Advertisment

Tamil news today : டெல்லியில் வங்கதேசப் பிரதமர் - மோடி இன்று பேச்சுவார்த்தை: 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

Tamil Nadu News, Tamil News, Petrol price Today: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Narendra Modi

பெட்ரோ- டீசல் விலை

Advertisment

சென்னையில் 106வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை .ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியா தோல்வி

ஆசியகோப்பை: சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்துள்ளது. 182 ரன்கள் இலக்கை நிர்ணயித்த இந்தியாவை 19.5 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.

45 பேருக்கு நல்லாசிரியர் விருது

ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உள்பட 45 பேருக்கு நல்லாசிரியர் விருது டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்குகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:41 (IST) 05 Sep 2022
    சோசியல் மீடியாவை கண்காணிக்க குழு - டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

    யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்து, வதந்திகளை பரப்பி, அதன் மூலம் குழப்பங்களையும் கலவரங்களையும் ஏற்படுத்தும் நபர்களை கூர்ந்து கவனிக்க 203 காவல் அதிகாரிகள் கொண்ட ‘சமூக ஊடகக் குழுக்கள்’ அமைக்கப்பட்டுள்ளது என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

    பொய்யான பதிவுகளை சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து, அந்த வதந்தி பதிவுகளை நீக்கவும், அவர்களின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்கவும் இக்குழு துரிதமாக செயல்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.



  • 21:20 (IST) 05 Sep 2022
    டெல்லி ராஜ்பாத்தின் பெயரை மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்

    டெல்லி ராஜ்பாத் என்பதை கர்தவ் பாத் என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 19:44 (IST) 05 Sep 2022
    சிங்கப் பெண்களே- மு.க. ஸ்டாலின் ட்வீட்

    புதுமைப்பெண் திட்ட பயனாளிகளை வாழ்த்தி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், “சிங்கப்பெண்களே,

    மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரிலான puthumaipenn திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை கல்விக்காக எவ்வகையில் பயன்படுத்தலாம் என்று வழங்கப்பட்டுள்ள கையேட்டைப் பயன்படுத்தி பெற்றோரின் வழிகாட்டுதலுடன் உயர்கல்வியில் சிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



  • 19:43 (IST) 05 Sep 2022
    சைரன் பட பூஜை தொடக்கம்

    ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா ஆகியோர் நடிக்கும் சைரன் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.



  • 19:41 (IST) 05 Sep 2022
    திருச்சிற்றம்பலம் தாய்கிழவி பாடல் வெளீயீடு

    தனுஷ் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் பிரபலமான தாய்கிழவி வீடியோ பாடல் இன்று வெளியானது.



  • 19:36 (IST) 05 Sep 2022
    வேதா நிலையம், சசிகலா உரிமை கோர முடியாது: ஜெ. தீபா

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “வேதா நிலையம் விற்பனைக்கு அல்ல. வீண் வதந்திகளை பரப்பாதீர்கள். அது எங்களது மன அமைதியை கெடுக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் அந்த ஆடியோவில், “ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு எங்களது பூர்வீக சொத்து. வேதா நிலையத்தை நாங்களே பராமரித்துக் கொள்வோம். சசிகலா உள்பட யாரும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு உரிமை கோர முடியாது.



  • 19:02 (IST) 05 Sep 2022
    வேதா நிலையம், சசிகலா உரிமை கோர முடியாது: ஜெ. தீபா

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “வேதா நிலையம் விற்பனைக்கு அல்ல. வீண் வதந்திகளை பரப்பாதீர்கள். அது எங்களது மன அமைதியை கெடுக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் அந்த ஆடியோவில், “ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு எங்களது பூர்வீக சொத்து. வேதா நிலையத்தை நாங்களே பராமரித்துக் கொள்வோம். சசிகலா உள்பட யாரும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு உரிமை கோர முடியாது.



  • 18:26 (IST) 05 Sep 2022
    வங்கி கொள்ளை வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமின் மறுப்பு

    சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அமல்ராஜ் மற்றும் நகை பட்டறை உரிமையாளர் ஸ்ரீவத்சனுக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 17:59 (IST) 05 Sep 2022
    கோவில் குடமுழக்கு : 14 வகையான சீர்வரிசை கொடுத்த இஸ்லாமியர்கள்

    புதுக்கோட்டை கீரமங்கலம் பட்டவையனார் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து கீரமங்கலம் மேலக்காடு பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள், பள்ளிவாசலில் இருந்து பழங்கள், காய்கறிகள், தேங்காய், பூ உள்ளிட்ட 14 வகை தட்டுகளை இந்து முறைப்படி கைகளில் ஏந்தியபடி நாட்டிய குதிரைகளின் நடனத்துடன், விண்ணதிரும் பட்டாசுகள் வெடிக்க, இஸ்லாமிய சிறுவர்கள் ஆட்டம் பாட்டமாக முன்னே செல்ல, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பட்டவையனார் கோயிலை வந்தடைந்தனர்.





  • 17:57 (IST) 05 Sep 2022
    டெண்டர் முறைகேடு வழக்கு - தமிழக அரசு ஆட்சேபம்

    தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல மத்திய அரசு வழக்கறிஞர் எப்படி வேலுமணிக்கு ஆதரவாக ஆஜராகலாம்? என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.



  • 17:34 (IST) 05 Sep 2022
    பிரிட்டன் புதிய பிரதமர் லிஸ் டிரஸ்

    பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



  • 17:32 (IST) 05 Sep 2022
    வங்கதேச பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

    டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்து பேசியுள்ளார்.



  • 16:57 (IST) 05 Sep 2022
    சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம். துரைசாமி நியமனம்

    சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம். துரைசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி செப்டம்பர் 12ஆம் தேதி பணி ஓய்வு பெறுவதால், பொறுப்பு தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்



  • 16:46 (IST) 05 Sep 2022
    திருப்பதி தேவஸ்தான ஊழியர்களை, உத்தர பிரதேச நடிகை தாக்கியதாக குற்றச்சாட்டு

    திருப்பதி தேவஸ்தான ஊழியர்களை, உத்தர பிரதேச நடிகை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பதி தரிசனத்திற்கு டிக்கெட் கிடைக்காத காரணத்தால் வாக்குவாதம் செய்வதாக, சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது



  • 16:20 (IST) 05 Sep 2022
    நீதிமன்ற வளாகத்தில் ரவுடியை கொல்ல முயற்சி

    சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் கூலிப்படை தலைவன் மதுரை பாலாவை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. 2 பேர் தப்பியோடிய நிலையில், 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன



  • 16:01 (IST) 05 Sep 2022
    கோவில் நிலத்தில் கட்டடங்கள்; அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவிலின் விவசாய நிலங்களில் உள்ள கான்கீரிட் கட்டட ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வழக்கில் அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது



  • 15:47 (IST) 05 Sep 2022
    பட்டாசு விதிமுறை மீறல் - ஆய்வுக்குழு நியமனம்

    விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு விதிமுறை மீறல்களை கண்டறிய 4 சிறப்பு ஆய்வுக்குழுவை நியமித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார்



  • 15:32 (IST) 05 Sep 2022
    குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம் - ராகுல் காந்தி

    குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், பொது மக்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரமும் வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்



  • 14:49 (IST) 05 Sep 2022
    கல்வித் தொலைக்காட்சி சிஇஓ நியமனம் ரத்து

    கல்வித் தொலைக்காட்சி சிஇஓ நியமிக்கப்பட்ட மணிகண்ட பூபதியின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 13:39 (IST) 05 Sep 2022
    நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி

    ஜார்க்கண்ட் சட்டசபையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு திங்கள்கிழமை பெரும்பான்மையை நிரூபித்தது. ஜேஎம்எம் தலைமையிலான UPA கூட்டணியின் எம்எல்ஏக்கள் யாரும் ஆளும் அரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை.



  • 13:31 (IST) 05 Sep 2022
    கனமழை பெய்ய வாய்ப்பு

    நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 12:53 (IST) 05 Sep 2022
    வேதபுரீஸ்வரர் கோயில் நடராஜர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

    தஞ்சை மாவட்டம் திருவீதிகுடியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்து 62 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான நடராஜர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

    அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் சிலைகளை கண்டறியும் பணியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்



  • 12:41 (IST) 05 Sep 2022
    கெஜ்ரிவால் பங்கேற்றது மகிழ்ச்சி - ஸ்டாலின்

    என்னுடைய கோரிக்கையை ஏற்று புதுமைப் பெண் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்றி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ஆசிரியர் தினம் மற்றும் வ.உ.சி பிறந்த தினமான இந்த நல்ல நாளில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது



  • 12:41 (IST) 05 Sep 2022
    'தந்தையாக சொல்கிறேன்...' - முதல்வர் ஸ்டாலின்

    "தந்தையாக சொல்கிறேன், உங்களின் வளர்ச்சிக்காக தான் நாங்கள் இருக்கிறோம்"

    மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • 12:22 (IST) 05 Sep 2022
    46 பேருக்கு நல்லாசிரியர் விருது

    ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உள்பட 46 பேருக்கு நல்லாசிரியர் விருது

    ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு நல்லாசிரியர் விருது வழங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு



  • 12:07 (IST) 05 Sep 2022
    "பெண்களுக்கு முன்னோடி திட்டம்" - அரவிந்த் கெஜ்ரிவால்

    மிகக்குறுகிய காலத்தில் மாதிரி பள்ளிகள் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது.

    ஒவ்வொரு மாநிலமும் நல்ல திட்டங்களை மற்ற மாநிலங்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

    கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் பெண்களுக்கு முன்னோடி திட்டம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு



  • 12:01 (IST) 05 Sep 2022
    சமூக நீதி என்பது சலுகை அல்ல, அரசின் கடமை - முதல்வர் ஸ்டாலின்

    பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்க நடவடிக்கை - முதல்வர் ஸ்டாலின்

    கற்றலோடு மாணவர்களின் பல்வேறு திறன்களையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சமூக நீதி என்பது சலுகை அல்ல, அரசின் கடமை. பெண் கல்வி ஊக்குவிக்கப்படும் போது, சமத்துவம் நிலைக்கும் - ஸ்டாலின்

    கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை



  • 11:14 (IST) 05 Sep 2022
    மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 - தொடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 - தொடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . உயர்கல்வி படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டம் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கு உதவித்தொகை .



  • 10:55 (IST) 05 Sep 2022
    புதுமைப் பெண்' திட்டம் தொடக்க விழா

    புதுமைப் பெண்' திட்டம் தொடக்க விழா 'புதுமைப் பெண்' திட்டம் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்



  • 10:13 (IST) 05 Sep 2022
    வ.உ.சி. பிறந்தநாள் - முதல்வர் மரியாதை

    வ.உ.சி. பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை சென்னை, துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.



  • 09:07 (IST) 05 Sep 2022
    தங்கம் சவரனுக்கு ரூ.56 உயர்வு

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.37,776க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் ரூ.4,722க்கு விற்பனை



  • 09:05 (IST) 05 Sep 2022
    தக்காளி விலை உயர்வு

    கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைவு எதிரொலி - கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை பீன்ஸ் ரூ.50, முருங்கைக்காய் ரூ.70க்கும் விற்பனை தொடர் மழையால் தக்காளி விலை 3 மடங்கு உயர்வு



  • 08:14 (IST) 05 Sep 2022
    உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் இன்று மேல்முறையீடு

    அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் இன்று மேல்முறையீடு. தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டுமென இபிஎஸ் கேவியட் மனுத்தாக்கல்.



  • 08:12 (IST) 05 Sep 2022
    கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்

    கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகளும் இன்று திறப்பு. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment