இன்று உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் நடக்கிறது. இதை முன்னிட்டு விநாயகர், முருகன் தேரோட்டம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கிரிக்கெட்டில் இன்று
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அகமதாபாத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது . முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன .
நீர் நிலவரம்
புழல் ஏரியில் நீர்இருப்பு 2447 மில்லியன் கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 10 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 821 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 500 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 10 கனஅடியாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழ்நாட்டில் இன்று 139 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 777 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 88 பேர் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பினர்.
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், மாணவர்கள் உள்ளிருப்பு போராடத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அடையாறு அனைத்து மகளிர் போலிசார் கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் வன்கொடுமை, பெண்ணின் மாண்பிற்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், மாணவர்கள் உள்ளிருப்பு போராடத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அடையாறு அனைத்து மகளிர் போலிசார் கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில், பேராசிரியர்கள் 4 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி, கடந்த 2 நாட்களாக மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி உறுதி அளித்ததால் கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் தங்கள் போராட்டம் வாபஸ் பெற்றனர்.
வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 6 இளம் சிறார்கள் தப்பி ஓடிய விவகாரத்தில், ஒரு இளம் சிறார் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் தனிப்படை போலீசார் சென்னையில் வைத்து கைது செய்தனர்.
நடிகர் சிம்புவின் பத்துதல படத்திற்கு டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் மக்களுக்கு ரோஹிணி தியேட்டரில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “சென்னையில் உள்ள ரோஹிணி திரையரங்கில் நரிக்குறவர் மக்களுக்கு நடந்த திண்டாமை சம்பவம் மிகவும் கண்டனத்திற்குரியது; இது தொடர்பாக அரசு உரிய விளக்கம் கேட்டுள்ளது.” என்று கூறினார்.
கலாஷேத்ரா கல்லூரியில் 2015-19ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவி, அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கலாஷேத்ராவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், அதனால் கல்லூரியை விட்டு வெளியேறினேன் எனவும் புகார் தெரிவித்துள்ளார்.
நெல்லை, அம்பையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், ஐ.பி.எஸ் அதிகாரிக்கு எதிராக கொல்கத்தாவை சேர்ந்த வழக்கறிஞர் ஆசிஸ் கோயல் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார். இந்த மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மாநில மனித உரிமைகள் ஆணையம் ஏற்கனவே விசாரணை நடத்தி வரும் நிலையில், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். திருவிழா இன்று தொடங்கி நடைபெறும் நிலையில் சென்னை அணியின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
திருவாரூரில் நாளை ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தின் மிகப்பெரிய தேரோட்டம், திருவாரூர் ஆழித் தேரோட்டம் ஆகும்.
ஆரூத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிஸுக்கு 6 நாள்கள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளன.
ஆரூத்ரா நிதி நிறுவனம் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடக சட்டமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் காங்கிரஸின் டி.கே. சிவக்குமார், சித்த ராமையை இடையே மீண்டும் மோதல் போக்கு வெடித்துள்ளது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் சந்திக்கும் எனவும் கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கானாங்குளத்தங்கரை என்ற ஊரில் கொரோனா பெருந்தொற்று வைரஸிற்கு பயந்து 3 ஆண்டுகளாக ஒரு குடும்பம் வீட்டுக்குள்ளே இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் வீட்டுக்குள்ளேயே இருந்ததால் 3 குழந்தைகள் உடல், மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அந்தக் குழந்தைகளை மீட்ட அதிகாரிகள் அவர்களை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.
மார்ச் 31ஆம் தேதி வர்த்தகத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்வை கண்டன.
இதேபோல் ஆசிய பங்குச் சந்தைகளும் உயர்வில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
சேலத்தில் போதையில் பைக்கில் வந்த நபர், பெட்ரோல் தீர்ந்து நடுவழியில் நின்றதால், தீக்குச்சியை பற்ற வைத்து பெட்ரோல் டேங் உள்ளே போட்டு தீ வைத்துள்ளார்.
இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், கொண்டாலம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (39) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஐ.பி.எல். ஆட்டங்கள் இன்று தொடங்கவுள்ள நிலையில் மும்பை அணியில் இருந்து காயம் காரணமாக பும்ரா விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக சந்தீப் வாரியர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சரத் குமார், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு ஜனநாயக விரோதம் எனக் கூறினார்.
நடிகர் சிம்பு நடிப்பில் நேற்று (மார்ச் 30) வெளியான பத்து தல படம் ரூ.12.3 கோடி வசூலித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் நகலை வழங்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது குஜராத் உயர்நீதிமன்றம்.
பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை கேட்ட, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ₨25 ஆயிரம் அபராதம்
கலாஷேத்ரா விவகாரத்தில் போராட்டத்தை கைவிட மாணவிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர் என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி பேட்டி அளித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் அறிவிப்பு
அதிமுக வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு: பன்னீர் செல்வத்திற்கு பின்னடைவு இல்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் பாஜக தான் காரணம். சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பதை எதிர்த்து வழக்கு. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, கோட்டை புறநகர் ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி வாசகம் கருப்பு மையால் அழிப்பு
மதுரையில் 2021ம் ஆண்டு இளைஞரிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்த வழக்கில் சாட்சியங்களை கலைக்க முயன்றதாக புகார் எழுந்ததையடுத்து, காரில் சென்ற முன்னாள் பெண் இன்ஸ்பெக்டர் வசந்தியை சினிமா பாணியில் போலீசார் சேஸிங் செய்து பிடித்தனர்.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்றால் தமிழ் மற்றும் ஆங்கிலம்; சர்வதேச மொழி ஆங்கிலம் இருக்கும்போது நமக்கு இந்தி தேவையில்லை – சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி உரை
ஆடும் மாட்டை ஆடிக் கறந்து, பாடும் மாட்டை பாடிக் கறந்து, அரசின் திட்டம் எனும் பாலினை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்ப்பதே ஸ்டாலினிசம்.
தந்தை ஸ்தானத்திலிருந்து நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கி உள்ளார்; ஐநா சபையில் கல்வி மாற்றம் என்ற மாநாட்டில் இல்லம் தேடிக்கல்வி தொடர்பாக பேசப்பட்டுள்ளது- சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு
சென்னையில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளின் போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும்- முதலமைச்சருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம்
சென்னை ரோகினி திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத விவகாரம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட 4 பேரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சாவூரில் சாலையோரம் நின்றிருந்த இருவர் மீது மினி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. மேலும் பேருந்து உரசியதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்த நிலையில், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த தஞ்சை தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக எழுந்த புகாரை தொடர்ந்து குற்றச்சாட்டிற்கு உள்ளான ஏ.எஸ்.பி பல்வீர் சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட 6 பேர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்- சீமான் அறிக்கை
டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்கு திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது கண்டிக்கத்தக்கது – கமல்ஹாசன்
கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரத்தில் அரசு உரிய விசாரணை நடத்தும், தவறு நடந்திருந்தால், சட்டப்படி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.
இபிஎஸ் தலைமையை ஓபிஎஸ் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்- இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் நாளை முதல் உயர்த்தப்படுகிறது. ரூ.5 முதல் ரூ.55 ரூபாய் வரையிலான சுங்க கட்டண உயர்வு இன்று நள்ளிரவு 12 மணிமுதல் அமலுக்கு வருகிறது- தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நடவடிக்கை
ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (03.04.2023) ஒத்திவைக்கப்பட்டது.
ஓபிஎஸ் தரப்பில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கியது.
கட்சியில் இருந்து நீக்கிய நடவடிக்கை, கட்சி விதிகளுக்கு எதிரானது; இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட இயலும்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்
சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்களை உள்ளே அனுமதிக்காத விவகாரம் தொடர்பாக, திரையரங்கு உரிமையாளர் மற்றும் பணியாளரிடம் விளக்கம் கேட்டு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்ப்பபட்டது
கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் தொல்லை புகார் – மாநில மகளிர் ஆணையம் நேரில் விசாரணை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 44,720க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் ரூ. 5,590-க்கு விற்பனை .
பொம்மன்- பெல்லி தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட 3 வயது குட்டியானை உயிரிழப்பு. நீண்ட நேரம் மருத்துவ உதவிகள் வழங்கியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குட்டியானை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாயிடமிருந்து பிரிந்து கிணற்றில் விழுந்தது குட்டியானை
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் 100% முகக்கவசம் அணிய வேண்டும். நோய் சிகிச்சைக்காக, உடன் வருபவர்களுக்கும், உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
போப் பிரான்சிஸ், விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் – பிரதமர் மோடி ட்வீட்
“தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர், நாளை முதல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்”. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு
“கலாஷேத்ராவில் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் பாலியில் துன்புறுத்தல்” மத்திய கலாச்சார அமைச்சகம், முதல்வர் ஸ்டாலினுக்கு ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி மாணவர்கள் அமைப்பு கடிதம்
தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி கலாஷேத்ரா கல்லூரியில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். காலை 10 மணி அளவில் மாணவிகளின் புகார் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
திமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு முன் இன்று விசாரணை .
சென்னை, சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் பால் வரத்து குறைவின் காரணமாக உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிப்பு .