Advertisment

Tamil Breaking News Highlights: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: 1.55 லட்சம் கன அடி நீர்வரத்து

Tamil News Live Updates-27-07-2024: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Karnataka govt to appeal against Cauvery panel directive on water release to Tamil Nadu Tamil News

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 132-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

பாரிஸ் ஒலிம்பிக் தொடக்கம்

33-வது ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இந்தியா சார்பில் பி.வி சிந்து, சரத் கமல் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர். இந்தியா துப்பாக்கிச் சுடுதல், தடகளம் உள்ளிட்ட 16 விளையாட்டுகளில் 117 பேர் பங்கேற்பு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Jul 27, 2024 23:30 IST
    3 மாடி கட்டடம் தரைமட்டமானதில் ஒருவர் உயிரிழப்பு!

    மும்பை நவி பகுதியில் உள்ள சாபாஸ் கிராமத்தில், 3 அடுக்கு மாடி கட்டிடடம் விழுந்து தரைமட்டமான நிலையில, இந்த இடர்பாடுகளில் சிக்கி 80 வயது மூதாட்டி ஒருவர் மரணமடைந்துள்ளார். இதில் 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 50 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இது குறித்து வீட்டின் உரிமையாளர் மீத நடவடிக்கை எடுக்க உள்ளதாக மாநகராட்சி ஆணையர் உறுதி அளித்துள்ளார்.



  • Jul 27, 2024 21:33 IST
    10 வயது சிறுமி உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை கத்தியால் ஐடி ஊழியர் செந்தில் குமார் வெட்டியுள்ளார். குழந்தையின் சத்தம் கேட்டு, தடுக்க வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த தங்கராசு, முத்துவேலு ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.  போலீஸ் விசாரணையில் செந்தில் குமார் மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • Jul 27, 2024 19:52 IST
    சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; நாளை முதல் அமல்

    சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 7.45 முதல் இரவு 7.45 வரை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
    அதற்கு பதிலாக எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
    தாம்பரம் ரயில்வே யார்டு பணிகளுக்காக காலை 10 மணி முதல் பகல் 1 மணி மற்றும் இரவு 10.30க்கு மேலான ரயில்கள் ரத்து என முன்பே கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



  • Jul 27, 2024 19:48 IST
    குற்றங்களுக்கு சகிப்பின்மை கிடையாது; யோகி ஆதித்யநாத்

     

    உத்தரப் பிரதேசத்தில் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு சகிப்புத்தன்மை இல்லை; சிறைக்கு வெளியே குற்றவாளிகள் யாரும் இல்லை” என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.



  • Jul 27, 2024 19:38 IST
    ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடியாக அதிகரித்து காணப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து நீர் திறந்து விடப்பட்ட நிலையில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.



  • Jul 27, 2024 18:41 IST
    மகளிர் ஆசிய கோப்பை; பைனலுக்கு முன்னேறிய இலங்கை

    ஆசிய மகளிர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.



  • Jul 27, 2024 17:57 IST
    தொல்லியல் துறைக்கும் சமஸ்கிருதத்துக்கும் என்ன தொடர்பு? சீமான்

    தமிழ்நாடு தொல்லியல் துறை பணிக்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும்? தொல்லியல் துறைக்கும் சமஸ்கிருதத்துக்கும் என்ன தொடர்பு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பி உள்ளார்.
    தொல்லியல் துறை பணிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.



  • Jul 27, 2024 17:42 IST
    பள்ளிபாளையத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் பள்ளிபாளையம் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Jul 27, 2024 17:25 IST
    மம்தா பானர்ஜி பேச வாய்ப்பு தரப்பட்டது; நிர்மலா சீதாராமன்

    “நிதி ஆயோக் கூட்டத்தில் தனக்கு 5 நிமிடத்துக்கு மேல் பேச வாய்ப்பு தரப்படவில்லை என மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டிய நிலையில், “மம்தா பானர்ஜிக்கு பேச வாய்ப்பு தரப்பட்டது. தனது மைக் துண்டிக்கப்பட்டதாக அவர் கூறுவது முற்றிலும் தவறு” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.



  • Jul 27, 2024 17:09 IST
    தி.மு.க ஒரு பிரைவேட் கம்பெனி; ஸ்டாலின் அதன் மேனேஜர்: செல்லூர் ராஜூ விமர்சனம்

    “தி.மு.க ஒரு பிரைவேட் கம்பெனி; மு.க. ஸ்டாலின் அதன் மேனேஜர்” என செல்லுர் ராஜூ விமர்சித்துள்ளார்.



  • Jul 27, 2024 16:54 IST
    வெள்ள அபாய எச்சரிக்கை..! 

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.32 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



  • Jul 27, 2024 16:16 IST
    திருப்பத்தூர் ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு

     

    பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், திருப்பத்தூர் ஆட்சியர் ஆகஸ்ட் 22ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 



  • Jul 27, 2024 15:47 IST
    உத்தரவுக்கு இடைக்கால தடை

    தனி நபரின் நிலத்தை பஞ்சமி நிலமாக மாற்றிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அதிகாரி, வட்டாட்சியர் ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Jul 27, 2024 15:22 IST
    தீ பிடித்து எரிந்த 3 கூரை வீடுகள்

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மேல நரிக்குடி பகுதியில்  திடீரென 3 கூரை வீடுகள் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒரு வீடு முற்றிலும் எரிந்த நிலையில் மற்ற 2 வீடுகளில் முக்கிய சான்றிதழ்கள், மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Jul 27, 2024 15:12 IST
     "முதல்வரை இப்படித்தான் நடத்துவீர்களா?" - ஸ்டாலின் கண்டனம்

