பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 227-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
வாரிசு டீசர்
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது மாலை 5 மணிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிரைலர் வெளியீடு.
திமுக நிர்வாகிகள் தற்காலிக நீக்கம்
திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலர்களிடம் திமுக நிர்வாகிகள் தவறாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் வந்ததால், இரண்டு திமுக நிர்வாகிகளை தற்காலிகமாக நீக்கம் செய்துள்ளது திமுக. மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 4 பேருக்கு BF 7 ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரிக்காவில் இருந்து வந்த 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 6 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. 6 இடங்கள் வீணாகும் நிலை உருவாகி இருப்பதால் மாநில கலந்தாய்வு மூலம் நிரப்பிக் கொள்ள மத்திய அரசுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் கடிதம் எழுதியுள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வே.ரா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.
காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்: “எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க ஆட்சியின் அவலங்களை மறைக்க மக்களை திசை திருப்புகிறார். நீட் வழக்கில் மாநில அரசு சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து வருகிறது; உச்ச நீதிமன்றத்தில் உரிய முகாந்திரத்துடன் அ.தி.மு.க வழக்கு தாக்கல் செய்யவில்லை” என்று கூறினார்.
காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயகத்தின் மிக முக்கியமான செயல்பாடான செய்தியாளர் சந்திப்பை குழாயடிச் சண்டையாக மாற்ற பா.ஜ.க தொடர்ந்து முயற்சிப்பதன் மர்மம் என்ன? கேள்விகளுக்கு பதில் இல்லையென்றால் கேட்பவரை கொச்சைப்படுத்துவது ஜனநாயகமா? பிரதமரைப்போல பத்திரிக்கையாளர் சந்திப்பை அண்ணாமலை தவிர்க்கலாமே?” என்று பதிவிட்டுள்ளார்.
எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின், நிர்வாக இயக்குனராக ஹாங் ஜூ ஜியோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை லொயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசுகையில், “திராவிடம் என்பதை வெறும் தென்னிந்திய நிலப்பரப்புடன் மட்டும் பொருத்திப் பார்க்கக் கூடாது. திராவிடம் என்பது எல்லோருக்குமானது, எளியோருக்கானது, உழைக்கும் மக்களுக்கானது, இந்த மண்ணின் பூர்வீக குடிகளுக்கானது” என்று கூறினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வே.ரா இன்று மாரடைப்பால் காலமானார். அவருடைய மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், ஓ.பி.சி-யினருக்கு இடஒதுக்கீடு இல்லாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரிய உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து யோகி ஆதித்யநாத் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி) இடஒதுக்கீடு இல்லாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நிறுத்தி வைத்தது. இது யோகி ஆத்யநாத் அரசுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது.
கடந்த வாரம், யோகி ஆதித்யநாத் அரசு, ஓ.பி.சி-க்கு இடஒதுக்கீடு இல்லாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தொடர வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
ம.தி.மு.க தலைமை நிலையப் பொதுச் செயலாளர்: துரை வைகோ கண்டனம்: பா.ஜ.க-வின் அண்ணாமலை பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசுவது அவருக்கும் கட்சிக்கும் நல்லதல்ல பத்திரிகையாளர்களை தரக்குறைவாகப் பேசியது கண்டிக்கத் தக்கது. பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தெரியவில்லை எனில் தெரியவில்லை எனக் கூறலாம் என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை: ஊடகங்களையும் பத்திரிகையாளர்களையும் கண்ணியமாக நடத்த பா.ஜ.க கற்றுக்கொள்ள வேண்டும்; பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் இல்லையெனில் அவர்களை தரக்குறைவாக நடத்தக்கூடாது என்று கூறினார்.
புதுச்சேரியில் மகளிருக்கென பிரத்யேகமாக பிங்க் பெட்ரோல் நிலையத்தை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கிவைத்தார்.
அப்போது 100 பெண்களுக்கு இலவசமாக பெட்ரோல் போடப்பட்டது.
அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் துணிவு. இந்தப் படம் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டெல்லியில் பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் ஜன.10 நடைபெறுகிறது.
தொடர்ந்து ஜன.16,17ஆம் தேதிகளில் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் தேசியத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடலூரில் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு போலீசாரை தாக்கியதாக பெண் மீது புகார் எழுந்தது.
