Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
ஓ.பி.ரவீந்திரநாத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஓ.பி.ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
ரவீந்திரநாத் வேட்புமனுவில் உண்மை விவரங்கள் மற்றும் வருமானத்தை மறைத்துள்ளார்; எனவே அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது சட்டவிரோதம், எனவே அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:41 (IST) 30 Jul 2023தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதி -அண்ணாமலை
தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷன் கடைகளில் சீனிக்கு பதிலாக பனங்கருப்பட்டி வழங்கப்படும். என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
- 22:05 (IST) 30 Jul 2023பா.ம.க,வினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஜவாஹிருல்லா
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு கைதான பாமகவினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்
- 21:09 (IST) 30 Jul 2023மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி - மு.க.ஸ்டாலின்
மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன் என சென்னை தி.நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்
- 20:51 (IST) 30 Jul 2023லஞ்ச புகார்; தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் சஸ்பெண்ட்
லஞ்ச புகாரில் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேன்டீன் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.20 லட்சம் பெற்ற புகாரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்
- 20:35 (IST) 30 Jul 2023பரவனாற்றை திசைதிருப்ப வேண்டிய அவசியம் உள்ளது - என்.எல்.சி. அறிக்கை
அதிக பருவமழை காலங்களில், ஆற்றின் நீர்மட்டம் கூடும்போது, சுற்றியுள்ள வயல்களிலும், கிராமங்களிலும் வெள்ளத்தை ஏற்படுத்துகிறது. அதனால் பரவனாற்றை திசைதிருப்ப வேண்டிய அவசியம் உள்ளதாக என்.எல்.சி. அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பரவனாற்றில் நிரந்தர கால்வாய் அமைக்கப்பட்டால் ஆண்டுக்கு 2 முதல் 3 பயிர் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என என்.எல்.சி. தெரிவித்துள்ளது.
- 20:34 (IST) 30 Jul 2023பரவனாற்றை திசைதிருப்ப வேண்டிய அவசியம் உள்ளது - என்.எல்.சி. அறிக்கை
அதிக பருவமழை காலங்களில், ஆற்றின் நீர்மட்டம் கூடும்போது, சுற்றியுள்ள வயல்களிலும், கிராமங்களிலும் வெள்ளத்தை ஏற்படுத்துகிறது. அதனால் பரவனாற்றை திசைதிருப்ப வேண்டிய அவசியம் உள்ளதாக என்.எல்.சி. அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பரவனாற்றில் நிரந்தர கால்வாய் அமைக்கப்பட்டால் ஆண்டுக்கு 2 முதல் 3 பயிர் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என என்.எல்.சி. தெரிவித்துள்ளது.
- 20:22 (IST) 30 Jul 2023கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் மகிதா அன்ன கிருஷ்டி கைது
செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் மகிதா அன்ன கிருஷ்டி கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவரை மிரட்டி ரூ.12 லட்சம் பணம் பறித்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த காவல் ஆய்வாளர் மகிதாவை மறைமலைநகர் போலீசார் கைது செய்தனர்
- 20:06 (IST) 30 Jul 2023மயக்கமடைந்த 9 வயது சிறுமியை காப்பாற்றிய எஸ்.ஐ-க்கு ஆளுநர் தமிழிசை பாராட்டு
புதுச்சேரி, திருநள்ளாறு கோவிலில் கூட்டத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த 9 வயது சிறுமியை காப்பாற்றிய எஸ்.ஐ-க்கு ஆளுநர் தமிழிசை பாராட்டு தெரிவித்துள்ளார். மூச்சுத்திணறல் ஏற்பட்ட சிறுமியை, எஸ்.ஐ. சுரேஷ் தனது இருசக்கர வாகனத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினார். தகவலறிந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உதவி ஆய்வாளர் சுரேஷுக்கு நேரில் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்
- 19:33 (IST) 30 Jul 2023பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு - 20 பேர் மரணம்; 150 பேர் காயம்
பாகிஸ்தானில் ஜே.யு.ஐ.எஃப். அமைப்பு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திடீர் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. கைபர் பக்துன்வாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்துள்ளர் மற்றும் சுமார் 150 பேர் காயம் அடைந்துள்ளனர். மனித வெடிகுண்டு மூலம் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது
- 19:09 (IST) 30 Jul 2023தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 57,918 பேர் மாயம்
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 57,918 பேர் மாயமாகி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
- 18:54 (IST) 30 Jul 2023இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் ப்ராடு ஓய்வு
ஓய்வை அறிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் ப்ராடுக்கு, "உண்மையான ஜாம்பவான்" என இந்திய வீரர் யுவராஜ் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்
- 18:32 (IST) 30 Jul 2023தஞ்சை நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மகா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
- 18:16 (IST) 30 Jul 20233.75 லட்சம் பெண்கள் மாயம்
நம் நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. கடந்த, 2019-21ம் ஆண்டுகளில் மட்டும் நாடு முழுதும் 18 வயதுக்கு மேற்பட்ட 10.61 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதில் 2021ல் மட்டும் 3.75 லட்சம் பெண்கள் மாயமாகி உள்ளனர்.
