பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, பள்ளிக் கல்வித்துறை சார்பில், இன்று விற்பனை செய்யப்படும் ஆவின் பால் பாக்கெட்டில், மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக “சிந்தனையில் மாற்றம்! சமூகத்தில் ஏற்றம்!” என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரிக்கு உள்ளூர் விடுமுறை
குமரியில் இன்று கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய வரும் ஜன.28-ம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
நாளையும் (டிசம்பர் 4), நாளை மறுநாளும் (டிசம்பர் 5), குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆந்திராவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இசையமைப்பாளர் தீனா நியமனம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த பதவியில் இருந்த காயத்ரி ரகுராம் நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அப்பதவிக்கு இசையமைப்பாளர் தீனா நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர். ஒரே கொடி, ஒரே கட்சி என இருந்ததால் பதவி கிடைக்கவில்லை. உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்காமல், உழைக்காதவர்கள் பதவியில் வந்து உட்கார்ந்து உள்ளனர் கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதாக பதவி கிடைக்காது; அதை ஜீரணித்துக் கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும் என்று சென்னை, ஆர்.ஏ.புரத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியான 'பாபா' திரைப்படம் புதிய பொலிவுடன் மீண்டும் வெளியாகும் நிலையில், தற்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. 'பாபா' திரைப்படம் மனதிற்கு மிகவும் நெருக்கமானது என நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஓயோ நிறுவனம் தனது தயாரிப்பு மற்றும் பொறியியல் பணிகளில் இருந்து 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
சமீபகாலமாக ட்விட்டர், அமேசான், பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்துவருகின்றன.
நாகர்கோவில் சவேரியார் ஆலய தேர்பவனியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
இந்தத் தேவாலயத்தில் புனித சவேரியார் வந்து தங்கி, ஊழியம் செய்ததாக கூறப்படுகிறது.
இங்கிருந்துதான் அவர் மற்ற கடற்கரையோர மாவட்டங்களுக்கு திருப்பணி செய்ய சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி தேர்பவனி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள்.
காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
மிசோரமில் ரூ.4 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தப் போதைப் பொருள்கள் 50 சோப்புகளில் வைத்து கடத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முல்லை பெரியாறு அணை 140 அடியை எட்டியுள்ள நிலையில் இடுக்கி மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எம்பிசி பட்டியலில் நரிக்குறவர் சமூகத்தினர் வரும் நிலையில் நரி என்ற வார்த்தையை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இவ்விவகாரத்தில் மத்திய- மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மலையாளத்தில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் கொச்சு பிரேமன் உடல் நலக் குறைவு காரணமாக மரணித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் சனிக்கிழமை பேட்டியளித்தார்.
அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் வலியுறுத்தும் என்றார்.
மேலும், பொதுப்பிரிவில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
சென்னை சென்டிரலில் தாய் வாணி, மகள் பிரியா ஆகியோரிடம் இருந்து ரூ.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவரிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்தச் சம்பவம் ரயில்வே நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.51 லட்சம் உரிய ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டதாக ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதிமுக எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் அணியாக பிளவுற்ற போது கோவை செல்வராஜ், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளராக காணப்பட்டார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீவிர அரசியலில் ஈடுபட்டார். இந்நிலையில் தற்போது கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
அப்போது, “அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக செயல்படுவோரிடம் இருக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதிமுக எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் அணியாக பிளவுற்ற போது கோவை செல்வராஜ், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளராக காணப்பட்டார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீவிர அரசியலில் ஈடுபட்டார். இந்நிலையில் தற்போது கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
அப்போது, “அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக செயல்படுவோரிடம் இருக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிப் பூ கிலோ ரூ.5 ஆயிரம் வரை விற்பனையாகி உள்ளது.
அதேபோல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிப் பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிவருகிறது.
கார்த்திகை மாதம் என்பதாலும், பூ உற்பத்தி குறைவாக காணப்படுவதாலும் வாடிக்கையாளர்களின் தேவை காரணமாக பூக்கள் விலை அதிகமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சத்தீஷ்கர் அரசு இடஒதுக்கீடு அளவை 76 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் 7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட 3 ஆயிரம் அக்னிவீரர்களில் 341 பெண் மாலுமிகள் உள்ளனர் என இந்திய கடற்படை தலைமை தளபதி இன்று கூறியுள்ளார்.
