Advertisment

Tamil News Today: முதலமைச்சர் ஸ்டாலின் பேசும் ஆடியோ சீரிஸ்: காலை 7 மணிக்கு வெளியானது

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today - 03 September 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Today: முதலமைச்சர் ஸ்டாலின் பேசும் ஆடியோ சீரிஸ்: காலை 7 மணிக்கு வெளியானது

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 470-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம். புழல் ஏரியில் நீர்இருப்பு 1869 மில்லியன் கனஅடியாக உள்ளது; ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 126 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 22 கன அடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 343 மில்லியன் கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீருக்காக 9 கனஅடி நீர் வெளியேற்றம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:17 (IST) 03 Sep 2023
    சனாதனம் குறித்த அ.தி.மு.க தலைவர்களின் கருத்து என்ன? உதயநிதி கேள்வி

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: “சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே. ஆனால், பா.ஜ.க-வினர் நான் கூறியதை திரித்துப் பேசுகின்றனர். இந்தியா கூட்டணி வலுப்பெறுவதை திசை திருப்பவே பா.ஜ.க-வினர் சனாதனம் குறித்த பிரச்னையை இப்போது கையில் எடுத்துள்ளனர். எதுவுமே மாறக்கூடாது. எலாம் நிலையானது என்பதுதான் சனாதனம் என்று விளக்கம் சொல்கிறார்கள். எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். ஒரே மாதிரியாக இருக்கக் கூடாது என்பதுதான் திராவிட மாடல். எபோதும் பொய்ச் செய்திகளை பரப்புவதுதான் பா.ஜ.க-வின் வேலை. சனாதனம் குறித்த அதிமுக தலைவர்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அண்ணாமலையின் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது.” என்று கூறினார்.


  • 22:12 (IST) 03 Sep 2023
    குற்றால அருவிகளில் குளிக்க தடை

    நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக குற்றாலத்தின் பிரதான அருவி, ஐந்தருவியில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


  • 21:29 (IST) 03 Sep 2023
    சனாதனம் பற்றி பேசியது சரியே - உதயநிதி

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: “எப்போதுமே பொய் செய்திகளை பரப்புவது தான் பா.ஜ.க-வின் வேலை. சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே; எனது பேச்சை பா.ஜ.க-வினர் திரித்து கூறுகின்றனர்” என்று கூறினார்.


  • 21:20 (IST) 03 Sep 2023
    சனாதனம் பற்றி பேசியது சரியே - உதயநிதி

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: “எப்போதுமே பொய் செய்திகளை பரப்புவது தான் பா.ஜ.க-வின் வேலை. சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே; எனது பேச்சை பா.ஜ.க-வினர் திரித்து கூறுகின்றனர்” என்று கூறினார்.


  • 20:16 (IST) 03 Sep 2023
    உதயநிதிக்கு கண்டனம் தெரிவிக்க விரும்பவில்லை - அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ்

    அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா: “தமிழ்நாடு அமைச்சருக்கு கண்டனம் தெரிவிக்க விரும்பவில்லை, அவர் அவரை வெளிக்காட்டியுள்ளார். காங்கிரஸ் இனியும் தி.மு.க கூட்டணியில் நீடிக்குமா என்பதுதான் கேள்வி. ராகுல் காந்தி சனாதனத்தை மதிக்கிறாரா இல்லையா என்பதில் முடிவெடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.


  • 20:10 (IST) 03 Sep 2023
    கடலூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ஸ்டாலின் நிவாரணம்

    கடலூர் சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம்,சிகிச்சை பெறும் 2 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


  • 19:28 (IST) 03 Sep 2023
    சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை எதிரொலி; மாநகராட்சி ஆணையர் ஆய்வு

    சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை எதிரொலியாக, மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்தார்.


  • 19:28 (IST) 03 Sep 2023
    ஓ.பி.எஸ் தலைமையிலான காஞ்சிபுரம் பொதுக்கூட்டம் மழையால் ஒத்திவைப்பு

    முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சி பயண தொடக்க விழா, காஞ்சிபுரம் பொதுக்கூட்டம், தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.


  • 18:58 (IST) 03 Sep 2023
    ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா

    கும்பகோணம் அடுத்த துக்காட்சி கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நடந்தது.


  • 18:44 (IST) 03 Sep 2023
    சோனியா காந்தி உடல் நிலை: மருத்துவமனை அறிக்கை

    சோனியா காந்தி உடல் நிலை சீராக உள்ளது என டெல்லி சர் கங்காராம் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


  • 18:31 (IST) 03 Sep 2023
    ஹைதராபாத் விமான நிலையத்தில் 5 கிலோ கொகைன் பறிமுதல்

    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள விமான நிலையில் 5 கிலோ கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த கொகைன் போதைப் பொருளின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  • 18:25 (IST) 03 Sep 2023
    செப்.11ல் செவிலியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

    தமிழக அரசை கண்டித்து செப். 11ம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என செவிலியர் சங்கம் அறிவித்துள்ளது.


  • 17:59 (IST) 03 Sep 2023
    மதுரை உயர் நீதிமன்ற ஊழியர் கைது

    உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆவணங்கள் பாதுகாப்பு அறையில் இருந்த முக்கிய வழக்குகளின் ஆவணங்களை திருடிய வழக்கில், நீதிமன்ற ஊழியர் ஜான்சன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்.


  • 17:59 (IST) 03 Sep 2023
    மதுரை உயர் நீதிமன்ற ஊழியர் கைது

    உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆவணங்கள் பாதுகாப்பு அறையில் இருந்த முக்கிய வழக்குகளின் ஆவணங்களை திருடிய வழக்கில், நீதிமன்ற ஊழியர் ஜான்சன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்.


  • 17:52 (IST) 03 Sep 2023
    அடுத்த 3 மணி நேரத்தில் ஜில் ஜில் ஆகப் போகும் 5 மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    அடுத்த 3 மணி நேரம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து கள்ளக் குறிச்சி, தஞ்சை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன.


  • 17:34 (IST) 03 Sep 2023
    பாஜக நிர்வாகி கொலை: திமுக பிரமுகர் கைது

    திருநெல்வேலியில் பாஜக நிர்வாகி ஜெகன் பாண்டியன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திமுக நிர்வாகி பிரபு என்பவர் கைது செய்யப்பட்டார்.

    3 நாள்களாக அவர் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  • 16:57 (IST) 03 Sep 2023
    சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை

    சென்னை அடையாறு, பட்டினப்பாக்கம், மந்தைவெளி, தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது


  • 16:56 (IST) 03 Sep 2023
    சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை

    சென்னை அடையாறு, பட்டினப்பாக்கம், மந்தைவெளி, தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது


  • 16:45 (IST) 03 Sep 2023
    சாராய வியாபாரியை திருத்தி தள்ளுவண்டி கடை வைத்துக் கொடுத்த போலீசார்

    சென்னையில் 10 ஆண்டுகளாக குழந்தைகளை காப்பாற்ற கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த பெண்ணை திருத்தி ஐஸ் ஹவுஸ் போலீசார் தள்ளுவண்டி வைத்துக் கொடுத்தனர்


  • 16:30 (IST) 03 Sep 2023
    நிகர் ஷாஜிக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

    தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் ஷாஜியை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்


  • 16:15 (IST) 03 Sep 2023
    செப்டம்பர் 7ல் நாடு முழுதும் பாரத் ஜோடோ யாத்ரா

    'பாரத் ஜோடோ யாத்ராவின்' முதலாமாண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் செப்.7ம் தேதி நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற உள்ளது


  • 15:58 (IST) 03 Sep 2023
    ஒரே நாடு ஒரே தேர்தல்; மாநிலங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் - ராகுல் காந்தி

    இந்தியா என்பது பாரதம், அது மாநிலங்களின் ஒன்றியம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கை, இந்திய ஒன்றியம் மற்றும் மாநிலங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்


  • 15:32 (IST) 03 Sep 2023
    உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு அமித் ஷா கண்டனம்

    சனாதன தர்மம் குறித்து தி.மு.க தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணியை கடுமையாக சாடினார். இந்து மதத்தின் போதனைகளான சனாதன தர்மத்தை ஒழிக்க அவர் அழைப்பு விடுத்ததாகவும், அதை “டெங்கு, மலேரியா மற்றும் கோவிட் -19 போன்ற நோய்களுடன் ஒப்பிடுவதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.


  • 15:13 (IST) 03 Sep 2023
    தி.மு.க பவள விழா – ஸ்டாலின் அழைப்பு

    வேலூரில் வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ள தி.மு.க பவள விழாவில் கலந்துக்கொள்ள தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்


  • 14:54 (IST) 03 Sep 2023
    ஆசிய கோப்பை: ஆப்கான் - வங்கதேசம் மோதல்!

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்கதேச அணிகள் மோடுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:

    வங்கதேசம்

    முகமது நைம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), தவ்ஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், முஷ்பிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), அஃபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத்.

    ஆப்கானிஸ்தான்:

    ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், ரஷித் கான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, முஜீப் உர்ரஹ்மான்.


  • 14:51 (IST) 03 Sep 2023
    வாணியம்பாடியில் பன்றி காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு!

    திருப்பத்தூர், வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் பன்றி காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாணியம்பாடியில் 5 நாட்களுக்கு கடைகளை திறக்க கூடாது என நகராட்சி ஆணையாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


  • 14:16 (IST) 03 Sep 2023
    இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உடன் இந்திய கூட்டணி நாடாளுமன்ற குழு தலைவர்கள் செப்டம்பர் 5ல் சந்திப்பு நடத்த உள்ளனர்.


  • 14:03 (IST) 03 Sep 2023
    8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி,தேனி, திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூரில் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 13:48 (IST) 03 Sep 2023
    மீண்டும் சென்னை திரும்பிய விமானம்!

    சென்னையில் இருந்து அந்தமானுக்கு இன்று காலை 156 பயணிகளுடன் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னை திரும்பியது.


  • 13:27 (IST) 03 Sep 2023
    ஜிம்பாப்வே கிரிக்கெட் ஜாம்பவான் ஹீத் ஸ்ட்ரீக் மரணம்!

    ஜிம்பாப்வே கிரிக்கெட் ஜாம்பவான் ஹீத் ஸ்ட்ரீக் (49) புற்றுநோயால் உயிரிழந்தார். ஸ்ட்ரீக் உயிரிழந்ததை அவரது மனைவி சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளார்.


  • 13:27 (IST) 03 Sep 2023
    மதுரை ஐகோர்ட்டில் முக்கிய ஆவணங்கள் மாயம்: நீதிமன்ற ஊழியர்கள் 3 பேர் கைது

    உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆவணங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து வழக்குகளின் முக்கிய ஆவணங்கள் மாயமானதை அடுத்து நீதிமன்ற ஊழியர் ஜான்சன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


  • 12:55 (IST) 03 Sep 2023
    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மறு ஆய்வு மனு

    தமிழகத்திற்கு நாள்தோறும் விநாடிக்கு 5,000 கன அடி நீரை திறந்து விட பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மறு ஆய்வு மனு


  • 12:45 (IST) 03 Sep 2023
    ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது

    ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை செப்.5ல் மேற்கொள்ளப்படும் - இஸ்ரோ


  • 12:19 (IST) 03 Sep 2023
    சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி . லேசான காய்ச்சல் காரணமாக டெல்லியில் சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதி மருத்துவர்களின் கண்காணிப்பில் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் .


  • 12:18 (IST) 03 Sep 2023
    மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து

    டெல்லியின் பைரோன் மார்க் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து. ஜி20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானம் அருகே ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு மின்சார ரயில் தடம் புரண்டதில் ரயிலின் ஒரு பெட்டி கடும் சேதம்


  • 12:18 (IST) 03 Sep 2023
    செப்.15ல் மகளிரணி சார்பில் கனிமொழி தொடங்கும் வினாடி வினா போட்டி

    கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு செப்.15ல் மகளிரணி சார்பில் கனிமொழி தொடங்கும் வினாடி வினா போட்டிக்கு இப்போதே தயாராகுங்கள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


  • 11:57 (IST) 03 Sep 2023
    I.N.D.I.A என்றாலே பாஜகவுக்கு அச்சம் வந்துவிடுகிறது

    "I.N.D.I.A என்றாலே பாஜகவுக்கு அச்சம் வந்துவிடுகிறது; இந்தியாவை காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது; ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக முன்னாள் குடியரசுத்தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது; 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குழுவில் அனைத்து கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை; ஆளுங்கட்சியாக இருந்தபோது, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக இப்போது ஆதரவளிக்கிறது: ஸ்டாலின்


  • 11:43 (IST) 03 Sep 2023
    திமுகவில் வாரிசு உள்ளது என கூறுகின்றனர்; கழகம் தான் குடும்பம்; குடும்பம் தான் கழகம்

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் தான் ஆகிறது . நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலை நடத்த ஆட்சியைக் கலைத்துவிடுவீர்களா? . யார் ஆட்சிக்கு வரவேண்டாம் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும் . திமுகவில் வாரிசு உள்ளது என கூறுகின்றனர்; கழகம் தான் குடும்பம்; குடும்பம் தான் கழகம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


  • 10:49 (IST) 03 Sep 2023
    கேள்வி நேரம் இல்லை

    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம், நேரமில்லா நேரம், தனி நபர் தீர்மானங்கள் மீதான விவாதம்கிடையாது -மக்களவை, மாநிலங்களவை செயலகங்கள் அறிவிப்பு.


  • 10:47 (IST) 03 Sep 2023
    கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

    தேனி, பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

    2வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறை அறிவிப்பு


  • 10:46 (IST) 03 Sep 2023
    மீனாட்சி அம்மன் கோயிலில் ரஜினி சகோதரர் சாமி தரிசனம்

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ்


  • 10:21 (IST) 03 Sep 2023
    தலையணை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

    நெல்லை களக்காடு தலையணை அருவியில் நீர்வரத்து வரத் தொடங்கியதால் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி. களக்காடு தலையணை அருவியில் நீர்வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்திருந்தது வனத்துறை


  • 09:38 (IST) 03 Sep 2023
    'இன்பநிதி பாசறை' போஸ்டர்: 2 பேர் சஸ்பெண்ட்

    'இன்பநிதி பாசறை' போஸ்டர்: திமுக ஒழுங்கு நடவடிக்கை

    புதுக்கோட்டையில் இன்பநிதி புகைப்படத்தை பயன்படுத்தி போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் 2 பேர் சஸ்பெண்ட்

    புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் மணிமாறன். மீனவர் அணி துணை அமைப்பாளர் திருமுருகன் ஆகியோரை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சஸ்பெண்ட் செய்து

    ஒழுங்கு நடவடிக்கை


  • 09:34 (IST) 03 Sep 2023
    வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

    வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    வடக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் தமிழ்நாடு. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு


  • 09:08 (IST) 03 Sep 2023
    சேலத்தில் முதன்முறையாக 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி

    சேலத்தில் முதன்முறையாக ஆடல், பாடல்களுடன் களைக்கட்டியுள்ள 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி

    அஸ்தம்பட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறுவர்களும் பெரியவர்களும் பங்கேற்று உற்சாக கொண்டாட்டம்


  • 09:08 (IST) 03 Sep 2023
    மாயூரநாதர் கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

    மயிலாடுதுறை, மாயூரநாதர் கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகம்

    வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு


  • 08:19 (IST) 03 Sep 2023
    2019 அதிமுக ஆட்சியில் ரூ.1.11 கோடி மோசடி: 3 பேர் மீது வழக்கு

    அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை ஓரம் நடைபாதை, தடுப்பு வேலி அமைத்ததில் ரூ.1.11 கோடி மோசடி. 3 பேர் மீது வழக்குப்பதிவு

    2019 அதிமுக ஆட்சியில் மங்களூர்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் நடைபாதை, தடுப்பு வேலி அமைத்ததில் ரூ.1.11 கோடி மோசடி. ஓய்வு பெற்ற கோட்ட பொறியாளர் பழனிசாமி உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு. நடைபாதையில் 2.1 மீட்டருக்கு பதிலாக 0.90 மீட்டர் மட்டுமே டைல்ஸ் கற்களை பதித்து மோசடி நடந்துள்ளது அம்பலம். தற்போது பணியில் உள்ள 2 அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்-லஞ்ச ஒழிப்பு போலீஸ்


Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment