பெட்ரோல், டீசல் விலை
337-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது
தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இன்று பேச்சுவார்த்தை
தொழிற்சாலை ஊழியர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றும் சட்டத்தை திமுக அரசு நிறைவேற்றியது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் இன்று தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
விளையாட்டில் இன்று
ஐபிஎல் - ஹைதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஹைதராபாத் - டெல்லி அணிகள் மோதல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 23:28 (IST) 24 Apr 2023விருந்து மண்டபங்களில் மது வழக்குவது குறித்து அரசாணை வெளியீடு
வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் 'மதுபானம் வைத்திருப்பதற்கும். பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், புதுதில்லி போன்ற சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளவாறு. தமிழ்நாட்டிலும் வழங்கிட 18-3-2023 அன்று அரசிதழில் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில், திருமணக் கூடங்களும், இதர இடங்களும் இடம் பெற்றிருந்தன.
இதுகுறித்து பெறப்பட்ட கருத்துக்களை கவனமுடன் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, தற்போது அவற்றை நீக்கி வணிக வளாகங்களில் (Commercial Complexes) உள்ள மாநாட்டு மையங்கள் (Convention centres), கூட்ட அரங்குகள் (Conference Halls) ஆகியவற்றில் நடைபெறும் தேசிய நிகழ்வுகள், பன்னாட்டு நிகழ்வுகள், உச்சி மாநாடுகள் மற்றும் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்கள் / விளையாட்டு அரங்குகளில் அந்த நிகழ்வுகள் நடைபெறும்போது மட்டும் மதுபானம் வைத்திருத்தல் மற்றும் பரிமாறுவதற்கான தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்று திருத்தப்பட்ட அறிவிக்கையினை இன்று வெளியிட்டுள்ளது.
அதேபோன்று, இதுகுறித்து மேற்குறிப்பிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டிருந்த வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள். விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும் இந்த திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுகிறது.
- 21:07 (IST) 24 Apr 20233வது முறை சின்னம்மா தான் என்னை முதலமைச்சராக ஆக்கினார்கள்: ஒ.பி.எஸ்
.அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுக-வின் ஆணிவேர் தொண்டர்கள் தான்; 3வது முறை சின்னம்மா தான் என்னை முதலமைச்சராக ஆக்கினார்கள். திருச்சி மாநாட்டில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
- 21:05 (IST) 24 Apr 2023கொண்டாட்டங்களில் மதுபானம் பரிமாற சிறப்பு உரிமம் வழங்கும் முறை நீக்கம்
வணிக பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்களில் மதுபானம் பரிமாற சிறப்பு உரிமம் வழங்கும் முறை நீக்கம். சர்வதேச விளையாட்டு போட்டிகளின்போது மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கப்படும். மார்ச் 18ந் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையில் திருத்தம் செய்து தமிழக அரசு அறிவிப்பு
- 20:30 (IST) 24 Apr 2023திருச்சி மாநாட்டில் ஓ.பி.எஸ். பேச்சு
அம்மாவுக்கு கொடுக்கப்பட்ட நிரந்தர பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தை ரத்து செய்த நயவஞ்சகர்களை நாம் ஓட ஓட விரட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை - திருச்சி மாநாட்டில் ஓ.பி.எஸ். பேச்சு
- 20:30 (IST) 24 Apr 2023ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேச்சு
"2017ல் கொடநாடு கொள்ளை நடந்த நாள் இன்று, யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” -திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேச்சு
- 19:39 (IST) 24 Apr 202312 மணி நேர வேலை சட்ட மசோதா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
எந்த சூழ்நிலையிலும் தொழிலாளர்கள் நலனில் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டாது. சட்டமுன்வடிவை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் சிக்கல்கள் சிரமங்கள் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் விளக்கினர். தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திமுக அரசு எப்போதும் தொழிலாளர்களின் தோழனாகவும், தொண்டனாகவும், காவல் அரனாகவும் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 18:51 (IST) 24 Apr 2023பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு
கேரள மாநிலம் கொச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடி *கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி, சட்டையுடன் பிரதமர் மோடி *கொச்சி கடற்படை தளத்தில் இருந்து நடைபயணமாக செல்லும் பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு
- 18:47 (IST) 24 Apr 2023ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முப்பெரும் விழா மாநாடு
திருச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முப்பெரும் விழா மாநாடு. மாநாட்டுக்கு வருகை தந்துள்ள ஓபிஎஸ்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
- 18:46 (IST) 24 Apr 2023முதல்வர் ஸ்டாலின் பேச்சு
"மாபெரும் தமிழ் கனவு 100-வது தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை" "அண்ணா பேசியதும், எழுதியதும் தமிழ் மக்களுக்கான அறிவு பெட்டகம்" அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
- 18:00 (IST) 24 Apr 202312 மணி நேர வேலை மசோதா - அமைச்சர் விளக்கம்
12 மணி நேர வேலை மசோதாவை தமிழ்நாட்டில் மட்டும் புதிதாக கொண்டுவரவில்லை. மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களிலும் 12 மணி நேர வேலை தொடர்பான சட்டங்கள் வந்துள்ளன என்று அமைச்சர் எ.வ. வேலு விளக்கம் தெரிவித்துள்ளார்.
- 17:58 (IST) 24 Apr 2023தொழிற்சாலைகள் சட்ட முன்வடிவை நாங்கள் ஏற்க மாட்டோம் - சி.ஐ.டி.யூ சௌந்தரராஜன் பேட்டி
சி.ஐ.டி.யூ பொதுச்செயலாளர் சௌந்தரராஜன் பேட்டி: “தொழிற்சாலைகள் சட்ட முன்வடிவை நாங்கள் ஏற்க மாட்டோம்; மசோதாவை அரசு திரும்ப பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
- 17:56 (IST) 24 Apr 202312 மணி நேர வேலை மசோதாவுக்கு தி.மு.க-வின் தொழிற்சங்கம் தொ.மு.ச. எதிர்ப்பு
தமிழ்நாடு அரசின் 12 மணி நேர வேலை மசோதாவுக்கு திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.ச. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க-வின் தொழிற்சங்கமான தொ.மு.ச பொதுச் செயலாளர் சண்முகம் கருத்து பதிவு செய்துள்ளார்.
- 17:53 (IST) 24 Apr 2023சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவிரி
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவிரி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சூடானில் உள்ள 3000 இந்தியர்களையும் மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆபரேஷன் காவிரி திட்டத்தின் கீழ் சுமார் 500 இந்தியர்கள் சூடான் துறைமுகத்தை வந்தடைந்தனர்.
- 17:51 (IST) 24 Apr 2023ஐடி ரெய்டு: எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை - ஜி ஸ்கொயர் விளக்கம்
வருமானவரி சோதனை குறித்து ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “எங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளது.
- 16:55 (IST) 24 Apr 2023அ.தி.மு.க வழக்கு ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அ.தி.மு.க பொதுகுழு தீர்மானம், பொதுச்செயலாளர் தொடர்பான ஒ.பி.எஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் 3வது நாளாக விசாரணை நடைபெற்றது. ஓ.பி.எஸ் தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில் வழக்கு விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
- 16:23 (IST) 24 Apr 2023பல் பிடுங்கப்பட்ட விவகாரம்: சி.பி.சி.ஐ.டி போலீசாரின் முதல் தகவல் அறிக்கை வெளியீடு
நெல்லை, அம்பையில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரின் 42 பக்க ஆவணங்களை பெற்று சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. கொடுங்காயம் ஏற்படுத்துதல், ஆயுதத்தால் தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் ஏஎஸ்பி பல்வீர் சிங் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 15:57 (IST) 24 Apr 2023கர்நாடக தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் வாபஸ் - இ.பி.எஸ் அறிவிப்பு
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் புலிகேசி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அன்பரசன் வேட்புமனு வாபஸ் பெற்றார். கர்நாடக பா.ஜ.க-வின் கோரிக்கையை ஏற்று வாபஸ் பெறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஓ.பி.எஸ் தரப்பை தொடர்ந்து, அ.தி.மு.க பொதுச்செயலாளர் இ.பி.எஸ் தரப்பும் கர்நாடக தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.
- 15:28 (IST) 24 Apr 2023மம்தா பானர்ஜி உடன் நிதீஷ் குமார், தேஜஸ்வி யாதவ்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பீகார் முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சந்தித்து பேசினர். வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து பேச்சுவார்த்தை நடந்தது
- 15:24 (IST) 24 Apr 2023ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு மே 16-ம் தேதி வரை இடைக்கால தடை
ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு மே 16ம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை நேரில் ஆஜராக ராகுல் காந்திக்கு பாட்னா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
- 15:04 (IST) 24 Apr 2023சென்னை மூதாட்டி கொலை வழக்கில் திருப்பம்
சென்னை, ஆதம்பாக்கத்தில் சிவகாம சுந்தரி என்கிற மூதாட்டி கொலை வழக்கில், மூதாட்டிகளை குறிவைத்து கொலை செய்ததாக, வழக்கில் கைதான சக்திவேல் வாக்குமூலம் அளித்துள்ளார். பல லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்துள்ளது. கே.கே.நகரில் 2 மூதாட்டிகள், ஆதம்பாக்கத்தில் சிவகாம சுந்தரி என 3 பேரை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்
- 14:50 (IST) 24 Apr 2023இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 9,833 பேர் குணமடைந்துள்ளனர்
- 14:39 (IST) 24 Apr 2023மதுபான சட்ட திருத்தங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் - ஜெயக்குமார்
அரசு மேற்கொண்டுள்ள மதுபான சட்ட திருத்தங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
- 14:29 (IST) 24 Apr 202312 மணி நேர வேலை மசோதா; ஸ்டாலினை சந்திக்க தி.மு.க கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு
12 மணி நேர பணி மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் இரவு 7 மணிக்கு சந்திக்க உள்ளனர்
- 14:04 (IST) 24 Apr 2023சூடானில் சிக்கியிருந்த 388 நபர்களை மீட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டு தூதரகம் அறிவிப்பு
சூடானில் சிக்கியிருந்த இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளை சார்ந்த 388 நபர்களை ராணுவ விமானம் மூலம் மீட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது
- 13:51 (IST) 24 Apr 2023திருமண மண்டபம், விளையாட்டுத் திடல்களில் மதுபானம் அருந்தலாம் என அனுமதி; இ.பி.எஸ் கண்டனம்
கல்யாண மண்டபம், விளையாட்டுத் திடல்களில் மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் அறிவிப்பு, இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்கி எதிர்காலத்தை சீர்குலைய வைக்கும், பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் என எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்
- 13:21 (IST) 24 Apr 2023தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம்
ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- 13:17 (IST) 24 Apr 2023சென்னையில் ஓரிரு இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
சென்னையில் ஓரிரு இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
- 12:40 (IST) 24 Apr 2023விளை நிலங்களில் வாய்க்கால் வெட்டிய என்.எல்.சி., நிர்வாகம்: கிராம மக்கள் எதிர்ப்பு
கடலூர் அருகே வளையமாதேவி கிராமத்தில் விளை நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை என்.எல்.சி., நிர்வாகம் தொடங்கியது.
எந்த ஒரு முன்னறிவிப்பின்றி பணியை தொடங்கியதால் கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
- 12:15 (IST) 24 Apr 2023"உச்சபட்ச தேவையை சமாளிக்க மின்வாரியம் தயார்"- அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாட்டில் கூடுதலாக மின் தேவை ஏற்பட்டாலும் சமாளிக்க மின்வாரியம் தயார் நிலையில் உள்ளது.
மின் பயன்பாட்டின் உச்சபட்ச தேவை இருந்தாலும் மின்வாரியம் சமாளிக்க தயாராக இருக்கிறது என்று கோவை விமான நிலையத்தின் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.
- 12:04 (IST) 24 Apr 2023"12 மணி நேர வேலை, மனித சக்தி அதிகரிக்கும்"- தமிழிசை ஆதரவு
அதிக நேரம் வேலை செய்து விட்டு, அதிக நேரம் ஓய்வு எடுத்தால் மனிதனின் சக்தி அதிகரிக்கும் என உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சட்டத்தால் பணியின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறதே தவிர பணியின் நேரம் அதிகரிக்கவில்லை", என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
- 11:36 (IST) 24 Apr 2023திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதியில்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி
ஐ.பி.எல்., போன்ற சர்வதேச நிகழ்வுகளில் மட்டுமே மதுபானங்களுக்கு அனுமதி எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
திருமண மண்டபங்களில் லைசென்ஸ் பெற்று மது அருந்தலாம் என உள்துறை செயலாளர் அறிவித்ததற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.
- 11:22 (IST) 24 Apr 2023பூட்ஸ் காலால் உதைத்த எஸ்.ஐ., பணி இடமாற்றம்
நாகையில் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை பூட்ஸ் காலால் உதைத்த காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்.
எஸ்.ஐ. பழனிவேலை ஆயுதப்படைக்கு பணி இடமாற்றம் செய்ய நாகை எஸ்.பி. ஜவஹர் உத்தரவு
- 11:00 (IST) 24 Apr 2023திருச்சியில் இன்று மாலை ஓபிஎஸ் மாநாடு
திருச்சியில் இன்று மாலை ஓபிஎஸ் மாநாடு . மாநாட்டு மேடையின் முகப்பு தோற்றம் அதிமுகவின் தலைமை அலுவலகம் போன்று வடிவமைப்பு. நிகழ்வுகளை தொண்டர்கள் பார்வையிட, பல்வேறு இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைப்பு . 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- 10:39 (IST) 24 Apr 2023பிரியங்கா காந்தி பிரசாரம்
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளையும், நாளை மறுநாளும் பிரசாரம்.
- 10:22 (IST) 24 Apr 2023தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு . ஒரு கிராம் தங்கம் ரூ.5,615க்கும், சவரனுக்கு ரூ.44,920க்கும் விற்பனை
- 09:45 (IST) 24 Apr 2023நியூசிலாந்தில் : 3வது முறை நிலநடுக்கம்
நியூசிலாந்தில் அதிகாலையில் இருந்து 3வது முறை நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 7.1, 5.4, 5.3 முறையே பதிவு - அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்
- 09:10 (IST) 24 Apr 2023திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுவுக்கு அனுமதி
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை பயன்படுத்த அனுமதி வழங்க தமிழக அரசு முடிவு. மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு, மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம் என புதிய சட்ட திருத்தம் . கட்டண விவரங்களோடு அரசிதழை வெளியிட்டு உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி அறிவிப்பு.
- 08:20 (IST) 24 Apr 20234 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
- 08:20 (IST) 24 Apr 2023நியூசிலாந்து நிலநடுக்கம்
நியூசிலாந்து, கெர்மாடக் தீவு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு
- 08:19 (IST) 24 Apr 2023திருச்சியில் ஓ.பி.எஸ் மாநாடு
திருச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று மாநாடு . பல்வேறு இடங்களில் கட்சி கொடியுடன் வரவேற்பு பேனர்.
- 08:18 (IST) 24 Apr 2023இன்று 3 மணிக்கு தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை
தொழிற்சாலைகள் சட்டமுன்வடிவு தொடர்பாக இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில், தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா,மோ.அன்பரசன், சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு முன்னிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.