Tamil News Updates: சென்னை குடிநீர்- கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 1,200 கன அடி கிருஷ்ணா நீர் திறப்பு

Tamil News Live Updates-19 September 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil News Live Updates-19 September 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai water supply

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 186-வது நாளாக எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 31.82% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 30.56% ; புழல் - 66.67% ; பூண்டி - 2.23% ; சோழவரம் - 5.36% ; கண்ணன்கோட்டை - 59.4%

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“we

Advertisment
Advertisements
    • Sep 19, 2024 21:18 IST

      மின்சாரம் தாக்கி கழுதை மரணம்: 55 கிராமவாசிகள் மீது வழக்கு!

      பீகார்: பக்சர் மாவட்டம் ராம்பூர் கிராமத்தில் கழுதை ஒன்று உயிரிழந்ததை அடுத்துஅப்பகுதியை சேர்ந்த 55 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு! மழை பெய்துகொண்டிருந்தபோது மின்கம்பம் அருகே சென்ற கழுதைமின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. இதற்காக கிராம மக்கள்மின்வாரிய ஊழியர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துமின்சாரத்தைத் துண்டித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்2.5 மணி நேரம் மின்சாரம் தடைபட்டதால் அரசுக்கு ₹1.46 லட்சம் இழப்பு ஏற்பட்டதாகவும்அரசு ஊழியர்களை கடத்தியதற்காகவும் கிராம வாசிகள் 55 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



    • Sep 19, 2024 21:16 IST

      டைட்டன் நீர்மூழ்கியில் கிடைத்த கடைசி தகவல்!

      டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்வதற்காக ஆழ்கடல் பயணம் சென்ற டைட்டன் நீர்மூழ்கியில் இருந்த 5 பேர் கொண்ட குழுவினர் விபத்து ஏற்படுவதற்கு முன் கடைசியாக, "Yes, All good here" என்ற செய்தியை வெளியிட்டதாக தற்போது தெரியவந்துள்ளது! டைட்டனுக்கும் அதன் மூலக்கப்பலுக்கும் (mother ship) இடையிலான இறுதி தகவல் தொடர்புகளில் ஒன்றாக இந்த செய்தி இருந்ததாகக் தெரிவித்துள்ளனர்!



    • Sep 19, 2024 21:16 IST

      சொந்த மண்ணில் டக் அவுட்: சுப்மான் கில் மோசமான சாதனை

      சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட முறை டக் அவுட்டான இந்திய வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் சுப்மன் கில். அமர்நாத் (1983), மன்சூர் அலி கான் (1969), திலிப் வெங்சர்கார் (1979), வினோத் காம்ப்ளி (1994), விராட் கோலி (2021), சுப்மன் கில் (2024*)



    • Sep 19, 2024 21:15 IST

      விழுப்புரம் வட்டார கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்

      விழுப்புரம் வட்டார கல்வி அலுவலர் ஜி.ரவிச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொலியனூர் ஸ்ரீநடராஜா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் மாணவர் பதிவு, ஆசிரியர்-மாணவர் விகிதத்தை தவறாக பதிவு செய்ததை வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் முறையாக ஆய்வு செய்யாததால் தொடக்கக் கல்வி இயக்குநர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.



    • Sep 19, 2024 21:12 IST

      போனஸ் வழங்கக் கோரி என்.எல்.சி.யில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்

      நெய்வேலி என்.எல்.சி.யில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தங்களுக்கு 20% போனஸ் வழங்கக் கோரி இரண்டாவது நாளாக இரவு நேரத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



    • Sep 19, 2024 20:20 IST

      செல்வப்பெருந்தகையை நீக்க கோரி ராகுலுக்கு கடிதம் 

      காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புள்ளது. எனவே அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.



    • Sep 19, 2024 20:17 IST

      `வேட்டையன்' படத்தில் அமிதாப் பச்சன் 

      `வேட்டையன்' படத்தில் `சத்யதேவ்' என்ற கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார் என படக்குழு அறிவித்துள்ளது. 



    • Sep 19, 2024 19:28 IST

      சிதம்பரம் கோயில் 2000 ஏக்கர் நிலம் - நீதிமன்றம் அதிரடி

      "சிதம்பரம் தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக கூறப்படும், 2000 ஏக்கர் நிலங்கள் குறித்த விபரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்" என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 



    • Sep 19, 2024 19:26 IST

      திருப்பதி கோயில் பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

      "திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பு உண்மை தான். திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு கலந்திருந்தது உண்மை தான். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நடைபெற்றதாக லேப் ரிப்போர்ட்டுடன் தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டியுள்ளது. 

      இந்நிலையில், இது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவின் கட்சியை சேர்ந்த  வெங்கட்ராமனா ரெட்டி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். 

       



    • Sep 19, 2024 19:03 IST

      கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு - மாணவிகளுக்கு கருணைத் தொகை: ஐகோர்ட் உத்தரவு 

      கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கருணைத் தொகை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி என்.சி.சி. முகாம் நடத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவில் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

      இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், பாதிக்கப்பட்ட  23  மாணவிகள் மற்றும் 219 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. வழக்கு தொடர்பான விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 



    • Sep 19, 2024 18:57 IST

      தேவநாதனுக்கு மீண்டும் போலீஸ் காவல்

      நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவுக்கு மீண்டும் போலீஸ் காவல் வழங்கப்பட்டது. அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 23ம் தேதி மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

      தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் ரூ. 24 கோடி மோசடி செய்ததாக நிறுவன இயக்குனர் தேவநாதன் யாதவ், மகிமை நாதன், குணசீலன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



    • Sep 19, 2024 18:55 IST

      'அடுத்த முறை கண்டிப்பா தங்கப்பதக்கம் வெல்வேன்' - மாரியப்பன் தங்கவேலு

      பாரிஸ் பாராலிம்பிக்ஸ் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு சொந்த ஊரான சேலத்தில் மேளதாளங்கள் ஒலிக்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பூங்கொத்து அளித்து வரவேற்றதையடுத்து, மக்கள் புடைசூழ அழைத்து செல்லப்பட்டார். 

      அப்போது அவர், 'அடுத்த முறை கண்டிப்பா தங்கப்பதக்கம் வெல்வேன்' என்று கூறினார். 



    • Sep 19, 2024 18:50 IST

      ஆய்வக அறிக்கை வெளியிட்ட தெலுங்கு தேசம் 

      ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு ஆகியவை கலந்திருப்பதாக ஆய்வக அறிக்கைகளை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. 



    • Sep 19, 2024 16:59 IST

      ராகுல் தெய்வங்களை அவமதித்துவிட்டார் - மோடி குற்றச்சாட்டு

      காஷ்மீரின் கத்ரா பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பெயரை மறைமுகமாகக் குறிப்பிட்டு,  “காங்கிரஸ் அரச குடும்ப வாரிசு வெளிநாட்டில் தெய்வங்கள் கடவுள்கள் அல்ல என்கிறார். இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் தெய்வ வழிபாடு உள்ளது. காங்கிரஸ் அதை கடவுளாகக் கருதவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.



    • Sep 19, 2024 16:54 IST

      விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

      விருதுநகர் மாவட்டம், செவல்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கோவிந்தராஜ் என்பவர் உயிரிழந்தார். அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.



    • Sep 19, 2024 16:00 IST

      அந்திரா கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் திறப்பு

      அந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 1,600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக அதிகரித்து 2,000 கன அடி நீர் திறக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. நெல்லூர் மாவட்டம், வெங்கடகிரி சட்டமன்ற உறுப்பினர்  திறப்பு ராமகிருஷ்ணா கண்டலேறு அணையைத் திறந்து வைத்தார்.



    • Sep 19, 2024 15:54 IST

      ஒரு நாடு, ஒரு தேர்தல், ஒரு மொழி, ஒரு அதிபர், இதுதான் மோடி அரசின் சித்தாந்தம் - செல்வப்பெருந்தகை காட்டம்


      “ஒரு நாடு, ஒரு தேர்தல், ஒரு கொடி, ஒரு மொழி, ஒரு அதிபர், இதுதான் மோடி அரசின் சித்தாந்தம் அதை மக்கள் தோற்கடிப்பார்கள்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காட்டமாகத் தெரிவித்துள்ளார்.



    • Sep 19, 2024 15:52 IST

      சென்னை டெஸ்ட்: சொந்த மண்ணில் அஸ்வின் அரை சதம்

      சென்னையில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அரைசதம் அடித்தார். 61 பந்துகளை எதிர்கொண்ட அஸ்வின் 54 ரன்களை அடித்து விளையாடி வருகிறார்.



    • Sep 19, 2024 15:22 IST

      நில குத்தகை ரத்து: சென்னை ரேஸ் கிளப் நிர்வாகம் வழக்கு தாக்கல்

      சென்னை ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நில குத்தகையை ரத்து செய்த விவகாரத்தில், குத்தகையை ரத்து செய்ததை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



    • Sep 19, 2024 15:17 IST

      திருச்சியில் சத்துணவு முட்டைகளை விற்பனை செய்த அமைப்பாளர் சஸ்பெண்ட்; ஓட்டல் உரிமையாளர் கைது

      திருச்சி மாவட்டம், துறையூரில் உணவகத்திற்கு சத்துணவு முட்டைகளை விற்பனை செய்த புகாரில் சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சத்துணவு முட்டைகளை வாங்கி பயன்படுத்திய உணவகத்திற்கு சீல் வைத்த நிலையில், அதன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஓட்டல் உரிமையாளர் ரத்னம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.



    • Sep 19, 2024 15:01 IST

      சென்னை ரேஸ் கிளப் விவகாரம்; ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தாக்கல்

      சென்னை ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்திற்கான குத்தகையை ரத்து செய்ததை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. நிலத்திற்கான குத்தகை பாக்கி சுமார் ரூ.731 கோடி செலுத்தாததை அடுத்து, சென்னை ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் 6ம் தேதி உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில், உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 



    • Sep 19, 2024 14:44 IST

      சல்மான் கான் தந்தைக்கு மிரட்டல் - 2 பேர் கைது

      பாலிவுட் நடிகர் சல்மான் கான் தந்தைக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட இருவர் மீதும் எந்தவித குற்றப் பின்னணிகள் இல்லை என போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். விளையாட்டிற்காக சல்மானின் தந்தையை மிரட்டியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்



    • Sep 19, 2024 14:30 IST

      கல்வராயன் மலை விவகாரம்; தலைமைச் செயலாளருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

      நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில்ஆஜராக உத்தரவிட நேரிடும் என கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதி மக்கள் விவகாரத்தில், தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது



    • Sep 19, 2024 14:14 IST

      கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகளை வருகிற 30-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் - பசுமை தீர்ப்பாயம்

      கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகளை வருகிற 30 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக கழிவுகள் அப்புறப்படுத்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உறுதியளித்துள்ளது



    • Sep 19, 2024 13:44 IST

      மருத்துவ படிப்புக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி

      மருத்துவ படிப்புக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்கக் கூடாது? என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த பூபேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்



    • Sep 19, 2024 13:27 IST

      பாலியல் புகாரில் நடன இயக்குநர் ஜானி கைது

      உதவி நடன பெண் பயிற்சியாளர் அளித்த பாலியல் புகாரில் நடன இயக்குநர் ஜானி கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் பதுங்கி இருந்த ஜானி மாஸ்டரை ஐதராபாத் தனிப்படை கைது செய்தது. நடன இயக்குநர் ஜானியை பெங்களூருவில் இருந்து ஐதராபாத் அழைத்து வந்து பாலியல் புகார் தொடர்பாக தனிப்படை விசாரித்து வருகிறது



    • Sep 19, 2024 13:24 IST

      காப்பி பேஸ்ட் கட்சியாக மாறிய காங்கிரஸ் - ஜே.பி.நட்டா விமர்சனம்

      நாட்டின் மிகப் பழமையான காங்கிரஸ் கட்சி அதன் இளவரசரின் அழுத்தத்தால் காப்பி பேஸ்ட் கட்சியாக மாறிவிட்டது என பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனம் செய்துள்ளார்



    • Sep 19, 2024 13:02 IST

      ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

      ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கு எதிரானது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமற்றது. இதனை ஒருபோதும் பாஜகவால் செயல்படுத்த முடியாது. பாஜகவின் ஈகோவால் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு கட்சியின் பேராசைக்கு ஏற்ப இந்தியாவின் ஜனநாயகத்தை வளைக்க முடியாது
      - ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு



    • Sep 19, 2024 13:01 IST

      வக்ஃபு வாரியத்தின் புதிய தலைவர்

      தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் புதிய தலைவராக ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



    • Sep 19, 2024 13:00 IST

      பிரதமர் மோடி பேச்சு

      ஜம்மு காஷ்மீர் தேர்தலில் கல் வீச்சு, பயங்கரவாத ஆதரவு கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு எதிராக சதி செய்யும் அனைத்து சக்திகளையும் தோற்கடிக்க வேண்டும்

      - ஸ்ரீநகர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு



    • Sep 19, 2024 12:09 IST

      அன்பில் மகேஷ் எச்சரிக்கை

      மகாவிஷ்ணு விவகாரத்தை போன்ற ஒரு நிகழ்வு, இனி எந்த ஒரு பள்ளியிலும் நடக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை



    • Sep 19, 2024 12:09 IST

      திருச்சி நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு: புதிய தகவல்

      திருச்சி அரியமங்கலத்தில், ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி, வீட்டில் சமைத்து சாப்பிட்ட 15 வயது சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில், சிறுமி சாப்பிட்ட நூடுல்ஸ் மற்றும் குளிர்பானத்தில் எந்தவித நச்சு தன்மையும் இல்லை என்ற ஆய்வக முடிவில் தகவல்



    • Sep 19, 2024 11:23 IST

      வேங்கைவயல்: சிபிசிஐடிக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்

      வேங்கைவயல் விவகாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும், ஒரு மாதம் அவகாசம் வழங்கி சிபிசிஐடிக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

      புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடந்து இரண்டரை ஆண்டு காலத்தில் 189 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது சிபிசிஐடி போலீஸ்



    • Sep 19, 2024 11:19 IST

      சென்னை பெண் கொலை

      சென்னை துரைப்பாக்கத்தில், துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பெண் மாதவரத்தைச் சேர்ந்த தீபா என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வகங்கையை சேர்ந்த மணிகண்டன் என்பரை கைது செய்து போலீசார் விசாரணை



    • Sep 19, 2024 11:19 IST

      விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி பலி

      விருதுநகர்: குகன்பாறை என்ற கிராமத்தில் லட்சுமி என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கோவிந்தராஜ் என்ற தொழிலாளி உயிரிழந்தார்.



    • Sep 19, 2024 10:57 IST

      2 தியேட்டர்களுக்கு சீல்

      சென்னை நங்கநல்லூரில் உள்ள வெற்றிவேல், வேலன் திரையரங்குகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல். சுமார் ரூ.60 லட்சம் வரிபாக்கி விவகாரத்தில் நடவடிக்கை என தகவல். சென்னை அருகே நங்கநல்லூரில் முன்னாள் எம்எல்ஏவின் 2 தியேட்டர்களுக்கு சீல்.ரூ.60 லட்சம் சொத்து வரி பாக்கி வைத்திருப்பதால், சென்னை மாநகராட்சி நடவடிக்கை. தியேட்டர்களுக்கு சீல் வைத்த மாநகராட்சி உதவி வருவாய் துறை அதிகாரிகள், பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாததால் சீல் வைப்பு என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 



    • Sep 19, 2024 10:02 IST

      சூட்கேஸில் பெண் உடல்

      சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் சடலமாக இருந்த பெண் உடல்அடையாளம் கண்டெடுப்பு. 

      சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் இருந்து பெண் உடல் மீட்பு, சூட்கேஸில் இருந்த பெண் உடல் பாகங்களை மீட்டு துரைப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துண்டு துண்டாக வெட்டப்பட்டு பெண் உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்தது. 

      வேறு எங்கேயோ கொலை செய்து விட்டு துரைப்பாக்கத்தில் வீசி சென்ற மர்ம நபர்கள். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து துரைப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் உயிரிழந்த பெண்  மணலியை சேர்ந்த தீபா (32 வயது) என்றும், திருமணமாகாதவர் என்றும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 



    • Sep 19, 2024 09:16 IST

      ஹரியானா காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி

      18 வயதுக்கு மேற்பட்ட மகளிருக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய்.மூத்த குடிமக்களுக்கு 6,000 ரூபாய் ஓய்வூதியம். 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டது.



    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: