Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் பெங்களூரு அணி
வெற்றி மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி 172 ரன்கள் இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 16.2 ஓவர்களில் இலக்கை அடைந்து அசத்தல்.
பசுக்கள் திருடியவர்கள் கைது
திருவள்ளூரை அடுத்த குருவாயல் பகுதியில் இரவு நேரத்தில் வீடு வீடாகச் சென்று பசுமாடுகளை திருடிய சூரியா, மணி ஆகியோர் கைது . அவர்களிடம் இருந்து 3 பசுக்கள் பறிமுதல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
காரைக்கால் திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷ பூஜை. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையை தொடர்ந்து மகா தீபாராதனை. அபிஷேகத்தின் போது நந்தி பகவானை வணங்கி சென்ற யானை பிரகாம்பிகை – பக்தர்கள் பரவசம்
இந்தியா முழுவதுக்கும் கூட்டாட்சி, மாநில சுயாட்சி, சகோதரத்துவம் உள்ளிட்டவைகளை நிலைநாட்ட நாம் குரல் கொடுக்க வேண்டும்” “தனித்தனியாக இல்லாமல் கூட்டு குரலாக, கூட்டணி குரலாக அமைய வேண்டும்” சமூகநீதி மாநாட்டில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சமூக நீதிக்காக முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட முன்னெடுப்பை பாராட்டுகிறேன்” சமூகநீதி கூட்டமைப்பில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் புகழாரம்
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணனுக்கு நெல்லை எஸ்.பி.-யாக கூடுதல் பொறுப்பு – தமிழக அரசு
தேசத்தின் நன்மைக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னே நாம் ஒருங்கிணைய வேண்டும் பெரியாரும், கருணாநிதியும் பாதுகாத்த சமூக நீதியை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பாதுகாக்கிறார். சமூகநீதி கருத்தரங்கில் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா பேச்சு
சென்னை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டட நுழைவாயில் அருகே வெடித்து சிதறிய மின் ஒயர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அச்சமடைந்த நோயாளிகள், பொதுமக்கள் – சரி செய்யும் பணிகள் தீவிரம்
திண்டுக்கல் : பழனி தண்டாயுதபாணி கோவில் பங்குனி உத்திர திருவிழா வள்ளி, தேவசேனா – முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாண வைபவம்
வரும் 7ந் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் அறிவிப்பு
கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் தொடர்பாக தலைமை செயலர் வெ.இறையன்புவிடம், தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி அறிக்கை தாக்கல்
சூரத் மேற்கு எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி தாக்கல் செய்த புகாரில் கிரிமினல் அவதூறு குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மார்ச் 23-ம் தீர்ப்பளித்ததை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார்.
சூரத் நீதிமன்றம் திங்கள்கிழமை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது. 2019-ம் ஆண்டு மோடி என்ற குடும்பப் பெயரைப் பற்றி அவர் கூறிய அவதூறு வழக்கில் அவர் மீதான தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய அவரது மேல்முறையீடு வழக்கு முடிவடையும் வரை அவரது தண்டனையை நிறுத்தி வைத்தது.
பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக ஆர்.பி.எப் எஸ்.ஐ மீது புகார் அளிக்கப்பட்டதால், ரயில்வே பாதுகாப்பு படை உதவி காவல் ஆய்வாளர் சீனிவாஸ் நாயக் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார். ரயில் ஓட்டுநர் எமர்ஜென்சி பிரேக் அடித்து ரயிலை நிறுத்தியதால், சீனிவாஸ் உயிர் தப்பினார்.
ராகுல்காந்தி ட்வீட்: “இப்போது நடப்பது ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டம்; இந்த போராட்டத்தில் உண்மையே எனது ஆயுதம்; உண்மையே எனது பலம்” என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி மகாராஷ்டிரா பவனில் நடக்கும் விழாவில் எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார், கிரிராஜன் பங்கேற்றுள்ளனர்.
சென்னை, மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐ.பி.எல் போட்டிகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்.இ.டி-கள் மூலம் ரயில் நிலையம் உள்ளே ஐ.பி.எல் போட்டி ஒளிபரப்பப்படுகிறது. சென்னை வடபழனி விம்கோ நகர், சென்ட்ரல், நந்தனம், திருமங்கலம் பகுதிகளில் போட்டிகளை காணலாம். ரூ.10 கட்டணம் செலுத்தி மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐ.பி.எல் போட்டிகளை காணலாம்.
கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிக்கிய உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
காசி தமிழ்ச் சஙகமத்தின் மீது காட்டிய அன்பையும், அக்கறையும் பாராட்டுகிறேன்; காசி – தமிழ்நாட்டுக்கு இடையேயான பிணைப்பை தமிழ்ச் சங்கமம் வெளிட்காட்டியுள்ளது. நாட்டை ஒன்றிணைப்பதில் எனது முயற்சிகளை இரட்டிப்பாக்க இத்தகைய நடவடிக்கைகள் ஊக்குவிக்கிறது; வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் நீங்கள் பங்கேற்றது ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு வலு சேர்த்துள்ளது என்று பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
முக்கிய கோயில்களில் கர்ப்பிணிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் விரைவாக தரிசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
வழக்கமாக செவ்வாய் கிழமை வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், மகாவீர் ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு நாளை பூங்கா செயல்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது
கலாஷேத்ரா பாலியல் புகார் சர்ச்சையில் உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 4 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் வாய்மொழியாக தெரிவித்துள்ளது. மாணவிகளின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் என கல்லூரி நிர்வாகம் உறுதியளித்துள்ளது
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019 ஆம் ஆண்டு மோடி என்ற குடும்பப்பெயருடன் திருடர்களைப் பற்றி கூறியதற்காக அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. செஷன்ஸ் நீதிமன்றம் இந்த வழக்கை ஏப்ரல் 13 ஆம் தேதி விசாரிக்கும் என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.
52 வயதான ராகுல் காந்தி சூரத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தை பிற்பகலில் அடைந்து 2019 அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். கடந்த மாதம், இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் மேல்முறையீடு செய்ய அனுமதிக்க நீதிமன்றம் அவரது தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தது.
மார்ச் 23 அன்று, காந்தியை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கும் போது, நீதிமன்றம் அவரை மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் தண்டனையை 30 நாட்களுக்கு ஒத்திவைத்தது மற்றும் ரூ 15,000 உத்தரவாதத்தில் ஜாமீன் வழங்கியது. ஒரு நாள் கழித்து, காந்தி மக்களவை உறுப்பினராக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைக்கும் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது, இது லோக்சபா எம்பி என்ற தகுதி நீக்கத்தை திரும்பப் பெறுவதற்கான கதவுகளைத் திறக்கும்.
அவதூறு வழக்கில் சிறை தண்டனைக்கு எதிராக சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்
ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நாளை சென்னை கொளத்தூரில் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி, இரு அவைகளும் ஏப்ரல் 5ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படை (சிஆர்பிஎஃப்), ஜார்க்கண்ட் மாநில போலீசார் நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையில் பலாமு-சத்ரா எல்லைப் பகுதியில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் கௌதம் பஸ்வான் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் தலைக்கு ரூ.25 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
கலாஷேத்ரா கல்லூரியில் ஏப்ரல் 5ம் தேதி முதல் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
எல்ஐசி கட்டடத்தில் நேற்று நேரிட்ட தீ விபத்தில், தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகரும், பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு எந்த சட்டமும் தெரியாது என்று நினைக்கிறேன். எஸ்.ஆர். பொம்மை வழக்கிற்கு பிறகு எந்த சட்டமன்றமும் கலைக்கப்படவில்லை- டிகேஎஸ் இளங்கோவன்
அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த வழக்கு
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடக்கிறது. எங்கள் தரப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் – ஓபிஎஸ் தரப்பு
இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் சிக்கலை ஏற்படுத்தும் – நீதிபதிகள்.
தொடர்ந்து இறுதி விசாரணை ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம்
தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது
“ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது” – முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு
கலாஷேத்ரா விவகாரம் – இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குனர் ஆகியோர் மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜர். சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணைய அலுவலகத்தில் இருவரிடமும் விசாரணை.
கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக புகார்கள் ஆன்லைன் மூலமும் வந்துள்ளன. புகார்கள் மற்றும் ஆய்வின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்படும். ஆதாராத்தின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கலாஷேத்ரா இயக்குனரிடம் விசாரணை நடத்தியப் பின் மாநில
மகளிர் ஆணைய தலைவி குமாரி பேட்டி
கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம். 3 பேர் பலியான சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், என்.ஐ.ஏ விசாரணை. தாக்குதல் நடத்தியவரின் தொலைபேசி மற்றும் இந்தியில் எழுதப்பட்ட சில புத்தகங்கள் பறிமுதல்
குழந்தைகள் பெயர்கள் அறிவித்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி. உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன்
கலாஷேத்ரா விவகாரம் – இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குனர் ஆகியோர் மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜர் . சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணைய அலுவலகத்தில் இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 44,280க்கு விற்பனை . ஒரு கிராம் தங்கம் 5,535 ரூபாய்க்கு விற்பனை .
கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் . கூட்டணி குறித்து பாஜக உயர்மட்ட தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள். மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்கள் கூட்டணி குறித்து முடிவு செய்வதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.
தமிழ்நாட்டில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு; விடைத்தாள் திருத்தும் பணி வரும் 10ம் தேதி தொடக்கம்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தனிப்படை போலீசாரால் கைது .
அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்கிறார் . நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்காக, இன்று சூரத் செல்கிறார்.
டெல்லியில், திமுக தலைமையில் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்