ஒரு மாலுமிக்கு அளிக்க கூடிய அதே பயிற்சி முறைகள் அவர்களுக்கு வழங்கப்படும். பயிற்சி முறையில் எந்தவிதவேற்றுமையும் இருக்காது. ஒரு தனிநபரின் திறமையை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். இதுதவிர, பாலின சமத்துவ கடற்படையாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் பார்க்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யா தொடர்ந்த வழக்கில், “கொரோனா தொற்றால் பலியான அரசு மருத்துவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்” என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு உத்தரவாதப்படி வேலை வழங்காவிட்டால் மீண்டும் நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் அனுமதியும் வழங்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வாகனங்கள், மோட்டார் தையல் எந்திரம் உள்ளிட்ட ரூபாய். 4.43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ் குமார் எம்.பி. ஆகியோர் வழங்கினர்
கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாளில் முக்கிய நிகழ்வான மகாரத தேரோட்டம் கோலாகல நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை துணை தலைவர், மாவட்ட ஆட்சியர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
சென்னை, கேளம்பாக்கத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகும் 'விடுதலை' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த படப் பின்போது ரோப் கயிறு அறுந்து விழுந்ததில், சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் உயிரிழப்ந்துள்ளர்.
மும்பை மலாட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே சாலையில் கவிழ்ந்து அரசுப் பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 2 அரசுப் பேருந்துகள் ஒன்றையொன்று முந்தி செல்ல முயன்ற நிலையில், எதிரே இருசக்கர வாகனம் வந்ததால் பிரேக் அடித்தபோது நிலை தடுமாறி பேருந்து கவிழ்ந்தது
தி.மு.க சார்பில் டிசம்பர் 16ம் தேதி தமிழகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவுப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், கோவை, கம்பம், செங்கல்பட்டு, திருத்தணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் அல்லது ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் விலையை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் கொண்டு வந்து உடனடியாக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றினோம். அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததில் எந்த தவறும் இல்லை. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தினோம். இந்தியாவுக்கே முன் மாதிரியான ஒரு சட்டத்தை இயற்றியுள்ளோம். அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததற்கான காரணத்தை ஆளுநரிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்
மயிலாடுதுறை அருகே கடல் சீற்றம் காரணமாக விசைப்படகு மூழ்கியது. படகில் இருந்த மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பினர்.
கர்நாடக வனப்பகுதிகளில் இருந்து வெளியேறிய 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஓசூர் அருகே நாகமங்கலம் ஏரியில் முகாமிட்டுள்ளன. பட்டாசு வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கற்சூளைகள் குறித்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையில் முழுமையான தகவல்கள் இல்லை. டிச.22ல் முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
ஜனவரி 1 முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு அமலுக்கு வரும். மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள் அமைத்து தர வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது என மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
மாற்றுத் திறனாளிகள் அலுவலகங்களுக்கு சென்று பணி செய்யாமல் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்ற சூழலை உருவாக்க உள்ளோம், ஜனவரி மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும் என மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மலேசியாவில் இருந்து 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் காரைக்கால் துறைமுகம் வந்தது. இது 45 கிலோ மூட்டையாக பேக்கிங் செய்யப்பட்டு தேவைக்கேற்ப பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது
தோள் பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து முகமது ஷமி விலகியதால், அவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.
நாளை முகூர்த்த நாளையொட்டி திண்டுக்கல்லில் மல்லிகைப் பூ ரூ.5,000க்கு விற்பனை. கனகாம்பரம் கிலோ ரூ.1,500க்கும், முல்லைப் பூ ரூ.1,400க்கும், ஜாதிமல்லிப் பூ கிலோ ரூ.1000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் அதிமுக ஆட்சியில் தான் முறைகேடு நடந்தது.
முறைகேடு தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை கண்காணித்து நீதிமன்றத்தில் அறிக்கை தரப்படும் என அமைச்சர் அன்பரசன் பேட்டி
தமிழகத்தில் லிஃப்டில் சென்றால் கூட பாதுகாப்பு இல்லை.
தமிழகத்தில் லிஃப்டில் சென்றால் கூட பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் லிப்டில் சிக்கியதை சுட்டிக்காட்டி, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கிண்டல்
கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த வெண்ணிலா கபடி குழு திரைப்படப் புகழ் நடிகர் ஹரி வைரவன் இன்று உயிரிழந்தார்.
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ள நரி கூட்டம் படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
ரேஷன் அட்டை பயனர்கள் ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருப்போர் பாஸ் புக் நகல் மற்றும் அதில் குடும்ப தலைவர் பெயர், ரேஷன் அட்டை எண் குறிப்பிட்டு பணியாளரிடம் தர வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கி கணக்குடன் ஆதார் இணைத்தால் மட்டும் போதுமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு: பெருந்துறை அருகே பட்டியலின மாணவர்களை, கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை கீதாராணி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது.
கன்னியாகுமரிக்கு இன்று உள்ளூர் விடுமுறை. குமரியில் இன்று கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை
விடுமுறையை ஈடு செய்ய வரும் ஜன.28ம் தேதி பணி நாளாக செயல்படும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு