Advertisment

Tamil news Highlights: சென்னையில் மின்வெட்டு- மின்வாரிய அலுவலகத்தை முற்றிகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 05 -06- 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
chennai power cut

சென்னை, ஆலந்தூரில் மின்வெட்டை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தை முற்றிகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisment

பெட்ரோல்- டீசல் விலை

சென்னையில் 380வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ. 94.24க்கும் விற்பனை

நீர் நிலவரம்

புழல் ஏரியில் நீர்இருப்பு 2173 மில்லியன் கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 693 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 455 மில்லியன் கனஅடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:39 (IST) 05 Jun 2023
    அரிக்கொம்பன் யானை - பழங்குடியினர் திடீர் போராட்டம்

    அரிக்கொம்பனை மீண்டும் கேரள மாநிலம், சின்னக்கானல் பகுதிக்கு கொண்டு வர வேண்டும் என கேரள மாநிலம் பூப்பாறை பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரிக்கொம்பன் யானை, தற்போது கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டுள்ள நிலையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது



  • 21:02 (IST) 05 Jun 2023
    ஒடிசா ரயில்கள் விபத்து; அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு

    ஒடிசா ரயில்கள் விபத்து தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளிலும் ரயில்வே சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளிலும் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது



  • 21:01 (IST) 05 Jun 2023
    1283 செவிலியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் -தமிழக அரசு

    தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு ரூ.18,000 ஊதியம் வழங்கப்படுகிறது. அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க சாத்தியம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. வரும் ஆண்டுகளில் 1283 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதில், ஒப்பந்த செவிலியர்களும் நியமிக்கப்படுவர் எனவும் அரசு தெரிவித்துள்ளது



  • 20:53 (IST) 05 Jun 2023
    தமிழக சிறை வாசிகளுக்கு புதிய மெனு

    தமிழக சிறை வாசிகளுக்கு புதிய மெனு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காலை பொங்கல், அவிச்ச முட்டை, மதியம் சிக்கன் கிரேவி, மாலை சூடான சுண்டல், டீ, சப்பாத்தி சென்னா வழங்கப்பட உள்ளது. நாள் ஒன்றுக்கு 96 ரூபாயில் இருந்து 135 ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 20:08 (IST) 05 Jun 2023
    ரயிலில் விரிசலைக் கண்டு பிடித்த டெக்னீஷியனுக்கு ‘பாதுகாப்பு விருது’

    செங்கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின், எஸ் 3 பெட்டியின் கீழ் இருந்த விரிசலைக் கண்டு பிடித்த வேகன் டெக்னீஷியன் ரகுபதிக்கு, மதுரை கோட்ட மேலாளர் ‘பாதுகாப்பு விருது’ வழங்கினார்



  • 19:35 (IST) 05 Jun 2023
    சென்னையில் ரூ.2000 நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியருடன் வாடிக்கையாளர் வாக்குவாதம்

    சென்னை பெரம்பூரில் ரூ.2000 நோட்டு கொடுத்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்ட வாடிக்கையாளரிடம், ரூ.2000 நோட்டு வாங்கப்படாது என பெட்ரோல் பங்க் ஊழியர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், போட்ட பெட்ரோலை டியூப் மூலம் ஊழியர் உறிஞ்சி எடுத்தார்



  • 19:12 (IST) 05 Jun 2023
    ஆந்திராவில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் மரணம்

    ஆந்திரா, குண்டூர் மாவட்டம் பத்திப்பாடு என்ற பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். பக்கத்து கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.



  • 18:35 (IST) 05 Jun 2023
    வைஃபை டவர் சரிந்து விழுந்து விபத்து

    தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் 150 அடி உயரம் கொண்ட வைஃபை டவர் சரிந்து விழுந்து விபத்து. வீடுகள் மற்றும் கடைகளின் மேல் சரிந்து விழுந்ததால் பரபரப்பு



  • 18:35 (IST) 05 Jun 2023
    500 ஏக்கர் அளவிலான வாழை மரங்கள் சேதம்

    கடலூர் : கேப்பர் மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதில் 500 ஏக்கர் அளவிலான வாழை மரங்கள் சேதமடைந்தன. அறுவடைக்கு இன்னும் ஒரு மாத காலமே இருந்த நிலையில் விவசாயிகள் வேதனை



  • 18:34 (IST) 05 Jun 2023
    உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் தமிழகம் வருகை

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 11ம் தேதி வேலூர் வருகிறார். வரும் 8ம் தேதி வரவிருந்த நிலையில், தற்போது 11ம் தேதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்க வேலூரில், பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்



  • 18:32 (IST) 05 Jun 2023
    கருணாநிதி நூற்றாண்டு விழா : தொண்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் தொண்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை. அமைச்சர் துரைமுருகன், எம்பி கனிமொழி, ராசா ஆகியோருடன் திமுக எம்பிக்கள் பலர் கலந்துகொண்டனர்.



  • 18:01 (IST) 05 Jun 2023
    சென்னையில் யானை தந்தங்கள் பறிமுதல்

    சென்னையில் சட்டவிரோதமாக விற்க முயன்ற 4 கிலோ யானை தந்தங்களை வருவாய் புலனாய்வுத்துறை பறிமுதல் செய்துள்ளது.



  • 17:57 (IST) 05 Jun 2023
    பொதுமக்கள் எதிர்ப்பு

    நெல்லை மாவட்ட வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானையை விடுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு. மணிமுத்தாறு சோதனைச் சாவடி முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்; போலீசார் பேச்சுவார்த்தை



  • 17:20 (IST) 05 Jun 2023
    அரிக்கொம்பன் யானை கொண்டு செல்லும் வழியில் மின்சார துண்டிப்பு

    நெல்லை: அரிக்கொம்பன் யானை கொண்டு செல்லும் வழியில் கல்லிடைக்குறிச்சி - மணிமுத்தாறு ரயில்வே கிராசிங்கில் உள்ள மின்சாரம் தற்காலிகமாக துண்டிப்பு களக்காடு - முண்டந்துறை வனப்பகுதியில் உள்ள கோதையாறு பகுதிக்கு யானை கொண்டு செல்லப்பட உள்ளது



  • 16:56 (IST) 05 Jun 2023
    ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு பணி ஆணை: மம்தா பானர்ஜி

    ஒடிசா ரயில் விபத்து குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், “விபத்து குறித்து மக்களுக்கு தெரிய வேண்டும்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணி ஆணை மற்றும் இழப்பீடு வழங்க உள்ளேன்” என்றார்.



  • 16:52 (IST) 05 Jun 2023
    அடுத்த 3 மணி நேரத்தில் ஜில்ஜில் ஆகப்போகும் மாவட்டங்கள் இவைதான்!

    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.



  • 16:42 (IST) 05 Jun 2023
    தென்பென்னை ஆற்றில் நீர் திறப்பு

    கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர் வரத்து 404 கன அடியாக உள்ளது. 52 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம் தற்போது 50.50 அடியை எட்டியுள்ளது.



  • 16:27 (IST) 05 Jun 2023
    சென்னை, புறநகர் பகுதிகளில் கனமழை

    சென்னை, புறநகர் பகுதிகளான ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், வல்லாஞ்சேரி, பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.



  • 16:19 (IST) 05 Jun 2023
    கோரமண்டல் ரயில் இயக்கம்

    சென்னை சென்ட்ரலில் இருந்து ஒடிசா மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. கோரமண்டல் ரயில் விபத்து காரணமாக 2 நாட்களாக ஒடிசா மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

    விபத்துப் பகுதியில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது. இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, கோரமண்டல் ரயில் இன்று காலை 10.45 மணிக்கு புறப்பட்டது.

    காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் தாமதமாக இயக்கப்பட்டது.



  • 16:05 (IST) 05 Jun 2023
    அகில இந்திய கல்லூரி தரவரிசை பட்டியல் வெளியீடு

    அகில இந்திய அளவிலான தரவரிசைப் பட்டியலில் 11வது இடத்தை பிடித்தது சென்னை மருத்துவக்கல்லூரி பிடித்துள்ளது.

    கடந்த ஆண்டு 12ம் இடத்தில் இருந்த நிலையில், 11வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.



  • 15:50 (IST) 05 Jun 2023
    களக்காடு வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானையை விட முடிவு

    அரிக்கொம்பன் யானையை களக்காடு வனப்பகுதியில் விட, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. யானையால் ஏற்பட்ட சேதத்தை கணக்கிட குழு அமைக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசுத்தரப்பு விளக்கம் அளித்துள்ளது.



  • 15:35 (IST) 05 Jun 2023
    பாயாசம் சண்டை- வீடியோ வைரல்

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயாசம் கேட்டு தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.



  • 15:02 (IST) 05 Jun 2023
    சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுப்பு

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.



  • 15:01 (IST) 05 Jun 2023
    போராட்டத்தை கைவிடவில்லை - சாக்‌ஷி மாலிக்

    மல்யுத்த வீரர்களின் நீதிக்கான போராட்டம் தொடரும். நீதி கிடைக்கும் வரை போராட்டத்திலிருந்து விலக போவதில்லை எனவும் திட்டவட்டம் சாக்‌ஷி மாலிக் ட்வீட் செய்துள்ளார்.



  • 14:28 (IST) 05 Jun 2023
    சாக்‌ஷி மாலிக் அறிவிப்பு

    மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் இருந்து விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அறிவித்துள்ளார். கிழக்கு ரயில்வே பணியில் மீண்டும் சேர உள்ளதாக சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.



  • 13:56 (IST) 05 Jun 2023
    இதுவரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

    ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களில் இதுவரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உரிய செயல்முறைக்குப் பிறகு அனைத்து உடல்களும் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. உடல்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவை ஒடிசா அரசே ஏற்கும்.

    இன்னும் 124 சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை. ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



  • 13:54 (IST) 05 Jun 2023
    வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்

    தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:26 (IST) 05 Jun 2023
    தலைசிறந்த கல்லூரிகள்

    மத்திய அரசின் கல்வி அமைச்சகம் வெளியிட்ட தலைசிறந்த கல்லூரிகள் பட்டியலில், சென்னை மாநிலக் கல்லூரி 3வது இடத்தை பிடித்தது.



  • 13:26 (IST) 05 Jun 2023
    பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நியமனம்

    பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக முனைவர் க.அறிவொளி நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.



  • 13:22 (IST) 05 Jun 2023
    புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு

    தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்திலும் வருகிற 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.



  • 13:21 (IST) 05 Jun 2023
    பிரதமர் மோடிக்கு, கார்கே கடிதம்

    ரயில் வழித்தடங்கள் அனைத்திலும் கட்டாய பாதுகாப்பு சாதனங்களை நிறுவ வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும் ரயில் விபத்து ஏற்பட்ட தென்கிழக்கு மண்டலத்தில் மட்டும் 8,278 பணியிடங்கள் காலியாக இருப்பதாக குற்றச்சாட்டியுள்ளார்.



  • 13:21 (IST) 05 Jun 2023
    தண்டவாளத்தில் டயர்கள் வைத்தது யார்?

    திருச்சி அருகே தண்டவாளத்தில் டயர்கள் வைக்கப்பட்ட சம்பவத்தில், மர்ம நபர்களை பிடிக்க போதிய துப்பு கிடைக்காமல் திணறும் தனிப்படை போலீசார், சம்பவ இடத்தில் மோப்ப நாய்களை கொண்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.



  • 13:03 (IST) 05 Jun 2023
    புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு

    புதுச்சேரியில் வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு



  • 13:02 (IST) 05 Jun 2023
    மின்சார வாரிய அலுவலகத்தில் அதிமுக- திமுகவினர் மோதல்

    ஆலந்தூர் மின்சார வாரிய அலுவலக வளாகத்தில் அதிமுக- திமுகவினர் இடையே மோதல்

    ஆலந்தூரில் மின்வெட்டை சரி செய்யக் கோரி மனு அளிக்கக் சென்ற அதிமுகவினரிடம் திமுகவினர் வாக்குவாதம்- இரு கட்சியினர் இடையே கைகலப்பு



  • 13:01 (IST) 05 Jun 2023
    சீர்காழியில் பாயாசத்திற்கு இரு தரப்பினர் இடையே மோதல்

    சீர்காழியில் திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயாசத்தால் இரு தரப்பினர் இடையே மோதல்

    மண்டப வாசலில் மாறி மாறி தாக்கிக் கொண்ட மணமக்களின் உறவினர்கள்

    பந்தியில் பரிமாறப்பட்ட பாயாசம் நல்லா இல்லாததை தட்டிக்கேட்ட பெண் வீட்டார்

    பெண் வீட்டாரை தகாத வார்த்தையில் திட்டி தீர்த்த மாப்பிள்ளை வீட்டார் இரு தரப்பும் மோதிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவல்



  • 12:29 (IST) 05 Jun 2023
    அமித்ஷா 8-ம் தேதி தமிழகம் வருகை

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 8ம் தேதி தமிழகம் வருகை

    வேலூரில் பாஜகவின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுகூட்டத்தில் பங்கேற்க உள்ளார்



  • 12:28 (IST) 05 Jun 2023
    பவானிசாகரில் 3000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

    ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் போராட்டம் 3000க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு

    பவானி ஆற்றில், தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்

    சிறுமுகை பகுதியில் ரசாயன கழிவுகள் கலப்பதால் நீர்ப்பிடிப்பு பகுதியில் துர்நாற்றம். நீரின் நிறம் மாறி கருப்பு நிறத்தில் காட்சி அளிப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டு



  • 12:07 (IST) 05 Jun 2023
    பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு

    6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜுன் 12-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஜுன் 14 தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவிப்பு.

    ஏற்கனவே வெயிலின் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போன நிலையில் மீண்டும் ஒத்திவைப்பு



  • 11:48 (IST) 05 Jun 2023
    பள்ளிகள் திறப்பு - ஸ்டாலின் ஆலோசனை

    சென்னை, தலைமைச் செயலகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

    நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பல மாவட்டங்களில் வெயில் நீடிப்பதால் ஆலோசனை



  • 11:31 (IST) 05 Jun 2023
    ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதி பெற்ற லட்சக்கணக்கான வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர்.

    பள்ளிக்கல்வித்துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்திருப்பது கண்டனத்திற்குறியது

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கிட போர்க்கால அடிப்படையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்- தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்



  • 11:28 (IST) 05 Jun 2023
    சென்னையில் இருந்து கோரமண்டல் ரயில் புறப்பாடு

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில்

    2 நாட்களுக்கு பிறகு ஒடிசா மார்க்கத்தில் புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில்

    3 மணி 45 நிமிட தாமதத்தில் சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட கோரமண்டல் ரயில்



  • 10:56 (IST) 05 Jun 2023
    தேசிய கல்வி கொள்கை இளைஞர்கள் திறனை அதிகரிக்கும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

    "காலத்திற்கேற்ற கல்வி கிடைக்காததால் இளைஞர்களின் திறன் பாதிப்பு" "இளைஞர்களின் திறன் குறைபாட்டால் மாநில மற்றும் தேசிய வளர்ச்சி பாதிப்பு" "தேசிய கல்வி கொள்கை இளைஞர்கள் திறனை அதிகரிக்கும்" "பொறியியல், அறிவியல் பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" - பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை



  • 10:24 (IST) 05 Jun 2023
    144 தடை நீக்கம்

    தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விதிக்கபட்ட 144 தடை நீக்கம் அரிக்கொம்பன் நடமாட்டம் காரணமாக விதிக்கப்பட்டிருந்த 144 தடை, யானை பிடிபட்டதால் ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



  • 10:23 (IST) 05 Jun 2023
    அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை

    முதலமைச்சர் ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை



  • 09:03 (IST) 05 Jun 2023
    ஒடிசா பாலசோரில் விபத்தில் பாதிக்கப்பட்டு சீரமைக்கப்பட்ட தண்டவாளங்களில் ரயில் சேவை தொடக்கம்

    ஒடிசா பாலசோரில் விபத்தில் பாதிக்கப்பட்டு சீரமைக்கப்பட்ட தண்டவாளங்களில் ரயில் சேவை தொடக்கம் . ரயில் பெட்டிகள் கவிழ்ந்ததால் பாதிக்கப்பட்ட தண்டவாளங்களில் சீரமைப்பு பணிகள் நிறைவு . தண்டவாளங்களை சரிசெய்து பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்கியது ரயில்வே துறை



  • 08:08 (IST) 05 Jun 2023
    தமிழகத்தில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

    தமிழகத்தில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையம் நாளை திறப்பு சட்டப்பேரவையில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 500 மையங்கள் நாளை திறப்பு



  • 08:06 (IST) 05 Jun 2023
    தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது வேன் மோதி விபத்து

    பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது வேன் மோதி விபத்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்க சென்ற 108 ஆம்புலன்ஸ் மீது தனியார் சொகுசு பேருந்து மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிரிழப்பு மேலும் வேன் விபத்தில் காயமடைந்தவர்கள் 2 பேர் மீதும் சொகுசு பேருந்து மோதியதால், 3 பேர் உயிரிழப்பு



  • 08:06 (IST) 05 Jun 2023
    அரிக்கொம்பன் யானை 4 மயக்க ஊசிகள் செலுத்தி பிடிப்பு

    தேனி, கம்பம் பகுதியில் சுற்றி திரிந்த அரிக்கொம்பன் யானை 4 மயக்க ஊசிகள் செலுத்தி பிடிப்பு . 3 கும்கி யானைகள் உதவியுடன் அரிக்கொம்பனை லாரியில் ஏற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் வனத்துறையினர்.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment