பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 278-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
அ.தி.மு.க பொதுக்குழு – இன்று தீர்ப்பு
அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று காலை 10.30க்கு தீர்ப்பு. ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
தஜிகிஸ்தான், முர்காப் பகுதியில் 6.8 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானிலுள்ள ஃபைசாபாத்திலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்; தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலுக்கு கண்டனம். மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க தூதரக வழிமுறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்!
தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்; தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலுக்கு கண்டனம்!
சேலம் மாநகர ஆணையர் நஜ்மல் ஹோடா ஆவடி மாநகர கூடுதல் ஆணையராக நியமனம். சேலம் மாநகர புதிய காவல் ஆணையராக விஜயகுமாரி நியமனம். தமிழ்நாடு ரயில்வே காவல்துறை டிஐஜி விஜயகுமார் ஆவடி மாநகர இணை ஆணையராக நியமனம்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என்று குற்றம் சாட்டிய ஐபிஎஸ் அதிகாரி தீபிகா, ஜம்மு காஷ்மீருக்கு மாற்றம்! மற்றொரு ஐபிஎஸ் அதிகாரி லோகேஸ்வரன் மிசோரமுக்கு மாற்றப்பட்டுள்ளார்
நடிகர் ராமராஜன் நடிப்பில் எக்ஸட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள 'சாமானியன்' படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
2012ல் இதே தலைப்பை படத்திற்கு பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருவதால், இந்த படத்தை வெளியிட தடை கோரி ஆர்ட் அடிக்ட் என்கிற நிறுவனத்தின் உரிமையாளரான வியன் ஆர்மான் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்
தேனியில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி: “ஒன்றரை கோடி அ.தி.மு.க தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்” என்று கூறினார்.
மயிலாடுதுறை, தரங்கம்பாடியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இலங்கை கடற்படை இரும்பு பைப்பால் தாக்கியதில் காயமடைந்த 6 மீனவர்கள் பொறையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன்ர்.
நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாக்கியுள்ள 'சாமானியன்' படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோவை பேரூர் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளுக்குள் வலம்வந்த காட்டு யானை மக்னாவை 4 நாள் போராட்டத்திற்குபின், வனத்துறையினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பெட்ரோல் – எத்தனால் கலப்பில் நிர்ணயிக்கப்பட்டதற்கு முன்பே இந்தியா இலக்கை எட்டியுள்ளது; 2030க்கு முன்பே 2026க்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பை நாடு அடைந்துவிடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கோகுல் ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.
கிராம உதவியாளர் பணி நியமனத்தில் விதிமீறல் இருந்தால் நியமனத்தை ரத்து செய்ய நேரிடும் என விளாத்திகுளம் தாலுகாவில் கிராம உதவியாளர் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டதா? என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கிராம உதவியாளர் நியமனத்தில் விதிமீறல்கள் இருந்தால் நியமனங்களை ரத்து செய்ய நேரிடும் என ஐகோர்ட் மதுரை கிளை எச்சரித்துள்ளது
ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தப்போது பட்டாசு, வான வேடிக்கை, மேள தாளம் முழங்க அதிமுக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில், ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட 7 பெண்களிடமும், மனநல மருத்துவரை வைத்து சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர்
வரலாற்று சிறப்பு மிக்க உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு நியாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி,புரட்சித்தலைவர் “எம்ஜிஆர்”, புரட்சிதலைவி “அம்மா”ஆகிய இருபெறும் தலைவர்களின் நல் ஆசியுடனும்,ஒன்னரை கோடி தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடனும்,கழகத்தை வழிநடத்தவும், அம்மா அவர்கள் கண்ட நூறாண்டு சரித்திரக் கனவை நனவாக்கவும் உயிர் மூச்சுள்ளவரை உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன் என இ.பி.எஸ் ட்வீட் செய்துள்ளார்
இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவின் தந்தை திலக் யாதவ் உடல்நலக் குறைவால் காலமானார்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் வழக்கமான 3 இடது கை ஆட்டக்காரர்கள் இருப்பார்கள். அணியில் சமமான அளவுக்கு தகுதியான வீரர்கள் உள்ளனர் என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் கூறியுள்ளார்
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வழக்கறிஞர் லட்சுமி நாராயணன் நியமனமிக்கப்பட்டுள்ளார்.
ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனுக்கு இனி அதிமுகவில் இடமில்லை. அவர்களை ஏற்பதாக இருந்தால் ஈபிஎஸ் தலைமையில் கட்சி முடிவு செய்யும். இந்த தீர்ப்புக்கு பின் நாங்கள் இன்னமும் வேகமாக இயங்குவோம்- அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டி
உச்ச நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு முழுமையான வெற்றியல்ல. சிவில் வழக்கு மூலம் சட்டப்போராட்டம் நீடிக்கும்- சென்னை, தேனாம்பேட்டையில் ஓபிஎஸ் ஆதரவாளர் திருமாறன் பேச்சு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா-வை டெல்லி விமான நிலையத்தில் அசாம் போலீசார் கைது செய்தனர்.
ஜெயலலிதாவின் எண்ணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது. ஜெயலலிதா நம்மை விட்டு மறைந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் தாயாக, மகளாக, சகோதரியாக, ஏதாவது ஒரு ரூபத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு வி.கே.சசிகலா அறிக்கை
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ள சூழலில், இன்று மாலை. 4.30 மணியளவில் ஓ.பன்னீர் செல்வம் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் பாயிஸாபாத் அருகே 5வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; காலையில் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது 12.15 மணியளவில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கான பணிகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது- சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு
அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம் . பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி – உச்சநீதிமன்றம்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும்
உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி – உச்சநீதிமன்றம்
ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி. ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. தீர்ப்பையடுத்து இ.பி.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம் .
ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடந்த மோதல் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கைது. திமுகவினருடன் நடந்த மோதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த விஜய், கணேஷ்பாபு கைது
விருதுநகர், சிவகாசி அருகே பிறந்த குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம்
மாரனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் – சுகாதார துறை நடவடிக்கை
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து
3 மாத குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு – போலீசார் விசாரணை
நாடு முழுவதும் 76 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 6 பேர் கைது
லாரன்ஸ் பிஷ்னோய், ஜக்கு பகவான்பூரியா உள்ளிட்ட கும்பல்களில் பணிபுரிந்ததாக 6 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழாவை ஒட்டி மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு
மெக்கின்சி நிறுவனம் 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவிப்பு
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆலோசனை அளிக்கும் பிரபல நிறுவனமான மெக்கின்சி 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவிப்பு
பஞ்சாப் அரசு உதவித்தொகை வழங்க பயனாளர் ஒருவரிடம் ரூ. 5 லட்சம் லஞ்சம் கேட்ட புகாரில் பகிந்தா தொகதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமித் ரத்தன் கோத்ஃபதா கைது.
எம்.எல்.ஏ ரத்தனின் உதவியாளர் ரஷிம் கார்க் இதே வழக்கில் அண்மையில் கைது லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லுமா? செல்லாதா? – தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் ஈபிஎஸ், ஓபிஎஸ்
கோவை, செல்வபுரம் பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானை
ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் புகுந்ததால் மக்கள் அச்சம்
யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் போராட்டம்
தஜிகிஸ்தான், சீனா எல்லையில் தொடர்ந்து 6 முறை நிலநடுக்கம்
அதிகபட்சமாக 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்
5.0, 4.6, 4.9, 4.8 மற்றும் 4.7 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அச்சம்
உலகிலேயே மிகவும் மோசமான ஓட்டுநர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம்
சிறந்த ஓட்டுநர்கள் பட்டியலில் ஜப்பான் முதலிடம்
தஜிகிஸ்தான், சீனா எல்லையில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்
ரிக்டர் அளவில் 6.8, 5.0 மற்றும் 4.6 ஆக பதிவு
சீனா, இந்த நிலநடுக்கத்தை 7.3 ரிக்டராக பதிவு செய்துள்ளது
சிதம்பரம் நடராஜர் கோயிலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்
குடும்பத்துடன் வந்துள்ள ஆளுநருக்கு தீட்சிதர்கள் கும்ப மரியாதை
ஆளுநர் வருகையை ஒட்டி, கடலூர், சிதம்பரம் பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு