Live

Tamil news today : பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: கலாஷேத்ராவில் மாணவிகள் தொடர் போராட்டம்

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil news today : பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: கலாஷேத்ராவில் மாணவிகள் தொடர் போராட்டம்

பெட்ரோல்,  டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் தொடக்கம்

சென்னை சென்ரல் – கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் தொடக்கம். இன்று அதிகாலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சென்றது.

பணி நீக்கம்

டிஸ்னி நிறுவனம் செலவினங்களை கட்டுபடுத்த, நிறுவனத்தில் பணிபுரியும் 7 ஆயிரம் ஊழியர்களை  பணி நீக்கம் செய்ய நடவடிக்கையை தொடங்கியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
08:27 (IST) 31 Mar 2023
மீண்டும் போராட்டம் தொடரும்

சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் மாணவிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு. காலை 7 மணிக்கு மீண்டும் போராட்டம் தொடரும் என மாணவிகள் தரப்பு தகவல்

21:52 (IST) 30 Mar 2023
மத்திய அமைச்சர் அனுராக் தாகூரை நேரில் சந்தித்த ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ படக்குழு

'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படக்குழுவினர் மத்திய அமைச்சர் அனுராக் தாகூரை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பில் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வஸ், தயாரிப்பாளர் குனித் மோங்கா, நெட்ஃபிளிக்ஸ் சார்பில் மோனிகா ஆகியார் இடம்பெற்றனர்.

21:50 (IST) 30 Mar 2023
ஒன்றாக சேர்ந்து பணியாற்றுவோம்… அ.தி.மு.க உறுப்பினர்களும் வரவேண்டும்; அழைப்பு விடுத்த அமைச்சர் உதயநிதி

“ஒன்றாக சேர்ந்து பணியாற்றுவோம்… அதிமுக உறுப்பினர்களும் வரவேண்டும்” என்று அமைச்சர் உதயநிதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அழைப்பு விடுத்தார்.

21:02 (IST) 30 Mar 2023
தமிழகத்தில் 20 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 13 ஏ.எஸ்.பி.க்கள் உட்பட 20 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

20:43 (IST) 30 Mar 2023
வேலூர் ஹிஜாப் விவகாரம்: கைதான 6 பேருக்கு நீதிமன்ற காவல்; கோர்ட் உத்தரவு

வேலூர் ஹிஜாப் விவகாரத்தில் கைதான 6 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

20:41 (IST) 30 Mar 2023
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை பார்வையிட்ட மோடி

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி முன்னறிவிப்பின்றி பார்வையிட்டார். நாடாளுமன்ற கட்டிடத்தின் இரு அவைகளையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

20:41 (IST) 30 Mar 2023
நரிக்குறவர் மக்களை அனுமதிக்காத ரோகிணி தியேட்டரில் வட்டாட்சியர் அதிரடி விசாரணை

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அமைந்தகரை வட்டாட்சியர் மாதவன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். திரையரங்கில் விசாரணை மேற்கொண்ட வட்டாட்சியர் மாதவன், நரிக்குறவர் பெண்ணிடமும் விசாரித்துள்ளார்.

20:33 (IST) 30 Mar 2023
டெல்லியில் மோசமான வானிலை காரணமாக திசைதிருப்பப்பட்ட 17 விமானங்கள்

டெல்லியில் மோசமான வானிலை காரணமாக 17 விமானங்கள் திசைதிருப்பப்பட்டது. லக்னோ, ஜெய்ப்பூருக்கு தலா 8 விமானங்களும், டேராடூனுக்கு ஒரு விமானமும் திசைதிருப்பப்பட்டது.

19:49 (IST) 30 Mar 2023
ஏப்.9-ம் தேதி முதுமலைக்கு வருகிறார் மோடி – மத்திய அமைச்சர் தகவல்

நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு ஏப்.9-ம் தேதி பிரதமர் மோடி வருகை தரவுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers ஆவணப்படத்தில் நடத்த பொம்மன், பெள்ளியை சந்தித்து கலந்துரையாட உள்ளார் என்று மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் தகவல் தெரிவித்துள்ளார்.

19:46 (IST) 30 Mar 2023
ரோகினி திரையரங்கில் நரிக்குறர் மக்களுக்கு அனுமதி மறுப்பு; விஜய்சேதுபதி கண்டனம்

ரோகினி திரையரங்கில் நரிக்குறர் மக்களுக்கு அனுமதிக்காதது குறித்து மதுரையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “எந்தவொரு மனிதன் ஒடுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த பூமி மனிதர்கள் எல்லோரும் வாழ்வதற்காக படைக்கப்பட்டது; வேற்றுமையை யார் கடைபிடித்தாலும் தவறுதான்” என்று கூறினார்.

19:42 (IST) 30 Mar 2023
கலாஷேத்ராவில் மாணவர்கள் போராட்டம்; கல்லூரி இயக்குனர் பேச்சுவார்த்தை

கலாஷேத்ரா கல்லூரியில் ஆசிரியர் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளுடன் கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவிகள் கலைந்து செல்லவில்லை. மேலும், கல்லூரி முதல்வர் உள்ளிட்டோரை வெளியேற விடாமல் முற்றுகையிட்டு கோஷமிட்டு வருகின்றனர்.

19:40 (IST) 30 Mar 2023
இந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்

மத்திய பிரதேசம், இந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி, எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

19:32 (IST) 30 Mar 2023
ஐஸ்வர்யா வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன என்று புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது கொள்ளையடிக்கப்பட்ட நகை 200 பவுன் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே 143 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

19:17 (IST) 30 Mar 2023
திருப்பூர் உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

திருப்பூர், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

18:54 (IST) 30 Mar 2023
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என எழுந்த புகாரை தொடர்ந்து எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

18:53 (IST) 30 Mar 2023
சனீஸ்வரர் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நிறைவு

காரைக்கால், சனீஸ்வரர் கோயிலில் 4 நாட்களாக நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி நிறைவு ₨2.07 கோடி ரொக்கம், 150 கிராம் தங்கம், 1.5 கிலோ வெள்ளி காணிக்கையாக வரவு

18:53 (IST) 30 Mar 2023
சத்யா ஸ்டுடியோ குத்தகை பாக்கி அரசுக்கு உத்தரவு

அரசு நிலத்திற்குரிய ரூ.31 கோடி குத்தகை பாக்கியை, சத்யா ஸ்டுடியோவிடம் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18:52 (IST) 30 Mar 2023
ஐஸ்வர்யா விட்டில் நகை கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பம்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா விட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்

கொள்ளையடிக்கப்பட்ட நகை 60 சவரன் அல்ல, 200 சவரன் என ஐஸ்வர்யா காவல்துறையிடம் புகார்

ஐஸ்வர்யா வீட்டின் பணிப்பெண் ஈஸ்வரி வீட்டில் இருந்து 143 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் புகார்

18:51 (IST) 30 Mar 2023
கலாஷேத்ரா கல்லூரியை வரும் ஏப்.6ம் தேதி வரை மூட உத்தரவு

மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து சென்னை, அடையாறில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியை வரும் ஏப்.6ம் தேதி வரை மூட கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி விடுதியில் உள்ள அனைத்து மாணவர்களும் 2 நாட்களுக்குள் காலி செய்யவும் உத்தரவு

18:08 (IST) 30 Mar 2023
சென்னை கலாஷேத்ரா வளாகத்தில் மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை கலாஷேத்ரா வளாகத்தில் மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், விசாரணை குறித்து தமிழக டிஜிபிக்கு பிறப்பித்த உத்தரவை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப்பெற்றது.

17:25 (IST) 30 Mar 2023
சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

“ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

“28 நகராட்சிகளில் ₹123.80 கோடி மதிப்பீட்டில் புதிய வார சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் அமைக்கப்படும்”

17:25 (IST) 30 Mar 2023
மாணவிகள் போராட்டம்!

சென்னை கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி சக மாணவிகள் போராட்டம்!

16:58 (IST) 30 Mar 2023
5 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் – கே.என்.நேரு

ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்

16:43 (IST) 30 Mar 2023
ஊரக தூய்மை காவலர்களின் மதிப்பூதியம் ரூ.5,000 ஆக உயர்வு; அமைச்சர் ஐ.பெரியசாமி

ஊரக தூய்மை காவலர்களின் மதிப்பூதியம் ரூ.3600லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்

16:32 (IST) 30 Mar 2023
மத்திய பிரதேசத்தில் கிணற்றின் படிக்கட்டு இடிந்து விபத்து; 4 பேர் மரணம்

மத்திய பிரதேசம் இந்தூர், பெலேஷ்வர் மகாதேவ் கோயிலில் கிணற்றின் படிக்கட்டு இடிந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் கிணற்றுக்குள் விழுந்த 19 பேர் மீட்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்

16:24 (IST) 30 Mar 2023
கர்நாடகாவில் மேடையில் சுருண்டு விழுந்து நடன கலைஞர் மரணம்

கர்நாடகாவில் மேடையில் சுருண்டு விழுந்து நடன கலைஞர் உயிரிழந்துள்ளார். தெய்வீக கலை நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடி கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்

16:07 (IST) 30 Mar 2023
காலை உணவு திட்டத்தில் தான் உணவு சாப்பிடுகிறேன் – உதயநிதி

எந்த ஊருக்கு சுற்றுப்பயணம் சென்றாலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் தான் உணவு சாப்பிடுகிறேன். காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட ஊரக பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுய உதவி குழு மகளிருக்கு சமையல் செய்முறை பயிற்சி வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்

15:50 (IST) 30 Mar 2023
100 நாள் வேலை ஊதியம் ரூ.294 ஆக உயர்வு; தமிழக அரசு அறிவிப்பு

100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியம் ஏப்ரல் 2 முதல் ரூ.281 இலிருந்து ரூ.294 ஆக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்

15:29 (IST) 30 Mar 2023
மணக்குள விநாயகர் கோவில் யானை தந்தம் புதுச்சேரி முதல்வரிடம் ஒப்படைப்பு

புதுச்சேரியில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் தந்தத்தை வனக்காப்பாளர் வஞ்சுளவள்ளி, முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கினார்.

15:13 (IST) 30 Mar 2023
புதுச்சேரியில் மேல்நிலை, கீழ்நிலை எழுத்தர் தேர்வு ஏப்ரல் மாதம் நடத்தப்படும் – முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் மேல்நிலை மற்றும் கீழ்நிலை எழுத்தர் (LDC,UDC) தேர்வு ஏப்ரல் மாதம் நடத்தப்படும். அரசு ஊழியர்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளித்தால் தான் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படும் முடியும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்

14:47 (IST) 30 Mar 2023
தயிர் பாக்கெட்டுகளில் இந்தி

ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் தஹி என குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை. தயிர், மொசாரு, பெருகு உள்ளிட்ட மாநில சொல்லாடல்களை பயன்படுத்தலாம் – மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிர்ணய ஆணையம் அறிவிப்பு

14:28 (IST) 30 Mar 2023
எடப்பாடி பழனிசாமி பேட்டி

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி விவகாரம் குறித்து ஆதாரப்பூர்வமாக மனு கொடுத்துள்ளதற்கு இன்னும் பதில் சொல்லவில்லை; பரிசீலனை செய்து வருகிறோம் என்று கூறுகின்றனர்- எடப்பாடி பழனிசாமி பேட்டி

14:27 (IST) 30 Mar 2023
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பொறுப்பை நீதிபதி ஒருவரிடம் கொடுத்து பாருங்கள். நீதிபதிகளை நியமித்தால் தமிழ்நாடு கோவில்களில் ஏற்படும் மாற்றங்களை ஒரு மாதத்தில் பார்க்க முடியும்- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

13:57 (IST) 30 Mar 2023
பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது

பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது; இதை தான் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறோம். அம்மா உணவகத்தில் வழங்கும் உணவு தரமில்லை என்று கூறினால் ஆதாரம் கொடு என்று கேட்கிறார்கள். தமிழகத்தில் எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா தாராளமாக கிடைக்கிறது- – சென்னையில் எடப்படி பழனிசாமி பேட்டி

13:39 (IST) 30 Mar 2023
பரப்ப வேண்டாம்

வேலூர் ஹிஜாப் விவகாரம் தொடர்பான வீடியோவை யாரும் பரப்ப வேண்டாம் என மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்

13:34 (IST) 30 Mar 2023
அரசு விழா

புதுச்சேரியில் வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு அரசு விழா எடுக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

13:34 (IST) 30 Mar 2023
மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

12:55 (IST) 30 Mar 2023
ஈவிகேஎஸ் உடல்நிலையில் முன்னேற்றம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் முன்னேற்றம்

நுரையீரல் தொற்று மற்றும் இருதய செயலிழப்பில் இருந்து குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

12:47 (IST) 30 Mar 2023
திரையரங்கு நிர்வாகம் விளக்கம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார்

பத்து தல படத்திற்கு சென்றவர்களை அனுமதிக்கவில்லை என சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் பரபரப்பு

சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்த நிலையில், திரையரங்கு நிர்வாகம் விளக்கம்

பத்து தல திரைப்படம் யு/ஏ சான்றிதழ் பெற்ற படம் என்பதால் நரிக்குறவ சிறுவர்களை ஊழியர் தடுத்ததாக விளக்கம்

10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அழைத்து வந்ததால்தான் ஊழியர் தடுத்து நிறுத்தியதாக திரையரங்கு நிர்வாகம் விளக்கம்

12:10 (IST) 30 Mar 2023
அரியவகை நோய் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு

அரியவகை நோய் சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்க வரியில் விலக்கு

அரிய வகை நோய் என கடந்த 2021ஆம் ஆண்டில் மத்திய அரசால் வரையறுக்கப்பட்ட நோய்களுக்கு வரி விலக்கு பொருந்தும்.

10 கிலோ எடையுள்ள குழந்தைக்கு, அரிய நோய்களுக்கான சிகிச்சை செலவு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை ஏற்படுகிறது

சிகிச்சை செலவை கருத்தில் கொண்டு, சுங்க வரியில் விலக்கு – மத்திய அரசு – மத்திய அரசு அறிவிப்பு

12:08 (IST) 30 Mar 2023
வைக்கம் விருது வழங்கப்படும்

ஆண்டுதோறும் வைக்கம் விருது வழங்கப்படும்

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நினைவாக சிறப்பு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். செப்டம்பர் 17ஆம் தேதி வைக்கம் விருது வழங்கப்படும்

12:08 (IST) 30 Mar 2023
தமிழ்நாட்டில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த அரசு முடிவு

இன்று துவங்கி ஓர் ஆண்டு நூற்றாண்டு விழா நடத்தப்படும்

நவம்பர் 29ம் தேதி தமிழ்நாடு, கேரளா முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்று தமிழக அரசால் நடத்தப்படும்

சட்ட பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

12:04 (IST) 30 Mar 2023
விழுப்புரம் கொலை – இருவர் கைது

விழுப்புரம் எம்.ஜி.சாலையில் நடந்த படுகொலை சம்பவம்

தனிப்பட்ட குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட தகராறு

கொலை வழக்கு தொடர்பாக இருவர் கைது – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்

11:45 (IST) 30 Mar 2023
‘கலைகள் அனைவருக்கும் சொந்தமானது’ – ஜி.வி.பிரகாஷ்

அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது. எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது.

கலைகள் அனைவருக்கும் சொந்தமானது – ரோகிணி திரையரங்கில் பத்து தல படத்திற்கு டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 2 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கருத்து

11:32 (IST) 30 Mar 2023
பட்டுக்கோட்டை – திருப்பதி பேருந்து சேவை நீட்டிப்பு

பட்டுக்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பேருந்து, பேராவூரணி வரை நீட்டிக்கப்படும்

சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

10:52 (IST) 30 Mar 2023
ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு . மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோரின் மனுக்கள் இன்று பட்டியலிடப்படவில்லை; நாளைக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

10:50 (IST) 30 Mar 2023
இயந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் சஸ்பெண்ட்

சென்னை அம்பத்தூர் ஆவின் பண்ணையில் பால் விநியோகம் தாமதம் எதிரொலி. இயந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் சஸ்பெண்ட் . தர உறுதி பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் .

10:49 (IST) 30 Mar 2023
எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து . நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி . தொலைபேசியில் பேசிய போது எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார் நடிகர் அஜித்குமார்

10:17 (IST) 30 Mar 2023
3,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் ஒரே நாளில் 3,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. நேற்று 2,151 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் அதிகரிப்பு.

09:45 (IST) 30 Mar 2023
தங்கம் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 160 உயர்வு; ஒரு கிராம் ரூ. 5,565-க்கு விற்பனை ஆகிறது வெள்ளி ஒருகிராம் விலை ரூ. 76.20 ஆக இன்று விற்பனை ஆகிறது.

Web Title: Tamil news today live o panneerselvam appeal case amit shah admk cm stalin dmk

Exit mobile version