- 17:57 (IST) 30 Jul 2023ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு பெறுகிறார்.
நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு பின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
- 17:45 (IST) 30 Jul 2023'முடிந்தால் போராட்டம் நடத்தி பாருங்கள்': அமைச்சர் சவால்
லஞ்சம் புகார் அடிப்படையில் சார்-பதிவாளர்கள் மீது எடுக்கப்பட்ட, 'சஸ்பெண்ட்' நடவடிக்கைகளை திரும்ப பெற முடியாது என்று தமிழக பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மதுரையில் பேசிய அவர், "IG அலுவலகம் வந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என சஸ்பெண்ட் ஆன சிலர் அறிவித்ததாக தெரிகிறது. முடிந்தால் போராட்டம் நடத்தி பாருங்கள்; அதன் விளைவுகள் பின்னர் தெரியவரும்." என்றார்.
- 17:41 (IST) 30 Jul 2023நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறையில் தீ விபத்து: 6 பேர் காயம்!
புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி கிராமத்திற்கு அருகே செயல்பட்டு வந்த தனியார் வெடி தயாரிக்கும் பட்டறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் காயமுற்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
- 17:41 (IST) 30 Jul 2023நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறையில் தீ விபத்து: 6 பேர் காயம்!
புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி கிராமத்திற்கு அருகே செயல்பட்டு வந்த தனியார் வெடி தயாரிக்கும் பட்டறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் காயமுற்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
- 17:39 (IST) 30 Jul 2023சைவம் மட்டும் இங்கு அமர்ந்து சாப்பிடவும்; மும்பை ஐஐடியில் நோட்டீஸ்
சைவம் மட்டும் இங்கு அமர்ந்து சாப்பிடவும் என மும்பை ஐஐடியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
அதாவது மாணவர்களுக்கு சைவம், அசைவம் என தனித்தனியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- 17:01 (IST) 30 Jul 2023கேக் வெட்டி கொண்டாடிய இயக்குநர் ஷங்கர்!
தமிழ் திரை உலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் கடந்த நிலையில் இயக்குனர் சங்கர் கேக் வெட்டி கொண்டாடினார்.
- 16:44 (IST) 30 Jul 2023மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை; கனிமொழி
மணிப்பூரில் இன்னமும் அமைதி திரும்பவில்லை; அரசின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என எதிர்க்கட்சி குழுவில் உள்ள திமுக எம்பி கனிமொழி கூறினார்.
- 16:34 (IST) 30 Jul 2023மணிப்பூர் வன்முறை: பிரதமரின் மௌனம் அலட்சியமானது: எதிர்க்கட்சிகள் புகார்
மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம் அலட்சியமானது என எதிர்க்கட்சி குழுக்கள் அம்மாநில ஆளுனரிடம் குற்றஞ்சாட்டின.
- 16:17 (IST) 30 Jul 20232026 சட்டப்பேரவை தேர்தலே இலக்கு: சரத்குமார்
2024 தேர்தலை விட 2026 சட்டப்பேரவைத் தேர்தல்தான் சமத்துவ மக்கள் கட்சியின் இலக்கு என சமக தலைவர் சரத்குமார் கூறினார்.
- 16:15 (IST) 30 Jul 20232026 சட்டப்பேரவை தேர்தலே இலக்கு: சரத்குமார்
2024 தேர்தலை விட 2026 சட்டப்பேரவைத் தேர்தல்தான் சமத்துவ மக்கள் கட்சியின் இலக்கு என சமக தலைவர் சரத்குமார் கூறினார்.
- 15:52 (IST) 30 Jul 2023எதைச் சொல்லி அவர்களை தேற்றுவது என தெரியவில்லை; மணிப்பூர் பெண்களை சந்தித்த கனிமொழி பேட்டி
மணிப்பூரில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான பெண்களின் குடும்பங்களை சந்தித்தது குறித்து தி.மு.க எம்.பி. கனிமொழி, “எதைச் சொல்லி அவர்களை தேற்றுவது என எங்களுக்கு தெரியவில்லை.. மணிப்பூர் அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர்.” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
- 15:44 (IST) 30 Jul 2023மணிப்பூர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பொறுப்பில்லாமல் செயல்படுகிறது - திருமாவளவன்
மணிப்பூர் சென்றுவிட்டு டெல்லி திரும்பிய I.N.D.I.A கூட்டணி எம்.பி-க்கள் குழுவில் இடம்பெற்ற விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி: “தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என மணிப்பூர் மக்கள் தெரிவித்தனர்; தங்கள் வேதனைகளை கூறினர். இரு தரப்பு மக்களும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினர். முகாம்களில் தங்கி உள்ளவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தோம். மணிப்பூர் விவகாரத்தில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு பொறுப்பற்ற முறையில் செயல்படுவது அதிர்ச்சயளிக்கிறது” என்று கூறினார்.
- 15:43 (IST) 30 Jul 2023மணிப்பூர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பொறுப்பில்லாமல் செயல்படுகிறது - திருமாவளவன்
மணிப்பூர் சென்றுவிட்டு டெல்லி திரும்பிய I.N.D.I.A கூட்டணி எம்.பி-க்கள் குழுவில் இடம்பெற்ற விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி: “தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என மணிப்பூர் மக்கள் தெரிவித்தனர்; தங்கள் வேதனைகளை கூறினர். இரு தரப்பு மக்களும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினர். முகாம்களில் தங்கி உள்ளவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தோம். மணிப்பூர் விவகாரத்தில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு பொறுப்பற்ற முறையில் செயல்படுவது அதிர்ச்சயளிக்கிறது” என்று கூறினார்.
- 15:31 (IST) 30 Jul 2023நிதி மோசடி வழக்கு - சிவசங்கரனை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு
ஐ.எ.எல். & எஃப் எல் நிறுவன நிதி மோசடி வழக்கில், இருந்து தொழிலதிபர் சிவசங்கரனை விடுவிக்க மும்பை நீதிமன்ற மறுப்பு தெரிவித்துள்ளது.
மக்கள் பணத்தை அபகரிக்கும் நோக்கில் குற்ற சதிக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஐ.எ.எல். & எஃப் எல் நிறுவன நிதி மோசடி என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
- 15:28 (IST) 30 Jul 2023‘நான் என் வாழ்வில் 99% பொய்யே பேசுவதில்லை’ - கவிஞர் வைரமுத்து பேச்சு
ஃபைண்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு: ““என் வீட்டிற்கு எந்த புதியவர்கள் வந்தாலும் நான் அவர்களைப் பேச விட்டு வேடிக்கை பார்ப்பேன். காரணம் எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று அல்ல, எந்த விதையில் எந்த விருட்சம் இருக்கும் என்று. தமிழ் சினிமாவில் பார்க்க முடியாத இனம், தயாரிப்பாளர் இனம், சினிமாவில் வணங்கக் கூடிய ஒருவர் தயாரிப்பாளர்.காதல் பாடல் எழுத வேண்டும் என்று என்னிடம் யாராவது சொன்னால், அது என்னென்ன சூழ்நிலை உண்டு என்று சொன்ன பிறகு தான் அவர்களுக்கு இப்படியெல்லாம் இருக்கிறது என்றே தெரியும் என்றார். மேலும் யார் வேண்டுமானாலும் பாடட்டும், எழுதட்டும், சினிமாவில் எது வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் தமிழைத் தெரிந்துக் கொண்டு செய்யுங்கள் என்று கூறினார். இந்த படத்தின் தலைப்பைத் தமிழில் வைக்கக்கூடாதா என்று கேட்டேன். அதற்கு நியாயமான பதில் தெரிவித்தார்கள்.எனக்கு ஒரு ஆசை நம் தமிழ்ச் சமூகம் பொய் பேசாத சமூகமாக இருக்க வேண்டும். நான் என் வாழ்வில் 99 சதவீதம் பொய்யே பேசுவதில்லை. மீதி 1 சதவீதம் அந்த உண்மையால் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று மறைப்பதால் பொய் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இங்கு வியாபாரம் கூட தமிழுக்குத் தடையாக உள்ளது” என்று பேசினார்.
- 14:39 (IST) 30 Jul 2023வண்டியூர் சுங்கச்சாவடி வசூல் மையத்தின் மீது லாரி மோதி விபத்து; சுங்கச்சாவடி ஊழியர் பலி
மதுரை, வண்டியூர் சுங்கச்சாவடியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கட்டண வசூல் மையம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுங்கச்சாவடி ஊழியரான சதீஷ்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- 14:03 (IST) 30 Jul 2023திராவிட மாடலின் தோழி விடுதிகளும் வரலாற்று பக்கங்களில் நிலைத்து நிற்கும்
மகளிர் முன்னேற்றத்திற்கான தமிழக அரசின் திட்டங்களுக்கு தோழி விடுதிகள் திட்டம் மேலும் வலுசேர்க்கும் . திராவிட மாடலின் தோழி விடுதிகளும் வரலாற்று பக்கங்களில் நிலைத்து நிற்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 13:56 (IST) 30 Jul 2023ச.ம.க சார்பில் நடைபெறும் சமத்துவ விருந்து விழா
சேலத்தில் ச.ம.க சார்பில் நடைபெறும் சமத்துவ விருந்து விழாச.ம.க நிறுவனர் சரத்குமார் கலந்துகொண்டு உணவு பரிமாறி வருகிறார் சமத்துவ விருந்து விழாவில் 3,000 பேருக்கு அறுசுவை உணவு மட்டன் பிரியாணி உள்ளிட்ட பல்வேறு உணவுகளுடன் தொண்டர்கள், மக்களுக்கு விருந்து சேலம் இரும்பு ஆலைப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் விருந்தில் பங்கேற்பு
- 13:14 (IST) 30 Jul 2023குற்றாலத்தில் களைகட்டத் தொடங்கியுள்ள சீசன்
ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை விடுமுறை நாள் என்பதால் காலை முதலே குற்றாலத்தில் குவியத் தொடங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குற்றால அருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பெண்களுக்கு தனி வரிசை ஏற்பாடு
- 12:52 (IST) 30 Jul 2023மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் தஞ்சையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல் 1021 மருத்துவர்கள், 983 மருந்தாளர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது
- 12:51 (IST) 30 Jul 2023ராமநாதபுரத்தில் உள்ள 4 தொகுதிகளில் 2வது தொகுதியில் அண்ணாமலை பாத யாத்திரை
"என் மண் என் மக்கள்" என்ற தலைப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை முதுகுளத்தூர் தொகுதியில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார் அண்ணாமலை ராமநாதபுரத்தில் உள்ள 4 தொகுதிகளில் 2வது தொகுதியில் அண்ணாமலை பாத யாத்திரை
- 12:00 (IST) 30 Jul 2023நெய்வேலியில் என்எல்சி நிர்வாகம் பயிர்களை அழித்தது தவறு
நெய்வேலியில் என்எல்சி நிர்வாகம் பயிர்களை அழித்தது தவறு" "கையகப்படுத்தப்பட்ட நிலம் என்றால் அதில் விவசாயிகளை பயிர் செய்ய அனுமதித்தது ஏன்?" "நிர்வாக ரீதியாக அரசுக்கும், என்எல்சி நிர்வாகத்துக்கும், விவசாயிகளுக்கும் இடைவெளி உள்ளது" - தமிழிசை
- 11:59 (IST) 30 Jul 2023பட்டாசு குடோன் விபத்தில் காயமடைந்வர்களுக்கு நிவாரணம்
கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் சக்கரபாணி காயமடைந்த 9 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரமும், தீவிர சிகிச்சையில் உள்ள 2 பேருக்கு தலா ரூ. 1 லட்சமும் நிவாரணமாக வழங்கினார்
- 11:58 (IST) 30 Jul 2023என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு
நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு அதிமுக புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன் தலைமையில் நாளை நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர் தடையை மீறி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்
- 10:50 (IST) 30 Jul 2023அமைதியால் மட்டுமே ஒரு மாநிலம் செழிப்படையும்
அமைதியால் மட்டுமே ஒரு மாநிலம் செழிப்படையும், வன்முறையிலிருந்து மக்களை மீட்டெடுக்க, நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் -மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
- 10:50 (IST) 30 Jul 2023மணிப்பூர் ஆளுநர் உடன் INDIA கூட்டணி எம்.பி.க்கள் குழு சந்திப்பு
மணிப்பூர் ஆளுநர் உடன் INDIA கூட்டணி எம்.பி.க்கள் குழு சந்திப்பு
மணிப்பூரில் அமைதி திரும்புவது அவசியம்; இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் ஆளுநரிடம் வலியுறுத்தல்
- 10:46 (IST) 30 Jul 2023காரைக்கால் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திராபிரியங்காவின் செல்போன் திருட்டு
காரைக்கால் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திராபிரியங்காவின் செல்போன் திருட்டு . அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சரின் ஆதரவாளரை சந்திக்க சென்ற போது மர்ம நபரால் செல்போன் திருட்டு டிஆர் பட்டினத்தில் இன்று காலை போன் ஆன் செய்தபோது, போலீசார் மர்ம நபரிடமிருந்து போனை பறிமுதல் செய்தனர் .
- 10:20 (IST) 30 Jul 2023சென்னையில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்புப் பணி காரணமாக, சென்னையின் முக்கிய பகுதிகளில் திங்கள்கிழமை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
முழு செய்தியும் படிக்க:
- 10:19 (IST) 30 Jul 2023பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம் குறித்து இதுவரை சுமார் 80 லட்சம் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக -22வது சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
- 09:23 (IST) 30 Jul 2023மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று காலை, 13,939 கன அடியில் இருந்து 13,104 கன அடியாக சற்று குறைந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 29.06 டி.எம்.சி. ஆக உள்ளது
- 09:20 (IST) 30 Jul 20234வது நாளாக பணிகளை தொடங்கிய என்எல்சி
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில், என்எல்சி 4 வது நாளாக பணிகளை தொடங்கியது.
விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாயிகளும் பாமக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பலத்த பாதுகாப்புடன் கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- 09:13 (IST) 30 Jul 2023விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது PSLV-C56 ராக்கெட்
7 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
முழு செய்தியும் படிக்க:
- 08:23 (IST) 30 Jul 2023விண்ணில் பாய்ந்தது PSLV-C56 ராக்கெட்
பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இன்று காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட 'டிஎஸ்-சாட்' என்ற எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், அரியலூர் விஞ்ஞானியின் 3 நானோ செயற்கைக்கோள் உள்பட 7 செயற்கைக் கோள்களும் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
இவை அனைத்தும் பல்வேறு விதமான தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.
- 08:07 (IST) 30 Jul 2023கார்ல் மார்க்ஸ் குடும்பமாக இருப்பதை விரும்பவில்லை
ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்தால்தான் நீர் உருவாகும். உலகத்தில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக பார்ப்பதால் தான் இடையூறு ஏற்படுகிறது. கார்ல் மார்க்ஸும் தனிமனித வளர்ச்சியில் தான் நம்பிக்கை கொண்டிருந்தார். குடும்பமாக இருப்பதிலும் சமூகமாக இருப்பதிலும் அவர் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
ஏனென்றால் தனிமனித வளர்ச்சியை குடும்பம் தடுக்கும் என்று அவர் நம்பினார். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும், ஆனால் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல- பொருளாதார வல்லுநரும், பாஜகவின் முன்னோடி தலைவர்களில் ஒருவருமான தீனதாயாள் உபாத்யா குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
- 08:07 (IST) 30 Jul 2023ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி ரூ. 250க்கு விற்பனை
ஆந்திராவில், நேற்று 110 ரூபாய் வரை ஏலம் எடுக்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி, இன்று திடீரென விலை உயர்ந்து 210 ரூபாய்க்கு ஏலம் போனது. இதனால் அதிகபட்சமாக 28 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி, 5, 600 ரூபாய்க்கு விற்பனையானது.
விலை உயர்ந்ததன் காரணமாக சில்லறை விற்பனையில், ஒரு கிலோ தக்காளி 250 ரூபாய் வரை விற்கப்படும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர். ஆந்திரா, தெலங்கானாவில் பல்வேறு பகுதிகளில் கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் இந்த விலை ஏற்றம் வந்துள்ளது.
- 08:06 (IST) 30 Jul 2023வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 40.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் - 55(55), ஷுப்மன் கில் - 34(49) ரன்கள் அடித்தனர்.
அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவர்களில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எட்டியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் - 63*(80), கீசி கார்டி - 48*(65) ரன்கள் எடுத்தனர்.
3 நாள் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், இரண்டாவது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளது.
- 08:06 (IST) 30 Jul 2023உச்சம் தொட்ட தக்காளி விலை
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.160க்கு விற்பனையாகிறது.
நேற்று மொத்த விற்பனையில் ரூ.150க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.10 அதிகரித்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது.
- 08:05 (IST) 30 Jul 2023விண்ணில் பாய்ந்தது PSLV-C56 ராக்கெட்
பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இன்று காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட 'டிஎஸ்-சாட்' என்ற எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், அரியலூர் விஞ்ஞானியின் 3 நானோ செயற்கைக்கோள் உள்பட 7 செயற்கைக் கோள்களும் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
இவை அனைத்தும் பல்வேறு விதமான தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.