Advertisment

Tamil News Update: பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் அமர்ந்து வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today, Russia-Ukraine War Updates, Sri Lanka crisis, 15 April 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Update: பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் அமர்ந்து வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!

மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக கள்ளழகர், பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரையில் அமர்ந்து, வைகை ஆற்றில் இன்று காலை எழுந்தருளினார். வைகை ஆற்றில் எழுந்தருளும் கள்ளழகரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலே வைகை ஆற்றில் குவிந்தனர். 2 ஆண்டுகளுக்குப் பின் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியதால் மக்கள் உற்சாகத்துடன், கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் சாமி தரிசனம் செய்தனர்.

Advertisment

மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது!

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில், மீன்கள் இனப்பெருக்கத்திற்கு ஏதுவாக ஜூன் 15ம் தேதி வரை, 60 நாட்களுக்கு  மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

&t=16s

Tamil Nadu news live update

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் பிரியாவிடை  அம்மனும் எழுந்தருளினர். அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதையொட்டி, மதுரை மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம் குவிந்தது.

நீட் விலக்கு மசோதா.. ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பாதது வேதனை அளிக்கிறது. சட்டப்பேரவையில் இருமுறை மசோதா நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டும், நேரில் வற்புறுத்தியும் ஆளுநர் அனுப்பவில்லை. நீட் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்புவது குறித்த உறுதியான பதில் பெறப்படாத நிலையில் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வது முறையாக இருக்காது என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா!

ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலைக்கு காரணம் என புகார் கூறப்பட்ட நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். கர்நாடக அரசுக்கு ஏற்பட்ட அசௌகரியமான சூழ்நிலை காரணமாக நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்; நான் எந்த தவறும் செய்யவில்லை, நான் களங்க மற்றவன் என்பதை விரைவில் நிரூபிப்பேன்"என்று ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.

சீனாவில் கொரோனா புதிய உச்சம்!

சீனாவில் ஷாங்காய் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அடுத்த இரு வாரங்களுக்கு மேல் அங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:32 (IST) 15 Apr 2022
    கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா

    கான்ராக்டர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்


  • 22:30 (IST) 15 Apr 2022
    ஐபிஎல் கிரிக்கெட் : ஐதராபாத் அணிக்கு 176 ரன்கள் இலக்கு

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று :ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்துள்ளது. தொடர்ந்து 176 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளது


  • 22:29 (IST) 15 Apr 2022
    மனிதம்தான் நமது அடிப்படை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    எல்லைக் கோடுகளும், கடலும் பிரித்தாலும் இலங்கைத் தமிழர்கள் என்றுமே நம் உறவுகள் என்ற உணர்வோடுதான் நாம் செயல்படுகிறோம். நெருக்கடியில் சிக்கித் தமிழகம் வந்துள்ள அவர்களது இன்னல்களைக் களைந்து தேவைகளை தீர்ப்போம்; மனிதம்தான் நமது அடிப்படைஎன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


  • 20:28 (IST) 15 Apr 2022
    நான் ஐபிஎஸ் படித்தேனா என்பதே திமுகவின் கவலை - பாஜக தலைவர் அண்ணாமலை

    மக்களுக்கு ஆசை காட்டி ஆட்சியில் அமர்ந்த திமுக, தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழ் நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் கவலை படாமல் நான் ஐபிஎஸ் படித்தேனா என்பதே திமுகவின் கவலை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.


  • 20:26 (IST) 15 Apr 2022
    குஜராத்தில் 108 அடி அனுமன் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

    குஜராத் மோர்பியில் 108 அடி அனுமன் சிலையை நாளை காணொலி மூலம் பிரதமர் திறந்து வைக்கிறார். அனுமன் ஜெயந்தியையொட்டி பரம் பூஜ்ய பாபு கேசவானந்ஜி ஆசிரமத்தில் நாளை சிலை திறப்பு நடைபெற உள்ளது.


  • 18:25 (IST) 15 Apr 2022
    முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் விசாரணை நிறைவு

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. ஓட்டுநர் கனகராஜ் தன்னிடம் வேலை பார்த்ததால் கொடநாடு வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தினர் என்று கூறியுள்ள ஆறுக்குட்டி போலிசாரின் விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது என்றும் கூறியுள்ளார்.


  • 18:02 (IST) 15 Apr 2022
    முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - பாஜக தலைவர் அண்ணாமலை

    நீட் விலக்கு உட்பட ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகள் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நரிக்குறவர் மக்களுக்கு பதவியளித்து அழகு பார்ப்பது பாஜக மட்டும்தான் என கூறியுள்ளார்.


