/indian-express-tamil/media/media_files/KTt2HPni0trilrVACX5A.jpg)
Tamil news live
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு
- காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவிப்பு
மக்களவைத் தேர்தலில் 234 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தனித்து 99 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது.
-
Jun 26, 2024 21:24 IST
அ.தி.மு.க உண்ணாவிரதம் போராட்டம் காவல்துறை அனுமதி
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு பதிலாக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கு கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
Jun 26, 2024 21:08 IST
பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்
"இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும். நாட்டின் வளர்ச்சி அனைத்து சமூகத்தையும் சென்றடைய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்" என்று முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
-
Jun 26, 2024 21:07 IST
சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை சார்பில் புதிய அறிவிப்புகள் பின்வருமாறு:-
வணிகவரித்துறை அலுவலகங்களில் பணிச் செயல்பாடுகள் ரூ. 5.48 கோடி செலவில் மேம்படுத்தப்படும். வணிக வரித்துறையிலுள்ள 7 மண்டல பயிற்சி மையங்களில் கணினி வழிப் பயிற்சி வழங்குவதற்கு தேவையான கணினி உபகரணங்கள் ரூ. 4.93 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்.
கடலூர் கோட்டத்திற்குட்பட்ட பழமையான நிலையில் உள்ள கடலூர் ஒருங்கிணைந்த வணிகவரி கட்டடத்தினை இடித்து புதிய கட்டடம் ரூ.23.00 கோடி செலவில் கட்டப்படும்.
திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட அலுவலகங்களுக்கு புதிய ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடம் ரூ. 22.00 கோடி செலவில் கட்டப்படும். பதிவுத்துறைக்கு ரூ. 100 கோடி செலவில் 36 புதிய பதிவுத்துறை அலுவலக கட்டடங்கள் கட்டப்படும். பணிப்பளு மிகுந்த சார்பதிவாளர் அலுவலகங்களை பிரித்து புதியதாக 7 சார்பதிவாளர் அலுவலகங்கள் தோற்றுவிக்கப்படும் உள்ளிட்ட 23 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன
-
Jun 26, 2024 20:26 IST
அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Jun 26, 2024 20:26 IST
தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட திருமண விபரங்கள் வெளியீடு
2023-24 நிதியாண்டில் பல்வேறு சட்டங்களின் கீழ் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட திருமண விபரங்கள் குறித்து சட்டப்பேரவையில் பதிவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#NewsUpdate | 2023-24 நிதியாண்டில் பல்வேறு சட்டங்களின் கீழ் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட திருமண விபரங்கள்
— Sun News (@sunnewstamil) June 26, 2024
- சட்டப்பேரவையில் பதிவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்#SunNews | #TNAssembly pic.twitter.com/FzMNx6Xl9Y -
Jun 26, 2024 20:20 IST
அமைச்சர் சேகர்பாபு அறிவிப்புகள்
சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறையின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:-
ஒரு கால பூஜைத்திட்டத்தில் பயன்பெறும் 17,000 கோயில்களில், வைப்புத்தொகை ரூ. 2.50 லட்சமாக உயர்த்தப்படும். கூடுதலாக 1000 கோயில்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு அர்ச்சகர்களுக்கும் மாத உதவித்தொகை வழங்கப்படும்.
ஒரு கால பூஜைத்திட்ட கோயில் அர்ச்சகர்களின் குழந்தைகள் நலன் கருதி, இவ்வாண்டு 500 மாணவர்களின் கல்விக்கு தலா ரூ. 10,000 உதவித்தொகை வழங்கப்படும். கோவை லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரூ. 6.50 கோடி மதிப்பில் புதிய தங்கத்தேர் செய்யப்படும்.
பக்தர்களுக்கு நாள்முழுவதும் அன்னதான திட்டம் மதுரை அழகர் கோயில், மருதமலை சுப்பிரமணியசாமி கோயில்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். பக்தர்களுக்கு ஒருவேளை அன்னதான திட்டம் தற்போது 760 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மேலும் 6 கோயில்களுக்கு இவ்வாண்டு விரிவு செய்யப்படும்.
திருக்கோயிலில் திருமணம் செய்யும் மணமக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பின், 4 கிராம் தங்கத் தாலி உடன் ரூ. 60,000 மதிப்பில் சீர் வரிசையும் வழங்கப்படும். நிதிவசதியற்ற கோயில்களில் உள்ள இசைக்கலைஞர்களுக்கு ரூ. 10,000 தொகுப்பூதியம் வழங்கப்படும். 19 கோயில்களில் ரூ. 32 கோடி மதிப்பில் ராஜகோபுரங்கள் அமைக்கப்படும்.
-
Jun 26, 2024 20:15 IST
அ.தி.மு.க.வினர் நாளை உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகளை தடுக்க தவறியதற்காக தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
-
Jun 26, 2024 20:14 IST
சாதிவாரி கணக்கெடுப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
-
Jun 26, 2024 18:50 IST
நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500க்கு நேரடி நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130 கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
Jun 26, 2024 18:15 IST
பழைய ஓய்வூதிய திட்டம் பரிசீலனையில் உள்ளது : தங்கம் தென்னரசு தகவல்
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான முடிவு பரிசீலனையில் உள்ளது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
-
Jun 26, 2024 17:42 IST
நீட் முறைகேடு நீட் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த நடத்த கேரளா அரசு தீர்மானம்
நீட் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
Jun 26, 2024 17:41 IST
கேரளா போக்குவரத்து கழகம் சார்பில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொடக்கம்
கேரள அரசு போக்குவரத்துக் கழகம் தனது முதல் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியை திருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ளது. தனியார் பயிற்சிப் பள்ளிகளை விட 40% குறைந்த கட்டணம் என தகவல் வெளியாகியுள்ளது. இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் பயில ₹11,000 கட்டணமாக நிர்ணயம். இரு சக்கர வாகனத்திற்கு மட்டும் ₹3500, 4 சக்கர வாகனத்திற்கு மட்டும் ₹9000 கட்டணம் நிர்ணயம். பழங்குடியினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
-
Jun 26, 2024 17:38 IST
கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசியல் ஆக்க முயற்சிக்க கூடாது: ஹென்றி திபேன்
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைத்துள்ள நிலையில், தேசிய மனித உரிமை ஆணையமும் தேசிய பெண்கள் ஆணையமும் தாமாக முன் வந்து விசாரிக்கும் பொருட்டு அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது சட்டத்திற்கு முரணானது. இச்செயல்பாட்டிற்குத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
-
Jun 26, 2024 17:34 IST
கன்னியாகுமரி பகுதிகளில் மிக கனமழை
கன்னியாகுமரி மேற்குதொடர்ச்சி மலை கிராமங்களில் மிக கனமழை பெய்து வரும் நிலையில், காளிகேசம், கீரிப்பாறை, தடிகாரன்கோணம், வாழையத்து வயலில் மிக மிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காளிகேசம் கிராமத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
-
Jun 26, 2024 16:55 IST
ஜாமின் மனுவை திரும்பப் பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
மதுபானக் கொள்கை வழக்கில் சி.பி.ஐ கைது செய்ததை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திரும்பப் பெற்றார். நாளை இம்மனு விசாரணைக்கு வர இருந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் வழங்கப்பட்டாலும் சி.பி.ஐ கைது செய்துள்ளதால் அவரால் சிறையில் இருந்து வர முடியாது
-
Jun 26, 2024 16:36 IST
தெற்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம்: ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி
தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம்; மேலும் நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம் என எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
-
Jun 26, 2024 16:05 IST
த.வெ.க பாராட்டு விழா - செல்போனுக்கு தடை
சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற உள்ள மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரங்கிற்கு பேப்பர், பேனா கொண்டு வரவும் அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது
-
Jun 26, 2024 15:48 IST
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க, பா.ம.க, நாம் தமிழர் வேட்பாளர்கள் உட்பட 29 பேர் களத்தில் உள்ளனர்.
-
Jun 26, 2024 15:27 IST
மாஞ்சோலை தேயிலை தோட்டம் - நிர்வாக இயக்குநர் விளக்கம்
மாஞ்சோலை மலை கிராமத்தில் உள்ள 5 தேயிலை தோட்டங்களையும், டான்டீ எடுத்து நடத்துவது தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை என தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்
-
Jun 26, 2024 15:16 IST
பாஸ்போர்ட் விண்ணப்ப கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை
பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களுக்கு காவல்துறை மூலம் முகவரி, நடத்தை சரிபார்ப்பு செய்யும் கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்
-
Jun 26, 2024 14:45 IST
தொகுதி மேம்பாட்டு நிதியை சட்டமன்ற உறுப்பினர்களே தொகுதிக்கு செலவு செய்யலாம்
தொகுதி மேம்பாட்டு நிதியை சட்டமன்ற உறுப்பினர்களே தொகுதிக்கு செலவு செய்யலாம். சட்டப்பேரவையில் அவை முன்னவர் துரை முருகன் அறிவிப்பு தொகுதி மேம்பாட்டு நிதி- அமைச்சர் அறிவிப்பு . தொகுதி மேம்பாட்டு நிதி 3 கோடியை எம்எல்ஏக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தொகுதி மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்தலாம்.
-
Jun 26, 2024 14:06 IST
சென்னை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை: தங்கம் தென்னரசு
சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு ". ரூ.12,000 கோடி அளவுக்கு நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது" "2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி மத்திய அரசால் வழங்கப்படவில்லை" நாக்பூர், கொச்சி, புனே ஆகிய நகரங்களுக்கு 2ஆம் கட்ட மெட்ரோ திட்டங்களுக்கு நிதியும் அனுமதியும் மத்திய அரசு வழங்கியுள்ளது பேரிடர் நிவாரண நிதி ரூ.37,000 கோடி கோரப்பட்ட நிலையில் தமிழகத்துக்கு ரூ.232 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு "தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்படுகிறது" "மாநில அரசுக்கான வரி பகிர்வு முறையாக வழங்கப்பட வேண்டும்" மின் பகிர்மானத்திற்கு மத்திய அரசுக்கு கூடுதல் நிதி தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
-
Jun 26, 2024 14:00 IST
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை 4 மாதங்களில் முடிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு செந்தில்பாலாஜி வழக்கை முடிக்க கெடு மனு மீது மனுத்தாக்கல் செய்யாமல் விசாரணையை முடிக்க ஒத்துழைக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்ற உத்தரவை சாதகமாக காட்ட கூடாது - உயர் நீதிமன்றம் செந்தில்பாலாஜி வழக்கை 3 மாதங்களில் முடிக்க கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
-
Jun 26, 2024 13:57 IST
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரையை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரையை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி சபாநாயகர் உரை - எதிர்க்கட்சிகள் அமளி ஜூன் 25ஆம் தேதி நாட்டில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி கருப்பு தினம் - சபாநாயகர் ஓம் பிர்லா முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தினார்- சபாநாயகர் எமர்ஜென்சி நினைவுகூர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசிய நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் எமர்ஜென்சியின் போது நாட்டின் அதிகாரத்தை சிதைத்ததோடு ஒட்டுமொத்த தேசமும் சிறைக்குள் அடைக்கப்பட்டது - சபாநாயகர் "எமர்ஜென்சி காலத்தில் ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டது" எமர்ஜென்சி காலத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மக்களவையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி குடியரசு தலைவர் உரைக்காக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு.
-
Jun 26, 2024 13:38 IST
சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க உறுப்பினர்கள் வெளிநடப்பு
சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க உறுப்பினர்கள் வெளிநடப்பு . வன்னியர் 10.5% உள் ஒதுக்கீடு குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி வெளிநடப்பு அவையில் இருந்து பா.ம.க வெளிநடப்பு. வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக மூன்று ஆண்டுகளாக பேசுகிறோம் - பா.ம.க எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் "மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறி தமிழக அரசு காலம் தாழ்த்துகிறது" இடைத்தேர்தல் ஒட்டி தொகுதியில் அமைச்சர்கள் ஒரு கருத்து பேசுகின்றனர்... பேரவையில் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது - பா.ம.க எம்எல்ஏ சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அவையில் இருந்து பா.ம.க வெளிநடப்பு.
-
Jun 26, 2024 12:58 IST
உண்ணாவிரத போராட்டம் நடத்த அதிமுக முடிவு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட அனுமதி கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அ.தி.மு.க மனு
சட்டப்பேரவை கூட்டத்தொடர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உள்ளது அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடத்த அதிமுக முடிவு
-
Jun 26, 2024 12:42 IST
விஷ சாராய விவகாரம்: சிபிசிஐடி முடிவு
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் 5க்கும் மேற்பட்டோரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவுகள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர் சிபிசிஐடி போலீசார்
முக்கிய நபரான மாதேஷ், மொத்த வியாபாரியான ஜோசப் ராஜா, சின்னதுரை உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்
5 நாட்கள் காவல் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர் சிபிசிஐடி போலீசார்
-
Jun 26, 2024 12:38 IST
ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து
மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து
-
Jun 26, 2024 12:09 IST
சாதிவாரி கணக்கெடுப்பு: தனித் தீர்மானம் நிறைவேற்றம்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் நிறைவேற்றம்.
சட்டப்பேரவையில் ஒரு மனதாக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
-
Jun 26, 2024 11:52 IST
எங்களை அவையில் பேச அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்: ராகுல்
மக்களவையின் புதிய சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார்.
ராகுல் பேசுகையில், "எதிர்க்கட்சிகள் உங்கள் பணியில் உங்களுக்கு உதவ விரும்புகிறது, நீங்கள் எங்களை சபையில் பேச அனுமதிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார். -
Jun 26, 2024 11:48 IST
சாதிவாரி கணக்கெடுப்பு: ஸ்டாலின் பேச்சு
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் திமுக நிலைப்பாடு
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது மத்திய அரசு. மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசு நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசு நடத்துவது தான் முறையாக இருக்கும்
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கு எடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு உடன் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
-
Jun 26, 2024 11:31 IST
ஓம் பிர்லாவுக்கு மோடி, ராகுல் வாழ்த்து
மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு. பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவுக்கு மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து
-
Jun 26, 2024 11:27 IST
மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு
18-வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு
மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் தே..ஜ.கூ எம்.பிகளால் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.
-
Jun 26, 2024 10:49 IST
சாதிவாரி கணக்கெடுப்பு- தனித்தீர்மானம் கொண்டு வந்தார் மு.க.ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் மு.க.ஸ்டாலின்.
சமீபகாலமாக சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. பாமக சட்டமன்றக் குழு தலைவர் ஜி.கே.மணி சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என கூறினார். சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்பது தான் திமுக அரசின் நிலைப்பாடு.
- சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் உரை
-
Jun 26, 2024 10:46 IST
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு
மக்களவை சபாநாயகர் தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கொடிக்குன்னில் சுரேஷூக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக அறிவிப்பு
-
Jun 26, 2024 10:40 IST
6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருவள்ளூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
-
Jun 26, 2024 10:38 IST
கே.பி.அன்பழகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு
சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தடுமாறிய நிலையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அறையில் ஓய்வு எடுத்து வருகிறார்
குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக கே.பி.அன்பழகன் மயங்கிய நிலையில், தலைமைச்செயலக மருத்துவர்கள் உடன் விராலிமலை எம்.எல்.ஏ. சி விஜயபாஸ்கர் இணைந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அறையில் அன்பழகனுக்கு முதலுதவி
-
Jun 26, 2024 10:38 IST
பதிலளிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது: சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் குறிப்பாக அதிமுகவின் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. சட்டமன்றம் தொடங்கிய நாளில் இருந்து தெளிவாக தெரிவித்து வருகிறேன். ஆனாலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்கள் பிரச்னையை பற்றி பேச வாய்ப்பிருந்தும் அதை ஏற்க மனம் இல்லை.
சட்டப்பேரவையில் பேசாமல் வெளியில் பேசுவது என்பது பேரவையின் மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல
- சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின்
-
Jun 26, 2024 10:10 IST
சட்டபேரவைத் தலைவர் அப்பாவு நடுநிலையோடு இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி
சட்ட விதி 56-ல் பேரவையின் பிற நிகழ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். காலையே சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்து கோரிக்கை அளித்தோம். விதிப்படி வந்தால் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேசலாம் என பேரவைத் தலைவர் சொன்னார்.
விதியை பின்பற்றி பேசினாலும் பேச அனுமதி மறுக்கிறார். சட்டபேரவைத் தலைவர் அப்பாவு நடுநிலையோடு இல்லை. பிரச்னையின் ஆழத்தை கருதி பேரவைத் தலைவர் அப்பாவு நேரம் கொடுத்திருக்க வேண்டும்
- சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
-
Jun 26, 2024 10:05 IST
நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்
சட்டப்பேரவை தொடங்கியதுமே இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம். நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் உத்தரவிட்டார்.
கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என பேரவை விதிகளை சபாநாயகர் சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்ட நிலையில் நடவடிக்கை.
-
Jun 26, 2024 10:01 IST
அதிமுகவினர் உள்நோக்கத்தோடு செயல்படுகின்றனர்: சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு சட்டப்பேரவை தொடங்கிய நாள் முதல் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என சொன்னார். கள்ளக்குறிச்சி குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டது
அதிமுகவினர் உள்நோக்கத்தோடு செயல்படுகின்றனர். அவை ஒத்தி வைப்பு தீர்மானத்தை நான் ஏற்றுக்கொண்டால் கூட அதிமுகவினர் பேச தயாராக இல்லை. பேரவையின் மாண்பை குறைப்பது மட்டுமே அதிமுகவின் ஒரே நோக்கம்.
- சபாநாயகர் அப்பாவு
-
Jun 26, 2024 10:00 IST
சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் தொடங்கியதும் அவையை ஒத்தி வைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி அதிமுகவினர் அமளி
தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு
-
Jun 26, 2024 09:55 IST
மகளிர் டெஸ்ட் போட்டியை பார்க்க அனுமதி இலவசம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான மகளிர் டெஸ்ட் போட்டியை பார்க்க அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!
இதேபோல், ஜூலை 5, 7, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கான டிக்கெட்-ஐ, ஜூன் 29ம் தேதி PAYTM insider இணையத்தில் பெறலாம் எனவும் அறிவிப்பு. இந்த டிக்கெட் விலை ₹150 என நிர்ணயம்.
-
Jun 26, 2024 09:33 IST
அமீபிக் மூளைத்தொற்றுக்கு 13வயது சிறுமி உயிரிழப்பு
கேரளாவில் அமீபிக் மூளைத்தொற்றால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி உயிரிழப்பு
நீர்நிலைகளில் இருந்து நோய்த்தொற்று பரவும் என்பதால்,பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை
-
Jun 26, 2024 09:27 IST
தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுப்பு
ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு
12.20 செ.மீ. மழை பொழிய வாய்ப்பு உள்ளதால் 2வது நாளாக இன்றும் ஆரஞ்சு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
Jun 26, 2024 09:21 IST
முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஜூலை 21ம் தேதி நடைபெறவுள்ள திறனாய்வுத் தேர்வுக்கு, அரசுப்பள்ளிகளில் இந்த கல்வியாண்டு 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் வாயிலாக ஜூன் 21-26 வரை விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
Jun 26, 2024 08:55 IST
சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் மக்களவை சபாநாயகர் தேர்தல்
சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில், 2 ஆவது முறையாக சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா மனுத்தாக்கல் செய்தார். அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக எம்பி ஆ.ராசா, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்தியா சுதந்திர அடைந்ததில் இருந்து இதுவரை லோக்சபா சபாநாயகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு வந்தார். ஆனால் முதல் முறையாக தற்போது பாஜக கூட்டணி மற்றும் ‛இந்தியா' கூட்டணி சார்பில் தனித்தனியாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் தேர்தல் மூலம் சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
-
Jun 26, 2024 08:29 IST
சாதிவாரி கணக்கெடுப்பு: சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்
நாடுமுழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வருகிறார் மு.க.ஸ்டாலின்
மக்கள்தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பை சேர்த்து நடத்த வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.
-
Jun 26, 2024 08:22 IST
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின், தமிழக ஆளுநர் முதல்முறையாக டெல்லி புறப்பட்டு சென்றார்.
தமிழகத்தில் விஷச்சாராய சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது
-
Jun 26, 2024 08:15 IST
எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய விரைந்தது சிபிசிஐடி
கரூரில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில் அவரை கைது செய்ய விரைந்தது தனிப்படை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.