/indian-express-tamil/media/media_files/NZL5dps25Ta7axMhrWmG.jpg)
Tamil news today live
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த மு.க.ஸ்டாலின்
இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில்… pic.twitter.com/ezjX5uqrax
— M.K.Stalin (@mkstalin) September 2, 2024
அமெரிக்க சுற்றுப்பயணத்தில் ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த மு.க.ஸ்டாலின், தந்தை பெரியாரின் ‘இனிவரும் உலகம்’ புத்தகத்தில் உள்ள கருத்தோடு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
-
Sep 04, 2024 00:03 IST
சிகாகோ பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
அமெரிக்காவின் சிகாகோ பகுதிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த தமிழர்கள்!
-
Sep 03, 2024 21:32 IST
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தேனி கன்னியகுமரி மாவட்டங்களில், அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Sep 03, 2024 21:29 IST
பெண் டி.எஸ்.பியை தாக்கிய வழக்கில் 7 பேர் கைது
அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பியை தாக்கிய வழக்கில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓட்டுனர் கொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
-
Sep 03, 2024 21:01 IST
பாலியல் புகாரில் வழக்கு: நடிகர் நிவின்பாலி விளக்கம்
பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ள நிவின் பாலி "முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை" என்று கூறியுள்ளார்.
-
Sep 03, 2024 19:45 IST
நடிகர் நிவின் பாலி மீது ஜாமீனில் வெளிவராத பிரிவில் வழக்கு
பெண்ணுக்கு வெளிநாட்டில் பாலியல் தொல்லை கொடுத்தாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பட வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தாக அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், எர்ணாகுளம், ஊனுகால் காவல்துறையினர் நிவின்பாலி மீது ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தற்போது சிறப்பு புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
-
Sep 03, 2024 18:47 IST
GOAT பட விளம்பர பதாகைகளில் கொடி, அடையாள சின்னம் இருக்கக் கூடாது - த.வெ.க.
GOAT திரைப்பட விளம்பரத்தில் த.வெ.க. கொடி மற்றும் எந்த ஒரு அடையாள சின்னமும் விளம்பர பதாகைகளில் இருக்கக் கூடாது என தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் உரிய அனுமதி பெற்று த.வெ.க. கொடியை ஏற்ற கட்சித் தலைமை அனுமதிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், இந்த உத்தரவு வந்துள்ளது
-
Sep 03, 2024 18:25 IST
மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே
பெங்களூரு ராமேஸ்வரம் காஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சென்னை உயர்நீதிமன்றத்தில், மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
-
Sep 03, 2024 18:13 IST
தமிழகத்தில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல் துறையினருக்கு தெரியுமா? தெரியாதா? ஐகோர்ட் கேள்வி
பெரும்பாக்கம், துரைப்பாக்கம் குடிசை மாற்றுவாரிய கட்டட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரிய வழக்கில், தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல் துறையினருக்கு தெரியுமா? தெரியாதா? என காவல் துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா? இல்லை? என்று கேட்ட நீதிமன்றம், இந்த வழக்குகளை சுதந்திரமான ஒரு அமைப்பின் வசம் ஒப்படைக்கலாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
அதற்கு சென்னை பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போதைப் பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளன என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
-
Sep 03, 2024 17:45 IST
மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும் - ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை
G.O.A.T திரைப்படம் திரைக்கு வரும்போது மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும் என ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை வழங்கியுள்ளார்
-
Sep 03, 2024 17:35 IST
பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ மகன், மருமகள் மீது குற்றச்சாட்டு பதிவு
பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன், மருமகள் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்தது. வீட்டு பணிப்பெண்னை துன்புறுத்தியதாக ஆண்டோ மதிவாணன், அவரின் மனைவி மர்லினா ஆண்டோ மீது வன்கொடுமை தடை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த குற்றமும் செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர். சாட்சி விசாரணைக்காக வழக்கின் விசாரணை செப்டம்பர் 24ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது
-
Sep 03, 2024 17:30 IST
நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு
திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு 15 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது
-
Sep 03, 2024 17:29 IST
பாடகி சுசித்ராவுக்கு எதிராக கேரள நடிகை ரீமா கல்லிங்கல் புகார்
ரீமா கல்லிங்கல் இளம்பெண்களுக்கு போதை விருந்து நடத்தியதாக பாடகி சுசித்ரா குற்றம்சாட்டி இருந்ததையடுத்து, கேரள திரைத்துறையில் பாலியல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழுவிடம் ரீமா கல்லிங்கல் புகார் அளித்துள்ளார். மான நஷ்ட ஈடு கேட்டு, சுசித்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் ரீமா கல்லிங்கல் நடவடிக்கை எடுத்துள்ளார். தன் மீதான, சுசித்ராவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, அப்படி எந்த நிகழ்வும் நடந்தது இல்லை என நடிகை ரீமா கல்லிங்கல் தெரிவித்துள்ளார்
-
Sep 03, 2024 17:26 IST
உதயநிதியை சந்தித்தது ஏன்? கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பேட்டி
திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து ஆய்வு செய்தோம். கடந்த வருடம் ஐதராபாத் சென்று ஆய்வு செய்தோம். கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் உதயநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிப்போம் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்
-
Sep 03, 2024 16:37 IST
நிதி நிறுவனத்தில் ரூ.24 கொடி மோசடி: தேவநாதனை செப். 17-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு
மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.24 கோடி நிதி மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட தேவநாதனை செப்டம்பர் 17-ம் தேதி வரை சிறையில் அடைக்க பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கைதான குணசீலன், மகிமைநாதன் ஆகியோரையும் செப்டம்பர் 17-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு.
-
Sep 03, 2024 15:54 IST
அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல் - ஒருவர் கைது
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மறியல் போராட்டத்தைத் தடுக்க முயன்ற பெண் டி.எஸ்.பி காயத்ரியை தாக்கிய நெல்லிகுளத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Sep 03, 2024 15:52 IST
தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு - உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை
ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட திருச்சியைச் சேர்ந்த சிறுமி உயிரிழந்ததையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. காலாவதியான நூடுல்ஸ் விற்பனை செய்யப்பட்டா சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கிடங்கு அல்லது கடைக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Sep 03, 2024 15:30 IST
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 58-வது முறையாக நீட்டிப்பு - கோர்ட் உத்தரவு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 58வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிட்டி யூனியன் வங்கியின் கரூர் கிளையின் தலைமை மேலாளராக பணியாற்றிய ஹரிஷ்குமாரிடம் செந்தில் பாலாஜி தரப்பில் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
-
Sep 03, 2024 15:05 IST
"காவல்துறையினருக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துக" - இ.பி.எஸ் கருத்து
"விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரி அவர்களை போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. தி.மு.க ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!
மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த விடியா தி.மு.க அரசுக்கும், பொம்மை முதல்வருக்கும் கடும் கண்டனம்.
அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி அவர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், காவல்துறையினர் உட்பட தமிழ்நாட்டில் அனைவருக்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்." என்று எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
Sep 03, 2024 15:00 IST
நக்கீரர் அலங்கார வளைவு அகற்றம் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
"மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் அலங்கார வளைவை பொதுமக்களுக்கு சிரமமின்றி அகற்ற வேண்டும். சாலைகள் விரிவுபடுத்தும் போது அந்த பகுதியில் உள்ள அலங்கார நுழைவாயில்களையும் அப்புறப்படுத்தினால் தானே போக்குவரத்து சீராகும்" என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள நுழைவாயிலையும் அகற்றிடவும் உத்தரவிட்டுள்ளனர்.
-
Sep 03, 2024 14:09 IST
போராட்டத்தில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, திருச்சுழியில் கொலை செய்யப்பட்ட காளிக்குமார் என்பவரின் உறவினர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. காயத்ரி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள், பெண் டி.எஸ்.பி-யின் தலைமுடியை பிடித்து இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
Sep 03, 2024 14:07 IST
"விஜய் மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பாங்க" - செல்வப்பெருந்தகை பேச்சு
"5 முனைப் போட்டி - இந்தியா கூட்டணிக்கு எந்த சவாலும் இல்லை. விஜய்க்கு மட்டும் எப்படி மறுப்பாங்க? மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பாங்க" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
Sep 03, 2024 14:06 IST
'கோட்' - சிறப்பு காட்சிகளை ரத்து செய்த 80% திரையரங்குகள்
தமிழ்நாட்டில் 'கோட்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை 80 சதவீத திரையரங்குகள் ரத்து செய்துள்ளன. சிறப்பு காட்சி டிக்கெட் ஒன்றுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை விநியோகஸ்தர்கள் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விநியோகஸ்தர்களின் நெருக்கடியால் சிறப்பு காட்சிகளை திரையரங்கு உரிமையாளர்கள் ரத்து செய்துள்ளனர். இதனால், காலை 9 மணி சிறப்பு காட்சியை எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
-
Sep 03, 2024 13:30 IST
'2026 சட்டமன்றத் தேர்தல் சுமுகமாக இருக்காது' - அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சு
லால்குடி நடைபெற்ற தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என தி.மு.க நிர்வாகிகள் வேதனைப்படுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலைப் போன்று 2026 சட்டப்பேரவை தேர்தல் சுமுகமாக இருக்காது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி போல், வருகிற சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி அமையும் சூழல் இல்லை" என்று கூறினார்.
-
Sep 03, 2024 13:00 IST
ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக விற்பனை
ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக விற்பனை
ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக தனி நபருக்கு விற்பனை செய்வதாக புகார்
ரேஷன் கடையில் இருந்து ஆட்டோவில் அரிசி மூட்டைகளை ஏற்றி செல்லும் காட்சிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் பங்காரம் நியாய விலைக்கடையில் அதிர்ச்சி சம்பவம்
ரேஷன் கடை ஊழியர், அரிசியை வாங்கியவர் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தல்
-
Sep 03, 2024 12:59 IST
வடிவேலு வழக்கு - சிங்கமுத்து தரப்புக்கு அவகாசம்
யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்டஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கு
2 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
-
Sep 03, 2024 12:32 IST
திரையரங்கில் உணவுப் பொருட்களை அனுமதிக்க வேண்டும்
திரையரங்கில் உணவுப் பொருட்களை அனுமதிக்க வேண்டும். திரையரங்கிற்குள் உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்காமல், எம்.ஆர்.பி. விலையில் விற்க வேண்டும் - நடிகர் கராத்தே ராஜன்
-
Sep 03, 2024 12:06 IST
மேகதாது - தமிழகத்திற்கே அதிக பயன்
"மேகதாது - தமிழகத்திற்கே அதிக பயன்"
"மேகதாது அணை கட்டினால், கர்நாடகாவை விட தமிழகமே அதிக பயன்பெறும்"
"2 மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார், மேகதாது அணை குறித்து தற்போது வேறு எதுவும் பேச விரும்பவில்லை"
சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து ஆய்வு செய்த, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி
-
Sep 03, 2024 11:41 IST
சென்னையில் டி.கே.சிவக்குமார் ஆய்வு
கர்நாடக துணை முதல்வர் சென்னையில் ஆய்வு
சேத்துப்பட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை பார்வையிட்டு, செயல்பாடுகளை கேட்டறிந்த டி.கே.சிவக்குமார்
திடக்கழிவு மேலாண்மை குறித்து, சென்னையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆய்வு
பெங்களூருவில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது தொடர்பாக சென்னையில் ஆய்வு
-
Sep 03, 2024 11:20 IST
5 வயது மகளுக்கு தந்தை பாலியல் தொல்லை
சென்னையில் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை போக்சோவில் கைது, குழந்தைகளை குளிக்க வைப்பதாக அழைத்து சென்ற அவர், பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதனை, கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் மனைவி, குழந்தையிடம் விசாரித்ததில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.
சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தநிலையில் தந்தையை கைது செய்து போக்சோவில் வழக்குபதிந்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
-
Sep 03, 2024 11:19 IST
பெண் காட்டு யானை பலி
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட அவரல்லா வனப்பகுதியில் பெண் காட்டு யானை சடலமாக கண்டெடுப்பு
நேற்று மாலை ரோந்துப்பணியின் போது யானையின் சடலத்தை வனத்துறையினர் பார்த்துள்ளனர். இன்று யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.
-
Sep 03, 2024 11:13 IST
மேலும் ஒரு தனியார் பள்ளியில் போலி NCC முகாம்
கிருஷ்ணகிரி அருகே மேலும் ஒரு தனியார் பள்ளியில் போலி NCC முகாம் நடத்தி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - கடந்த ஜனவரி மாதம் நடந்த இச்சம்பவத்தில் பள்ளியின் முதல்வர் வினோதினியை கைது செய்து விசாரணை
பர்கூர் அருகே உள்ள பள்ளியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில், இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய நபரான சிவராமன் விஷம் அருந்தி தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது
-
Sep 03, 2024 10:58 IST
தமிழக வீராங்கனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்யஸ்ரீ சிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Congratulations to Nithya Sre Sivan on winning the Bronze medal in the Women’s Singles Badminton SH6 event at the #Paralympics2024! Her feat has inspired countless people and highlights her passion as well as dedication to the game. @07nithyasre#Cheer4Bharat pic.twitter.com/NwV22kVPnb
— Narendra Modi (@narendramodi) September 3, 2024 -
Sep 03, 2024 10:32 IST
2 நாள் பயணமாக புருனே, சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (செப்.3) புருனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்கிறார்.
-
Sep 03, 2024 10:14 IST
கனமழை: ஆந்திராவில் 19 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கனமழையால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் 5 ஹெலிகாப்டர்கள், 188 படகுகள், 283 நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 176 நிவாரண முகாம்களில் 41,927 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்
-
Sep 03, 2024 09:38 IST
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
வடமேற்கு அரபிக்கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய அரபிக்கடலில் உள்ளது.
வரும் 5ம் தேதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்
- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Sep 03, 2024 09:37 IST
சீமான் மீதான வழக்கை விசாரிக்க அதிகாரி நியமனம்
விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் போது பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது பதியப்பட்ட வழக்கை விசாரிக்க, விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் உதவி ஆணையர் சுரேஷ் குமார் நியமனம்
-
Sep 03, 2024 08:38 IST
தமிழ் சினிமாவில் பாலியல் புகாரில் 500 பேர் சிக்குவர்: நடிகை ரேகா நாயர்
தமிழ் சினிமாவில் பாலியல் புகாரில் 500 பேர் சிக்குவர். அனைத்து மொழி சினிமாவிலும் பாலியல் அத்துமீறல் உள்ளன. தமிழ் சினிமாவில் மட்டும் லட்சக்கணக்கில் புகார்கள் உள்ளன. தமிழ் சினிமாவில் ஏதேனும் அறிக்கை வெளியானால் 500 பேர் சிக்குவர். புகார் கூறும் நடிகைகளுக்கு பிரபல நடிகர்களால் மிரட்டல் வருகிறது.
- நடிகை ரேகா நாயர்
-
Sep 03, 2024 07:45 IST
சிகாகோவில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
#Watch | முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆரத்தி எடுத்து வரவேற்ற சிகாகோ தமிழ்ச் சங்கத்தினர்!#SunNews | #CMStalinInUS | #MKStalinInUSA | @mkstalin pic.twitter.com/p1v8XrC0gl
— Sun News (@sunnewstamil) September 3, 2024 -
Sep 03, 2024 07:36 IST
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, கோவை, நீலகிரி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Sep 03, 2024 07:34 IST
இந்தியாவிற்கு 3வது தங்கம்
பாராலிம்பிக் ஈட்டி எறிதல் எப்64 போட்டியில் 70.59 மீட்டர் வீசி தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் சுமித் அன்டில்
Congratulations 🙌 to #SumitAntil winning the Gold 🥇in the Men's Javelin F64 event at 🇮🇳🇮🇳#Paralympic2024 🇮🇳#sumit_javelin #JavelinThrow #Paralympics2024 🥇 #Cheer4Bharat 🇮🇳#Badminton #ParaArchery pic.twitter.com/iF3hFjI0QD
— भारत सिंह 🇮🇳 (@oscarbharat) September 2, 2024 -
Sep 03, 2024 07:26 IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 16,000 கன அடி நீர்வரத்து
தருமபுரி: பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 16,000 கன அடியாக உள்ளது
-
Sep 03, 2024 07:26 IST
சென்னையில் பரவலாக சாரல் மழை
சென்னையில் பட்டினப்பாக்கம், மெரினா, அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 29.6 மில்லி மீட்டர் மழை பதிவு
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Sep 03, 2024 07:26 IST
முல்லைப்பெரியாறு அணையில் 12 மாதங்களுக்குள் ஆய்வு
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் 12 மாதங்களுக்குள் அணை பாதுகாப்பு தொடர்பான ஆய்வை நடத்த வேண்டும் என முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.