Advertisment

Tamil News Updates: வெற்றி செல்லாது- சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.ரவீந்திரநாத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

Tamil Nadu News, Tamil News, Opposition MPs visits Manipur, India West Indies – 29 July 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
OP Rabindranath has been invited to the National Democratic Alliance meeting

Tamil news live

2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஓ.பி.ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்!

Advertisment

ரவீந்திரநாத் வேட்புமனுவில் உண்மை விவரங்கள் மற்றும் வருமானத்தை மறைத்துள்ளார்; எனவே அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது சட்டவிரோதம், எனவே அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது!

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil news updates

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:44 (IST) 29 Jul 2023
    GR Film City-ஐ நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    சென்னை தரமணியில், படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்டு வரும் MGR Film City-ஐ நேரில் சென்று ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! அவை தற்போது பயன்படுத்தப்படும் விதம் குறித்தும், அவற்றை தரம் உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!


  • 22:41 (IST) 29 Jul 2023
    பிரியாணியை விட தக்காளி சாதத்தின் விலை உயர்வு : அன்புமணி ராமதாஸ்

    "இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த அரசுகள், வேளாண் கட்டமைப்புகளை உருவாக்கி வந்திருக்க வேண்டும்" ஆனால் பிரியாணியை விட தக்காளி சாதத்தின் விலை உயர்ந்துள்ளது - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்


  • 21:09 (IST) 29 Jul 2023
    உலகளவில் 75% புலிகள் தற்போது இந்தியாவில் தான் உள்ளதாக தகவல்

    உலகளவில் 75% புலிகள் தற்போது இந்தியாவில் தான் உள்ளது இந்தியாவில் அதிகபட்சமாக 3925 புலிகள் இருக்கலாம் என கணிப்பு


  • 20:40 (IST) 29 Jul 2023
    லாரி டியூப்களில் கள்ளச்சாராயம் கடத்திய கும்பல்

    சேலம்: வாழப்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் வைத்து, லாரி டியூப்களில் ₹50,000 மதிப்பிலான கள்ளச்சாராயம் கடத்திய கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம்; வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்னர்!


  • 19:53 (IST) 29 Jul 2023
    என்எல்சி வன்முறை - காவல்துறை விளக்கம்

    என்.எல்.சி. முற்றுகை போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பாக 93 வழக்குகள் பதிவு. வன்முறையில் ஈடுபட்டதாக 26 பேரை கைது செய்துள்ளதாக கடலூர் காவல்துறை விளக்கம். கடந்த 26 மற்றும் 28ம் தேதிகளில் பதிவு செய்யப்பட்ட கல்வீச்சு வழக்குகளில் 11 பேர் கைது. மேலும் சட்டத்தை மீறிய 2 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு


  • 18:58 (IST) 29 Jul 2023
    பட்டாசு குடோன் வெடிவிபத்து : மத்திய அரசு நிவாரணம்

    கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடிவிபத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₨2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ₨50,000 நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி


  • 18:18 (IST) 29 Jul 2023
    தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை உயர்வு

    தமிழ்நாட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன - 'Project Tiger' திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு தரவுகளை சுட்டிக்காட்டி வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு பெருமிதம்!


  • 17:55 (IST) 29 Jul 2023
    கடலூர் அரசு பேருந்து மீதான கல்வீச்சு சம்பவம்; மேலும் 4 பேர் கைது

    கடலூர் அரசு பேருந்து மீதான கல்வீச்சு சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்.எல்.சி.க்கு எதிரான போராட்டத்தில் பேருந்து மீது கல்வீச்சு நடத்தப்பட்டத்தில் இதுவரை 6 பேரை காவல்துறை கைது செய்தது


  • 17:53 (IST) 29 Jul 2023
    கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்து - அமித்ஷா இரங்கல்

    கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்


  • 17:19 (IST) 29 Jul 2023
    மகப்பேறு விடுப்பு என்பது அடிப்படை மனித உரிமை - ஒடிசா ஐகோர்ட்

    ஒடிசாவின் கியோஞ்சார் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை 2013ம் ஆண்டில் மகப்பேறு விடுப்பு எடுத்துள்ளார். ஆனால் அவரின் விடுப்பை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். மகப்பேறு விடுப்பு, தொகுதி மானியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு பொருந்தாது எனக் காரணம் கூறியுள்ளனர். இந்த மனு மீதான விசாரணையில் 4 வாரங்களுக்குள் ஆசிரியரின் விடுப்பை அனுமதிக்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    இந்த வழக்கில் மகப்பேறு விடுப்பு என்பது அடிப்படை மனித உரிமை. அதை தர மறுப்பது பெண்ணின் கண்ணியத்தின் மீதான தாக்குதல் என ஒடிசா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது


  • 16:46 (IST) 29 Jul 2023
    திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம்

    விடுமுறை நாளில் திருத்தணி முருகன் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. மலைக்கோயில் பகுதியில் கடும் வாகன நெரிசலால் பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இதனை சீர் செய்யும் பணியில் போதிய காவலர்கள் இல்லை எனவும் பக்தர்கள் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்


  • 16:45 (IST) 29 Jul 2023
    670 தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலி; பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 670 தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது


  • 16:26 (IST) 29 Jul 2023
    திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம்

    விடுமுறை நாளில் திருத்தணி முருகன் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. மலைக்கோயில் பகுதியில் கடும் வாகன நெரிசலால் பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இதனை சீர் செய்யும் பணியில் போதிய காவலர்கள் இல்லை எனவும் பக்தர்கள் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்


  • 16:03 (IST) 29 Jul 2023
    மண்ணுக்கும் மக்களுக்கும் போராடத் தயாராக உள்ளோம் - அன்புமணி

    மண்ணுக்கும் மக்களுக்கும் போராடத் தயாராக உள்ளோம். NLC, நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்


  • 15:46 (IST) 29 Jul 2023
    தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் - வானிலை மையம்

    தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும். இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


  • 15:29 (IST) 29 Jul 2023
    பாமகவினர் மீது வழக்குப்பதிவு - அன்புமணி கண்டனம்!

    'காவல்துறையை ஏவி விட்டு அறவழி போராட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தினார்கள். என்.எல்.சி-க்கு எதிராக போராடிய பாமகவினர் மீது வழக்குப்பதிவு செய்தது கண்டனத்திற்குரியது. விவசாயிகள் விரோத போக்கை அரசு கைவிட வேண்டும். அறுவடைக்கு தயாரான பயிர்களை அழிப்பது நியாயமா?' என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


  • 15:13 (IST) 29 Jul 2023
    கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

    கிருஷ்ணகிரி, பழையபேட்டை பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவா (22) என்பவர் உயிரிழந்தார். வெடிவிபத்தில் படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


  • 14:29 (IST) 29 Jul 2023
    கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து: நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்

    கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்தார்.

    வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 50,000 நிதியுதவி வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


  • 14:23 (IST) 29 Jul 2023
    டெல்லி புறப்பட்டார் மத்திய அமைச்சர் அமித்ஷா!

    ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் புறப்பட்டார் மத்திய அமைச்சர் அமித்ஷா. 2 நாள் தமிழக பயணத்தை முடித்து கொண்டு டெல்லி செல்வதற்காக மதுரை விமான நிலையம் செல்கிறார்.


  • 13:51 (IST) 29 Jul 2023
    சாதனையை செய்யும் உதயநிதி: ஸ்டாலின் புகழாரம்!

    தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'இளைஞரணி நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம். இளைஞரணி செயலாளராக உதயநிதி பல்வேறு சாதனையை செய்து வருகிறார். இளைஞரணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து திமுகவை உதயநிதி பலப்படுத்தி உள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் சுற்றி சுழன்று பணியாற்றினார் உதயநிதி.

    கட்சி, ஆட்சி இரண்டிலும் சிறப்பாக பணியாற்றி ஆட்சிக்கு நல்ல பெயரை பெற்று தருகிறார் உதயநிதி. இளைஞரணி செயலாளர் உதயநிதியை எடுத்துக்காட்டாக வைத்து செயல்பட வேண்டும். தி.மு.க இளைஞரணி தீர்மானங்களை பார்க்கும் போது மிகுந்த நிம்மதி அடைகிறேன்.

    உதயநிதி மேற்கொண்ட செங்கல் பிரசாரத்தை எதிர்கட்சிகளே மறக்கவில்லை. சேப்பாக்கம் தொகுதியை விட மற்ற தொகுதிகளில் அதிக பிரசாரம் மேற்கொண்டார் உதயநிதி. 234 தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தை நடத்தி காட்டினார் உதயநிதி.' என்று புகழாரம் சூட்டினார்.


  • 13:49 (IST) 29 Jul 2023
    அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல பாவ யாத்திரை: ஸ்டாலின் பேச்சு

    திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் திராவிட இயக்க கருத்தியலை தொடர்ந்து எடுத்து செல்லும் வாரிசுகளை உருவாக்க வேண்டும். நமது கருத்துகளை சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நமது சாதனைகளை சொல்லி நம் மீதான அவதூறுகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்.

    தமிழகத்திற்கு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வரவில்லை மத்திய அமைச்சர். அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல பாவ யாத்திரை." என்று கூறினார்.

    மேலும், பா.ஜ.க-வில் யாருடைய வாரிசும் கட்சியில் இல்லையா?. பதவியில் உள்ள பாஜகவின் வாரிசுகளை பட்டியலிட்டால் பதவி விலகி விடுவார்களா?என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


  • 13:48 (IST) 29 Jul 2023
    அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல பாவ யாத்திரை: ஸ்டாலின் பேச்சு

    திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் திராவிட இயக்க கருத்தியலை தொடர்ந்து எடுத்து செல்லும் வாரிசுகளை உருவாக்க வேண்டும். நமது கருத்துகளை சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நமது சாதனைகளை சொல்லி நம் மீதான அவதூறுகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்.

    தமிழகத்திற்கு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வரவில்லை மத்திய அமைச்சர். அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல பாவ யாத்திரை." என்று கூறினார்.

    மேலும், பா.ஜ.க-வில் யாருடைய வாரிசும் கட்சியில் இல்லையா?. பதவியில் உள்ள பாஜகவின் வாரிசுகளை பட்டியலிட்டால் பதவி விலகி விடுவார்களா?என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


  • 13:21 (IST) 29 Jul 2023
    அப்துல் கலாமின் குடும்பத்தினருடன் அமைச்சர் அமித்ஷா சந்திப்பு!

    ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் இல்லத்திற்கு நேரில் சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா


  • 13:02 (IST) 29 Jul 2023
    திமுக இளைஞரணி மாநாடு விரைவில் நடத்தப்படும்

    10 லட்சம் பேர் பங்கேற்கும் திமுக இளைஞரணி மாநாடு விரைவில் நடத்தப்படும்

    திமுக கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க 100 பாசறை கூட்டம்

    நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முன்னெடுக்கவும் நிர்வாகிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

    நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக பெறும் எனவும் உதயநிதி நம்பிக்கை

    திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


  • 12:31 (IST) 29 Jul 2023
    வெடி விபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு

    கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து

    பட்டாசு விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக உயர்வு


  • 12:28 (IST) 29 Jul 2023
    ஸ்டாலின் உடன் இலங்கை அமைச்சர் சந்திப்பு

    சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் சந்திப்பு


  • 12:26 (IST) 29 Jul 2023
    அப்துல்கலாம் குறித்த நூலை வெளியிட்ட அமித்ஷா

    குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் குறித்த 'Dr. APJ Abdulkalam Memories never Die' என்ற நூல் வெளியீடு

    ராமேஸ்வரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று நூலை வெளியிட்டார்

    கல்விக்காக தன்னை அர்ப்பணித்த மாமனிதர் அப்துல் கலாம் மக்களின் குடியரசு தலைவராக இருந்தவர் கலாம் என்றும் அமித்ஷா புகழாரம்


  • 12:05 (IST) 29 Jul 2023
    மணிப்பூர் வீடியோ விவகாரம்: சிபிஐ வழக்குப்பதிவு

    மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு

    பழங்குடியின பெண்கள் வன்கொடுமை விவகாரத்தில் சிபிஐ விசாரணை


  • 11:50 (IST) 29 Jul 2023
    பட்டாசு குடோனில் வெடி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

    கிருஷ்ணகிரி, பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

    வெடி விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆய்வு


  • 11:49 (IST) 29 Jul 2023
    பொது பாடத்திட்டம்: இபிஎஸ் கண்டனம்

    உயர்கல்வித்துறையில் அவசர கதியில் பொது பாடத்திட்டமா?

    பொது பாட திட்டத்தால் தமிழகத்தில் உயர்கல்வியின் தரம் கேள்விக்குறியாகும்.


  • 11:33 (IST) 29 Jul 2023
    ராமநாதசுவாமி கோயில் சனாதன தர்மத்தின் தொன்மை- அமித்ஷா

    ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயில் சனாதன தர்மத்தின் தொன்மை மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும்

    ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ததை பாக்கியமாக கருதுகிறேன்


  • 11:30 (IST) 29 Jul 2023
    அறுவடைக்கு தயாரான பயிரை அழித்து நாசம் செய்வது சரியில்லை

    என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களின் குழந்தைகளுக்கு பணி வழங்க வேண்டும்

    அறுவடைக்கு தயாரான பயிரை அழித்து நாசம் செய்வது சரியில்லை

    என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களின் குழந்தைகளுக்கு பணி வழங்க வேண்டும்.


  • 11:00 (IST) 29 Jul 2023
    கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து

    கிருஷ்ணகிரி: பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் பலியாகினர், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 3-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆனது.

    தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.


  • 10:59 (IST) 29 Jul 2023
    கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து

    கிருஷ்ணகிரி: பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் பலியாகினர், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 3-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆனது.

    தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.


  • 10:14 (IST) 29 Jul 2023
    3000 பேர் மீது வழக்குப்பதிவு

    நெய்வேலியில் என்.எல்.சிக்கு எதிரான போராட்டம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

    மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்து விடுவிப்பு


  • 10:14 (IST) 29 Jul 2023
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. தங்கம் ஒரு கிராம் ரூ.5,565க்கும், ஒரு சவரன் ரூ. 44,520க்கும் விற்பனையாகிறது.


  • 09:57 (IST) 29 Jul 2023
    ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

    ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு இன்று காலையில் 20,000 கனஅடியாக மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் ஆற்றில் 3-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


  • 09:56 (IST) 29 Jul 2023
    மணிப்பூர் புறப்பட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் குழு

    இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் குழு, டெல்லியில் இருந்து மணிப்பூர் புறப்பட்டது, அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறது.

    இந்தியா கூட்டணி என்.பி.க்கள் குழுவுடன் புறப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து திமுக எம்.பி. கனிமொழி ட்வீட்


  • 09:51 (IST) 29 Jul 2023
    பத்ரி சேஷாத்ரி கைது

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் அவதூறாக பேசியதாக வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரில், பத்ரி சேஷாத்ரி கைது.

    அவர் மீது 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும், தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும், அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம் என பத்ரி சேஷாத்ரி பேச்சு.


  • 09:14 (IST) 29 Jul 2023
    நடைபயிற்சியின் போது கே.எஸ்.அழகிரி தவறி விழுந்து காயம்

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, நடைபயிற்சியின் போது தவறி விழுந்து காயமடைந்ததாக, அக்கட்சி தெரிவித்துள்ளது.

    கீரப்பாளையத்தில் உள்ள வீட்டில் நடைபயிற்சி மேற்கொண்டபோது கே.எஸ்.அழகிரி தவறி விழுந்ததாகவும், இதில் அவரது நெற்றி, கால் முட்டி ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் ஓய்வெடுத்து வருகிறார்.


  • 09:09 (IST) 29 Jul 2023
    பா.ம.க.வை சேர்ந்த 28 பேருக்கு நீதிமன்ற காவல்

    கடலூர், நெய்வேலி என்எல்சி முற்றுகை போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக பாமகவை சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 28 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.


  • 08:24 (IST) 29 Jul 2023
    வன்முறையில் ஈடுபட்டதாக 28 பேர் கைது

    பாமக போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக 28 பேரை நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார் கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தல், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தல் என்கின்ற பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.


  • 08:17 (IST) 29 Jul 2023
    முதல் கட்ட கலந்தாய்வு அட்டவணையில் மாற்றம்

    எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிவுகள் ஆகஸ்ட் 3ம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 6ம் தேதி வெளியாகும்.

    கல்லூரியில் சேர்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 11ம் தேதி மாலை 5 மணி வரை வழங்கப்பட்டுள்ளது


  • 08:10 (IST) 29 Jul 2023
    தக்காளி விலை கிலோ ரூ.150க்கு விற்பனை

    சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ. 150க்கு விற்பனை. நேற்று மொத்த விற்பனையில் ரூ. 140க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 10 அதிகரித்துள்ளது.


  • 08:10 (IST) 29 Jul 2023
    பணிகளை மீண்டும் துவக்கிய என்.எல்.சி.

    என்.எல்.சி. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகளை மீண்டும் துவக்கியது. கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் வாய்க்கால் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது.


  • 08:09 (IST) 29 Jul 2023
    ராமநாதசுவாமி கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம்

    ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது


  • 08:09 (IST) 29 Jul 2023
    கொரட்டூர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் நில அதிர்வு

    சென்னை கொரட்டூர் பகுதியில் காவல்நிலையம் அருகே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பீதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் குடும்பத்துடன் சாலையில் தஞ்சம் அடைந்தனர்.


  • 08:09 (IST) 29 Jul 2023
    2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

    இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.


  • 08:08 (IST) 29 Jul 2023
    மோடிதான் நிரந்தரமான பிரதமர்

    அண்ணாமலை ’என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை தொடக்க விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது.

    தொடக்கவிழாவில் பேசிய அண்ணாமலை, ’அனைத்து நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை பெருமிதத்துடன் பார்க்கின்றன. மோடி அளவிற்கு எந்த பிரதமரும் தமிழை உயர்த்திப் பிடித்ததில்லை. பிரதமர் மோடி இதயத்தால் தமிழர்.

    மோடிதான் நிரந்தரமான பிரதமர். ஆனால் இந்தியா கூட்டணியில் நாளுக்கு ஒருவர் பிரதமர் இருப்பர். தமிழ்நாட்டை மாற்றும் சக்தி இந்த யாத்திரைக்கு உள்ளது’ என்றார்.


Tamilnadu India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment