/tamil-ie/media/media_files/uploads/2022/11/download-79.jpg)
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த 5 மாதங்களாக ஒரே விலையில் பெட்ரோல், டீசல் நீடிக்கிறது.
சேரன் எக்ஸ்பிரஸ் விபத்து
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு புறப்பட்டு சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் திருவள்ளூர் அருகே S7, S8 பெட்டிகளின் இணைப்பு துண்டாகி விபத்து. ஓட்டுநரின் துரிதமான செயலால் நல்வாய்ப்பாக பயணிகள் உயிர் தப்பினர்.
திருவண்ணாமலையில் அமர்வு தரிசனம் ரத்து
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நாளை மாலை 4.54 மணி முதல் நவம்பர் 8-ம் தேதி மாலை 4.59 மணி வரை அமர்வு தரிசனம் ரத்து. பௌர்ணமியை முன்னிட்டு கூட்ட நெரிசலை தடுக்க நடவடிக்கை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:30 (IST) 06 Nov 2022தான்சானியா விமான விபத்தில் 19 பேர் மரணம்
தான்சானியாவில் ஏரிக்குள் விமானம் விழுந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 26 பேர் மீட்கப்பட்டுள்ளனர்
- 21:29 (IST) 06 Nov 2022தான்சானியா விமான விபத்தில் 19 பேர் மரணம்
தான்சானியாவில் ஏரிக்குள் விமானம் விழுந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 26 பேர் மீட்கப்பட்டுள்ளனர்
- 19:40 (IST) 06 Nov 2022தென்காசியில் 3 பேரை தாக்கிய கரடி சிக்கியது
தென்காசி அருகே 3 பேரை தாக்கிய கரடியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்
- 19:11 (IST) 06 Nov 2022மக்களுக்கு பயனுள்ள வகையில் பணியாற்ற வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி
நீதித்துறையில் இளம் தலைமுறையினர் பங்காற்ற உள்ள மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களுக்கு பயனுள்ள வகையில் பணியாற்ற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்
- 18:49 (IST) 06 Nov 202235 ஆண்டுகளுக்குப் பிறகு கைகோர்க்கும் கமல்ஹாசன் – மணிரத்னம்
35 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் கைகோர்க்கின்றனர். கமலின் 234 ஆவது படத்தை மணிரத்னம் இயக்க உள்ளதாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் அறிவித்துள்ளது
- 18:22 (IST) 06 Nov 2022தான்சானியாவில் ஏரியில் விமானம் விழுந்து விபத்து
தான்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. புகோபாவில் தரையிறங்க முயற்சித்த விமானம் மோசமான வானிலையால் 43 பயணிகளுடன் ஏரியில் விழுந்தது
- 18:17 (IST) 06 Nov 2022அந்தேரி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி வெற்றி
மகாராஷ்டிராவில் அந்தேரி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி வேட்பாளர் ருதுஜா லட்கே 66000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்
- 18:06 (IST) 06 Nov 2022மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - சசிகலா வலியுறுத்தல்
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வி.கே.சசிகலா வலியுறுத்தியுள்ளார்
- 17:29 (IST) 06 Nov 2022டி20 உலக கோப்பை.. அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து மோதல்
டி20 உலக கோப்பை இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அரையிறு சுற்று நிறைவுற்ற நிலையில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
தற்போது 8 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
- 17:19 (IST) 06 Nov 2022பீகார் இடைத்தேர்தலில் பாஜக வெற்றி
பீகார் கோபால்கஞ்ச் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் குசும் தேவி 1794 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் வேட்பாளரை தோற்கடித்தார்.
இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அசாதுதீன் ஒவைசி வேட்பாளர் 12214 வாக்குகளும், மாயாவதி கட்சி வேட்பாளர் 8854 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
- 17:01 (IST) 06 Nov 2022கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி நிறைவு
கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர் ஆகிய 3 இடங்களிலும் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி நிறைவு பெற்றுள்ளது. 44 இடங்களில் பேரணியை ஒத்திவைத்த நிலையில் 3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது
- 16:46 (IST) 06 Nov 2022பாரா பேட்மிண்டன்.. தமிழக வீராங்கனை சாம்பியன்
பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை மணிஷா தங்கம் வென்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இவர், ஜப்பானிய வீராங்கனை மாமிக்கோ டொயட்டாவை வீழ்த்தினார்.
- 16:43 (IST) 06 Nov 2022மதுரையில் டீ ரூ.15 ஆக உயர்த்த முடிவு
மதுரையில் உள்ள உணவகங்களில் டீ-ஐ ரூ.15 ஆக உயர்த்த திட்டமிடப் பட்டுள்ளது.
- 15:38 (IST) 06 Nov 2022இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே திணறல்
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி திணறிவருகிறது.
அந்த அணி 3 ஓவரில் 7 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்துள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 186 ரன்கள் எடுத்துள்ளது.
- 15:20 (IST) 06 Nov 2022டி20 உலக கோப்பை.. தொடரில் இருந்து வெளியேறியது தென் ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தோற்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து வெளியேறியது.
- 14:49 (IST) 06 Nov 20222023ம் ஆண்டு மே மாதம் வரை 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி
2023ம் ஆண்டு மே மாதம் வரை 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபர் வரை தடையை நீட்டித்திருந்த நிலையில் இந்த அனுமதி அளிக்கபப்ட்டுள்ளது.
3 ஆண்டு சராசரி சர்க்கரை உற்பத்தியில் 18.23% சர்க்கரையை ஒதுக்கீடு அடிப்படையில் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- 14:11 (IST) 06 Nov 2022சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.
மீண்டும் மழை தொடங்குவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- 13:17 (IST) 06 Nov 2022அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான் - இ.பி.எஸ் பேச்சு
நாமக்கல் அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு: “பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான், இணைப்புக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறினார்.
- 13:15 (IST) 06 Nov 2022தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும்,
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
- 13:13 (IST) 06 Nov 2022தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும்,
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
- 12:48 (IST) 06 Nov 20222024 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி - இ.பி.எஸ் அறிவிப்பு2024 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி - இ.பி.எஸ் அறிவிப்பு
நாமக்கல்லில் நடைபெற்ற அ.தி.மு.க பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். காற்றை தடை செய்ய முடியாதது போல, அ.தி.மு.க ஆட்சிக்கு வருவதையும் யாராலும் தடை செய்ய முடியாது.” என்று கூறினார்.
- 12:16 (IST) 06 Nov 2022ஆர்.எஸ்.எஸ். பேரணியை தான் எதிர்க்கிறோம் - திருமாவளவன்
ஆர்.எஸ்.எஸ். பேரணியை தான் எதிர்க்கிறோம்
ஆர்.எஸ்.எஸ் எப்படிப்பட்ட இயக்கம் என்பதை தமிழக மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்
பா.ஜ.க பேரணியை இதுவரை நாங்கள் எதிர்த்தது இல்லை, ஆனால் ஆர்.எஸ்.எஸ் பேரணியை எதிர்க்கிறோம்
மக்கள் புரிந்துக் கொண்டால் ஆர்எஸ்எஸ் இந்தியாவிலேயே இருக்காது
மனுஸ்மிருதி பிரதிகளை பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்த பின் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
- 11:49 (IST) 06 Nov 2022பாகிஸ்தான் வெற்றிக்கு 128 ரன்கள் இலக்கு
டி20 உலகக்கோப்பை - 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு வங்கதேசம் 127 ரன்கள் எடுத்தது
பாகிஸ்தான் வெற்றிக்கு 128 ரன்கள் இலக்கு
- 11:49 (IST) 06 Nov 2022மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை - சேகர்பாபு
தற்போது மழைநீர் தேங்கிய இடங்களில் அடுத்த முறை தேங்காமல் இருக்க நடவடிக்கை
தேவை ஏற்பட்டால் கூடுதல் மின்மோட்டார்கள் வரவழைக்கப்படும்
நவ.9ம் தேதிக்கு பிறகு பெருமழை பெய்தால் அதனை சமாளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் - அமைச்சர் சேகர்பாபு
- 11:21 (IST) 06 Nov 2022ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை
கடலூரில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை
கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மட்டும் இன்று ஆர்எஸ்எஸ் பேரணி
அறிவிக்கப்பட்ட மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி ஒத்திவைப்பு
- 10:45 (IST) 06 Nov 2022இரும்பு கேட்டில் மின்சாரம் பாய்ந்து வயதான தம்பதி பலி
கோடம்பாக்கம்: இரும்பு கேட்டில் மின்சாரம் பாய்ந்து வயதான தம்பதி பலி
நள்ளிரவில் இரும்பு கேட்டை திறந்து போது கணவன் மீது பாய்ந்த மின்சாரம்
கணவனை மனைவி தொட்டதால் அவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
தடயவியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு
- 10:44 (IST) 06 Nov 2022தமிழ்நாட்டில் இன்று கனமழை தொடரும்
வரும் 9ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய சாதகமான சூழல் உள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி 48 மணி நேரத்தில் வலுவடைந்து, தமிழ்நாடு, புதுச்சேரி கரையை நோக்கி நகர்ந்து வரும்.
- 10:44 (IST) 06 Nov 20223 மாவட்டங்களில் மட்டும் இன்று ஆர்எஸ்எஸ் பேரணி
கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மட்டும் இன்று ஆர்எஸ்எஸ் பேரணி
அறிவிக்கப்பட்ட மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி ஒத்திவைப்பு
- 09:38 (IST) 06 Nov 2022அரையிறுதியில் நுழைந்தது இந்தியா
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி
நெதர்லாந்து அணியிடம் தோற்று வெளியேறியது தென்னாப்பிரிக்கா - அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்திற்கு 4வது அணியாக அரையிறுதி செல்ல வாய்ப்பு
- 08:06 (IST) 06 Nov 2022கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக கைது
பாலியல் புகாரில் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்ததும் கைது செய்யப்பட்டுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய இலங்கை அணி. இன்று காலை நாடு திரும்பியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.