு  உள்ளது

    - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை



  • Jul 30, 2024 10:48 IST
    பினராய் விஜயன் ஆலோசனை

    கேரளா, வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை  அலுவலகத்தில் பினராய் விஜயன் ஆலோசனை;
    மேலும் அப்பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளின் நிலை குறித்தும் முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டறிந்தார்



  • Jul 30, 2024 10:48 IST
    பலி எண்ணிக்கை உயர்வு

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை  36ஆக உயர்வு



  • Jul 30, 2024 10:46 IST
    வயநாடு நிலச்சரிவு புகைப்படங்கள்

    மீட்கப்பட்டவர்களில் 30க்கும் மேற்பட்டோர் பேர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராணுவமும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.

    கனமழை மற்றும் சாலைகள் சேதம் போன்ற காரணத்தால் மீட்பு பணியில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

    வயநாடு நிலச்சரிவு புகைப்படங்கள்

     



  • Jul 30, 2024 10:23 IST
    100க்கும் மேற்பட்டோர் கைது

    மதுரை, கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.



  • Jul 30, 2024 10:20 IST
    வயநாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்: ராகுல் காந்தி

    வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு சம்பவத்தால் வேதனை அளிக்கிறது. இந்த நிலச்சரிவு சம்பவத்தில் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்
    இன்னும் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்கள், விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என நம்புகிறேன். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் மேகஸ்ரீ ஆகியோரை தொடர்பு கொண்டேன்
    மத்திய அமைச்சர்களிடம் பேசி, வயநாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்;
    மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில நிர்வாகத்துடன் அனைத்து ஐக்கிய ஜனநாயக முன்னணி நிர்வாகிகளும் ஈடுபட வேண்டும்
    ராகுல் காந்தி X தளத்தில் பதிவு



  • Jul 30, 2024 09:48 IST
    தங்கம் விலை குறைவு

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,385-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.51,080-க்கும் விற்பனையாகிறது



  • Jul 30, 2024 09:33 IST
    சோலையார் அணை பகுதியில் மண் சரிவில் சிக்கி இருவர் உயிரிழப்பு

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் அணை பகுதியில் மண் சரிந்து வீட்டின் மேல் விழுந்ததில், வீட்டில் உறங்கி கொண்டிருந்த ராஜேஸ்வரி மற்றும் பிரியா ஆகிய இருவர் உயிரிழப்பு

    மீட்பு பணிகள் தீவிரம்



  • Jul 30, 2024 09:25 IST
    வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்த பிரதமர்

    கேரளா, வயநாடு நிலச்சரிவு சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலை பேசி வாயிலாக பினராய் விஜயனிடம் கேட்டறிந்தார்.

    நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு

    கேரள மாநிலத்திற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்வதாகவும் பிரதமர் மோடி உறுதி



  • Jul 30, 2024 09:18 IST
    விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

    ஜார்க்கண்ட்டில் இன்று அதிகாலை ஹவுரா - மும்பை விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு



  • Jul 30, 2024 09:16 IST
    உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

    தொடர் மழையால் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்வு



  • Jul 30, 2024 08:48 IST
    ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் இ.டி சோதனை

    சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • Jul 30, 2024 08:34 IST
    வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

    கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். சூரல்மலையில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் இறந்தனர், தொண்டர்நாட் கிராமத்தில் நேபாளி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை இறந்தது.

    நிலச்சரிவு காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    முண்டக்கை பகுதியில் வசிப்பவர்களை விமானம் மூலம் ஏற்றிச் செல்ல திட்டமிட்டு வருவதாக எம்.எல்.ஏ.T சித்திக் கூறினார்.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment