Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 10-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110. 85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!
மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக கள்ளழகர், பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரையில் அமர்ந்து, வைகை ஆற்றில் இன்று காலை எழுந்தருளினார். வைகை ஆற்றில் எழுந்தருளும் கள்ளழகரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலே வைகை ஆற்றில் குவிந்தனர். 2 ஆண்டுகளுக்குப் பின் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியதால் மக்கள் உற்சாகத்துடன், கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் சாமி தரிசனம் செய்தனர்.
#WATCH | Tamil Nadu: A huge crowd of devotees witness the entry of Lord Kallazhagar into the Vaigai River, for the unity & amity of the Saiva-Vaishnava, as part of the #MaduraiChithiraiFestival2022 festival, in Madurai pic.twitter.com/9zDL92LaOD
— ANI (@ANI) April 16, 2022
நான் ஐபிஎஸ் படித்தேனா என்பதே திமுகவின் கவலை.. அண்ணாமலை!
நீட் விலக்கு உட்பட ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகள் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நரிக்குறவர் மக்களுக்கு பதவியளித்து அழகு பார்ப்பது பாஜக மட்டும்தான். மக்களுக்கு ஆசை காட்டி ஆட்சியில் அமர்ந்த திமுக தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டை பற்றியும், மக்களை பற்றியும் கவலைபடாமல் நான் ஐபிஎஸ் படித்தேனா என்பதே திமுகவின் கவலை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Tamil Nadu news live update
இலங்கைக்கு உதவ வசதி செய்துதர வேண்டும்.. ஸ்டாலின்!
இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்துதர வேண்டும். யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த மார்ச் 31ல் பிரதமரை சந்தித்தபோது, இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தேன். தூத்துக்குடியில் இருந்து காய்கறி, மருந்துகளை கொழும்புவுக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது முதல்வர் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
IPL 2022: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் இலக்குடன் ஆடிய ஹைதராபாத் அணி, 17.5 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
பிரதமர் மோடி தலைமையில் மாநாடு!
6 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்.30ஆம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு டெல்லியில் வருகிற ஏப்.30 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மத்திய மாநில அரசுகளின் நல்லுறவுகள், திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, மாநிலங்களின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படும். மேலும் முதல்வர்கள் முன்வைக்கும் முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ், திமுக கட்சிகள் அரசியலாக்க வேண்டாம்: இது தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததல்ல என்றுபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்
திருவண்ணாமலையில் பேட்டி அளித்த ஆந்திர அமைச்சர் ரோஜா தாய் மொழியுடன் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளை கண்டிப்பாக கற்க வேண்டும். எந்த ஒரு மொழியையும் யாரும் திணிக்க முடியாது ஆந்திராவில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது: நமது கண்ணோட்டம்தான் முக்கியம் என கூறியுள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. முதன்முறையாக இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இவரும் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. துணைநிலை ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே காங்கிரஸ் அறிவித்திருந்தது
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெகு விமரிசையாக நடைபெறும் சீனிவாசா திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தீவுத்திடலில் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இநத நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு பணியில் 3,000 போலீசார், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். திருமலையில் இருந்து உற்சவர் சாமி சிலைகள் கொண்டு வரப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது
தஞ்சை மாவட்டத்தில், பெற்ற தாயை பராமரிக்காமல் வீட்டுக்குள் பூட்டி வைத்து கொடுமைபடுத்திய இரண்டு மகன்கள் மீதும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு 60வது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் ஹார்டுவேர் மருத்துவக் கல்லூரிக்கு முதலிடம் பிடித்துள்ள நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு 21வது இடமும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு 55வது இடமும் கிடைத்துள்ளது
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நாளை மறுநாள் குஜராத் செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரூ.22,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ராஜா பெர்வைஸ் அஷ்ரப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
பெங்களூரு சிறையில் சொகுசு வசதிகளை பெற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக சசிகலா மீது பதிவான வழக்கை, ஜூன் 6ஆம் தேதிக்கு பெங்களூரு லோக் ஆயுக்தா நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும் அன்றைய தினம் சசிகலா உள்ளிட்டோர் நேரில் ஆஜராக நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
பீஸ்ட்' படத்திற்கு திரையரங்குகள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளதால், ஒரு வாரம் வரை அந்த ஒப்பந்தமே செல்லும். ஒரு வாரத்திற்கு பிறகே அடுத்த கட்ட மாற்றங்கள் குறித்து தெரியவரும். கே.ஜி.எஃப்-2 படத்திற்கு ஏற்கனவே 350 திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது என திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்
தஞ்சை கீழத்தோட்டம் கடற்பகுதியில் இலங்கையை சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய அனுமதியின்றி வந்த இளைஞர்களிடம் கடலோர காவற்படை மற்றும் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்கள் மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது
சோனியா, ராகுல் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களுடன் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். அப்போது வரவிருக்கும் தேர்தல்கள் குறித்து ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மாநிலங்களின் அரசியல் சூழல், தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களின் வியூகங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர் எடுத்துரைத்தார். நாடாளுமன்றத் தேர்தலின் காங்கிரஸ் வியூகம் குறித்து பிற மாநில தலைவர்களிடம் எடுத்துரைக்கப்படும். 2024ஆம் ஆண்டு தேர்தலை யார் முன் எடுத்துச் செல்வது என்பது குறித்து சோனியா காந்தி முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளார்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு பிரிட்டன் அரசு ஆதரவு கரம் நீட்டிவரும் நிலையில் ரஷ்யா இவ்வாறு அறிவித்துள்ளது
தமிழகத்தில் உள்ள நீதிமன்ற கட்டமைப்பு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது என தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் பாராட்டு விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏழையும், கல்வியறிவு அற்றவரும் நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகினால் நீதிமன்ற கட்டமைப்பில் தவறு உள்ளது என்பதே அர்த்தம் என்றும், பெண்ணுக்கு பெண்தான் எதிரி. போட்டி இருக்கலாம், பொறாமை இருக்கக் கூடாது என்றும் நீதிபதி சுந்தரேஷ் தெரிவித்துள்ளார்
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் மே 8ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றபின் முதல்முறையாக கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை, சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் நடிகர் சங்க கட்டிடம் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது
திரிணாமுல் காங்கிரஸ் தற்போது மேற்கு வங்கத்தில் பாலிகங்கே மற்றும் அசன்சோல் ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது, அதே நேரத்தில் பீகாரின் போச்சாஹா சட்டமன்றத் தொகுதியில் ஆர்ஜேடி முன்னிலையில் உள்ளது. இதற்கிடையில், மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
வங்காளத்தின் பாலிகங்கே, சத்தீஸ்கரின் கைராகர், பீகாரின் போச்சாஹான் மற்றும் மகாராஷ்டிராவின் கோலாப்பூர் வடக்கு ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு இதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதற்கிடையில், மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் மக்களவைத் தொகுதிக்கு செவ்வாயன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பாஜகவின் அக்னிமித்ரா பாலுக்கு எதிராக அசன்சோல் தொகுதியில் நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹாவை லோக்சபா தொகுதியில் டிஎம்சி நிறுத்தியுள்ளது. இதற்கிடையில், பாஜகவில் இருந்து விலகி சமீபத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சியில் இணைந்த பாபுல் சுப்ரியோவை TMC பாலிகங்கே சட்டமன்றத் தொகுதியில் நிறுத்தியுள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலைமை காரணமாக கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவிப்பு. ஏப்ரல் 18 முதல் 22ஆம் தேதி வரை கொழும்பு பங்குச்சந்தை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் தேவைகளை மத்திய அரசிடமிருந்து ஆளுநர் பெற்றுத்தர வேண்டும். ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக கலந்துகொள்ளாதது தவறில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூர் குடியிருப்பில் மின்கசிவில் ஏ.சி வெடித்த விபத்து. நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் காஜாமைதீன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். ஏ.சி. விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்வு
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓராண்டில் ஒரு லட்சம் இணைப்பு வழங்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது . அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சார இணைப்பு வழங்கி சாதித்து காட்டியுள்ளார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை அமைக்கப்படும் என குஜராத்தில் 108 அடி உயர் அனுமன் சிலையை திறந்து வைத்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தெரிவித்தார்.
மதுரை வைகையாற்று நெரிசலில் சிக்கி இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ10 லட்சம் வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்த 11 பேருக்கு தலா ரூ1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 தினங்களாக பெய்த கனமழையால் ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது.
விவசாயிகளுக்கு ரூ. 801 கோடி செலவில் 1 லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழ்நாடு மின்தடை இல்லாத மாநிலமாக திகழ்கிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி!
சென்னை, தலைமை செயலகத்தில், கடந்த ஓராண்டில் விவசாய மின் இணைப்பு பெற்ற 1 லட்சம் விவசாயிகளுடன் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கண்ணபிள்ளை என்ற 1 லட்சமாவது விவசாயிக்கு மின் இணைப்பு ஆணையை முதல்வர் வழங்கினார்.
உக்ரைன் புக்ஸா நகரில் ஏற்கெனவே 500 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தலைநகர் கீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய நிலையில், அங்கிருந்து சுமார் 900 உடல்கள் மீட்கபட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
சென்னை தீவுத்திடலில், 14 ஆண்டுகளுக்குப் பின் திருமலை – திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இன்று ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது; 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்!
உக்ரைன் போரில் ரஷ்யாவின் மொஸ்கவா போர்கப்பல் தீப்பிடித்து மூழ்கியதை அடுத்து 3ஆம் உலகப்போர் தொடங்கிவிட்டதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
பஞ்சாபில் ஜூலை 1ஆம் தேதி முதல் அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி காணாமல் போனவர்கள் குறித்து தகவல் அறிய மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரை 94980 42434 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின்போது, ஒரே நேரத்தில் 10 லட்சம் பேர் திரண்டதால் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் மயக்கமடைந்த நிலையில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம், மோர்பியில் 108 அடி அனுமன் சிலையை காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் .
”காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை; தொடர்ந்து ஆதரவு அளித்த சென்னை அணி ரசிகர்களுக்கு நன்றி” என நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சென்னை அணி வீரர் தீபக் சஹார் ட்வீட்!
— Deepak chahar 🇮🇳 (@deepak_chahar9) April 15, 2022
மூச்சு மாதிரியை வைத்து 3 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவிக்கு, அவசர பயன்பாட்டுக்காக அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கருவி மூலம் நாளொன்றுக்கு 160 பேருக்கு பரிசோசதனை செய்யலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.
ஆந்திராவில் 15-18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் அனைவருக்கும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், காஷ்மீரில் 83.6 சதவீதம், இமாச்சலபிரதேசத்தில், 80.8 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 21ம் தேதி வரை, சொந்த ஊருக்கு சென்ற மக்கள், நகரங்களுக்கு திரும்ப ஏதுவாக கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.