அந்தப் பெண்ணை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
நடிகர் விஜய்யின் வாரிசு படம் பொங்கலுக்கு திரைக்கு வெளிவர உள்ளது. இந்தப் படத்தின் ட்ரைலர் முன்னோட்ட காட்சியை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியுற்ற நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து அறிய உண்மை கண்டறியும் குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவராக இசுதன் காத்வி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பில் இருந்து கோபால் இத்தாலியா நீக்கப்பட்டுள்ளார்.
கோபால் இத்தாலியாவுக்கு கட்சியின் தேசிய கூடுதல் செயலாளர் மற்றும் மராட்டியத்தின் துணை பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை 1 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது.
உலகளாவிய சாதகமற்ற குறிப்புகளுக்கு மத்தியில் இந்த வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 376 உயர்ந்து ரூ. 41,904க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 5,238 ரூபாய்க்கு விற்பனையாகிறது
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நாளை மதியம் 2 மணிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது
சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன், நேற்று மாயமான நிலையில் டெல்லியில் மீட்கப்பட்டுள்ளான். 36 மணி நேரத்தில் மீட்டு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மாணவன் செண்ட்ரல் ரயில் நிலையம் வந்து டெல்லி செல்லும் ரயிலில் ஏறியது தெரியவந்தது
ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் செல்லாது என்றால் அனைத்து பதவிகளும் செல்லாது என ஒ.பி.ஸ் தரப்பு தெரிவித்துள்ளது
பொதுக்குழு வழக்கால் கட்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அப்போது, கட்சிக்கு இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டுவிட்டாரா? என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு இ.பி.எஸ் இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார் என எடப்பாடி தரப்பு பதில் அளித்துள்ளது
கப்பலூர், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 2 சுங்கச்சாவடிகளுக்கும் விரைவில் மாற்றுவழி ஏற்படுத்தப்படும் உறுதி அளித்துள்ளார் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஈரோடு எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நான் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்காத அண்ணாமலை திமுகவினருடன் பேசி வருவதாக குற்றம்சாட்டுகிறார். அதனை நிரூபித்து காட்டுங்கள் என காயத்ரி ரகுராம் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.
திருமகன் ஈ.வெ.ரா மறைவு காங்கிரசுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா இன்று மாரடைப்பால் காலமானார். இவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.
பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க வியூகம் வகுப்போம். தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பு தான் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
15,610 கோடி ரூபாய் அளவுக்கு புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 8776 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
கட்சியில் இருந்து யார் வெளியேறினாலும் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவது தான் என்னுடைய பழக்கம்; காயத்ரியின் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
புராதன சின்னங்கள், பழமையான கோவில்கள் பாதிக்காத வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு, மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டவட்டம்
“கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்”
“விலகுபவர்கள் யாரும் என்னை புகழ்ந்து விட்டு செல்ல வேண்டும் என கட்டாயம் இல்லை”
“என் மீது அனைவரும் தான் விமர்சனம் வைக்கிறார்கள்; அதற்கான பதில் என்னுடைய மௌனம் தான்”
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி
பெண் காவலரிடம் அத்துமீறியவர்கள் மீது தாமதமான நடவடிக்கை
பாஜகவின் தொடர் வலியுறுத்தலால் 2 நாட்களுக்கு பிறகு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு கைது .
காவல்துறை மீது அழுத்தம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி
பிரபல கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னையில் மண்ணடி, கிண்டி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்
கடலூர் மாவட்டத்திற்கு வரும் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
பாஜகவில் இருந்து விலகிய மதுரையை சேர்ந்த மருத்துவர் சரவணன் அதிமுகவில் இணைந்தார்
சென்னையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் மருத்துவர் சரவணன்
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.41,664க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் 5,208 ரூபாய்க்கு விற்பனை
சென்னை மதுரவாயலில் சாலை விபத்தில் பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் உயிரிழந்த வழக்கில் 2 ஓட்டுநர்கள் கைது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
வரும் 9ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம்
ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள், புதிய மசோதாக்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு
பொங்கல் பரிசு 1000 ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை: திட்டமிட்டபடி ரேஷன் கடைகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அத்துமீறல் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது; நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை” – சென்னையில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
குவைத்தில் இருந்து சென்னைக்கு, 158 பயணிகளுடன்,நேற்று இரவு 11.05க்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு . விமானம் மீண்டும் குவைத்தில் தரையிறக்கப்பட்டு, கோளாறை சரி செய்த பிறகு, 11:51 மணிக்கு புறப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள், புதிய மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு .
விருதுநகர், சாத்தூர் அருகே வீட்டில் சமையல் கேஸ் கசிவால் தீ விபத்து. முதியவர் உடல் கருகி உயிரிழப்பு.