Advertisment

Tamil news today : மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை : 8 மணிக்கு தொடங்குகிறது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

Tamil Nadu News, Tamil News Petrol price Today - Jan 14 2023 - இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Pudukottai youth died in Trichy Jallikattu

திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படும். (கோப்புக் காட்சி)

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

போகி பண்டிகை கொண்டாட்டம்

தமிழ்நாடு முழுவதும் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடும் மக்கள். சிறுவர்கள் தெருக்களில் மேளம் அடித்து உற்சாகமாக கொண்டாடுகின்றனர். சென்னையில் போகி கொண்டாட்டத்தால் காற்று மாசு அதிகரிப்பு.

அரசு பணி - முதல்முறையாக திருநங்கை தேர்வு

தமிழ்நாட்டில் முதல் முறையாக கிராம நிர்வாக பணியாளர் பதவிக்கு தூத்துக்குடியை சேர்ந்த திருநங்கை ஸ்ருதி தேர்வு. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடந்த தேர்வில் வெற்றி. தேர்வில் வெற்றி பெற்ற ஸ்ருதி, மேலகரந்தை கிராம உதவியாளராக பணியாற்ற ஆட்சியர் செந்தில்ராஜ் பணியாணை வழங்கினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/



  • 22:07 (IST) 14 Jan 2023
    தண்ணீருக்கும் இரட்டை தொட்டி கூடாது - திருமாவளவன்

    வேங்கைவயலில் மனித கழிவுகள் கொட்டப்பட்ட குடிநீர் தொட்டி பேரிழிவின் சின்னம். அது இருந்த சுவடே இல்லாத வகையில் அகற்றப்பட வேண்டும். ஆதிதிராவிடர் சமூகத்திற்கு தனி குடிநீர் தொட்டி அமைக்க கூடாது தேநீருக்கு இரட்டை குவளை கூடாதெனில் தண்ணீருக்கும் இரட்டை தொட்டி கூடாது என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.



  • 20:45 (IST) 14 Jan 2023
    திமுக பேச்சாளர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

    திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.



  • 20:05 (IST) 14 Jan 2023
    துக்ளக் 53ஆம் ஆண்டு நிறைவு விழா : சிறப்பு விருந்திராக மத்திய அமைச்சர்

    சென்னை, மியூசிக் அகாடமியில் துக்ளக் 53ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்



  • 19:36 (IST) 14 Jan 2023
    புதுச்சேரி சபாநாயகர் மருத்துவமனையில் அனுமதி

    புதுச்சேரி சபாநாயகர் செல்வத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதன் காரணமாக செல்வம், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.



  • 19:22 (IST) 14 Jan 2023
    கைதிகளுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு

    அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான வீடுகளில் உள்ள கைதிகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.10,000 மதிப்பிலான ஆடை உதவித்தொகை வழங்கப்படும் என ஹிமாச்சல் முதல்வர் சுகு தெரிவித்துள்ளார்.



  • 19:04 (IST) 14 Jan 2023
    கோவிட் பாதிப்பு அதிகரிப்பு.. மத்திய அரசுக்கு தடுப்பூசி வழங்கும் சீரம்

    சில நாடுகளில் கோவிட் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கோவிஷீல்டை மத்திய அரசுக்கு இலவசமாக வழங்கத் தொடங்கியுள்ளது.

    அந்த வகையில், முதல் கட்டமாக 80 லட்சம் டோஸ்கள் சனிக்கிழமை முதல் அனுப்பப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.



  • 18:47 (IST) 14 Jan 2023
    காங்கிரஸ் எம்.பி. மரணம்.. பாரத் ஜோடோ யாத்திரை நிறுத்தம்

    காங்கிரஸின் ஜலந்பதர் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரி மாரடைப்பால் மரணம் அடைந்ததை அடுத்து, பாரத் ஜோடோ யாத்திரை பஞ்சாப் மாநிலம் பிலூரில் நிறுத்தப்பட்டது.

    எம்.பி சந்தோக் சிங் சவுத்ரிக்கு வயது 76. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார்.



  • 18:29 (IST) 14 Jan 2023
    செகந்திராபாத்- விசாகப்பட்டினம் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் மோடி நாளை தொடங்கிவைக்கிறார்

    தெலங்கானா மாநிலத்தின் செகந்திரபாத் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவின் விசாகப்பட்டினம் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜன.16) தொடங்கிவைக்கிறார்.



  • 18:17 (IST) 14 Jan 2023
    உர்ஃபி ஜாவத்திடம் வாக்குமூலம் பதிவு

    பாஜக தலைவர் சித்ரா வாக் அளித்த புகாரின் பேரில், மாடல் அழகி உர்ஃபி ஜாவேத்தின் வாக்குமூலத்தை மும்பை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

    சில நாள்களுக்கு முன்பு உர்ஃபி ஜாவத் அரைகுறை ஆடையுடன் மும்பை வீதிகளில் சுற்றித் திரிந்தார் என குற்றஞ்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாஜக தலைவர் சித்ரா வாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • 17:54 (IST) 14 Jan 2023
    மூத்த சோசியலிஸ்ட் தலைவர் சரத் யாதவ் உடல் தகனம்

    மூத்த சோசலிஸ்ட் தலைவரும், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் உடல், மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.



  • 17:52 (IST) 14 Jan 2023
    திமுக இளைஞர் அணி செயலி

    திமுகவின் இளைஞர் அணி செயலியை அறிமுகப்படுத்தி இதனை கழக உறுப்பினர்கள் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும் என உதயநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.



  • 17:34 (IST) 14 Jan 2023
    பொன்முடி ஒருமாதிரியா சைகை செய்கிறார்.. அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு

    சட்டப்பேரவைக்குள் அமைச்சர் பொன்முடி ஒருமாதிரியாக சைகை செய்கிறார். சபாநாயகர் பிரச்னையை தூண்டுகிறார்.

    ஆகவே, அரசியல் சாசனத்தை பயன்படுத்தி சட்டப்பேரவையை முடக்கி வைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.



  • 17:17 (IST) 14 Jan 2023
    பயணிகளிடம் ரூ.8.34 கோடி வசூல்

    மதுரை கோட்டத்தில் ஓராண்டில் பயணிகளிடம் அபராதமாக ரூ.8.34 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கோட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.



  • 16:52 (IST) 14 Jan 2023
    ஆளுனர் மீது ஆர்.எஸ். பாரதி கடும் தாக்கு

    ஆளுனர் ஆர். என். ரவி மீது திமுகவை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

    அப்போது, சோன் பப்டி, பானிபூரி விற்க வந்தவர்களுக்கு தமிழ்நாட்டின் பெருமை தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.



  • 16:33 (IST) 14 Jan 2023
    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக ஆதரவு; இபிஎஸ் கடிதம்!

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி சட்டத்துறை ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.



  • 16:15 (IST) 14 Jan 2023
    குடிநீரில் மனிதக் கழிவு - வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டில் மலம் கலக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.



  • 16:04 (IST) 14 Jan 2023
    ரசிகர்களுக்கு திடீர் போட்டி வைத்த பார்த்திபன்

    நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இவ்வாண்டில் …

    இன்னொரு படம் துவங்குகிறேன்… அத்தலைப்பு ஒரு பெண்ணின் பெயர் கொண்டதாய் இருக்கும்.ஆனால் அதனுள் ஒரு ஆண் பெயர் இருக்கும். கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு doll பரிசு! அனேகமாக அதிகமானவர்கள் கண்டுபிடிப்பீர்கள். எனவே ஒரு பொம்மை மட்டும் பரிசு. Ready 1..2..3” எனத் தெரிவித்துள்ளார்.



  • 15:25 (IST) 14 Jan 2023
    பொங்கல் போனஸ்: அன்புமணி வலியுறுத்தல்!

    "பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்" என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



  • 14:25 (IST) 14 Jan 2023
    ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவு!

    நடிகர்கள் கார்த்தி - பார்த்திபன் நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

    செல்வராகவன் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் திரையிடப்பட்டு பல ஆண்டுகள் கழித்து இன்றும் பெரும் பேசுபொருளாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.



  • 14:15 (IST) 14 Jan 2023
    ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.



  • 14:12 (IST) 14 Jan 2023
    முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து!

