Advertisment

Tamil News Highlights: நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rameshwaram, chennai high court, firing on tamilnadu fishermen, inquiry by DSP, indian coast guard, tamilnadu government, tamilnadu fishermen

Tamil news

Petrol and Diesel Price

Advertisment

 சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

 ஏரிகளின் நீர் நிலவரம்

3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 2,341 மில்லியன் கனஅடியாக உள்ளது   1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 575 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில், நீர்இருப்பு 459 மில்லியன் கனஅடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 • Mar 10, 2024 01:48 IST
  கோடை வெப்ப அலை தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை

  கோடை வெப்ப அலை தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. கர்பிணீகள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் முடிந்தளவு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். கோடைக் காலங்களில் மக்கள் அதிக அளவில் நீர் அருந்த வேண்டும். பெரும்பாலும், பழங்களை உண்ண வேண்டும். உடலை முழுதாக மறைக்கும் வகையில், பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. • Mar 09, 2024 21:09 IST
  தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா

  மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவிய ராஜினாமா செய்துள்ளார். இவருடைய ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார். • Mar 09, 2024 21:04 IST
  போதைப்பொருள் விவகாரம்: ஆளுநர் ஆர்.என். ரவியை நாளை சந்திக்கிறார் இ.பி.எஸ்

  போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை நாளை சந்தித்து எடப்பாடி பழனிசாமி புகார் மனுவை அளிக்கிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் விவரங்களை அளிக்கவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். • Mar 09, 2024 20:19 IST
  மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் அஜித்திடம் நலம் விசாரித்தார் விஜய்

  மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் அஜித்திடம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நலம் விசாரித்தார். அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே தொலைபேசியில் அழைத்து விஜய் நலம் விசாரித்தார். • Mar 09, 2024 20:16 IST
  மக்களவைத் தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது தி.மு.க

  மக்களவைத் தேர்தலில் தி.மு.க 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு இறுதியானது. • Mar 09, 2024 19:25 IST
  காங்கிரசுக்கு 9+1 தொகுதிகள் ஒதுக்கீடு; தி.மு.க உடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து

  காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் கே.சி. வேணுகோபால், முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தி.மு.க  - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பதம் கையெழுத்தானது. காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி 1 தொகுதி உள்பட என 9+1 என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. • Mar 09, 2024 18:57 IST
  வெப்ப அலை அச்சுறுத்தல் : சுகாதாரத்துறை எச்சரிக்கை

  வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை. தேசிய சுகாதாரத்துறை வழங்கிய நெறிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

  அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு போன்றவற்றை தினசரி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" "மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. • Mar 09, 2024 18:33 IST
  மீண்டும் பாஜகவுடன் கூட்டணி : தெலுங்கு தேசம் கட்சி உறுதி

  சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. கடந்த 2 நாட்களாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன்  பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டது • Mar 09, 2024 18:04 IST
  தொகுதிப் பங்கீடு தொடர்பான தி.மு.க - காங்கிரஸ் ஆலோசனை

  மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சத்யமூர்த்தி பவனில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சற்று நேரத்தில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட உள்ளது. • Mar 09, 2024 18:01 IST
  புதுச்சேரியில் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி

  புதுச்சேரி சிறுமியின் குடும்பத்திற்கு, ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ரூ.7 லட்சம் வழங்கப்பட உள்ளது என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய சென்னை பிரிவின் மண்டல இயக்குநர் ரவி வர்மா தகவல்  தெரிவித்துள்ளார். சிறுமி படுகொலை தொடர்பாக தாமாக முன்வந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணையை தொடங்கியது. ஜிப்மர் மருத்துவமனை, முத்தியால்பேட்டை காவல் நிலையம், சிறுமியின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமியின் குடும்பத்திற்கு திங்கட்கிழமை அன்று, ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ரூ.7 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். • Mar 09, 2024 17:31 IST
  கர்நாடகாவில் எலக்ட்ரிக் பைக் டாக்ஸிக்கு தடை!

  மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிராக செயல்படும், இருசக்கர மின்சார வாகனங்களால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கூறி, அவ்வாகன சேவைகளுக்கு கர்நாடகா அரசு தடை விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வாகன நம்பர் ப்ளேட் இல்லாத மின்சார வாகனங்களால், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காணுவதில் உள்ள சிக்கலை களைய நடவடிக்கை என விளக்கம் • Mar 09, 2024 16:49 IST
  வட மாநிலத்தவரை தாக்கிய பொதுமக்கள்

  கிருஷ்ணகிரி அருகே செம்படமுத்தூர் மற்றும் மாதப்பட்டி பகுதியில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை  பொதுமக்கள் தாக்கியுள்ளனர். 

  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தவர்களை சந்தித்த ஊர் மக்கள், தவறான புரிதலால் தாக்கிவிட்டதாகவும், எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் சிகிச்சைக்குத் தேவையான பணம் மற்றும் பழங்களையும் வழங்கியுள்ளனர்.  • Mar 09, 2024 16:13 IST
  கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நடிகை வழக்கு

  காதல் திருமணம் செய்த கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி சின்னத்திரை நடிகை தீபா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை தீபா வழக்கு தொடர்ந்துள்ளார். 

  ஏற்கனவே, திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் கணேஷ் பாபு என்பவருடன் நடிகை தீபா பதிவு திருமணம் செய்துள்ளார். தற்போது, கணேஷ் பாபு பிரிந்து வாழ்வதால் சேர்த்து வைக்கக் கோரி தீபா வழக்கு  தொடர்ந்துள்ளார். கணேஷ் பாபுவின் குடும்பத்தினர் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் தீபா குற்றம் சாட்டியுள்ளார்.  • Mar 09, 2024 16:11 IST
  அரபிக்கடலில் குமரி மீனவர் மாயம் -  ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

  அரபிக்கடலில் தவறி விழுந்து மாயமான குமரி மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

  குளச்சல் கிராமத்தை சேர்ந்த யாசர் அலி என்பவர் கொச்சி அருகே அரபிக்கடலில் படகில் இருந்து தவறி விழுந்து மாயமானார். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு சமையல் பணிக்காக சென்ற யாசர் அலி கடலில் தவறி விழுந்துள்ளார். யாசர் அலி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.  • Mar 09, 2024 16:10 IST
  அரபிக்கடலில் குமரி மீனவர் மாயம் -  ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

  அரபிக்கடலில் தவறி விழுந்து மாயமான குமரி மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

  குளச்சல் கிராமத்தை சேர்ந்த யாசர் அலி என்பவர் கொச்சி அருகே அரபிக்கடலில் படகில் இருந்து தவறி விழுந்து மாயமானார். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு சமையல் பணிக்காக சென்ற யாசர் அலி கடலில் தவறி விழுந்துள்ளார். யாசர் அலி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.  • Mar 09, 2024 15:31 IST
  `ஆடு ஜீவிதம்' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

  பிரித்விராஜ், அமலா பால் நடித்துள்ள `ஆடு ஜீவிதம்' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது • Mar 09, 2024 14:59 IST
  நடிகர் சங்க கட்டடம்; கமல் ரூ.1 கோடி நிதியுதவி

  தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி வழங்கினார். நடிகர் சங்க கட்டட பணியை தொடர்வதற்காக வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை நிர்வாகிகளான விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோரிடம் கமல்ஹாசன் வழங்கினார். • Mar 09, 2024 14:44 IST
  புதிய சாதனை படைத்தார் அஸ்வின்

  டெஸ்ட் போட்டிகளில் 36-வது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்து இந்திய வீரர் என ரவிச்சந்திரன் அஸ்வின் அதிக முறை 5 விக்கெட்டுகளை எடுத்த முன்னாள் வீரர் அணில் கும்ப்ளேவின் சாதனையை (35 முறை) முறியடித்தார். • Mar 09, 2024 14:41 IST
  அம்பானி இல்ல திருமண விழாவில் நடனமாடிய பிரபலங்கள் : கங்கனா ரனாவத் விமர்சனம்

  அம்பானி இல்ல திருமண விழாவில் பிரபலங்கள் பங்கேற்று நடனமாடியது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரனாவத் நான் கடும் நிதி நெருக்கடியில் இருந்துள்ளேன். எவ்வளவு பண ஆசை காட்டினாலும் பிரபலங்களின் திருமணத்தில் நான் நடனமாட மாட்டேன். பணத்தையும், புகழையும் புறக்கணிக்க மிகவும் வலிமை வேண்டும். குறுக்கு வழிகள் நிறைந்த இவ்வுலகில், நேர்மை மட்டுமே செல்வத்தை அடையும் வழி என இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். • Mar 09, 2024 14:24 IST
  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 4 - 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. கடைசி டெஸ்டில் இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. • Mar 09, 2024 14:02 IST
  குழந்தை கடத்தல் புகார்; உண்மையைக் கண்டறிய 6 தனிப்படைகள் அமைப்பு

  குழந்தை கடத்தல் புகாரின் உண்மையத் தன்மையைக் கண்டறிய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை கடத்தல் சம்பவங்கள் நடக்கவில்லை, என சென்னை காவல்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார் • Mar 09, 2024 13:30 IST
  மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை- கமல்ஹாசன்

  வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எங்களின் ஒத்துழைப்பு இருக்கும்

  எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை

  - மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் • Mar 09, 2024 13:23 IST
  மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கீடு

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்;

  திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கீடு • Mar 09, 2024 13:22 IST
  எடப்பாடி பழனிசாமி X தளத்தில் பதிவு

  கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை

  அதிமுகவின் போராட்டம் தொடரும்; 

  மார்ச் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்

  - எடப்பாடி பழனிசாமி X தளத்தில் பதிவு • Mar 09, 2024 12:57 IST
  பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு வீடு வழங்கி உத்தரவு

  மதுரையை சேர்ந்த பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், முதலமைச்சர் ஸ்டாலின் வீடு வழங்கி உத்தரவிட்ட நிலையில், 380 சதுர அடி அளவிலான கூடுதல் பட்டா வழங்கப்பட்டுள்ளது... • Mar 09, 2024 12:36 IST
  ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது எப்படி?

  டெல்லி அருகே பதுங்கியிருந்தபோது, ஜாபர் சாதிக்கை மடக்கிப் பிடித்ததாக தகவல்

  2 மணிக்கு விவரங்களை வெளியிடுகிறது போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு; • Mar 09, 2024 12:25 IST
  செய்தியாளர்கள் சந்திப்பில் எம்.பி. ப.சிதம்பரம் பேச்சு

  பிரதமர் மோடி, தேர்தலுக்கு முன்பு சிலிண்டர் விலையை ₹100 குறைப்பதைவிட, தேர்தலுக்குப் பிறகு ₹100 கூட்டமாட்டேன் என சொல்ல வேண்டும்

  -சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் பேச்சு • Mar 09, 2024 12:24 IST
  சென்னையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி

  சிலிண்டர் விலையை குறைத்தது பாராட்டுக்குரியது;

  தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது;

  தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டுக்கு போதைப்பொருட்கள் விற்பனையே காரணம்

  - சென்னையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி • Mar 09, 2024 12:24 IST
  அதிமுக - தேமுதிக பேச்சுவார்த்தை இழுபறி

  தேமுதிகவிற்கு 4 மக்களவை தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என அதிமுக தரப்பில் கூறப்படுவதாக தகவல் • Mar 09, 2024 12:15 IST
  ஜாஃபர் சாதிக் கைது! • Mar 09, 2024 11:46 IST
  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவாலயம் வருகை

  திமுக பேச்சுவார்த்தை குழுத்தலைவர் டி.ஆர்.பாலுவை சந்திக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் சம்பத், சண்முகம் உள்ளிட்டோர் சென்னை அண்ணா அறிவாலயம் வருகை;

  திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் உறுதியாகியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேச்சுவார்த்தைக்காக வந்துள்ளதாக தகவல் • Mar 09, 2024 11:45 IST
  பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி

  நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவிப்பு • Mar 09, 2024 11:45 IST
  11 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

  ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் உதவியாளர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

  சுரங்க முறைகேடு வழக்கு தொடர்பாக பிகாரின் 11 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. • Mar 09, 2024 11:20 IST
  வி.சி.க. பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை. • Mar 09, 2024 11:18 IST
  திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் இன்று மாலை கைழுத்தாகவுள்ளது

  மக்களவை தேர்தலுக்காக திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் இன்று மாலை கைழுத்தாகவுள்ளது இதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் இன்று மாலை சென்னை வருகின்றனர். • Mar 09, 2024 11:11 IST
  ராமேஸ்வரம் கஃபே மீண்டும் திறப்பு

  பெங்களூரு: குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட ராமேஸ்வரம் கஃபே.  • Mar 09, 2024 10:40 IST
  தமிழாய்வு இருக்கை சார்பில், முதலமைச்சர் ஸ்டாலின் நூறு நூல்களை வெளியிட்டார்

  சென்னை அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி, தமிழாய்வு இருக்கை சார்பில், முதலமைச்சர் ஸ்டாலின் நூறு நூல்களை வெளியிட்டார் • Mar 09, 2024 10:04 IST
  தங்கத்தின் விலை

  ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 49 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.360 அதிகரிப்பு ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 49,200 ரூபாய்க்கு விற்பனை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,150க்கு தங்கம் விற்பனை கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு • Mar 09, 2024 09:46 IST
  சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

  சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை சென்னை ஆர்.ஏ.புரத்தில் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை கரூரை சேர்ந்த செல்வராஜ் அரசு ஒப்பந்ததாரர் என சொல்லப்படும் நிலையில், ஜவுளி நிறுவனமும் நடத்தி வருகிறார் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 பேர் வருகை - காலை 7.30 மணி முதல் சோதனை ரேஷன் பொருள் விநியோக முறைகேட்டில் செல்வராஜுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் • Mar 09, 2024 09:45 IST
  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் நடிகர் அஜித்

  டந்த 2 நாட்களுக்கு முன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் நடிகர் அஜித் காதுக்கு கீழ் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பு ஒன்றில் வீக்கம் இருந்ததால் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு ஓய்வில் இருந்த நடிகர் அஜித் இன்று அதிகாலையில் வீடு திரும்பினார் அடுத்த வாரம் வெளிநாட்டில் நடக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு நடிகர் அஜித் செல்ல உள்ளார் - மேலாளர் சுரேஷ் சந்திரா • Mar 09, 2024 07:52 IST
  நடிகை தமன்னா, பூஜா ஹெக்டே பங்கேற்பு

  ஈஷா யோகா மைய மஹா சிவராத்திரி விழாவில் நடிகை தமன்னா, பூஜா ஹெக்டே.  • Mar 09, 2024 07:51 IST
  மகா சிவராத்திரி: விடிய விடிய சாமி தரிசனம்

  மகா சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் விடிய விடிய நடைபெற்ற பூஜை! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விடிய விடிய சாமி தரிசனம்.  • Mar 09, 2024 07:50 IST
  மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்தார் ஓபிஎஸ்

  மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து அதிமுக உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவு.Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment