சென்னையில் குடிநீர் லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது, இன்று வழக்கம் போல் இயக்கும் என தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேகதாதுவில் அணை உறுதி
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் இல்லை எனவும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் விளக்கம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 00:32 (IST) 01 Jun 20239 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்
சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு சென்னை திரும்பினார் முதலீடுகளை ஈர்க்கவும், மூதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்
- 00:30 (IST) 01 Jun 2023உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு
சிங்கப்பூரிலும், ஜப்பானிலும் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்துள்ளேன் தமிழகத்தில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அவர்களை அழைத்துள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான பொருளாதாரம் மேம்பாடு அடையும் வகையில் பயணம் அமைந்தது - முதல்வர் ஸ்டாலின் ₨3,000 கோடி முதலீடு ஈர்க்க திட்டமிட்டோம்; ஆனால் ₨3,231 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது இதன் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்
- 00:29 (IST) 01 Jun 2023உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு
சிங்கப்பூரிலும், ஜப்பானிலும் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்துள்ளேன் தமிழகத்தில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அவர்களை அழைத்துள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான பொருளாதாரம் மேம்பாடு அடையும் வகையில் பயணம் அமைந்தது - முதல்வர் ஸ்டாலின் ₨3,000 கோடி முதலீடு ஈர்க்க திட்டமிட்டோம்; ஆனால் ₨3,231 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது இதன் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்
- 00:28 (IST) 01 Jun 2023மின்வாரிய அலுவலகம் முற்றுகை
சென்னை, அம்பத்தூர் அடுத்துள்ள கள்ளிகுப்பம் பகுதியில் மின்வாரிய அலுவலகம் முற்றுகை மற்றும் சாலை மறியல் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் ஆத்திரம்
- 21:39 (IST) 31 May 2023கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை
பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை
- 21:23 (IST) 31 May 2023கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை
பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை
- 21:22 (IST) 31 May 2023சீமான் ட்விட்டர் கணக்குக்கு இந்தியாவில் தடை
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த பலரின் ட்விட்டர் கணக்குகளுக்கு இந்தியாவில் தடை சட்ட கோரிக்கைக்கு ஏற்ப கணக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
- 21:21 (IST) 31 May 2023பொறியியல் கல்லுரி மாணவர் சேர்க்கை
பொறியியல் கல்லுரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்காக 2,11,417 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர் கடந்தாண்டு 2,11,905 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், நடப்பாண்டில் இன்னும் 4 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், தற்போதே எண்ணிக்கை நெருங்கியுள்ளது
- 20:20 (IST) 31 May 2023டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாக தகவல்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மாலை 4 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளார்!
- 19:39 (IST) 31 May 2023மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் அறிவித்திருந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாகவும் மெட்ரோ குடிநீர் லாரிகள் நாளை வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 19:38 (IST) 31 May 2023ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா
ராமநாதபுரம்: ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது; திரளான மக்கள் பங்கேற்பு ஜூன் 13ஆம் தேதி உருஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது
- 19:38 (IST) 31 May 2023குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து
சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அசேன் என்பவரது இல்லத்தில், கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து! மளமளவென பரவிய தீயால் வீடு முழுவதும் எரிந்து சேதம்; நல்வாய்ப்பாக எந்த உயிர் சேதமும் ஏற்பட வில்லை!
