/indian-express-tamil/media/media_files/T5x7YkThrUC8Pe7u6zDq.jpg)
Tamil news
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
விசாரணை நடத்த குழுவை அமைத்தது மத்திய அரசு
நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைத்தது மத்திய அரசு.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறலுக்கான காரணங்களை குழு ஆராயும். பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு குழு பரிந்துரைக்கும்- மத்திய உள்துறை அமைச்சகம்
-
Dec 14, 2023 21:57 IST
மஹுவா மொய்த்ரா வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
மக்களவையில் இருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று (டிச.15, வெள்ளிக்கிழமை) விசாரிக்க உள்ளது. -
Dec 14, 2023 21:49 IST
மக்களவை பாதுகாப்பு மீறல்: திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி
“கடவுச்சொல் பகிர்ந்ததற்காக மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டுள்ளார்; ஆனால் ஊடுருவல்காரர்களுக்கு பாஸ் வழங்கிய பாஜக எம்பி மீது நடவடிக்கை இல்லை” என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குணால் கோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டிச.13ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் வண்ண புகை குப்பிகள் வீசப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரை போலீசார் தேடிவருகின்றனர். -
Dec 14, 2023 21:35 IST
மக்களவை பாதுகாப்பு மீறல் துரதிருஷ்டவசமானது: ஹேமந்த் சோரன்
“நாடாளுமன்றத்திற்குள் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது கவலைக்குரிய விஷயம், இதை (லோக்சபா) சபாநாயகர் கவனித்துக் கொள்வார்” என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
-
Dec 14, 2023 21:17 IST
மக்களவை விதி மீறல்: நால்வர் மீதும் பயங்கரவாத குற்றச்சாட்டு.. 8 பேர் சஸ்பெண்ட்
பார்லிமென்ட் பாதுகாப்பு மீறலில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் பயங்கரவாத குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும், பாதுகாப்புப் பணியாளர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
-
Dec 14, 2023 20:45 IST
திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன் இடைநீக்கம் வாபஸ்
நாடாளுமன்ற மக்களவை பாதுகாப்பு மீறல் தொடர்பாக அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அப்போது மக்களவைக்கு வராத திமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பார்த்திபனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், எஸ்.ஆர்.பார்த்திபன் மீதான இடைநீக்கத்தை அரசு கடிதம் மூலம் மக்களவை வாபஸ் பெற்றது. -
Dec 14, 2023 20:40 IST
மணீஷ் சிசோடியா மறுஆய்வு மனு தள்ளுபடி
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
-
Dec 14, 2023 20:25 IST
நாடாளுமன்ற பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி
நாடாளுமன்ற பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து, பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அத்துமீறல் தொடர்பான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். -
Dec 14, 2023 20:05 IST
மக்களவை பாதுகாப்பு மீறல், அரசியலாக்க கூடாது: பாஜக
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது; குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்பி லாக்கெட் சட்டர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.
-
Dec 14, 2023 19:37 IST
எதிர்க்கட்சிகள் விமர்சிக்க கூடாதா? ராஜீவ் சுக்லா
எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை விமர்சிக்க கூடாது என்றால் நாடாளுமன்றத்தால் என்ன பயன்? என காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா கேள்வியெழுப்பி உள்ளார்.
-
Dec 14, 2023 19:13 IST
மக்களவையில் பாதுகாப்பு மீறல்: 4 பேருக்கு 7 நாள்கள் காவல்
நாடாளுமன்ற மக்களவையில் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்ட மனோரஞ்சன், அமோல் ஷிண்டே, நீலம் ஆசாத், சாகர் சர்மா உள்ளிட்ட 4 பேருக்கு 7 நாள்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் நீலம் மற்றும் அமோல் பாராளுமன்றத்துக்கு வெளியேயும், மனோரஞ்சன் மற்றும் சாகர் ஆகிய இருவரும் மக்களவைக்கு உள்ளேயும் வண்ண புகையை வீசினர். -
Dec 14, 2023 18:41 IST
15 எம்.பி-க்கள் சஸ்பெண்ட்: அமித்ஷாவை விளக்கம் அளிக்க வலியுறுத்தியது குற்றமா? - கார்கே கேள்வி
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில் பதிவு : “நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கோரியதற்காக 15 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயகத்தை சஸ்பெண்ட் செய்ததற்கு ஒப்பானது; அவர்கள் செய்த குற்றம் தான் என்ன?; உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவையில் விளக்கமளிக்க வலியுறுத்தியது குற்றமா?; பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம் நடத்த கோரியது குற்றமா?; இந்த நடவடிக்கை சர்வாதிகாரத்தின் கொடூரமான தன்மையைக் காட்டவில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Dec 14, 2023 18:26 IST
வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
வேலூர், வி.ஐ.டி பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
-
Dec 14, 2023 18:12 IST
வராத எம்.பி சஸ்பெண்ட்; எந்த அளவுக்கு நியாயமாக நடந்துகொள்கிறார்கள் பாருங்க - கனிமொழி கேள்வி
தி.மு.க எம்.பி கனிமொழி: “மக்களவையை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டதால், 15 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால், தி.மு.க எம்.பி பார்த்திபன் இன்று அவைக்கே வரவில்லை, ரிஜிஸ்டரில் அவர் கையெழுத்துகூட இல்லை. வராத ஒருவரை சஸ்பெண்ட் செய்கிறார்கள் என்றால், எந்த அளவுக்கு நியாயமாக நடந்துகொள்கிறார்கள் பாருங்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Dec 14, 2023 18:07 IST
15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்; உடனடியாக திரும்ப பெற வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்
தி.மு.க எம்.பி கனிமொழி உள்பட 15 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக விரோதம்; எம்.பி.க்களின் இடைநீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை கண்டிக்கத்தக்கது; எம்.பி.க்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது நாடாளுமன்றத்தில் புதிய விதியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Dec 14, 2023 18:07 IST
15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்; உடனடியாக திரும்ப பெற வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்
தி.மு.க எம்.பி கனிமொழி உள்பட 15 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக விரோதம்; எம்.பி.க்களின் இடைநீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை கண்டிக்கத்தக்கது; எம்.பி.க்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது நாடாளுமன்றத்தில் புதிய விதியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Dec 14, 2023 18:01 IST
எம்.பி.க்கள் இடைநீக்கம்: பயங்கரமான, ஜனநாயக விரோத நடவடிக்கை: காங். பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், “நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த அதிர்ச்சிகரமான பாதுகாப்பு மீறல் குறித்து அரசிடம் பதில் அளிக்கக் கோரிய எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்த கொடூரமான, ஜனநாயக விரோத நடவடிக்கை. ஒருபுறம் பொறுப்புக்கூறல் கோரியதற்காக 5 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டாலும், மறுபுறம், அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. கேடுகெட்டவர்களை நுழைய வசதி செய்த பா.ஜ.க எம்.பி. இது ஜனநாயகக் கொலை. பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்பாக ஆக்கியுள்ளது. ஜனநாயக நடைமுறை என்ற பாசாங்கு கூட மிச்சமில்லை” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Dec 14, 2023 17:28 IST
டெரெக் ஓ பிரையன் சஸ்பெண்ட்; அமித்ஷா பதவி விலக திரிணாமூல் காங்கிரஸ் வலியுறுத்தல்
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி டெரெக் ஓ பிரையனை இடைநீக்கம் செய்ததற்காக பா.ஜ/.க தலைமையிலான மத்திய அரசை திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
-
Dec 14, 2023 17:28 IST
டெரெக் ஓ பிரையன் சஸ்பெண்ட்; அமித்ஷா பதவி விலக திரிணாமூல் காங்கிரஸ் வலியுறுத்தல்
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி டெரெக் ஓ பிரையனை இடைநீக்கம் செய்ததற்காக பா.ஜ/.க தலைமையிலான மத்திய அரசை திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
-
Dec 14, 2023 16:48 IST
எண்ணெய் அகற்றும் பணியை டிசம்பர் 17-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்துள்ள எண்ணெய் அகற்றும் பணியை டிசம்பர் 17ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மணலி தொழிற்சாலை சங்கங்கள் எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபடாதது அதிருப்தி அளிக்கிறது. மீனவர்களே எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபடும்போது, மணலி தொழிற்சாலை சங்கங்களும் பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவித்து, பசுமை தீர்ப்பாயம் வழக்கை டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
-
Dec 14, 2023 16:21 IST
சாலை மரணங்களில் 100ல் 13 பேர் இந்தியர்கள்
கடந்த 2021ம் ஆண்டில் நடைபெற்ற சாலை மரணங்களில் 100ல் 13 பேர் இந்தியர்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது
-
Dec 14, 2023 16:01 IST
40 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றம்
எண்ணூரில் இதுவரை 40 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. எண்ணெய் கழிவுகளில் நச்சுத்தன்மை இருப்பதாக கூறப்படும் நிலையில், சி.பி.சி.எல் நிறுவன எண்ணெய் கசிவு குறித்து மதிப்பிட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது
-
Dec 14, 2023 15:45 IST
கனிமொழி, சு.வெங்கடேசன், ஜோதிமணி உள்பட 14 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்
மக்களவையில் இருந்து 14 எம்.பி.,கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாணிக்கம் தாகூர், பென்னி பெஹனன், கே ஸ்ரீகண்டன், முகமது ஜாவேத் (அனைவரும் காங்கிரசைச் சேர்ந்தவர்கள்); பி.ஆர்.நடராஜன் மற்றும் எஸ்.வெங்கடேசன் (இருவரும் சி.பி.எம்), கனிமொழி மற்றும் எஸ்.ஆர் பார்த்திபன் (இருவரும் தி.மு.க), மற்றும் சி.பி.ஐ.,யின் கே சுப்பராயன்.
குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சபை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
டி.என் பிரதாபன், ஹிபி ஈடன், எஸ் ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டீன் குரியகோஸ் ஆகிய ஐந்து காங்கிரஸ் எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வதற்கான தனி தீர்மானத்தையும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று முன் தினம் முன்வைத்தார்.
-
Dec 14, 2023 15:32 IST
தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஐ.ஜியாக தமிழ் சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மகேஸ்வர் தயால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
Dec 14, 2023 15:12 IST
நாடாளுமன்றத்தில் கடும் அமளி; 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
சபை நடவடிக்கைகளை சீர்குலைத்ததற்காக சபாநாயகரால் பெயரிடப்பட்ட 5 காங்கிரஸ் எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
-
Dec 14, 2023 14:45 IST
பள்ளி வாகனத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு
பள்ளி வாகனத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு. திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளி வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
-
Dec 14, 2023 14:31 IST
புயல் நிவாரணம் - டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
புயல் நிவாரணம் - டோக்கன் வழங்கும் பணி தொடக்கம் . சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் ரூ.6000 நிவாரணம் பெறுவதற்கான, டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
-
Dec 14, 2023 14:18 IST
மாநிலங்களவை ஒத்திவைப்பு: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி
மாநிலங்களவை ஒத்திவைப்பு எதிர்க்கட்சிகளின் கடும் அமளி. காரணமாக மாநிலங்களவை ஒத்திவைப்பு சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் எம்.பி., டெரிக் ஓ பிரைன் அவையை விட்டு வெளியேறாததால், அவரை வெளியேறுமாறு அவை தலைவர் மீண்டும் வலியுறுத்தல்
-
Dec 14, 2023 14:15 IST
ரூ. 6000 நிவாரண தொகை - நெறிமுறைகள் வெளியீடு
ரூ. 6000 நிவாரண தொகை - நெறிமுறைகள் வெளியீடு. ரூ.6000 புயல் நிவாரண தொகை வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு நிவாரணத் தொகை விநியோகத்திற்கு ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் நான்கு பணியாளர்களை பணியமர்த்த வேண்டும் வரும் ஞாயிற்று கிழமை முதல் நிவாரண தொகை வழங்க அறிவுறுத்தல் ஞாயிற்று கிழமை தொடங்கி 7 நாட்களுக்குள் நிவாரண தொகையை வழங்க வேண்டும் டோக்கன்களை ரேஷன் ஊழியர்கள் தான் நேரில் சென்று வழங்க வேண்டும், மூன்றாம் நபரை பணியில் ஈடுபடுத்த கூடாது.
-
Dec 14, 2023 14:12 IST
பள்ளியில் மரம் விழுந்து 16 மாணவர்கள் காயம்
பள்ளியில் மரம் விழுந்து 16 மாணவர்கள் காயம் .மதுரை மாவட்டம் தெற்குத்தெரு கிராமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளியில் மரம் விழுந்து 16 மாணவர்கள். காயம் மரத்தடியில் வகுப்பு நடைபெற்ற நிலையில், மரம் வேரோடு சாய்ந்து விழுந்து விபத்தில் 9ம் வகுப்பு மாணவர்கள் காயம் மாணவ, மாணவிகள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு.
-
Dec 14, 2023 14:11 IST
செந்தில் பாலாஜி வழக்கு - காவல்துறை தகவல்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகைக்கு ஒப்புதல் மற்றும் விசாரணைக்கு அனுமதி கிடைக்கவில்லை எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தகவல் விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தது சிறப்பு நீதிமன்றம்.
-
Dec 14, 2023 14:09 IST
தமிழகத்தில் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு
16 - 17 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
-
Dec 14, 2023 14:06 IST
புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்ய ரூ.12,659 கோடி தேவை
புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்ய ரூ.12,659 கோடி தேவை என மத்திய குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்; தற்காலிக நிவாரண தொகையாக ரூ.7,033 கோடி ஒதுக்கிட வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை; தலைமைச் செயலகத்தில் மத்திய குழுவிடம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்; ஏற்கனவே மத்திய அரசிடம் ரூ.5,060 கோடி தேவை என கடிதம் எழுதிய நிலையில், தற்போது கூடுதல் நிதி வழங்க கோரிக்கை
-
Dec 14, 2023 14:05 IST
என் மகன் செய்த செயலுக்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும்
"என் மகன் செய்த செயலுக்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும்; அவரது செயல் எங்கள் குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது; என் மகனுடம் இருந்தவர்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது" - மக்களவையில் புகைக் குப்பி வீசிய விவகாரத்தில் கைதான சாகர் சர்மாவின் தந்தை ரோஷன் லால் சர்மா பேட்டி
-
Dec 14, 2023 13:57 IST
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி: டோக்கன் விநியோகம் தொடக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட கீழ்படப்பை பகுதியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதிக்கான டோக்கன்கள் விநியோகிக்கும் பணி தொடக்கம்
-
Dec 14, 2023 12:47 IST
ரூ.6,000 நிவாரணம்: ஞாயிற்றுக் கிழமை தொடங்கி வைக்கும் ஸ்டாலின்
மிக்ஜாம் புயல் - மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை வரும் 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
-
Dec 14, 2023 12:29 IST
தே.மு.தி.க பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு
தேமுதிகவின் பொருளாளராக 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்த், தற்போது பொதுச் செயலாளராகியுள்ளார்.
விஜயகாந்த் தலைமையில் இன்று நடந்த தேமுதிக பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா தேர்வு. 2011-ம் ஆண்டு தேர்தலில் தேமுதிகவுக்காக பரப்புரை மேற்கொண்ட பிரேமலதா, 2018ம் ஆண்டு பொருளாளர் ஆனார். கட்சியின் நிறுவன தலைவராக மட்டும் விஜயகாந்த தொடர்கிறார்.
-
Dec 14, 2023 12:15 IST
டெரிக் ஓ பிரையன், கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்
நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்
-
Dec 14, 2023 12:15 IST
டெரிக் ஓ பிரையன் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்
நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்
-
Dec 14, 2023 12:10 IST
தே.மு.தி.க பொதுக்குழுவில் விஜயகாந்த் பங்கேற்பு
தே.மு.தி.க பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்பு. காரில் வந்த விஜயகாந்தை தே.மு.தி.க தொண்டர்கள் சூழ்ந்து உற்சாக வரவேற்பு
-
Dec 14, 2023 12:10 IST
தே.மு.தி.க பொதுக்குழுவில் விஜயகாந்த் பங்கேற்பு
தே.மு.தி.க பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்பு. காரில் வந்த விஜயகாந்தை தே.மு.தி.க தொண்டர்கள் சூழ்ந்து உற்சாக வரவேற்பு
-
Dec 14, 2023 12:08 IST
ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்க அதிகாரிகள் பயந்தனர்: ஸ்டாலின்
2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது - முதல்வர்
ஏரியை திறக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்க அதிகாரிகள் பயந்தனர்.
2015ல் கொஞ்சம் கொஞ்சமாக ஏரியை திறந்திருந்தால் பலர் உயிரிழக்காமல் இருந்திருப்பார்கள் - முதல்வர் ஸ்டாலின்
-
Dec 14, 2023 12:03 IST
முதல்வர் ஸ்டாலினுடன் மத்திய குழு ஆலோசனை
முதலமைச்சருடன் மத்திய குழு ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்திய குழுவினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை
புயல் பாதிப்புகளை கடந்த 2 நாட்களாக மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்
இடைக்கால நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ.5060 கோடி தமிழக அரசு கேட்டிருந்த நிலையில் மத்திய குழு ஆய்வு மேற்கொண்டனர்
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தனர்
புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கு மத்திய அரசுக்கு தேவையான பரிந்துரைகளை வழங்க வேண்டும் - முதல்வர்
-
Dec 14, 2023 12:02 IST
எதிர்க்கட்சிகள் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைப்பு
மாநிலங்களவை 12 மணி வரையும், மக்களவை 2 மணி வரையும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி
-
Dec 14, 2023 11:31 IST
மக்களவை ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட்
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு, வண்ண புகைக் குண்டு வீசிய விவகாரத்தில் மக்களவை பாதுகாப்பு ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்து மக்களவை செயலகம் உத்தரவு
-
Dec 14, 2023 11:29 IST
இவ்வளவு பெரிய மழை வரும் என எச்சரிக்கவில்லை: ஸ்டாலின்
இவ்வளவு பெரிய மழை வரும் என எச்சரிக்கவில்லை. கடந்த 47 வருட வரலாற்றில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது.
2015ஐ விட தற்போது அதிக மழை பெய்த போதிலும், மக்களை மீட்டுள்ளது திமுக அரசு. அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் என அத்தனை பேரும் களத்தில் நின்று பணியாற்றியதால் தான் பெரும் சேதம் தவிர்ப்பு.
ஒரு நாள் முழுவதும் இடைவிடாத மழை பெய்யும், வெள்ளம் வரும் என்றெல்லாம் எச்சரிக்கை செய்யவில்லை - முதல்வர் ஸ்டாலின்
-
Dec 14, 2023 10:57 IST
நாடாளுமன்ற சம்பவம்- திமுக எம்பி ஒத்திவைப்பு தீர்மானம்
நாடாளுமன்ற மக்களவையில், வண்ண புகைக் குண்டு வீசிய விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்
மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ்
வண்ண புகை குண்டு வீச்சு சம்பவம், பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் செய்ய வேண்டும்
மாநிலங்களவையின் வழக்கமான அலுவலை ஒத்தி வைத்துவிட்டு விவாதிக்க வலியுறுத்தல்
-
Dec 14, 2023 10:46 IST
25 இடங்களில் இலவச மருத்துவ முகாம்கள்
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன் பெறும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை முழுவதும் இன்று 25 இடங்களில் இலவச முகாம்கள் நடக்கிறது.
விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இதனை கோடம்பாக்கத்தில் தொடங்கி வைத்தார்.
-
Dec 14, 2023 10:33 IST
பள்ளிக்கல்வித்துறை அரசாணை
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களுக்கு சிறப்பு பயிற்றுநர்களுக்கு ரூ.25,000 ஆக உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு
-
Dec 14, 2023 10:12 IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ரூ.46,560 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,820-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Dec 14, 2023 10:08 IST
அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின்கட்டணம் செலுத்தலாம்
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின்கட்டணம் செலுத்தலாம் என அறிவிப்பு
மழை பாதிப்பு காரணமாக மின் கணக்கீடு செய்வதில் சிரமமாக உள்ளதால் நடவடிக்கை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.