Tamil Nadu News Updates: நாடு முழுவதும் 10 கோடி சிறாருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. கோவின் செயலி மூலம் இதுவரை சுமார் 7 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் சிறாருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
ஒமிக்ரான் - உயர் நீதிமன்றத்தில் நேரடி விசாரணை ரத்து
உச்ச நீதிமன்றத்தை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் நேரடி விசாரணை முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. காணொலி காட்சி மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தென் தமிழக கடற்கரையை ஒட்டியும், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய இலங்கை பகுதியிலும் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் காரணமாக, இன்று (திங்கட்கிழமை) தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல்,டீசல் அப்டேட்
சுமார் 2 மாதமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஜோகன்னஸ்பெர்க் 2ஆவது டெஸ்ட்
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் இன்று தொடங்குகிறது.தென்னாப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாறு படைக்குமா என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 22:50 (IST) 03 Jan 2022புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பில் அனுப்ப உத்தரவு
புதுச்சேரியில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பில் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அலுவலக வளாகத்தில் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- 21:55 (IST) 03 Jan 2022ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 20:54 (IST) 03 Jan 2022நாடு முழுவதும் இரவு 8 மணி நிலவரப்படி 40 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
நாடு முழுவதும் இரவு 8 மணி நிலவரப்படி 40 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
- 20:54 (IST) 03 Jan 2022உயிரிழந்த புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் இழப்பீடு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- 20:27 (IST) 03 Jan 2022தமிழ்நாட்டில் இன்று 15 முதல் 18 வயது வரையுள்ள 3.32 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 15 முதல் 18 வயது வரையுள்ள 3.32 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
- 20:26 (IST) 03 Jan 2022துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் மரணம்; பசுமலை பட்டி துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்படும்
புதுக்கோட்டை, அம்மாசத்திரத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், பசுமலை பட்டியில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்படும் என இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி பொதுமக்களிடம் உறுதியளித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஆட்சியர் முடிவு செய்துள்ளார் என்று வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
- 20:24 (IST) 03 Jan 2022துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் மரணம்; பசுமலை பட்டி துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்படும்
புதுக்கோட்டை, அம்மாசத்திரத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், பசுமலை பட்டியில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்படும் என இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி பொதுமக்களிடம் உறுதியளித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஆட்சியர் முடிவு செய்துள்ளார் என்று வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
- 20:22 (IST) 03 Jan 2022துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் மரணம்; உறவினர்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை,அம்மாசத்திரத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் உறவினர்கள் 2மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.1கோடி இழப்பீடு வழங்க கோரியும்,குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
- 20:20 (IST) 03 Jan 2022புதுச்சேரியில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்; ஆளுநர் தமிழிசை தலைமையிலான கூட்டத்தில் முடிவு
புதுச்சேரியில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், கடைவீதிகள், பேருந்துகள், கலையரங்கங்கள் ஆகியவற்றில் 50% மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 19:45 (IST) 03 Jan 2022தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 202க்கு ஆல் அவுட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் - 50, அஸ்வின் - 46 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் ஜென்சன் 4, ரபாடா மற்றும் ஆலிவர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
- 19:42 (IST) 03 Jan 2022தமிழகம் வரும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து துரை வைகோ கருத்து
தமிழகம் வரும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து கூட்டணி தலைமை எடுக்கும் முடிவே தங்களுடைய முடிவு என்று மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளர்.
- 19:39 (IST) 03 Jan 2022நேரடி பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி
சென்னையில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி திட்டத்தின் இரண்டாம் நிலை துவக்க விழாவில், அமைச்சர் அன்பில் மகேஷ், 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
- 19:29 (IST) 03 Jan 2022தலையில் குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு!
புதுக்கோட்டை மாவட்டம், டிசம்பர் 30ம் தேதி நார்த்தாமலையில் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்டபோது, தவறுதலாக பாய்ந்த குண்டு வீட்டில் உணவருந்திக்கொண்டிருந்த சிறுவன் தலையில் பாய்ந்தது. தலையில் குண்டு பாய்ந்து காயமடைந்த சிறுவன் புகழேந்தி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- 19:22 (IST) 03 Jan 2022கேரளாவில் இன்று 2,560 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; 30 பேர் உயிரிழப்பு
கேரளாவில் இன்று 2,560 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் அம்மாநிலத்தில் 30 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் தற்போது 19,359 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 19:15 (IST) 03 Jan 2022திருப்பூர் ரயில் நிலையம் அருகே கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா? ஐகோர்ட் கேள்வி
திருப்பூர் ரயில் நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், தமிழக உள்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 18:37 (IST) 03 Jan 2022நடிகர் விஜய் சேதுபதி தாக்கல் செய்த மனு விசாரணை ஒத்திவைப்பு
சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் தொடர்ந்து வழக்கின் விசாரணையை நாளை மறுதினம் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 18:04 (IST) 03 Jan 2022தமிழகத்தில் 2 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல்
தமிழ்நாட்டில் 5.20 மணி நிலவரப்படி 2,34,174 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 22,310 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என - சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 17:28 (IST) 03 Jan 2022சென்னையில் மழை வெள்ளத்தை தடுப்பது குறித்து முதல்வரிடம் அறிக்கை
சென்னையில்மழை வெள்ளத்தை தடுப்பது எப்படி என்பது குறித்து ஆய்வு குழு முதல்வரிடம் அறிக்கை சமர்பித்துள்ளது. அந்த அறிக்கையில், மழை வெள்ளத்தை தடுப்பதற்காக தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை புறநகர் பகுதியில், வடிகால் வாய்க்களில், ஆக்கரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும். வாய்க்கால்களை அகலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளது.
- 17:13 (IST) 03 Jan 2022சென்னை ஐ.ஐ.டி.யில் மின்சார வாகனங்கள் குறித்த முதுகலை படிப்பு அறிமுகம்
உலகம் முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில் சென்னை ஐ.ஐ.டி.யில் மின்சார வாகனங்கள் குறித்த முதுகலை படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 25 மாணவர்களை மின்வாகன படிப்பில் இணைக்க சென்னை ஐ.ஐ.டி. திட்டமிட்டுள்ளது.
- 17:12 (IST) 03 Jan 2022வாணியம்பாடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா
திருப்பத்தூர் வாணியம்பாடியில் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 7 மற்றும் 12 வயதுடைய அவரது குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 17:09 (IST) 03 Jan 2022நாடு முழுவதும் 13 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி : மத்திய சுகாதாரத்துறை
நாடு முழுவதும் 15 -18 வயது வரையிலான சிறார்களுக்கு காலை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 3 மணி நிலவரப்படி 13 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 16:41 (IST) 03 Jan 2022நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணைய விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணைய விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என மாநில தேர்தல் ஆணைய ஒப்புதலை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த கோரி அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது
- 16:19 (IST) 03 Jan 2022ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் சோதனை ஏற்கத்தக்கதல்ல - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்குகளில் ஆஜரானார் என்பதற்காக வழக்கறிஞர் மாரீஸ்குமாரின் வீட்டில் சோதனை செய்தது ஏற்கத்தக்கதல்ல என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்
- 16:14 (IST) 03 Jan 2022ஜாமின் மனு மீதான தீர்ப்பின் அடிப்படையில் உரிய முடிவெடுப்பார் -ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் தகவல்
ஜாமின் மனு மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு குறித்து முடிவெடுப்பார் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்
- 16:11 (IST) 03 Jan 2022போலி ஆவணங்கள் தயாரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை - சங்கர் ஜிவால்
கடந்த ஆண்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு ரூ.184.4 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது. போலி ஆவணங்கள் தயாரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்
- 15:59 (IST) 03 Jan 2022சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2,000 அபராதம்
சாலை விபத்துகளை கருத்தில் கொண்டு, சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார்
- 15:46 (IST) 03 Jan 2022கோவை, சரவணம்பட்டி பள்ளி மாணவி கொலை வழக்கு; குற்றவாளி மீது குண்டர் சட்டம்
கோவை, சரவணம்பட்டி பகுதியில் பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில், சிறையில் உள்ள முத்துக்குமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய, மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்
- 15:30 (IST) 03 Jan 2022ஜல்லிக்கட்டு போட்டி குறித்து முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் -அமைச்சர் மூர்த்தி
பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டை எளிமையாகவும், கட்டுப்பாடுகளுடன் நடத்த முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என சென்னை, நந்தனத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்
- 15:11 (IST) 03 Jan 2022கொடிசியா வளாகம் மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோவை, கொடிசியா தொழில்கூட கண்காட்சி வளாகம் மீண்டும் கொரோனா தொற்று பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது
- 15:06 (IST) 03 Jan 2022டெல்லியில் கடந்த 2 நாட்களில் பதிவான கொரோனா பாதிப்பில் 84% ஒமிக்ரான் வகை பாதிப்பு
டெல்லியில் கடந்த 2 நாட்களில் பதிவான கொரோனா பாதிப்பில் 84% ஒமிக்ரான் வகை பாதிப்பு என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்
- 14:39 (IST) 03 Jan 2022கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 14:31 (IST) 03 Jan 2022ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவர் என விரைவில் நிரூபித்து விடுவார் - அண்ணாமலை
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவர் என விரைவில் நிரூபித்து விடுவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
- 14:27 (IST) 03 Jan 2022சட்டப்பேரவை கூட்டத்தொடர் சமூக இடைவெளியுடன் நடைபெறும் - சபாநாயகர் அப்பாவு
சட்டப்பேரவை கூட்டத்தொடர் சமூக இடைவெளியுடன் நடைபெறும் என்றும், சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிப்பரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்
- 14:01 (IST) 03 Jan 2022கொரோனா பரவல்.. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, ராதாகிருஷ்ணன் கடிதம்!
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
- 13:59 (IST) 03 Jan 2022திருவான்மியூர் ரயில் நிலையத்தில் ரூ.1.32 லட்சம் கொள்ளை: 2 தனிப்படை விசாரணை!
திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள், டிக்கெட் கொடுப்பவரை கட்டிப்போட்டு ரூ.1.32 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து திருவான்மியூர் ரயில்வே போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- 13:58 (IST) 03 Jan 2022மழை பாதிப்பு.. டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!
கன மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
- 13:41 (IST) 03 Jan 2022கிளாம்பாக்கம் மேம்பால பணிகள் விரைவில் துவங்கப்படும்!
கிளாம்பாக்கம் மேம்பால பணிகள் ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.
- 13:40 (IST) 03 Jan 2022ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் 2 டோஸ் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துக!
பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என மாநில தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
- 13:34 (IST) 03 Jan 2022சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அழைப்பு!
ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்ற வருமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அப்பாவு நேரில் அழைப்பு விடுத்தார்.
- 13:28 (IST) 03 Jan 2022தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!
ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் நடக்கும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
- 13:09 (IST) 03 Jan 2022திண்டுக்கல் அருகே இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: 4 பேர் கைது!
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு மரியநாதபுரம் பகுதியில், ராகேஷ்(26) என்ற இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரை கைது செய்த போலீசார், சுடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். மீன் குத்தகை ஏலம் விடுவதில் ஏற்பட்ட பிரச்சினையால் சுட்டுக்கொலை செய்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- 13:01 (IST) 03 Jan 2022டாஸ்மாக் பார் டெண்டர் வெளிப்படைத்தன்மையுடன் நடந்தது!
டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் பார் டெண்டர் எந்த ஒளிவு, மறைவுமின்றி வெளிப்படைத் தன்மையுடன் நடந்தாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
- 12:55 (IST) 03 Jan 2022விவசாயிகள் எனக்காகவா உயிரிழந்தார்கள்? ஆணவத்துடன் பேசிய மோடி! ஆளுநர் தாக்கு!
500 விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்தபோது, அவர் விவசாயிகள் எனக்காகவா உயிரிழந்தார்கள் என ஆணவத்துடன் கேட்டார். இது மோடியின் கொடுமையை காட்டுகிறது என மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் கடுமையாக சாடியுள்ளார்.
- 12:50 (IST) 03 Jan 2022ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படம் ரூ.10,200 கோடி வசூலை குவித்து சாதனை!
டிசம்பர் 16-இல் வெளியான ஸ்பைடர் மேன் நோ வே ஹோம், ஹாலிவுட் திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.10,200 கோடி வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த படம் ரூ.260 கோடி வசூல் செய்துள்ளது.
- 12:46 (IST) 03 Jan 2022சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்பு!
சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்க, தற்காலிகமாக செய்ய வேண்டிய பணிகள், நிரந்தரமாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அறிக்கை அளித்தது.
- 12:43 (IST) 03 Jan 2022லக்கிம்பூர் வன்முறை 5,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
- 12:39 (IST) 03 Jan 2022லக்கிம்பூர் வன்முறை 5,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
- 12:38 (IST) 03 Jan 2022குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்பு!
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 - 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
- 11:20 (IST) 03 Jan 202287 மருத்துவர்களுக்கு கொரோனா
பாட்னா மருத்துவக் கல்லூரியில் 87 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாமலும் லேசான அறிகுறிகளுடனும் உள்ள 87 பேரும் தனிமைப்படுத்துள்ளதாக கூறப்படுகிறது.
- 10:59 (IST) 03 Jan 2022திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளை.
திருவான்மியூர் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில் ரூ.1.32 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கவுண்டரில் இருந்தவர்களை அறையில் அடைத்து பூட்டு போட்டு விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
- 10:40 (IST) 03 Jan 2022சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்
சென்னை சைதாப்பேட்டையில் 15-18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் மு.க ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
- 10:40 (IST) 03 Jan 2022சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்
சென்னை சைதாப்பேட்டையில் 15-18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் மு.க ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
- 10:10 (IST) 03 Jan 2022மருத்துவ வசதிகளை ஏற்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
- 09:52 (IST) 03 Jan 2022இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 1700ஆக உயர்வு
இந்தியாவில் இதுவரை 1700 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்றிலிருந்து 639 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1061 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 09:46 (IST) 03 Jan 2022கடந்த 24 மணி நேரத்தில் 33,750 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,750 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 123 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில், 10,846 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
- 09:24 (IST) 03 Jan 2022வேலுநாச்சியார் வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும் - பிரதமர் மோடி
வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன்; அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும், அடக்குமுறையை எதிர்த்து போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது, மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
- 09:01 (IST) 03 Jan 2022அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் முற்றுகை போராட்டம்
சென்னை, பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு தமிழ்நாடு பார் உரிமையாளர் சங்கத்தினர் போராட்டம். தமிழகத்தில் நடைபெற்ற டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக கூறி முற்றுகையில் ஈடுபட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.