/tamil-ie/media/media_files/uploads/2021/10/Black-day-farmers.jpg)
Tamil Nadu news updates : தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
மீண்டும் 100 ரூபாயை தாண்டிய பெட்ரோல்
பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ 100.01 ஆகவும், டீசல் லிட்டருக்கு 29 காசுகள் அதிகரித்து ரூ 95.31 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை அதிகரித்து மீண்டும் 100 ரூபாயை தாண்டியுள்ளது.
7 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.53 கோடியைக் கடந்துள்ளது. இதுவரை 21.22 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 48.10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- 22:20 (IST) 03 Oct 2021லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தகவல்
உத்திர பிரதேச லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தகவல்
- 22:19 (IST) 03 Oct 2021லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தகவல்
உத்திர பிரதேச லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தகவல்
- 19:38 (IST) 03 Oct 2021தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,531 பேருக்கு கொரோனா தொற்று; 23 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
- 19:37 (IST) 03 Oct 2021தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,531 பேருக்கு கொரோனா தொற்று; 23 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
- 18:51 (IST) 03 Oct 2021மழை காரணமாக தடுப்பூசி போடும் பணி சற்று பாதிப்பு
16 மாவட்டங்களில் மழை காரணமாக தடுப்பூசி போடும் பணி சற்று பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
- 18:50 (IST) 03 Oct 2021மழை காரணமாக தடுப்பூசி போடும் பணி சற்று பாதிப்பு
16 மாவட்டங்களில் மழை காரணமாக தடுப்பூசி போடும் பணி சற்று பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
- 18:44 (IST) 03 Oct 2021மம்தா பானர்ஜி வெற்றி; முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 18:43 (IST) 03 Oct 2021மம்தா பானர்ஜி வெற்றி; முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 17:46 (IST) 03 Oct 2021நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது
போதைப் பொருளை பயன்படுத்தியது தொடர்பாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்திய நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 17:45 (IST) 03 Oct 2021நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது
போதைப் பொருளை பயன்படுத்தியது தொடர்பாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது * மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்திய நிலையில் கைது
- 17:30 (IST) 03 Oct 2021நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது
போதைப் பொருளை பயன்படுத்தியது தொடர்பாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்திய நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 17:15 (IST) 03 Oct 2021ஆசிரியர் ராஜகோபால் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை கே.கே.நகர் பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
- 17:14 (IST) 03 Oct 2021ஆசிரியர் ராஜகோபால் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை கே.கே.நகர் பத்மஷேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
- 17:13 (IST) 03 Oct 2021ஆசிரியர் ராஜகோபால் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை கே.கே.நகர் பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
- 15:37 (IST) 03 Oct 2021ஆட்கொல்லி புலியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது - அமைச்சர் ராமச்சந்திரன்
அமைச்சர் ராமச்சந்திரன்: “ஆட்கொல்லி புலியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முடிந்தவரை புலிக்கு ஆபத்தில்லாமல் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முயற்சிகள் தோல்வியுறும் நிலையில், சுட்டுப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
- 15:34 (IST) 03 Oct 2021பபானிபூர் இடைத் தேர்தலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பபானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தனது சொந்த மண்ணில் இருந்து வெற்றி பெற்றதாகக் கூறிய மம்தா பானர்ஜி, “நந்திகிராமில் என்னைத் தோற்கடிக்கச் செய்யப்பட்ட சதிக்கு எதிரான வெற்றி இது. எனக்கு இவ்வளவு பெரிய வெற்றியை அளித்த பபானிபூர் மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்.” என்று கூறினார்.
- 15:31 (IST) 03 Oct 2021தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை - வானிலை ஆய்வு மையம்
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தமிழக கடற்பகுதிகளில் 3.1 கி.மீ உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (03.10.2021) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால், பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13:23 (IST) 03 Oct 2021மசினகுடியில் புலியை உயிருடன் பிடிக்க முடிவு - வனத்துறை அதிகாரி தகவல்
மசினகுடி வனப்பகுதியில் பதுங்கியுள்ள புலியை 9வது நாளாக வனத்துறையினர் தேடிவரும் நிலையில் அதனை உயிருடன் பிடிக்க முயற்சி செய்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், 2 கும்கி யானைகள் உதவியுடன் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
- 13:16 (IST) 03 Oct 2021உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும் - முதலமைச்சர் வீடியோ
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும்' என்ற தலைப்பில் காணொளி வெளியிட்டுள்ளார். அதில், “சட்டமன்ற தேர்தலைப் போல் ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். ஊரக உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
- 12:33 (IST) 03 Oct 2021சட்டமன்ற தேர்தலில் சரியான வியூகம் இல்லாததால் அதிமுக தோல்வி அடைந்தது - சிவி சண்முகம்
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், “கடந்த சட்டமன்ற தேர்தலில் சரியான வியூகம் இல்லாததால் அதிமுக தோல்வி அடைந்தது. திமுக பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கிறது; அதிமுக வாக்காளர்களை நம்பி தேர்தலை சந்திக்கிறது” என்று கூறினார்.
- 10:45 (IST) 03 Oct 2021அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு இரட்டிப்பாகும் - ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
மக்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு இரட்டிப்பாகும் அபாயம் உள்ளது. இதுவரை 2,919 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
- 10:34 (IST) 03 Oct 2021100% தடுப்பூசி செலுத்திய மாவட்டமானது எர்ணாகுளம்
கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட 100 சதவீதம் பேருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்ட முதல் மாவட்டம் என்ற பெருமை எர்ணாகுளத்திற்கு கிடைத்துள்ளது.
- 10:10 (IST) 03 Oct 2021பவானிபூர் இடைத்தேர்தல் - மம்தா முன்னிலை
பவானிபூர் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முதல்வர் மம்தா பானர்ஜி 2,800 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
- 10:00 (IST) 03 Oct 2021தீபாவளி பண்டிகை - நாளை முதல் முன்பதிவு தொடக்கம்
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 4ஆம் தேதி வருவதையொட்டி வெளியூர் செல்ல விரும்பும் பயணிகள் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து விடுவதுகுறித்து ஆலோசனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 09:44 (IST) 03 Oct 2021இந்தியாவில் 22,842 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 224 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றிலிருந்து ஒரே நாளில் 25,930 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
- 08:32 (IST) 03 Oct 2021பவானிபூர் இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
பவானிபூர் தொகுதியில் கடந்த 30 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் 53.32 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. தற்போது, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தலில் வென்றால் மட்டுமே, மம்தா பானர்ஜியால் முதலமைச்சராக நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- 08:03 (IST) 03 Oct 2021இன்று 4ஆவது மெகா தடுப்பூசி முகாம்
தமிழ்நாட்டில் இன்று 4ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் 20 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. இதில் 25 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.