மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக கள்ளழகர், பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரையில் அமர்ந்து, வைகை ஆற்றில் இன்று காலை எழுந்தருளினார். வைகை ஆற்றில் எழுந்தருளும் கள்ளழகரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலே வைகை ஆற்றில் குவிந்தனர். 2 ஆண்டுகளுக்குப் பின் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியதால் மக்கள் உற்சாகத்துடன், கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் சாமி தரிசனம் செய்தனர்.
மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது!
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில், மீன்கள் இனப்பெருக்கத்திற்கு ஏதுவாக ஜூன் 15ம் தேதி வரை, 60 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.
Tamil Nadu news live update
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம்!
Tamil Nadu | The annual chariot festival to begin with glory as a huge crowd gathers outside Meenakshi Amman Temple in Madurai
— ANI (@ANI) April 15, 2022
Visuals from Masi Street pic.twitter.com/hRCwTOLa5D
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு மீனாட்சி – சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனும் எழுந்தருளினர். அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதையொட்டி, மதுரை மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம் குவிந்தது.
நீட் விலக்கு மசோதா.. ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பாதது வேதனை அளிக்கிறது. சட்டப்பேரவையில் இருமுறை மசோதா நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டும், நேரில் வற்புறுத்தியும் ஆளுநர் அனுப்பவில்லை. நீட் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்புவது குறித்த உறுதியான பதில் பெறப்படாத நிலையில் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வது முறையாக இருக்காது என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா!
ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலைக்கு காரணம் என புகார் கூறப்பட்ட நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். கர்நாடக அரசுக்கு ஏற்பட்ட அசௌகரியமான சூழ்நிலை காரணமாக நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்; நான் எந்த தவறும் செய்யவில்லை, நான் களங்க மற்றவன் என்பதை விரைவில் நிரூபிப்பேன்”என்று ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.
சீனாவில் கொரோனா புதிய உச்சம்!
சீனாவில் ஷாங்காய் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அடுத்த இரு வாரங்களுக்கு மேல் அங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
கான்ராக்டர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று :ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்துள்ளது. தொடர்ந்து 176 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளது
எல்லைக் கோடுகளும், கடலும் பிரித்தாலும் இலங்கைத் தமிழர்கள் என்றுமே நம் உறவுகள் என்ற உணர்வோடுதான் நாம் செயல்படுகிறோம். நெருக்கடியில் சிக்கித் தமிழகம் வந்துள்ள அவர்களது இன்னல்களைக் களைந்து தேவைகளை தீர்ப்போம்; மனிதம்தான் நமது அடிப்படைஎன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு ஆசை காட்டி ஆட்சியில் அமர்ந்த திமுக, தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழ் நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் கவலை படாமல் நான் ஐபிஎஸ் படித்தேனா என்பதே திமுகவின் கவலை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத் மோர்பியில் 108 அடி அனுமன் சிலையை நாளை காணொலி மூலம் பிரதமர் திறந்து வைக்கிறார். அனுமன் ஜெயந்தியையொட்டி பரம் பூஜ்ய பாபு கேசவானந்ஜி ஆசிரமத்தில் நாளை சிலை திறப்பு நடைபெற உள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. ஓட்டுநர் கனகராஜ் தன்னிடம் வேலை பார்த்ததால் கொடநாடு வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தினர் என்று கூறியுள்ள ஆறுக்குட்டி போலிசாரின் விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது என்றும் கூறியுள்ளார்.
நீட் விலக்கு உட்பட ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகள் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நரிக்குறவர் மக்களுக்கு பதவியளித்து அழகு பார்ப்பது பாஜக மட்டும்தான் என கூறியுள்ளார்.
பிரதமர் மோடியையும், அம்பேத்காரையும் ஒப்பிட்டு இளையராஜா கட்டுரை எழுதிய இளையராஜாவின் கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக இயக்குனர் மாரி செல்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இளையராஜா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்; இது குறித்து மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத மருத்துவ கல்லூரி இருக்கைகளை மீண்டும் தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்துதர வேண்டும். யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மார்ச் 31ல் பிரதமரை சந்தித்தபோது இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தேன். தூத்துக்குடியில் இருந்து காய்கறி, மருந்துகளை கொழும்புவுக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
திமுக பேரூராட்சி, நகராட்சி வார்டு தேர்தல் ஏப்ரல் 22 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் திமுக தலைமை அறிவித்துள்ளது. மாநகராட்சி வார்டு கிளை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஏப்.29 முதல் மே 1ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் நேட்டோ-வில் இணைந்தால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று ரஷ்யா எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஏப்ரல் 30ம் தேதி மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு நடைபெற உள்ளது. மத்திய அரசுடனான மாநில அரசின் உறவுகள், திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து கலந்துரையாட வாய்ப்பு உள்ளது. 2 நாள் நடைபெறும் மாநாட்டில் அனைத்து முதலமைச்சர்களுக்கும் பிரதமர் விருந்தளிக்க உள்ளார்.
பட்டா வழங்க கோரி பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, நத்தம் புறம்போக்கு நிலமாக வகை மாற்றம் செய்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவு செல்லாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது
என்று வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் அரசு நிலங்களை பாதுகாப்பது வருவாய்த்துறை அதிகாரிகளின் கடமை என்று கூறியுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் விசாரணை நடத்தப்படுவதாக மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர் விடுமுறையால் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
குன்னூர் காட்டேரி பூங்கா அருகே ரன்னிமேடு ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டுயானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
“தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் கனமழை பெய்யும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
4 நாட்கள் விடுமுறையின்போது, தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தயவுசெய்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
லட்சத்தீவு பகுதிகள் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கூண்டோடு வெவ்வேறு இடங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் மற்றும் புதுச்சேரி மது விற்பனைக்கு துணைபோவதாக எழுந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
மணிகண்டன், சந்தோஷ், பார்த்திபன், பரத் ஆகிய 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறைக் காவலை நீட்டிக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விளிம்பு நிலை மக்களை தேடி சென்று உதவி செய்து வருகிறது திமுக அரசு. மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கை அடிப்படையில் உதவிகள் செய்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அஸாம் மாநிலம், திப்ரூகரில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் பயணியின் செல்போன் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைத்தனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புள்ளிப் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. 5 ஆட்டங்களில் விளையாடி அவற்றில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது.
திருமுல்லைவாயிலில் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நன்றாக இருந்தால் நான் மட்டுமில்லை சமூகமே நன்றாக இருக்கும். காரம் சாப்பிட்டால் உடல் வலுவாக இருக்கும் என்பதை தற்போது தெரிந்து கொண்டேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் நரிக்குறவர் இல்லத்தில் காலை உணவை சாப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
திருவள்ளூர், திருமுல்லைவாயில் குடியிருப்பு பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகையை முதல்வர் வழங்கினார்.
டெல்லியில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. திங்களன்று 137 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 325 ஆக உயர்ந்துள்ளது.
2014 ஆம் ஆண்டு, டான்பாஸ் பிரச்சனை தொடங்கியது முதல், இப்போது வரை உக்ரைனில் சுமார் 15 ஆயிரம் பேரை ரஷ்ய படைகள் படுகொலை செய்துள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் நியூ மெக்சிகோவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் கருகின. பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து சுமார் 4,500 பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ஆவடியில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், நரிக்குறவர் இன மக்களை சந்தித்து, அவர்களுடன் தேநீர் அருந்தி கலந்துரையாட உள்ளார். மேலும் 63 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
விண்ணப்பிக்கும் அனைவருக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அனுமதி கிடைக்கும். சென்னையில் இருந்து நேரடியாக ஹஜ் பயணம் செய்ய விமான சேவை இந்த வாரத்தில் தொடங்கும் என ஹஜ் கமிட்டி தலைவர் அபு பக்கர் கூறியுள்ளார்.