பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 302-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஓ.பி.எஸ் வழக்கு விசாரணை
அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோர் தொடர்ந்த அவசர வழக்குகள் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. வழக்கை உடனே விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம்
ஓபிஎஸ் தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில், நீதிபதி கே. குமரேஷ்பாபு இன்று காலை 10 மணிக்கு விசாரிக்க உள்ளார்.
2-வது ஒருநாள் போட்டி
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30மணிக்கு தொடங்குகிறது. 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் இன்று இரு அணிகளும் விசாகப்பட்டினத்தில் பலப்பரீட்சை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
சென்னை, துரைப்பாக்கத்தில் திருமணமான 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். போக்சோ சட்டத்தில் கணவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தூத்துக்குடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது
திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய விவகாரத்தில் மேலும் ஒருவரை திருப்பூர் சைபர் கிரைம் போலீஸ் கைது செய்தது. பீகாரைச் சேர்ந்த உபேந்திர ஷனி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவராக சரத்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈரோட்டில் நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 100.22 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஈரோடு, மதுரை நகரத்தில் 98.24 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை, பாரத் ஜோடோ யாத்ராவின் போது அவரது “பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்” என்ற கருத்து அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறை மற்றும் 45 நாட்கள் தாமதத்திற்குப் பிறகு திடீர் அவசரம் ஏன் என கேள்வி” எழுப்பி டெல்லி காவல்துறையின் நோட்டீஸுக்கு நான்கு பக்க முதற்கட்ட பதிலை அனுப்பினார்.
ஐந்து நாட்களில் மூன்றாவது முறையாக டெல்லி போலீஸ் குழு அவரது கதவைத் தட்டிய சில மணிநேரங்களுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் 10 புள்ளிகள் கொண்ட பதிலை அளித்தார். ஜனவரி 30-ம் தேதி அவர் கூறிய கருத்துகள் தொடர்பாக டெல்லி போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு விரிவான பதிலை அளிக்க 8 முதல் 10 நாட்கள் அவகாசம் கோரினார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்க வங்கி, கல்விக்கடன் காப்பீட்டு நிதியில் ரூ.34.10 லட்சம் கையாடல் செய்த, வேலூர் எஸ்.பி.ஐ வங்கியின் உதவி மேலாளர் யோகேஸ்வர பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்
கேரளாவில் சாலைப் பணிகளுக்காக வந்திருந்த கொல்கத்தாவைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளி பதேஷுக்கு லாட்டரியில் ரூ.75 லட்சம் பரிசு கிடைத்துள்ளது
மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை நகைச்சுவை நடிகர் வடிவேலு பார்வையிட்டார். அமைச்சர் மூர்த்தியும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்துவோம். வட மாநிலத்தவர்கள் வருகையை காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்வது நல்லது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்
மதுரையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேச்சு: “தேசிய தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது. கூட்டணி பற்றி மாநில தலைவர்கள் முடிவு செய்ய முடியாது, தேசிய தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும். அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை அமைதி காக்கவும்.” என்று கூறினார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியதாவது: “எங்கள் பக்கம் நீதி இருக்கிறது, எங்களுக்கு கிடைத்த வெற்றியாக இன்றைய தீர்ப்பை பார்க்கிறோம். எம்.ஜி.ஆர் பாடல் போன்று நீதிக்கு இது ஒரு போராட்டம், நிச்ச்யாம் இந்த உலகம் எங்களைப் போராட்டம் என்று கூறினார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி: “நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்துவோம். வட மாநிலத்தவர்கள் வருகையை காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்வது நல்லது” என்று கூறினார்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. சனிக்கிழமை தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணிவுடன் நிறைவடைந்தது.
மொத்தம் 220 பேரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 219 விருப்பமனுக்கள் இ.பி.எஸ் பெயரிலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதுரை தொகுதி எம்.பி சு. வெங்கடேசன், மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், சுமார் 100 தமிழக ஆக்ட் அப்ரண்டீஸ்களுக்கு தெற்கு ரயில்வேயில் வேலை மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஆக்ட் அப்ரண்டீஸ்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. தமிழக பயிற்சியாளர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கி எடுக்கக் கோரியுள்ளார்.
கூட்டணி குறித்து பேச எனக்கு அதிகாரம் இல்லை: கூட்டணி குறித்து பேசும் நேரம் விரைவில் வரும்” தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் மார்ச் 24ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் அதுவரை பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு “இது எங்களுக்கு கிடைத்த வெற்றி” – ஓபிஎஸ் தரப்பு வெடி வெடித்து கொண்டாட்டம்
சூழ்நிலைகள் மாறியதால் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன” “பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான விதிகள் 2017ல் திருத்தப்பட்டது” “பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் விதி மீண்டும் கொண்டு வரப்பட்டது” “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை பொதுக்குழு தேர்வு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டது” “ஜூலை 11 ல் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் சட்டவிரோதமானவையல்ல” உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வாதம்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் ஆனால் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கட்சிக்கு எதிராக நீதிமன்றம் சென்றால் உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என கட்சி விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது” உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வாதம்
2021 டிசம்பரில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலின் போதும் சனி, ஞாயிற்று கிழமைகளில் தான் வேட்புமனுக்கள் பெறப்பட்டன” “கட்சியின் அடிப்படை உறுப்பினர்களும் ஒற்றை தலைமையை தான் விரும்புகிறார்கள்” “ஓபிஎஸ் தரப்பினர் எதார்த்த நிலையை உணரவில்லை, கற்பனை உலகத்தில் இருக்கின்றனர்” உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வாதம்
“ஓரிரு நாட்களில் பதிலளிக்க உத்தரவிடுங்கள், அதுவரை தேர்தல் நடத்தக் கூடாது என உத்தரவிடுங்கள்” “இல்லாவிட்டால் ஒருவரே வேட்புமனு தாக்கல் செய்து, ஈபிஎஸ் -ஐ ஒருமனதாக தேர்ந்தெடுத்து விடுவார்கள் – என ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது.
மேலும் “பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு 17ம் தேதி விசாரணைக்கு வந்த போது தேர்தல் நடத்த திட்டம் பற்றி தெரிவிக்கவில்லை எனவும் உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்
“ஒன்றரை கோடி உறுப்பினர்களின் குரல் முடக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு” “பொதுச்செயலாளர் தேர்தல் 1.50 கோடி உறுப்பினர்கள் மூலமே நடத்தப்படுகிறது” “ஓபிஎஸ்க்கு ஒரு சதவீதம் கூட ஆதரவு இல்லை” என உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வாதம்
பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் பெற்று மாலை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது.
நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை அறிவித்து விட்டு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது – ஓபிஎஸ் தரப்பு
பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பி.எஸ் தரப்பில் தொடர்ந்த வழக்கை சற்று நேரத்தில் விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னையில் பெண் காவலர்களுக்கான ரோல் கால் நேரம் மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி காலை 7 மணிக்கு பதில் 8 மணிக்கு பெண் காவலர்களுக்கு வருகை அணிவகுப்பு.
விருதுநகர், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோயிலில் பங்குனி மாத பிரதோஷம் கோலாகலம்.
அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம்
அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கு, அவசர வழக்காக இன்று விசாரிக்கப்படவுள்ளது