- 19:03 (IST) 31 May 2023120 நாட்களுக்கு முல்லைப் பெரியாறில் தண்ணீர் திறக்க உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு. தேனி மாவட்ட விவசாய மற்றும் குடிநீர் தேவைக்காக நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு
- 19:02 (IST) 31 May 2023விதிமீறல் - ரூ.13 கோடி அபராதம் வசூல்
சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டி நிலுவையில் உள்ள வழக்குகளில் ரூ.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் நிலுவையில் இருந்த 12,974 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளது
- 18:30 (IST) 31 May 2023சிஐடியூ தொழிலாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை
போக்குவரத்து துறையில் விரைவாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் அரசு அதிகாரிகள் உடனான பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில், மீண்டும் வரும் 9-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். இந்த வாக்குறுதியை மீறினால் மீண்டும் போராட்டம் நடக்கும் என சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
- 18:18 (IST) 31 May 2023சென்னை சுரானா குழுமத்தில் ரெய்டு: ரூ.124 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
சென்னையை தளமாக கொண்ட சுரானா குழும நிறுவனங்கள் மற்றும் அதன் தொடர்புடைய இடங்குகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இந்தச் சோதனையின் அடிப்படையில் 78 அசையா சொத்துக்கள், 16 அசையும் சொத்துக்கள் என ரூ.124 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
- 18:12 (IST) 31 May 2023சென்னை சுரானா குழுமத்தில் ரெய்டு: ரூ.124 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
சென்னையை தளமாக கொண்ட சுரானா குழும நிறுவனங்கள் மற்றும் அதன் தொடர்புடைய இடங்குகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இந்தச் சோதனையின் அடிப்படையில் 78 அசையா சொத்துக்கள், 16 அசையும் சொத்துக்கள் என ரூ.124 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
- 17:55 (IST) 31 May 2023ஜூன் 13ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
ஜூன் 13ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- 17:43 (IST) 31 May 2023கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அண்ணாமலை கேள்வி
“மல்யுத்த வீராங்கனைகளின் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே அவரை கைது செய்தால்தான் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
கவிஞர் வைரமுத்து மீது பாடகி ஒருவர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கேள்வியெழுப்பி உள்ளார்.
- 17:32 (IST) 31 May 2023அமெரிக்காவில் ராகுல் காந்தி: தமிழ் மொழிக்கு ஆதரவாக பேச்சு
அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசுகையில், “தமிழர்களுக்கு தமிழ் என்பது வெறும் மொழி அல்ல. அது வரலாறு, கலாசாரம்.
தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
- 17:15 (IST) 31 May 2023நாளை "மாமன்னன்" இசை வெளியீட்டு விழா
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
- 17:04 (IST) 31 May 2023ஆவின் பால் விநியோக பாதிப்பு ஏன்? அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்
ஆவின் பொருள்கள் பால் விநியோக பாதிப்பு குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்த விளக்கத்தில், “ஆவின் பொருள்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை திமுக அரசுக்கு இருக்கிறது.
ஆவின் பொருட்கள் யாவும் தரம் உயர்த்தப்பட்டு தட்டுப்பாடுன்றி வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என்றார்.
- 16:45 (IST) 31 May 2023திமுக சின்னத்தில் போட்டியிட எதற்கு தனிக்கட்சி: வைகோவுக்கு துரைசாமி கேள்வி
திமுகவில் சேர்ந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட எதற்கு தனிக்கட்சி வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.க்கு கட்சியில் இருந்து விலகிய முன்னாள் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கேள்வியெழுப்பி உள்ளார்.
மதிமுகவை திமுக உடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் துரைசாமி அண்மையில் கட்சியில் இருந்து விலகினார்.
- 16:30 (IST) 31 May 2023நெல் மூட்டைகள் காணாமல்போன தகவலில் உண்மையில்லை' - மாவட்ட ஆட்சியர்
தர்மபுரி நெல் சேமிப்பு கிடங்கில் இருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் காணாமல் போனதாக செய்திகள் வெளியான நிலையில், அந்தத் தகவலில் உண்மை இல்லை என மாவட்ட ஆட்சியர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.
- 16:28 (IST) 31 May 2023மேகதாதுவை அனைத்து நிலைகளிலும் எதிர்ப்போம்" - அமைச்சர் துரைமுருகன்
கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட அனைத்து நிலைகளிலும் எதிர்ப்போம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
- 16:05 (IST) 31 May 2023புற்றுநோய் விழிப்புணர்வு இணைய வழி புத்தகம் வெளியீடு
கோவையில் புற்றுநோய் விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய டிஜிட்டல் இன்போகிராபிக் இணைய வழி புத்தகத்தை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் தனியார் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் பி. குகன் வெளியிட்டனர்.
- 15:46 (IST) 31 May 2023ரூ.2 ஆயிரம் நோட்டு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
ரூ.2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணங்களும் தேவையில்லை என எஸ்.பி.ஐ அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ. அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 15:45 (IST) 31 May 2023ரூ.2 ஆயிரம் நோட்டு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
ரூ.2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணங்களும் தேவையில்லை என எஸ்.பி.ஐ அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ. அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 15:28 (IST) 31 May 2023மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் - அமைச்சர் ரகுபதி
மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பேச்சுக்கு, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்
- 15:27 (IST) 31 May 2023ஒரே தேர்வு - ஒரே நாளில் முடிவு; அமைச்சர் பொன்முடி
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும். ஒரே தேர்வு - ஒரே நாளில் முடிவு, ஒரே நாளில் உயர் கல்வி சேர்க்கை ஆகிய அனைத்தும் அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வரும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
- 15:17 (IST) 31 May 2023துணைவேந்தர்களுடன் பொன்முடி ஆலோசனை
மாநில கல்விக்கொள்கை தொடர்பாக துணைவேந்தர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்
- 15:02 (IST) 31 May 2023மேகதாது அணை; தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றில் மேகதாது அணையை கட்ட அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். வேகமெடுக்கும் மேகதாது பணியை தடுத்து நிறுத்தி காவிரியைக் காக்க வேண்டும். தேவைப்பட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
- 15:00 (IST) 31 May 2023தண்ணீர் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்; இ.பி.எஸ் வலியுறுத்தல்
தண்ணீர் பற்றாக்குறை காரணமாக லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் அத்தியாவசிய தேவைகளை தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்
- 14:37 (IST) 31 May 202342 தண்ணீர் லாரிகள் மட்டுமே வேலைநிறுத்தம் - குடிநீர் வாரியம் விளக்கம்
பொது மக்களுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வதில் எந்த விதமான பாதிப்பும் இல்லை. வணிக ரீதியாக லாரி உரிமையாளர்களுக்கு ஒத்து போகாததால் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். சென்னை குடிநீர் வாரியத்திற்கு ஓடும் 428 லாரிகளில் 42 லாரிகள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன என குடிநீர் வாரியம் விளக்கம் அளித்துள்ளது
- 14:35 (IST) 31 May 2023புதுக்கோட்டை மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் ஒருவர் மரணம்
புதுக்கோட்டை மாவட்டம் கீழவேகுப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் 40 வயதான சிங்கராவணன் என்பவர் உயிரிழந்துள்ளார்
- 14:10 (IST) 31 May 2023அரிக்கொம்பன் யானையை தொடர்ந்து கண்காணித்து வரும் வனத்துறை
தேனி மாவட்டம் சண்முகா நதி அணைப்பகுதியில் 2 நாட்களாக உலா வரும் அரிக்கொம்பன் யானையை வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்
- 13:42 (IST) 31 May 2023தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், திருச்சி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- 13:26 (IST) 31 May 2023ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
ஓடிடி தளங்களில் புகையிலைக்கு எதிரான வாசகங்கள் கட்டாயம், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
- 13:12 (IST) 31 May 2023டோக்கியோ -சென்னை நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்; ஸ்டாலின் கடிதம்
டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
- 12:59 (IST) 31 May 2023புதுக்கோட்டையில் பல் மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி
புதுக்கோட்டையில் 50 மாணவர் சேர்க்கையுடன் பல் மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. புதுக்கோட்டை பல் மருத்துவ கல்லூரியை இந்தாண்டே முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
- 12:46 (IST) 31 May 2023தவறு ஏதும் செய்யாமல் அமைச்சர் பி.டி.ஆரின் துறை மாற்றப்பட்டுள்ளது - அண்ணாமலை
தவறு ஏதும் செய்யாமல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றப்பட்டுள்ளது. சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்குவது சரியா? மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், மாநில அரசு விரைந்து குறைகளை சரிசெய்ய வேண்டும் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
- 12:31 (IST) 31 May 2023கடலில் வீசப்பட்ட 15 கிலோ கடத்தல் தங்கம்
ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடலில் வீசப்பட்ட 15கிலோ எடை கொண்ட தங்கத்தை ஸ்கூபா வீரர்கள் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
- 12:17 (IST) 31 May 2023வெளிநாட்டு பயண அனுபவம் குறித்து தொண்டர்களுக்கு கடிதம்: மு.க.ஸ்டாலின்
"கடல் கடந்த பயணத்தால், தமிழ்நாட்டின் நிலை உயரும். பத்தாண்டுகால இருட்டை ஒவ்வொரு பகுதியாக விரட்டி, விடியலைத் தந்து கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு.
அதிமுக போல் இல்லாமல், திமுக ஆட்சி வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது என்ற நம்பிக்கையை தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்திய மகிழ்வுடன் சென்னை திரும்புகிறோம்", என்றார் முதல்வர்.
- 11:47 (IST) 31 May 2023பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போராட்டம்
மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு மருத்துவர் பாலியல் தொல்லை என புகார்
பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்
- 11:46 (IST) 31 May 2023சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்
கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் செல்லும் தண்ணீர் நிறுத்தம்
ஏற்கனவே மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலை பகுதிகளில் 4 நாட்களாக தண்ணீர் விநியோகம் இல்லை என புகார் அளிக்கப்பட்டிருந்தது.
லாரிகளுக்கு போதிய அளவில் தண்ணீர் வழங்கவில்லையென உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்.
- 11:15 (IST) 31 May 2023தமிழ்நாட்டில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: அமைச்சர் மா.சு. கூறியது என்ன?
"சிறு குறைகளை வைத்து மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்குவோம் என்று சொல்வது ஏற்புடையதல்ல; குறை உள்ளது என்று தெரிந்தால் அரசு நிச்சயம் சரி செய்யும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- 10:58 (IST) 31 May 2023தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 அதிகரிப்பு
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 அதிகரிப்பு
ஒரு கிராம் தங்கம் ரூ. 5,645க்கும், சவரன் ரூ. 45,160க்கும் விற்பனை
- 10:57 (IST) 31 May 2023ஸ்டாலின் உடன் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சந்திப்பு
சென்னையில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு
மத்திய அரசின் அவசர சட்டம் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் உள்ளதாக கூறி, அதை நிராகரிக்க ஆதரவு கோருகிறார்
- 10:19 (IST) 31 May 2023காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் - ஓ.பி.எஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு எழுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு நடத்தி, முடிவுகளை உடனே வெளியிட்டு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
- 10:10 (IST) 31 May 2023மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு மாற்று இடம் வழங்கப்படும்
பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் மற்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை இந்தியா கேட் பகுதிக்கு மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள், ஏனெனில் தேசிய நினைவுச் சின்னம் ஆர்ப்பாட்டங்களுக்கான இடம் அல்ல, அவர்களின் தர்ணாவுக்கு மாற்று இடங்கள் பரிந்துரைக்கப்படும் என்று டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
- 10:02 (IST) 31 May 2023கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜுன் 2-ல் தொடக்கம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நாளை மறுநாள் தொடங்க உள்ளது
சென்னை கலைவாணர் அரங்கில் நூற்றாண்டு இலட்சணை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
- 09:20 (IST) 31 May 2023நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
நியூசிலாந்தின் தெற்கு கடலோர பகுதியில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு
- 09:17 (IST) 31 May 2023மாணவர்களை பேருந்தில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்
பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை காண்பித்து மாணவர்கள் பயணம் செய்யலாம்.
சீருடை அணிந்திருந்தாலோ அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
- 08:11 (IST) 31 May 2023செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி
சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி - தோட்டக்கலைத்துறை அறிவிப்பு
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.
ஜூன் 3 முதல் 5ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சிக்கு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.