    நிதி ஆயோக் கூட்டத்தில் பாரபட்சம் காட்டப்பட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டிய நிலையில், ஒரு மாநில முதல்வரை இப்படித்தான் நடத்துவீர்களா? என முதல்வர் ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

    மேலும், "எதிர்க்கட்சி தலைவர்களை எதிரிகள் போல் நடத்தி, அவர்களது குரலை மவுனமாக்குதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றும் கூறி இந்த விவகாரத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 



  • Jul 27, 2024 13:49 IST
    4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

    - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jul 27, 2024 13:07 IST
    உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

    திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, ஜூலை 29ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவு



  • Jul 27, 2024 13:07 IST
    2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் (ஜூலை 28) கனமழைக்கு வாய்ப்பு

    - சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Jul 27, 2024 12:41 IST
    பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: அன்புமணி

    கடந்த ஆண்டை விட தற்போதைய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 3.5 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் தமிழக அரசு வெள்ளத்திற்கு ரூ.1,000கோடி ஒதுக்க முடியாதா? தமிழகத்தின் பெயர் மட்டுமல்ல... பல மாநிலங்களின் பெயர்களும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பட்ஜெட்டில் ஒரு மாநிலத்தின் பெயர் வரவில்லை என்பதெல்லாம் பிரச்சினையா?
    கட்டாய சட்டத்தின் படி ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது"
    அன்புமணி ராமதாஸ்



  • Jul 27, 2024 12:32 IST
    நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார் மம்தா பானர்ஜி

    டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார் மம்தா பானர்ஜி

    நிதி ஆயோக் கூட்டத்தில் மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டது ஆனால் எனக்கு 5  நிமிடம் மட்டுமே பேச அனுமதி தரப்பட்டது. என் மாநில பிரச்னைகள் குறித்து பேச முற்பட்டபோது, வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது எனக்கு ஏற்பட்ட அவமானம் எனவே நான் நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து வெளியேறினேன்.



  • Jul 27, 2024 12:31 IST
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக அதிகரிப்பு     

    தொடர் நீர்வரத்துக் காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 12வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்துச் செல்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Jul 27, 2024 11:54 IST
    9-வது நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9-வது நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது



  • Jul 27, 2024 11:54 IST
    ஜி.கே.வாசன் பேட்டி

    நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் பிரச்னையை பேசாமல், மு.க.ஸ்டாலின் புறக்கணித்தது தவறானது. மற்ற மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்வது போல தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துக் கொண்டிருக்கலாம்

    - கோவையில் ஜி.கே.வாசன் பேட்டி



  • Jul 27, 2024 11:53 IST
    மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    மக்களுடன் முதல்வர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து 5 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

    திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நகர் பகுதிகளில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.



  • Jul 27, 2024 10:45 IST
    பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: திமுக ஆர்ப்பாட்டம்

    மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு - பாஜக அரசைக் கண்டித்து சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

    "வரி வாங்கத் தெரியுது.. நிதி கொடுக்கத் தெரியாதா?" என ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பி வருகின்றனர்.



  • Jul 27, 2024 10:43 IST
    தங்கம் விலை ரூ.400 உயர்வு

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.400 உயர்வு ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று 400 ரூபாய் அதிகரித்து 51,720 ரூபாய்க்கு விற்பனை



  • Jul 27, 2024 09:51 IST
    100 அடியை எட்டிய மேட்டூர் அணை

    தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

    71வது முறையாக 100 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்

    ஆடிப் பெருக்கு விழாவிற்கு நாளை 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது



  • Jul 27, 2024 09:38 IST
    ஓசூரில் விமான நிலையம்: ஒப்புதல்

    ஓசூரில் விமான நிலையம் - சாத்தியகூறுகளை ஆய்வு செய்ய ஒப்புதல்

    ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான  சாத்தியக கூறு குறித்து ஆய்வு செய்ய இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்



  • Jul 27, 2024 09:14 IST
    நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பங்கேற்பு 

    மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கிறார். இந்தியா கூட்டணியில் பல  எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டததை புறக்கணிக்கும் நிலையில் மம்தா பங்கேற்பு. 

    நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டத்தை புறக்கணிப்பதில் இந்திய கூட்டணியின் கட்சிகளிடையே "ஒருங்கிணைப்பு" இல்லை என்றும், கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் குரலாக இருப்பேன் என்றும் அவர் உறுதியளித்தார். 



  • Jul 27, 2024 09:09 IST
    கனமழை: மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

    தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு. 7 - 11 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் இன்று மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Jul 27, 2024 08:38 IST
    5 மின்சார ரயில்கள் ரத்து

    தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி காரணமாக இன்றும் நாளையும் 55 மின்சார ரயில்கள் ரத்து



  • Jul 27, 2024 07:53 IST
    மத்திய அரசின் பழிவாங்கும் பட்ஜெட்: ஸ்டாலின்

    நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு மாநில மக்கள் பாஜகவை புறக்கணித்தார்கள். அந்த மாநில மக்களை பழிவாங்குகிற பட்ஜெட்டாகதான் மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் அமைந்திருக்கிறது -மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

    பதவி நாற்காலிக்கு, கால்களாக இருக்கும் மாநிலங்களுக்கு ₹10,000 கோடிக்கும் மேல் நிதி. மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கு. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை புறக்கணித்த மக்களை பழி வாங்கும் பட்ஜெட் தான் இது- ஸ்டாலின் கடும் விமர்சனம்.



  • Jul 27, 2024 07:46 IST
    டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம்

    டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இன்று காலை நடைபெறும் நிதி ஆயோக் 9-வது கூட்டத்தில் வளர்ந்த பாரதம் 2024 பற்றி ஆலோசனை. 2047-ல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை எட்டுவதில் மாநிலங்களின் பங்கு குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை. 



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment