Advertisment

Tamil News Highlights: தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்

Tamil Nadu News, Tamil News, Odisha Train Accident Live Updates, Arikomban elephant, World test championship final – 06 JUNE 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil Nadu Chief Secretary Iraianbu IAS planning to Voluntary Retirement

இறையன்பு

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil news updates

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நாளை பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பனை யானை

அரிக்கொம்பனை யானை, தற்போது கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கேரள மாநிலம், சின்னக்கானல் பகுதிக்கு கொண்டு வர வேண்டும் என பூப்பாறை பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அதே சமயம், முண்டன்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானையை விடுவதற்கு அப்பகுதியில் வசிக்கும் காணியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:41 (IST) 06 Jun 2023
    மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் வைகோ

    நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, மதிமுக பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்



  • 20:52 (IST) 06 Jun 2023
    அரபிக் கடலில் உருவானது 'பிபோர்ஜோய்' புயல்

    அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது. இந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள 'பிபோர்ஜோய்' என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும்



  • 20:20 (IST) 06 Jun 2023
    லாரி ஓட்டுநரிடம் போலி துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர்கள் கைது

    பல்லடம், கொசவம்பாளையம் அருகே லாரி ஓட்டுநரிடம் போலி துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்களது காரை, லாரி உரசுவது போல வந்ததால், லாரியை விரட்டிச் சென்று நிறுத்தி ஓட்டுநரை மிரட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் கோவையைச் சேர்ந்த பரணிதரன், அபிஷேக் குமார் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து டம்மி துப்பாக்கி மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது



  • 19:52 (IST) 06 Jun 2023
    அரசு பேருந்துகளில் முன்பதிவு சேவை விரிவாக்கம்

    தமிழகத்தில் அரசு பேருந்துகளில் முன்பதிவு சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு முன்பே முன்பதிவு செய்து பயணிக்கும் இருக்கைகளின் எண்ணிக்கை 62,464 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்



  • 19:34 (IST) 06 Jun 2023
    விருதுநகரில் சேதம் அடைந்த வீடுகளுக்கு நிவாரணம்

    விருதுநகர், அருப்புக்கோட்டையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீசிய சூறாவளி காற்றால் பல்வேறு வீடுகள் சேதம் அடைந்தன. சேதம் அடைந்த வீடுகளுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலா ரூ.5,100 நிவாரணம் வழங்கினார்



  • 19:23 (IST) 06 Jun 2023
    சென்னையின் பல்வேறு பகுதியில் பலத்த காற்றுடன் மழை

    சென்னையின் பல்வேறு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மழை காரணமாக ராயப்பேட்டை, சவேரா ஹோட்டல் கார் பார்க்கிங்கில் மரம் முறிந்து விழுந்ததில் விலை உயர்ந்த நான்கு கார்கள் சேதமடைந்தன



  • 19:11 (IST) 06 Jun 2023
    தமிழகத்தின் வளர்ச்சி ஒருவருக்கு மட்டும் புரியவில்லை -ஸ்டாலின்

    கல்வி, மக்கள் நலனில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தேசிய அளவில் பல்வேறு சுகாதாரக் குறியீடுகளில் முதல் 3 இடங்களில் தமிழ்நாடு இருக்கிறது. தமிழகத்தில் உயர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு மட்டும் இது புரியவில்லை. ஆளுநர் இதை புரிந்து கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்



  • 18:27 (IST) 06 Jun 2023
    ஒடிசா ரயில் விபத்து : 288 பேர் மரணம் என்பதே இறுதி எண்ணிக்கை என தகவல்

    ஒடிசா மாநிலம் பாலாசோர் ரயில்கள் மோதிய விபத்தில் 288 பேர் உயிரிழப்பு என்பதே இறுதி எண்ணிக்கை; பிற மருத்துவமனைகள், பிணவறைகள் ஆகியவற்றில் இருந்து தரவுகள் எடுக்கப்பட்டு கணக்கிடப்பட்டுள்ளது - மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தகவல்



  • 18:26 (IST) 06 Jun 2023
    -அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ்

    தரமான கல்வி வழங்கினால் எந்த கல்லூரி வேண்டுமானும் முன்னேற்றம் அடையாளம்; கடந்த 2 ஆண்டுகளாக திறமைக்கு ஏற்றவாறுதான் கல்விகளை வழங்கி வருகிறோம்; அடுத்த கட்ட நடவடிக்கை இந்திய அளவில் மட்டும் மின்றி உலகளவில் முன்னேற்றம் அடைய நடவடிக்கை எடுப்போம்; நான் முதல்வன் திட்டம் மூலம் புதிய படிப்புகளை அறிமுகம் செய்து திட்டம் உள்ளது”



  • 18:01 (IST) 06 Jun 2023
    ஒடிசா விபத்து குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

    ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 103 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது, எனவே இந்த விபத்து தொடர்பாக உண்மை வெளி வர வேண்டும்” - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி



  • 18:01 (IST) 06 Jun 2023
    ஆளுநர் தமிழிசையுடன் முதலமைச்சர் ரங்கசாமி சந்திப்பு

    புதுச்சேரி: சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக துணை நிலை ஆளுநர் தமிழிசையுடன் முதலமைச்சர் ரங்கசாமி சந்திப்பு.

    தலைமைச் செயலாளர் தனிச்சையாக வழக்கு போட முடிவு செய்தார் என முறையீடு; அவரை மாற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்.

    முதலமைச்சர் தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவினர் கலந்து கொள்ளவில்லை



  • 17:28 (IST) 06 Jun 2023
    15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி கடலூர், தர்மபுரி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு



  • 17:28 (IST) 06 Jun 2023
    அரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு

    அரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் உருவாகிறது கிழக்கு மத்திய அரபிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்



  • 16:59 (IST) 06 Jun 2023
    ஆவினில் குழந்தை தொழிலாளர்கள்: சம்பளம் வழங்காமல் மோசடி

    சென்னை ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஹரிராம் என்கிற ஒப்பந்த பணி நிறுவனத்தின் சார்பாக 12 படித்த சிறுவர்- சிறுமிகளை பணியமர்த்தியது தெரிய வந்துள்ளது.

    மேலும், இவர்கள் கடந்த 2 மாதங்களாக பணியாற்றிய நிலையில் உரிய ஊதியம் வழங்கப்படாததால் ஆவின் நுழைவு வாயிலில் பாதிக்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் காத்திருந்தனர்.



  • 16:46 (IST) 06 Jun 2023
    நீட் தேர்வு முடிவு; ஜூன் 15 வெளியீடு?

    நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, மே 7ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் 15ஆம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்களும் நீட் தேர்வு எழுதி உள்ளனர். இந்த இளங்கலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7ம் தேதி நடைபெற்றது நினைவு கூரத்தக்கது.



  • 16:30 (IST) 06 Jun 2023
    ப்ளீச்சிங் பவுடர் ஊழல்: அரசு அதிகாரி வீட்டில் ரெய்டு

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றிவரும் கிருஷ்ணனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அரசு திட்டங்களை முறைகேடாக பயன்படுத்தியாகவும், கொரோனா காலத்தில் ப்ளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    இந்நிலையில், கிருஷ்ணனின் வீட்டில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.



  • 16:28 (IST) 06 Jun 2023
    ரயிலில் புகை - ஒடிசாவில் மீண்டும் பரபரப்பு

    ஒடிசாவில் செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து திடீரென வெளியேறிய புகையால் பரபரப்பு ஏற்பட்டது.

    B-5 பயணிகள் பெட்டியின் ஏசி யூனிட்டில் இருந்து வெளியேறிய புகையால் பயணிகள் அச்சமடைந்தனர்.

    தொடர்ந்து, ரயில் ஒடிசாவின் பிரம்மபூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. உடனடியாக புகையை கட்டுப்படுத்திய போதிலும், சம்பந்தப்பட்ட பெட்டியில் பயணிக்க, பயணிகள் மறுப்பு தெரிவித்தனர்.



  • 16:25 (IST) 06 Jun 2023
    ஆசிய கோப்பை ஹாக்கி; இந்திய மகளிர் அணி வெற்றி

    ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசியக் கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் மலேசியாவை இந்தியா தோற்கடித்தது.

    கஹாமிகாரா நகரில் நடைபெற்ற பரபரப்பான போட்டியின் ஆட்ட நேர முடிவில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு தொடரில் 2 வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா, இன்று இரவு தென்கொரியா உடன் மோதவுள்ளது.



  • 16:24 (IST) 06 Jun 2023
    பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு

    தமிழக போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டிக்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இயற்கை வளத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



  • 16:24 (IST) 06 Jun 2023
    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புகைப்படம் எடுக்க தடைவிதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புகைப்படம் எடுக்க தடைவிதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

    அப்போது, அமெரிக்கா போன்ற நாடுகள், 100 வருட புராதன சின்னங்கள் என்று கூறி படங்களை எடுத்து பல கோடிக்கு வியாபாரம் செய்கின்றன

    நாம் 2,000 வருட புராதன சின்னங்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்கிறோம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.



  • 15:48 (IST) 06 Jun 2023
    பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு

    தமிழக போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டிக்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இயற்கை வளத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



  • 15:32 (IST) 06 Jun 2023
    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புகைப்படம் எடுக்க தடைவிதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புகைப்படம் எடுக்க தடைவிதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

    அப்போது, அமெரிக்கா போன்ற நாடுகள், 100 வருட புராதன சின்னங்கள் என்று கூறி படங்களை எடுத்து பல கோடிக்கு வியாபாரம் செய்கின்றன

    நாம் 2,000 வருட புராதன சின்னங்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்கிறோம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.



  • 15:14 (IST) 06 Jun 2023
    ரெஹானா வழக்கு; கேரள உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து

    மேலாடையில்லா பெண்ணின் உடலை ஆபாசமாகக் கருதக்கூடாது என ரெஹானாவுக்கு எதிரான வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளார்.



  • 14:59 (IST) 06 Jun 2023
    ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்திரி விசாரணை

    ஒடிசா விபத்து தொடர்பாக தென்கிழக்கு பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்திரி விசாரணை. ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயில்களை இயக்கியவர்கள் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்



  • 14:48 (IST) 06 Jun 2023
    சிப்காட் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைத்து அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

    கிருஷ்ணகிரியில் 3வது சிப்காட் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைத்து அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் தமிழக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தல் மேலும், சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்த விவசாயிக்கு தினகரன் இரங்கல்



  • 14:00 (IST) 06 Jun 2023
    தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றை ஆளுநர் அறிந்து கொள்ளாமல் பேசுகிறார்

    தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றை ஆளுநர் அறிந்து கொள்ளாமல் பேசுகிறார். தமிழகத்தில் அனைத்து துறை கல்லூரிகளும் சிறந்து விளங்குகிறது. கல்வி கட்டமைப்பில் தமிழகம் மிக சிறப்பான அளவில் உள்ளது. குஜராத் முதலமைச்சராக பிரதமர் மோடி இருந்தபோது முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் - அமைச்சர் தங்கம் தென்னரசு



  • 13:59 (IST) 06 Jun 2023
    போட்டி போட்டுக்கொண்டு பீர் பாட்டில்களை அள்ளிச் சென்ற மதுப்பிரியர்கள்

    ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளியில் மினி லாரி கவிழ்ந்து சாலையில் சிதறிய பீர் பாட்டில்கள். போட்டி போட்டுக்கொண்டு பீர் பாட்டில்களை அள்ளிச் சென்ற மதுப்பிரியர்கள். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மதுபிரியர்களை தடுத்து நிறுத்தி பீர் பாட்டில்களை வாங்கி பத்திரப்படுத்தினர்



  • 13:39 (IST) 06 Jun 2023
    மின்சாரம் பாய்ந்து 40 பேர் இறந்திருக்கலாம்

    ஒடிசா ரயில் விபத்தில் மின்சாரம் தாக்கி சில பயணிகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது "உயிரிழந்தவர்களில் 40 பேரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை" "ரயில் பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்ட 40 பேரின் உடலில் வெளிப்புற காயங்கள் தென்படவில்லை" மின்சார கேபிள் அறுந்து பெட்டிகள் மேல் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 40 பேர் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல்



  • 13:38 (IST) 06 Jun 2023
    மதுபோதையில் ரயில்வே சிக்னலை உடைக்க முயன்றதாக இளைஞர் வாக்குமூலம்

    திருப்பத்தூர் ரயில்வே நிலையத்தில் உள்ள சிக்னலை உடைக்க முயன்ற இளைஞர் . திருப்பத்தூர் சிக்னலில் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார். 30 வயது மதிக்கத்தக்க இளைஞரான கோகுலை பிடித்து ரயில்வே போலீசார் விசாரணை . மதுபோதையில் ரயில்வே சிக்னலை உடைக்க முயன்றதாக இளைஞர் வாக்குமூலம் உலகத்தையே உலுக்கிய ஒடிசா பாலசோர் ரயில் விபத்து சம்பவம்



  • 13:12 (IST) 06 Jun 2023
    தமிழக கல்வித்துறையில் அரசியலை புகுத்த முயற்சிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி ; பொன்முடி

    தமிழகத்தில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் கல்வி தரம் உயர்ந்துள்ளது. வெளிநாடு முதலீடுகள் விவகாரத்தில் உண்மை தன்மையை தெரிந்து ஆளுநர் பேச வேண்டும். . தமிழகத்தின் உயர்கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் முன்னேறி உள்ளன. தமிழகத்தில் கல்வி தரம் குறைந்துவிட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவது முரணாக உள்ளது. புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் எண்ணிக்கை . அரசியல் செய்யும் நோக்கத்தோடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசி வருகிறார். தமிழக கல்வித்துறையில் அரசியலை புகுத்த முயற்சிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி"



  • 12:50 (IST) 06 Jun 2023
    காவலாளி மீது பெட்ரோல் ஊற்றி கொலை முயற்சி

    வேலூர், குடியாத்தம் அருகே கூட்டுறவு வங்கியில் இரவு காவலாளி பணியில் இருந்த பாபு என்பவர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை முயற்சி

    மதுபோதையில் இருந்த சோபன் பாபு என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை



  • 12:47 (IST) 06 Jun 2023
    இரு மாநில போலீசார் ஆலோசனை

    வேலூர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த போலீசார் ஆலோசனை

    கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தலை தடுத்தல் மற்றும் குற்ற சம்பவங்களை குறைப்பது குறித்து ஆலோசனை



  • 12:30 (IST) 06 Jun 2023
    அரிக்கொம்பன் யானை வழக்கு - நீதிபதிகள் உத்தரவு

    அரிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிக்கெட்டான் சோலை தேசிய பூங்கா எல்லையில் விட நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு

    யானையை இங்கே விட வேண்டும் அங்கே விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது - நீதிபதிகள்

    இந்த வழக்கு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்காக தெரிகிறது என நீதிபதிகள் கருத்து யானையை இங்கே விட வேண்டும் அங்கே விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது - நீதிபதிகள்



  • 12:14 (IST) 06 Jun 2023
    சிஎஸ்கே வெற்றி பெற்ற கோப்பையை காண்பித்து வாழ்த்து

    முதல்வர் ஸ்டாலினை சந்தித்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் சீனிவாசன் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்ற கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றார்



  • 12:14 (IST) 06 Jun 2023
    சட்டவிரோத மதுபானம் - இ.பி.எஸ் வலியுறுத்தல்

    டாஸ்மாக் கடைகளில் சட்டவிரோத மதுபானங்கள் விற்கப்படுகிறதா என்பதை கண்டறிந்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்

    தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்



  • 12:01 (IST) 06 Jun 2023
    பாலசோர் பகுதியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

    3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான ஒடிசா பாலசோர் பகுதியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

    ரயில்வே வாரியம் விசாரணைக்கு பரிந்துரைத்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு



  • 12:01 (IST) 06 Jun 2023
    சிப்காட் அமைக்க எதிர்ப்பு - விவசாயி பலி

    கிருஷ்ணகிரி: உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரதம்

    உண்ணாவிரதம் போராட்டக்களத்தில் மயங்கி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    சிப்காட் அமைக்க நிலம் வழங்க மறுத்து உண்ணாவிரதம் மேற்கொள்ளும் விவசாயிகள்

    150 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம்

    5 சிப்காட் அமைக்க 3034 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் மத்திய, மாநில அரசுகள்



  • 11:59 (IST) 06 Jun 2023
    ஐஏஎஸ் அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் சோதனை

    தருமபுரி முன்னாள் ஆட்சியராக இருந்த மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

    மலர்விழி வீடு உள்பட 10 இடங்களில் சோதனை மேற்கொண்டு வரும் அதிகாரிகள்

    சென்னையில் 5 இடங்களிலும் புதுக்கோட்டையில் 3 இடங்களில் நடைபெறும் சோதனை

    தருமபுரி, விழுப்புரத்தில் தலா 1 இடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு

    வரி வசூல் ரசீது புத்தகங்களை அதிக விலைக்கு வாங்கி ரூ.1.31 கோடி முறைகேடு செய்ததாக புகார்

    தனியார் நிறுவன உரிமையாளர்கள் தாகிர் உசேன், வீரய்யா, பழனிவேல் ஆகிய 3 பேர் மீது வழக்கு



  • 11:32 (IST) 06 Jun 2023
    புதுவை சுயேட்சை எம்எல்ஏ மீது வழக்கு

    புதுச்சேரி தலைமைச்செயலக நுழைவுவாயில் கதவை ஏறி குதித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரம்

    சுயேட்சை எம்எல்ஏ நேரு உள்பட 5 பேர் மீது பெரிய கடை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

    புதுச்சேரி அரசு விழாவில் முதல்வர் முன்னிலையில் தலைமைச்செயலாளரை வசைபாடிய சுயேட்சை எம்எல்ஏ

    சுயேட்சை எம்எல்ஏ-வை தடுக்க தவறியதாக ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் கண்ணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

    உருளையான்பேட்டை ஆய்வாளர் பாபுஜி கூடுதல் பொறுப்பு கவனிப்பார் என புதுச்சேரி காவல் தலைமையகம் உத்தரவு



  • 11:30 (IST) 06 Jun 2023
    ஆளுநர் கருத்துக்கு தி.மு.க கண்டனம்

    தமிழகத்தின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள் சொல்கிற விமர்சனம் தான் அது.

    வெளிநாடு முதலீடுகள் குறித்த ஆளுநர் ரவி கருத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்

    முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் விமர்சனம் செய்திருந்தார்

    எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்க்கு வெளியிட்ட பதில் அறிக்கை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பொருந்தும்.



  • 11:30 (IST) 06 Jun 2023
    ஆளுநர் கருத்துக்கு தி.மு.க கண்டனம்

    தமிழகத்தின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள் சொல்கிற விமர்சனம் தான் அது.

    வெளிநாடு முதலீடுகள் குறித்த ஆளுநர் ரவி கருத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்

    முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் விமர்சனம் செய்திருந்தார்

    எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்க்கு வெளியிட்ட பதில் அறிக்கை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பொருந்தும்.



  • 11:29 (IST) 06 Jun 2023
    ரேண்டம் எண் வெளியீடு

    பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியீடு

    விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டுள்ளது

    ரேண்டமில் பெரிய எண் பெற்ற மாணவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை வழங்கப்படும்

    மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இணைய வழியில் வருகிற 20ஆம் தேதி தொடங்குகிறது

    தரவரிசைப்பட்டியல் வரும் 26ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது



  • 11:02 (IST) 06 Jun 2023
    ரேண்டம் எண் வெளியானது

    பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியானது; தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் B.E., B.TECH, படிப்புக்கு 1.87 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.



  • 11:00 (IST) 06 Jun 2023
    ரேண்டம் எண் வெளியானது

    பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியானது; தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் B.E., B.TECH, படிப்புக்கு 1.87 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.



  • 11:00 (IST) 06 Jun 2023
    டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளும் ஸ்டாலின்

    மேட்டூர் அணையை வரும் 12ம் தேதி முதல்வர் திறந்து வைக்க உள்ள நிலையில் ஸ்டாலின் வருகிற 9ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். காவிரி டெல்டா பாசன கால்வாய், நீர்நிலைகளில் நடைபெறும் தூர்வாரும் பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிய உள்ளார்



  • 10:32 (IST) 06 Jun 2023
    புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

    தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அடுத்து 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 10:31 (IST) 06 Jun 2023
    தங்கம் விலை உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 44,560க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 5,570 ஆகவும் விற்பனையாகிறது.



  • 10:29 (IST) 06 Jun 2023
    தங்கம் விலை உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 44,560க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 5,570 ஆகவும் விற்பனையாகிறது.



  • 09:51 (IST) 06 Jun 2023
    ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் சோதனை

    சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி இருந்தபோது நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் சோதனை நடைபெறுகிறது.



  • 09:45 (IST) 06 Jun 2023
    என்ஐஆர்எஃப் தரவரிசை

    என்ஐஆர்எஃப் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 22 பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன.

    முழுச் செய்தியும் படிக்க:

    https://tamil.indianexpress.com/education-jobs/nirf-rankings-2023-top-engineering-institutes-in-india-best-college-nirf-688589/



  • 09:26 (IST) 06 Jun 2023
    ராஜாஜி அரங்கை புதுப்பிக்க ஏற்பாடு

    சென்னையில் உள்ள ராஜாஜி அரங்கை புதுப்பிக்க பொதுப்பணித் துறை சார்பில் ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.



  • 09:08 (IST) 06 Jun 2023
    இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

    மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

    நாளை முதல் 9-ம் தேதி வரை, ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.



  • 08:36 (IST) 06 Jun 2023
    முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை இழிவுப்படுத்துவதா? வைகோ கண்டனம்

    “ஆளுநரின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருக்கிறது. முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை இழிவுபடுத்தி விஷத்தை கக்கி இருக்கிறார் ஆளுநர்.

    தமிழ்நாட்டின் முதல் விரோதியாக விளங்கும் ஆளுநரை வெளியேற்ற வேண்டும். நாகலாந்து மாநிலத்தில் நிகழ்ந்ததுபோல் தமிழகத்திலும் நடக்கும்" என வைகோ ஆளுனர் ஆர்.என். ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • 08:20 (IST) 06 Jun 2023
    புதுப்பிக்கப்படும் உழவர் சந்தைகள்

    25 உழவர் சந்தைகளை புதுப்பிக்க ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.



  • 08:20 (IST) 06 Jun 2023
    ஒடிசா ரயில் விபத்து

    ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கியது.



  • 08:20 (IST) 06 Jun 2023
    ஸ்குவாஷ் உலக கோப்பை

    சென்னையில் வரும் 13 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள ஸ்குவாஷ் உலக கோப்பை தொடருக்கான அட்டவணையை உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.



  • 08:09 (IST) 06 Jun 2023
    ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது

    தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது. இந்தாண்டு 2,29,165 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பம் செய்துள்ளனர்



  • 08:09 (IST) 06 Jun 2023
    ரயில்வேத்துறை உதவி எண்கள் அறிவிப்பு

    ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய - 139, 18003450061 அல்லது 1929 என்ற உதவி எண்களுக்கு அழைக்கலாம் என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.



  • 08:09 (IST) 06 Jun 2023
    பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு

    தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கமும் குறையவில்லை. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தமிழ்நாட்டில் 6 முதல் 12-ம் வகுப்புக்கு ஜுன் 12-ம் தேதியும், 1-5 வகுப்புக்கு ஜுன் 14-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.



  • 08:09 (IST) 06 Jun 2023
    ஒடிசா ரயில்கள் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு

    ஒடிசா ரயில்கள் விபத்து தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளிலும் ரயில்வே சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளிலும் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment