/tamil-ie/media/media_files/uploads/2022/09/ashok-gehlot-2.jpg)
அசோக் கெலாட், அருகில் சச்சின் பைலட்
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 133-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
5ஜி சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர்
இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார். அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5ஜி சேவையை டெல்லியில் இன்று தொடங்கி வைக்கிறார். இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில்
பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி இன்று தொடங்கி அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.
நீட் தேர்வு: தமிழக அரசின் மனு ஏற்பு
நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிரான ரிட் மனு. தமிழ்நாடு அரசின் ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உகந்தது என ஏற்றுள்ளது.
திருப்பதியில் கருடசேவை
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று கருடசேவை. பல்வேறு ஊர்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோயிலில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 22:46 (IST) 01 Oct 2022கள்ளழகர் கோவில் வளாகத்தில் திடீர் தீவிபத்து
மதுரைமேலூர் அருகே கள்ளழகர் கோவில் வளாகத்தில் உள்ள பழைய புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்
- 21:56 (IST) 01 Oct 2022சிபிஎம் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் மரணம்
கேரள மாநிலத்தின் சிபிஎம் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
- 20:58 (IST) 01 Oct 2022கேரளாவில் இருந்து சென்னை வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்
திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூ. கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் கேரளாவில் இருந்து சென்னை வந்தடைந்தார்
- 19:31 (IST) 01 Oct 2022திருப்பதி பிரம்மோற்சவம் : கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 5வது நாளான இன்று மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
- 18:37 (IST) 01 Oct 2022100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற முதல் பழங்குடி மாவட்டம்
இந்தியாவின் 100 சதவீதம் பெற்ற முதல் பழங்குடி மாவட்டமாக மத்தியப் பிரதேசத்தின் மண்ட்லா உருவாகியுள்ளது.
இந்த மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 18:15 (IST) 01 Oct 2022நான் பட்ஜெட் தாக்கல் செய்யவே மக்கள் விரும்புகிறார்கள்- அசோக் கெலாட்
காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க மறுத்து கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் மன்னிப்பு கேட்ட நிலையில், செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அசோக் கெலாட், “மக்கள் நான் அடுத்த பட்ஜெட் தாக்கல் செய்ய விரும்புகிறார்கள்” என்றார். அதாவது முதலமைச்சராகவே தொடர்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
- 17:18 (IST) 01 Oct 2022'பொன்னியின் செல்வன் ' திரைப்படம் முதல் நாளில் ரூ.80 கோடி வசூல்
'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் முதல் நாளில் ரூ.80 கோடி வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது
- 17:13 (IST) 01 Oct 2022அக்டோபர் 11ல் சமூக நல்லிணக்க மனித சங்கிலி; காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சிக அறிவிப்பு
அக்டோபர் 11-ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்
- 16:57 (IST) 01 Oct 2022தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை. வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது
- 16:37 (IST) 01 Oct 2022வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; சிறப்பு அலுவலர்கள் நியமனம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக களப்பணிகளை கண்காணிக்க, சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் அனைத்து பகுதி அலுவலகங்களிலும் சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்
- 16:28 (IST) 01 Oct 2022நெல்லையில் அணைக்கட்டு நீரில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அணைக்கட்டு நீரில் மூழ்கி பெற்றோர் கண் முன்னே 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
- 16:15 (IST) 01 Oct 2022சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டை விட ரூ.345 கோடி கூடுதலாக வரி வசூல்
சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டை விட ரூ.345 கோடி கூடுதலாக வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.945 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
- 15:54 (IST) 01 Oct 2022நடிகர் போண்டா மணிக்கு நிதியுதவி அளித்த இ.பி.எஸ்!
நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவருக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் 1,00,000 ரூபாய்க்கான வரைவோலையை வழங்கியுள்ளனர்.
தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர் நடிகர் போண்டா மணி அவர்கள் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், கழகப் இடைக்காலப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் ஆணையின் பேரில், முன்னாள் அமைச்சர் @offiofDJ அவர்கள் அவரை நலம் விசாரித்து 1,00,000 ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார். pic.twitter.com/LgiNyIoTLq
— AIADMK (@AIADMKOfficial) September 30, 2022 - 15:27 (IST) 01 Oct 2022காங்கிரஸ் தலைவர் தேர்தல்: கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்பு!
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. கே.என்.திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
- 15:27 (IST) 01 Oct 2022'5ஜி மூலம் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது' - பிரதமர் மோடி!
"2ஜி, 3ஜி, 4ஜி ஆகிய காலகட்டங்களில் தொழில்நுட்பத்தில் இந்தியா மற்ற நாடுகளை சார்ந்திருந்தது. ஆனால் 5ஜி மூலம் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது. இந்தியா முதல் முறையாக தொலைதொடர்பு தொழில்நுட்பத்தில் உலகளாவிய தரத்தை அமைத்திருக்கிறது" என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
- 13:59 (IST) 01 Oct 2022செப்டம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வரி வசூல்
செப்டம்பர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 1,47,686 கோடி என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜிஎஸ்டி வரி வசூல் 26% அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் ரூ.8,637 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
- 13:36 (IST) 01 Oct 2022மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யவில்லை
மதுக்கரை காவல்நிலையத்தில் மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யவில்லை. பொய்யான தகவல் பரவி வருவது குறித்து விசாரணை நடத்தபடும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாரயணன் கூறியுள்ளார்.
- 13:06 (IST) 01 Oct 20225ஜி இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும்
டெல்லியில் 5ஜி சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும். 5ஜி மூலம் பல புதிய வாய்ப்புகள் இந்திய இளைஞர்களுக்கு கிடைக்கும். டிஜிட்டல் இந்தியா என்பது நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- 12:59 (IST) 01 Oct 202210 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 12:30 (IST) 01 Oct 2022நிர்மலா சீதாராமன், பிடிஆர் ஆலோசனை
நிர்மலா சீதாராமனை சந்தித்த பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கூட்டம், பல்வேறு திட்டங்களுக்கான நிதி விவகாரம், சென்னை மெட்ரோ திட்டம் குறித்து விவாதித்ததாக கூறினார்.
- 12:27 (IST) 01 Oct 2022பொன்னியின் செல்வன் முதல் நாள் வசூல்
பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 11:24 (IST) 01 Oct 2022வணிக சிலிண்டர் விலை குறைந்தது
சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.36 குறைந்து ரூ.2009-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.1068க்கு விற்பனையாகிறாது. கடந்த 6 மாதங்களில் 6 முறை வணிக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
- 11:24 (IST) 01 Oct 2022டெல்லியில் 5ஜி சேவை
பிரதமர் மோடி இன்று டெல்லியில் 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. 2 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
- 11:03 (IST) 01 Oct 2022வணிக சிலிண்டர் விலை குறைந்தது
சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது. சிலிண்டர் விலை ரூ.36 குறைந்து ரூ.2009-க்கு விற்பனை
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.1068க்கு விற்பனை. கடந்த 6 மாதங்களில் 6 முறை வணிக சிலிண்டர் விலை குறைப்பு
- 11:02 (IST) 01 Oct 2022ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு
காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரியின் உறவினரிடம் தகராறில் ஈடுபட்ட விவகாரம்
ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் மற்றும் அவரது உறவினர் விஜயலட்சுமி மீது வழக்குப்பதிவு
- 10:17 (IST) 01 Oct 2022நடிகர் சிவாஜி கணேசனின் 95வது பிறந்தநாள் - முதல்வர் மரியாதை
சென்னை: ஆர்.ஏ.புரம் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு, நடிகர் ராஜேஷ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோரும் மரியாதை
- 09:58 (IST) 01 Oct 2022ஏழுமலையான் கோயிலில் 5-ம் நாள் பிரம்மோற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5-ம் நாள் பிரம்மோற்சவம் விழா
கிருஷ்ணர், மோகினி ஆகிய அலங்காரங்களில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- 09:26 (IST) 01 Oct 2022ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
மலை பாதையில் சாப்டூர் வனச்சரகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் வனத்துறை நடவடிக்கை
- 09:25 (IST) 01 Oct 2022ராமநாதபுரம் பிஎப்ஐ அலுவலகத்திற்கு சீல்
ராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மாவட்ட அலுவலகத்திற்கு வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சீல்
- 08:19 (IST) 01 Oct 2022அமைச்சர் மெய்யநாதன் மருத்துவமனையில் அனுமதி
விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல் நலக்குறைவு. உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மெய்யநாதன் சென்னைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.
தனி கார் மூலம் மருத்துவ குழுவினர் உதவியுடன் சென்னை அழைத்து செல்லப்படுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.