scorecardresearch

Tamil news today : சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

Tamil Nadu News, Tamil News Petrol price Today – 13 -03- 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil news today : சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு: கமல்ஹாசன் அறிவுரை

அரசுப் பொதுத்தேர்வுகள் உங்கள் அறிவையும் திறனையும் சோதிப்பவை அல்ல; அடுத்தகட்ட நகர்வுக்கான வழித்துணைதான். அச்சம் தவிர்த்து, தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். பிளஸ்-2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்.தேவையற்ற அழுத்தம் தர வேண்டாம் என்பது பெற்றோருக்கு என் வேண்டுகோள்.

மீண்டும் தொடங்கும் கொரோனா

நீண்ட நாட்களுக்கு பிறகு, கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இன்று ஒருவர் உயிரிழப்பு. புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
22:39 (IST) 13 Mar 2023
கார்த்திகேய சிவசேனாபதி வாழ்த்து!

National Geographic வழங்கும், ஆண்டின் சிறந்த புகைப்படத்திற்கான விருதை வென்ற கார்த்திக் சுப்பிரமணியத்திற்கு, தி.மு.க சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வாழ்த்து!

22:38 (IST) 13 Mar 2023
மார்ச் 22ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மார்ச் 22ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு! திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10.30 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறவுள்ளது!

20:31 (IST) 13 Mar 2023
பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு வாழ்த்து

ஆஸ்கர் வென்ற ”நாட்டு நாட்டு பாடலே ஒரு குறும்படம்தான்; அதற்குள் அத்தனை உணர்வுகள் அடங்கியிருக்கிறது என ‘நாட்டு நாட்டு’ பாடலின் தமிழ் பதிப்பை எழுதிய பாடலாசிரியர் மதன் கார்க்கி படக்குழுவினருக்கு வாழ்த்து!

20:30 (IST) 13 Mar 2023
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ள அண்ணாநகர் கோபுரம்

நவீன பாதுகாப்பு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள சென்னை அண்ணாநகர் கோபுரம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல்;

19:58 (IST) 13 Mar 2023
சென்னை: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய நபர்களிடம் ரூ.5 கோடி வசூல்

சென்னையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து இதுவரை ரூ.5 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

19:45 (IST) 13 Mar 2023
அண்ணா பல்கலை முடிவுகள் வெளியீடு

கடந்தாண்டு நவம்பர், டிசம்பரில் நடைபெற்ற நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக முடிவுகள் இன்று வெளியாகின.

அதாவது முதலாம் ஆண்டு தவிர 3,5,7 பருவத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

19:31 (IST) 13 Mar 2023
ஹஜ் புனிதப் பயணம்.. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

ஹஜ் புனிதப் பயணத்துக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஹஜ் புனிதப் பயணத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் மார்ச் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

19:15 (IST) 13 Mar 2023
அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு சுரண்டல்.. உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு சுரண்டலில் ஈடுபடும் நபர்களை தண்டிக்காமல் விட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பாலசுந்தரம் என்பவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழை ரத்து செய்வது முறை அல்ல என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளது.

19:01 (IST) 13 Mar 2023
முரளிதரன் சாதனையை நெருங்கும் அஸ்வின்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற பட்டியலில் அஸ்வின் 10 இடங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் 11 தொடர் நாயகன் விருதுடன் முரளிதரன் முதல் இடத்தில் உள்ளார். ஜாக் காலிஸ் 09 விருதுகளுடன் மூன்றாம் இடம் வகிக்கிறார்.

18:59 (IST) 13 Mar 2023
மீனாட்சி அம்மன் கோவில் யானை மீண்டு வருகிறது- அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்: “மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதியின் உடல்நிலை சீராகி வருகிறது; உடல்நலக் குறைவால் படுத்தப்படுக்கையாக உள்ள யானை பார்வதிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்” என்று கூறினார்.

18:43 (IST) 13 Mar 2023
ஆஸ்கர் வென்ற இந்தியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

ஆஸ்கர் விருது வென்ற 'The Elephant Whisperers' படக் குழுவின்ருக்கு எனது வாழ்த்துக்கள்; இயற்கை அன்னைக்கும், நமக்கும் உள்ள உறவை இப்படம் உணர்த்தும்; நாட்டு நாட்டு பாடல் ஒவ்வொரு இந்தியரியும் பெருமைப்படுத்தியுள்ளது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

18:40 (IST) 13 Mar 2023
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பரில்-ல் நடைபெற்ற, அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

18:39 (IST) 13 Mar 2023
சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்கு; ரூ.5.93 கோடி அபராதம் வசூல்

சென்னை நகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பான வழக்குகளில், கடந்த 7 வாரத்தில் ரூ.5.93 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

18:33 (IST) 13 Mar 2023
கேந்திரிய வித்யாலயாவில் 6,589 மாணவர்கள் தமிழ் கற்கிறார்கள் – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மக்களவையில் பெரம்பலூர் எம்.பி பாரி வேண்தர் கேள்விக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதிலில், “தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6,589 மாணவர்கள் தமிழ் கற்கின்றனர்; தாய்மொழி, பிராந்திய மொழிகளை கற்பிக்க கேந்திரிய வித்யாலயா நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.” என்று கூறினார்.

18:12 (IST) 13 Mar 2023
ஆளுநரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் – டி.ஆர்.பாலு

தி.மு.க எம்.பி டி.ஆர் பாலு, “தமிழ ஆளுநர் ஆர்.என். ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்; ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது என ஆளுநர் கூறுவது தவறானது; ஆளுநரின் செயலை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை சுட்டிக் காட்டவே கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளோம்” என்று கூறினார்.

17:51 (IST) 13 Mar 2023
போலி சாதிச் சான்றிதழ் அளிப்பவர்களை தண்டிக்காமல் விட முடியாது – ஐகோர்ட்

அரசு வேலைக்காக போலி சாதிச்சான்று அளித்து இட ஒதுக்கீட்டு கொள்கையைச் சுரண்டுவோரை தண்டிக்காமல் விட முடியாது; பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது பெருமைக்குரிய ஒன்று. பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர் என்ற சான்றிதழை ரத்து செய்ததை எதிர்த்து பாலசுந்தரம் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

17:19 (IST) 13 Mar 2023
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு: தமிழ் உள்ளிட்ட தேர்வில் 50,000 ஆப்செண்ட் – பள்ளிக் கல்வித்துறை தகவல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. இன்று நடைபெற்ற தமிழ் உள்ளிட்ட மொழித் தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்செண்ட் ஆகியுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

17:01 (IST) 13 Mar 2023
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் – மத்திய அரசு

ஆதிச்சநல்லூரில் குறுகிய காலத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு 5 ஏக்கருக்கு மேல் நிலம் வழங்கியுள்ளதாகவும் தகவல்

16:53 (IST) 13 Mar 2023
காவல் துணை ஆணையர்களுக்கு வழங்கிய அதிகாரம் செல்லாது – ஐகோர்ட் அதிரடி உத்தரவு

நன்னடத்தை பிரமாணத்தை மீறும் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்க காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

16:34 (IST) 13 Mar 2023
தன் பாலின திருமணம்; 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

ஒரே பாலினத்தவர் திருமணத்தை அங்கீகரிக்கக் கோரிய மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஏப்ரல் 18ஆம் தேதி முதல் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

16:17 (IST) 13 Mar 2023
சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்ற மம்மி பட நடிகர்

மம்மி படத்தில் நடித்து உலகப்புகழ்பெற்ற பிரண்டன் பிரேசர், உடல்நிலை பாதிக்கப்பட்டு பருமன் ஆனதால் கேலி கிண்டலுக்கு ஆளானார். “The Whale” திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்

16:06 (IST) 13 Mar 2023
இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் சமனில் முடிந்தது

பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் சமனில் முடிந்தது. 4 போட்டிகள் கொண்ட தொடரை 2 – 1 கணக்கில் கைப்பற்றி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது

15:58 (IST) 13 Mar 2023
தமிழ்நாடு அரசின் முன்னுரிமை திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

சென்னை, தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் முன்னுரிமை திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். நடைமுறையில் உள்ள 68 திட்டங்கள், 6 எதிர்கால திட்டங்கள், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் தலைமை செயலர் இறையன்பு, அனைத்து துறை செயலர்கள், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பங்கேற்றனர்

15:43 (IST) 13 Mar 2023
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஸ்ரேயஸ் ஐயர் விலகல்

இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

15:26 (IST) 13 Mar 2023
இலங்கை தமிழர்களுக்கு 100 நாள் வேலை தர பரிந்துரை – செஞ்சி மஸ்தான்

இலங்கை தமிழர்களுக்கு 100 நாள் வேலை தர பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்

15:04 (IST) 13 Mar 2023
ஹிண்டன்பெர்க் அறிக்கை

ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து விசாரணை நடத்த எந்த ஒரு விசாரணை ஆணையமும் மத்திய அரசால் அமைக்கப்படவில்லை என மக்களவையில் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

15:03 (IST) 13 Mar 2023
தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.42,600 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,325க்கு விற்பனையாகிறது.

13:50 (IST) 13 Mar 2023
சிலிண்டர் மானியம் அறிவிப்பு

ரேசன் அட்டைதாரர்களுக்கு சமையல் சிலிண்டர் மானியமாக ரூ. 300 அறிவித்துள்ளது.

13:49 (IST) 13 Mar 2023
தமிழக மீனவர்களின் இடையீட்டு மனு

53 மணி நேரம் வரை சுருக்குமடி வலையை உபயோகிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக மீனவர்களின் இடையீட்டு மனுவில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13:15 (IST) 13 Mar 2023
உள்ளூர் விடுமுறை

திருவாரூர், ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப்.1ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.

12:52 (IST) 13 Mar 2023
வெடி விபத்து – தொழிலாளி பலி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கிணறு தோண்டும் போது வெடி விபத்து

எதிர்பாராத விதமாக வெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு – போலீசார் விசாரணை

12:51 (IST) 13 Mar 2023
திருச்சி இளைஞர் உயிரிழப்பு – அமைச்சர் விளக்கம்

கோவாவுக்கு சென்று திருச்சி திரும்பியவர், உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

உயிரிழந்த நபருக்கு, கொரோனா தொற்று இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

12:36 (IST) 13 Mar 2023
வரலாற்று நிகழ்வு – சித்தார்த் மல்ஹோத்ரா வாழ்த்து

ஆஸ்கர் 2023-இல் இந்திய படங்கள் வெற்றி பெற்றதற்கு நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா வாழ்த்து தெரிவித்துள்ளார். எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

12:29 (IST) 13 Mar 2023
இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

டெஸ்ட் சாம்பியன்ஷிப் – இறுதிப் போட்டியில் இந்தியா

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

நியூசிலாந்துடனான முதல் டெஸ்டில் இலங்கை தோற்றதால் இறுதிப்போட்டிக்கு இந்தியா நேரடியாக தகுதி

12:28 (IST) 13 Mar 2023
முதியோர் உதவித்தொகை உயர்த்தி அறிவிப்பு

“70-79 வயதுடைய மீனவ பெண்களுக்கான முதியோர் உதவித்தொகை ரூ.3,000 லிருந்து ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்”

“அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாட திட்டம் அறிமுகம் செய்யப்படும்” பட்ஜெட் தாக்கலில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

12:27 (IST) 13 Mar 2023
புதுச்சேரி: சிலிண்டருக்கு மாதம் ரூ. 300 மானியம்

“அனைத்து குடும்ப அட்டைக்கும் சிலிண்டருக்கு மாதம் ரூ. 300 மானியம் வழங்கப்படும்” – பட்ஜெட் தாக்கலில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

12:26 (IST) 13 Mar 2023
மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

மதுரை விமான நிலையத்தில் அமமுக பிரமுகரை தாக்கிய புகாரில் ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு வழக்குப்பதிவை கண்டித்து, மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்ப்பாட்டம்

12:25 (IST) 13 Mar 2023
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பியூஸ் கோயல்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இந்திய ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக லண்டனில் ராகுல் பேசியது கண்டனத்திற்குரியது. மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வலியுறுத்தல்

12:24 (IST) 13 Mar 2023
பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000

புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வங்கியில் 18 ஆண்டு காலத்திற்கு நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்தப்படும் – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

12:22 (IST) 13 Mar 2023
புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்

புதுச்சேரி அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் – முதல்வர் ரங்கசாமி

12:21 (IST) 13 Mar 2023
மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு. பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமர்வு தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை ஒத்திவைப்பு

11:58 (IST) 13 Mar 2023
கீரவாணி, கார்த்திகிக்கு ரஜினி வாழ்த்து

ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து. மதிப்புமிக்க ஆஸ்கர் விருதை பெற்றுள்ள

ரவாணி, கார்த்திகிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பெருமைமிகு இந்தியர்களுக்கு தலை வணங்குகிறேன் என்று ரஜினி ட்விட்

10:51 (IST) 13 Mar 2023
இன்புளுயன்சா – தமிழகத்தில் முதல் உயிரிழப்பு

திருச்சியில் உயிரிழந்த இளைஞர், இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது . தமிழகத்தில் பிப்ரவரி மாத நிலவரப்படி 545 பேருக்கு இன்ஃபுளுயன்சா பாதிப்பு உறுதி.

10:51 (IST) 13 Mar 2023
‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” – பிரதமர் வாழ்த்து

சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற தமிழக பழங்குடியினத் தம்பதியின் கதை “தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து . நிலையான வளர்ச்சி மற்றும் இயற்கையோடு இணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை இந்த குறும்படம் அற்புதமாக எடுத்துரைத்துள்ளது – பிரதமர்

09:49 (IST) 13 Mar 2023
7 விருதுகளை தட்டிச்சென்றது ‘Everything Everywhere All At Once’ திரைப்படம்

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய விருதுகளை தட்டிச்சென்றது .

09:21 (IST) 13 Mar 2023
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்ற முதல் ஆசியப்பெண்

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை 'EverythingEverywhereAllAtOnce' திரைப்படத்திற்காக மிஷ்ஷெல் யோ வென்றார் . சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்ற முதல் ஆசியப்பெண் என்ற சாதனையையும் படைத்தார்

09:08 (IST) 13 Mar 2023
ஆஸ்கர் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்,

சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதினை வென்றது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்,

08:26 (IST) 13 Mar 2023
தன்னை மீண்டும் நிரூபித்த ஜேம்ஸ் கேமரூன்

சிறந்த காட்சி அமைப்புக்கான ஆஸ்கர் விருதை வென்றது 'Avatar: The Way of Water' திரைப்படம்

08:25 (IST) 13 Mar 2023
12 ஆண்டுகளுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கலாகிறது

புதுச்சேரியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார், முதலமைச்சர் ரங்கசாமி. 12 ஆண்டுகளுக்கு பிறகு, புதுச்சேரி சட்டப்பேரவையில் முழு பட்ஜெட் தாக்கலாகிறது

08:24 (IST) 13 Mar 2023
சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது

சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றது #everythingeverywhereallatonce திரைப்படம்.

Web Title: Tamil news today live oscar awards 12th exam cm stalin modi eps ops