  • 18:00 (IST) 15 Apr 2022
    இளையராஜாவின் கருத்துக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் வருத்தம்

    பிரதமர் மோடியையும், அம்பேத்காரையும் ஒப்பிட்டு இளையராஜா கட்டுரை எழுதிய இளையராஜாவின் கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக இயக்குனர் மாரி செல்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இளையராஜா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்; இது குறித்து மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.


  • 17:50 (IST) 15 Apr 2022
    தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

    அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத மருத்துவ கல்லூரி இருக்கைகளை மீண்டும் தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.


  • 17:31 (IST) 15 Apr 2022
    யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரி முதல்வர் கடிதம்

    இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்துதர வேண்டும். யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மார்ச் 31ல் பிரதமரை சந்தித்தபோது இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தேன். தூத்துக்குடியில் இருந்து காய்கறி, மருந்துகளை கொழும்புவுக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.


  • 16:58 (IST) 15 Apr 2022
    திமுக அமைப்பு தேர்தல் தேதி அறிவிவிப்பு

    திமுக பேரூராட்சி, நகராட்சி வார்டு தேர்தல் ஏப்ரல் 22 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் திமுக தலைமை அறிவித்துள்ளது. மாநகராட்சி வார்டு கிளை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஏப்.29 முதல் மே 1ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.


  • 16:32 (IST) 15 Apr 2022
    பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை

    பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் நேட்டோ-வில் இணைந்தால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று ரஷ்யா எச்சரிக்கை தெரிவித்துள்ளது.


  • 16:31 (IST) 15 Apr 2022
    பிதமர் மோடி தலைமயில் ஏப்ரல் 30ல் முதல்வர்கள் மற்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மாநாடு

    பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஏப்ரல் 30ம் தேதி மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு நடைபெற உள்ளது. மத்திய அரசுடனான மாநில அரசின் உறவுகள், திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து கலந்துரையாட வாய்ப்பு உள்ளது. 2 நாள் நடைபெறும் மாநாட்டில் அனைத்து முதலமைச்சர்களுக்கும் பிரதமர் விருந்தளிக்க உள்ளார்.


  • 15:27 (IST) 15 Apr 2022
    ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது - ஐகோர்ட் வேதனை

    பட்டா வழங்க கோரி பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, நத்தம் புறம்போக்கு நிலமாக வகை மாற்றம் செய்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவு செல்லாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது

    என்று வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் அரசு நிலங்களை பாதுகாப்பது வருவாய்த்துறை அதிகாரிகளின் கடமை என்று கூறியுள்ளது.


  • 14:28 (IST) 15 Apr 2022
    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் விசாரணை

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் விசாரணை நடத்தப்படுவதாக மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார்.


  • 13:53 (IST) 15 Apr 2022
    குமரி திற்பரப்பு அருவில் சுற்றுலாப் பயணிகள்

    தொடர் விடுமுறையால் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.


  • 13:30 (IST) 15 Apr 2022
    சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டு யானைகள்

    குன்னூர் காட்டேரி பூங்கா அருகே ரன்னிமேடு ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டுயானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.


  • 13:20 (IST) 15 Apr 2022
    தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை-வானிலை ஆய்வு மையம்

    "தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் கனமழை பெய்யும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


  • 13:04 (IST) 15 Apr 2022
    தொடர்விடுமுறையின்போது சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது - பள்ளிக் கல்வித் துறை

    4 நாட்கள் விடுமுறையின்போது, தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


  • 13:04 (IST) 15 Apr 2022
    தொடர்விடுமுறையின்போது சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது - பள்ளிக் கல்வித் துறை

    4 நாட்கள் விடுமுறையின்போது, தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


  • 12:43 (IST) 15 Apr 2022
    தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்-சுகாதாரத் துறை செயலர் அறிவுறுத்தல்

    தயவுசெய்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.


  • 12:41 (IST) 15 Apr 2022
    லட்சத்தீவு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

    லட்சத்தீவு பகுதிகள் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.


  • 12:40 (IST) 15 Apr 2022
    சீர்காழி மதுவிலக்கு போலீஸார் பணிமாற்றம்

    சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கூண்டோடு வெவ்வேறு இடங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் மற்றும் புதுச்சேரி மது விற்பனைக்கு துணைபோவதாக எழுந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  • 12:35 (IST) 15 Apr 2022
    வேலூர் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை-4 பேருக்கு எதிராக குண்டர் சட்டம்

    வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    மணிகண்டன், சந்தோஷ், பார்த்திபன், பரத் ஆகிய 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறைக் காவலை நீட்டிக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


  • 12:19 (IST) 15 Apr 2022
    ''விளிம்பு நிலை மக்களை தேடி சென்று உதவி செய்து வருகிறது திமுக அரசு''

    விளிம்பு நிலை மக்களை தேடி சென்று உதவி செய்து வருகிறது திமுக அரசு. மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கை அடிப்படையில் உதவிகள் செய்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


  • 12:19 (IST) 15 Apr 2022
    ''விளிம்பு நிலை மக்களை தேடி சென்று உதவி செய்து வருகிறது திமுக அரசு''

    விளிம்பு நிலை மக்களை தேடி சென்று உதவி செய்து வருகிறது திமுக அரசு. மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கை அடிப்படையில் உதவிகள் செய்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


  • 12:17 (IST) 15 Apr 2022
    விமானத்தில் வெடித்த செல்போன்!

    அஸாம் மாநிலம், திப்ரூகரில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் பயணியின் செல்போன் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து, தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைத்தனர்.


  • 12:10 (IST) 15 Apr 2022
    விமானத்தில் வெடித்த செல்போன்!

    அஸாம் மாநிலம், திப்ரூகரில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் பயணியின் செல்போன் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து, தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைத்தனர்.


  • 11:59 (IST) 15 Apr 2022
    புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இந்த ஐபிஎல் அணி

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புள்ளிப் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. 5 ஆட்டங்களில் விளையாடி அவற்றில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது.


  • 11:47 (IST) 15 Apr 2022
    தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

    திருமுல்லைவாயிலில் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  • 11:31 (IST) 15 Apr 2022
    மக்கள் நன்றாக இருந்தால் சமூகம் நன்றாக இருக்கும்-முதல்வர்

    மக்கள் நன்றாக இருந்தால் நான் மட்டுமில்லை சமூகமே நன்றாக இருக்கும். காரம் சாப்பிட்டால் உடல் வலுவாக இருக்கும் என்பதை தற்போது தெரிந்து கொண்டேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


  • 11:12 (IST) 15 Apr 2022
    நரிக்குறவர் இல்லத்தல் காலை உணவு சாப்பிட்ட முதல்வர்!

    சென்னையில் நரிக்குறவர் இல்லத்தில் காலை உணவை சாப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின்.


  • 10:51 (IST) 15 Apr 2022
    முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

    திருவள்ளூர், திருமுல்லைவாயில் குடியிருப்பு பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகையை முதல்வர் வழங்கினார்.


  • 10:21 (IST) 15 Apr 2022
    டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா!

    டெல்லியில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. திங்களன்று 137 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 325 ஆக உயர்ந்துள்ளது.


  • 10:01 (IST) 15 Apr 2022
    15 ஆயிரம் பேர் படுகொலை!

    2014 ஆம் ஆண்டு, டான்பாஸ் பிரச்சனை தொடங்கியது முதல், இப்போது வரை உக்ரைனில் சுமார் 15 ஆயிரம் பேரை ரஷ்ய படைகள் படுகொலை செய்துள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.


  • 10:00 (IST) 15 Apr 2022
    நியூ மெக்சிகோவில் பயங்கர காட்டுத் தீ!

    அமெரிக்காவில் நியூ மெக்சிகோவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் கருகின. பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து சுமார் 4,500 பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


  • 09:02 (IST) 15 Apr 2022
    நரிக்குறவர் இன மக்களை சந்திக்கும் ஸ்டாலின்!

    சென்னை ஆவடியில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், நரிக்குறவர் இன மக்களை சந்தித்து, அவர்களுடன் தேநீர் அருந்தி கலந்துரையாட உள்ளார். மேலும் 63 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.


  • 09:02 (IST) 15 Apr 2022
    ஹஜ் புனித பயணம்!

    விண்ணப்பிக்கும் அனைவருக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அனுமதி கிடைக்கும். சென்னையில் இருந்து நேரடியாக ஹஜ் பயணம் செய்ய விமான சேவை இந்த வாரத்தில் தொடங்கும் என ஹஜ் கமிட்டி தலைவர் அபு பக்கர் கூறியுள்ளார்.


Chennai Tamilnadu India Pakistan Srilanka Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment