பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்கம்
இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் சர்வதேச செஸ் போட்டியான செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் இன்று முதல் தொடங்குகிறது. 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றன. போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
செஸ் ஒலிம்பியாட் – 4 மாவட்டங்களுக்கு விடுமுறை
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது அலுவலகத்தில் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜனாதிபதி திரௌபதி முர்முவை 'ராஷ்டிரபத்தினி' என்று குறிப்பிட்டதை ஒப்புக்கொண்ட காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்பதாக வியாழக்கிழமை தெரிவித்தார். இருப்பினும், அவர் பாஜகவை தாக்கினார். ஆனால், இந்த நயவஞ்சகர்களிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறினார்.
விருதுநகர், கீழாண்மறைநாடில் உள்ள பட்டாசு ஆலை தீ விபத்தில் ஜெயராமன் என்பவர் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். வெடி விபத்தில் உயிரிழந்த ஜெயராமன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், படுகாயம் அடைந்த பவானீஸ்வரனுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
மேற்கு வங்க அரசு, மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை ஜூலை 28ஆம் தேதி முதல் அமைச்சரவையில் உள்ள அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கியது. ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் நீக்கம் செய்துள்ளது
17 வயதுக்கு மேற்பட்டவர்கள் இப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்வதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் மேலும் ஒரு வருடத்தின் ஜனவரி 1 ஆம் தேதி 18 வயதை அடைவதற்கான முன்தேவையான நிபந்தனையை பூர்த்தி செய்ய காத்திருக்க வேண்டியதில்லை என இந்திய தேர்தல் ஆணையம் ( ECI) வியாழக்கிழமை அறிவித்தது.
ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் மற்றும் தகுதியான இளைஞர்கள் தகுதிபெறும் 18 வயதை எட்டிய ஆண்டின் அடுத்த காலாண்டில் பதிவு செய்யலாம் என்று ECI தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாக, வீடியோ காட்சிகளை கொண்டு சிறப்பு புலனாய்வுக்குழு கைது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது
செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் படம், பெயரை சேர்க்க கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போது குடியரசுத் தலைவர், பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவர்களின் புகைப்படம் இடம்பெற்றிருக்கலாமே?. பல நாடுகளின் வீரர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும். சர்வதேச நிகழ்வை இணைந்து நடத்த வேண்டும் என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவரை அவமதிக்கும் எண்ணமில்லை. 'ராஷ்ட்ரபத்னி' என தவறுதலாக கூறிவிட்டேன். குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்க தயார். வேண்டுமானால் என்னை தூக்கிலிடுங்கள்: சோனியாகாந்தியை ஏன் இதில் இழுக்க வேண்டும்? என காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி கூறியுள்ளார்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைதான 5 பேரும் ஜாமின் கோரி மனு. பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் மனு. நாளைக்கு விசாரணை வருகிறது.
17 வயது நிரம்பியவர்கள் முன்கூட்டியே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் – இந்திய தேர்தல் ஆணையம் , ஜனவரி 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியாகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாகை : வேதாரண்யம் தனியார் பள்ளி விடுதியில் காலை உணவை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கமடைந்தனர். வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் மாணவிகள் அனுமதி
மதுரை, ஒத்தக்கடையில் கடந்த 2019ல் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார். காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் சஸ்பெண்ட் – தென்மண்டல ஐஜி உத்தரவு
செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் பெயரையும், புகைப்படத்தையும் சேர்க்க கோரி மதுரைக்கிளையில் முறையீடு. மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா தரப்பில் அவரது வழக்கறிஞர் சண்முகநாதன் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி முன்னிலையில் முறையிட்டார். இந்த வழக்கு மதியம் விசாரணைக்கு வரவுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் . உதவி ஆணையர், இணை ஆணையர்களுக்கு தலா ரூ. 50,000 அபராதம். அபராத தொகையை 2 வாரங்களில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.15 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்த விரக்தியில் பிரபு என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5ஜி அலைக்கற்றை ஏலம், 3ஆவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. நேற்று 2ஆவது நாள் ஏலத்தில் 5ஜி அலைக்கற்றை ரூ. 1.49 லட்சம் கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 256 அதிகரித்து ரூ. 38,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் 4,767 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் முன்னேற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக செஸ் தீமில் கலைஞர் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
'செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்காக சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். செஸ்ஸுடன் பெருமைமிகு தொடர்பைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில் போட்டி நடைபெறுவது நமக்கு பெருமை' என பிரதமர் மோடி ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்தை ஒட்டி, விருதுநகரில் ஆகஸ்ட் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
விடுமுறையை ஈடுசெய்ய, ஆகஸ்ட் 13ம் தேதி பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது காங்கிரஸ் எம்பி ஜோதிமணியின் ஆடை கிழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.
ஒவ்வொரு முறையும் டெல்லி போலீஸ் இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபடுபதாக ஜோதிமணி தெரிவித்தார்.
டெல்லி போலீஸின் செயலுக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்தனர்.