    தாய்த்தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றும் இன்பம் பொங்கட்டும். செங்கரும்பை போல மக்கள் வாழ்வு தித்திக்கட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 13:50 (IST) 14 Jan 2023
    தமிழகம் முழுவதும் நடைபயணம்: காயத்ரி ரகுராம் ட்வீட்!

    பாஜகவை கண்டித்து, வரும் 27ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்ய இருப்பதாகவும், யாருடைய அச்சுறுத்தலுக்கும் அஞ்சப்போவதில்லை என்றும் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



  • 13:42 (IST) 14 Jan 2023
    பெரியார் விருதுகள் - அறிவிப்பு!

    தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 29வது ஆண்டு விழாவை ஒட்டி பெரியார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    எழுத்தாளர் வீ.எம்.எஸ்.சுபகுணராஜனுக்கும், குழலிசைக் கலைஞர், திரைப்படப் பின்னணி பாடகர் நெப்போலியன் என்ற அருண்மொழிக்கும் பெரியார் விருது வழங்கப்பட உள்ளது. ஜனவரி 17ம் தேதி வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறும் திராவிடர் திருநாள் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.



  • 13:28 (IST) 14 Jan 2023
    அண்ணாமலை கடிதம்

    ஆளுநரை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.



  • 13:28 (IST) 14 Jan 2023
    தங்கம் விலை

    சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.368 அதிகரித்து ரூ.42,368 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,296 க்கும் விற்பனையாகிறது.



  • 13:27 (IST) 14 Jan 2023
    சேவல் சண்டைக்கு அனுமதி

    ஈரோடு, திருவள்ளூரில் நிபந்தனைகளுடன் கால்நடை மருத்துவர் மேற்பார்வையில் சேவல் சண்டைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நிபந்தனைகளை மீறினால் காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் – உயர்நீதிமன்றம்



  • 12:54 (IST) 14 Jan 2023
    சிறப்பு ரயில்

    சபரிமலை கோயிலில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக செகந்திராபாத் - கொல்லம் - செகந்திராபாத் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக ரயில் இயக்கப்படும்.



  • 12:09 (IST) 14 Jan 2023
    இல்லந்தோறும் தமிழ்நாடு வாழ்க

    இல்லந்தோறும் தமிழ்நாடு வாழ்க’ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம். சமத்துவமும், சுயமரியாதை உணர்வும் கொண்ட சமூகநீதி கொள்கையுடன் தொடர்ந்து பயணிப்போம் - முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து மடல்



  • 12:09 (IST) 14 Jan 2023
    ஸ்டாலினின் புகார் கடிதம்

    ஆளுநர் உரை விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலினின் புகார் கடிததத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.



  • 12:08 (IST) 14 Jan 2023
    துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

    அமைச்சர் துரைமுருகன் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று நேற்று டிஸ்சார்ஜ் ஆன நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • 11:18 (IST) 14 Jan 2023
    எடப்பாடி பழனிசாமி ஆதரவு

    ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் அளித்துள்ளார்.



  • 11:17 (IST) 14 Jan 2023
    எடப்பாடி பழனிசாமி ஆதரவு

    ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் அளித்துள்ளார்.



  • 11:17 (IST) 14 Jan 2023
    அநாகரீகத்தின் உச்சகட்டமாகும்

    தமிழக ஆளுநர் பற்றி திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது அநாகரீகத்தின் உச்சகட்டமாகும்; நாகரீகமற்ற முறையில் பேசிய திமுக பேச்சாளர் மீது தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜிகே வாசன் வலியுறுத்தி உள்ளார்.



  • 10:29 (IST) 14 Jan 2023
    கரூரில் சேவல் சண்டை தடுத்து நிறுத்தம்

    கரூர் : பூலாம்வலசு அனுமதியின்றி நடைபெற இருந்த சேவல் சண்டை தடுத்து நிறுத்தம்.

    நீதிமன்ற உத்தரவை அடுத்து தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் கிராமத்திற்குள் வரும் உள்ளூர் வாகனங்களின் பதிவு எண்கள், பெயர்,முகவரி சேகரிப்பு



  • 10:28 (IST) 14 Jan 2023
    எம்.பி சந்தோக் சிங் செளத்ரி உயிரிழப்பு

    பஞ்சாபில் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் மயங்கி விழுந்த காங்கிரஸ் எம்.பி.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜலந்தர் காங். எம்.பி., சந்தோக் சிங் செளத்ரி உயிரிழப்பு



  • 10:05 (IST) 14 Jan 2023
    ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது அதிகமாகிவிட்டது - தமிழிசை

    ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது அதிகமாகிவிட்டது - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை

    முதல்வர் விமர்சிக்க வேண்டாம் என கூறியும் தமிழ்நாடு ஆளுநரை இணையதளங்களில் தவறாக விமர்சிக்கிறார்கள். சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும் நாகரீகத்தோடு வரம்பு மீறாமல் விமர்சனம் செய்ய வேண்டும் - ஆளுநர் தமிழிசை



  • 10:01 (IST) 14 Jan 2023
    3,184 சீருடை பணியாளர்களுக்கு பதக்கம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    காவல்துறையில் 3000 பேருக்கும், தீயணைப்பு துறையில் 118 பேருக்கும், சிறைத்துறையில் 60 பேருக்கும், மோப்ப நாய் படைப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் 6 பேருக்கும் பொங்கல் திருநாளில் பதக்கம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி பிப்ரவரி 1 முதல் ரூ.400 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 09:15 (IST) 14 Jan 2023
    கிரிப்டோகரன்சிக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் - சக்திகாந்த தாஸ்

    இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பரபரப்பு பேச்சு.

    கிரிப்டோகரன்சி வர்த்தகம் சூதாட்டம் போன்றது. ஒவ்வொரு சொத்துக்கும் மதிப்பு இருக்க வேண்டும். ஆனால் கிரிப்டோகரன்சிகளை பொருத்தவரை எந்த மதிப்பும் கிடையாது. கிரிப்டோ எந்த வகையிலும் நிதியாக இருக்காது.

    இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



  • 09:11 (IST) 14 Jan 2023
    சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்

    சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் - லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

    லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கடும் நெரிசல்



  • 08:29 (IST) 14 Jan 2023
    அவதூறு கருத்து - தி.மு.க பேச்சாளர் மீது ஆளுநர் மாளிகை புகார்

    தி.மு.க பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் மாளிகை சார்பில் புகார்

    விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில், ஆளுநரை பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியுள்ளார் - ஆளுநர் மாளிகை

    ஆளுநர் குறித்த அவதூறு, மிரட்டல் பேச்சுக்கு நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் கோரிக்கை



  • 08:28 (IST) 14 Jan 2023
    விவசாயிகளிடம் நேரடியாக காய்கறிகளை வாங்கும் பொதுமக்கள்

    நெல்லை : மகராஜ் நகர் உழவர் சந்தையில் விவசாயிகளிடம் நேரடியாக காய்கறிகளை வாங்கும் பொதுமக்கள்

    கடந்த 2 நாட்களில் மட்டும், 104 டன் காய்கறிகள் ரூ.36 லட்சத்திற்கு விற்பனை

    காய்கறிகளுக்கு தட்டுப்பாடு, பண்டிகை காலம் என்பதால் காய்கறி விலை உயர்வு



  • 08:27 (IST) 14 Jan 2023
    பொங்கல் பண்டிகை: ரூ.2 கோடிக்கு காய்கறி விற்பனை

    தஞ்சாவூர் : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி காய்கறி விற்பனை விறுவிறு

    கடந்த இரண்டு நாட்களில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் விற்பனை



  • 08:09 (IST) 14 Jan 2023
    சிறுவன் கோகுல்ஸ்ரீ அடித்து கொலை - காவலர்கள் 6 பேர் கைது

    செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் உயிரிழந்த விவகாரம்

    கோகுல்ஸ்ரீ அடித்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலம்

    சிறுவர் சீர்திருத்த பள்ளி காவலர்கள் 6 பேர் மீது கொலை வழக்குப்பதிந்து கைது



  • 08:08 (IST) 14 Jan 2023
    போகிப் பண்டிகை: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

    போகிப் பண்டிகை உற்சாக கொண்டாட்டம், சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

    சென்னையின் பல பகுதிகளில் கற்றின் தர குறியீடு 100-ஐ தாண்டியது, மேலும் அதிகரிக்க வாய்ப்பு.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment