பெட்ரோல் – டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மழை நிலவரம்
வால்பாறை, தேனி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் கனழமையால் பள்ளிகளுகு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
காமன்வெல்த்- இந்தியா வெற்றி
காமன்வெல்த் – ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோஷல் வெண்கலம் வென்றார். ஜூடோவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க யாரும் முன்வராத நிலையில் 24 மாவட்டங்களில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு , மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் கேரளா வழியாக மதகுகளை திறக்கும் முன், முறையான அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கேரளா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கடிதம் எழுதியுள்ளார்.
3 ஆண்டுகள் சட்டப் படிப்புகளுக்கு நாளை முதல் வரும் 30ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜார்ஜ்டவுன் மற்றும் சௌகார்பேட்டை பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களில் வணிக வரித்துறையினரால் திடீர் சோதனை நடத்தப்பட்ட நிலையில், சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காத வணிக நிறுவனங்களுக்கு வணிக வரித்துறை சீல் வைத்துள்ளது மேலும் இந்த சோதனையில் போலியான 2 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டன
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தேர்வில் தமிழில் நுழைவுத் தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் வினாத்தாள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், காவிரியில் 2.40 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்புள்ளதால், சேலம் மாவட்டத்தில் காவிரி கரையேரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர் தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த 6 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பிரசவத்தின்போது வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்ததால் பாதிக்கப்பட்ட திருத்தணியைச் சேர்ந்த பெண் குபேந்திரிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குபேந்திரிக்கு அறுவை சிகிச்சை மூலம் கத்தரிக்கோல் அகற்றப்பட்டது.
நீதிபதியை மாற்றும் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மீது தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரியிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புகார் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து வேலைக்காக ஓமன் சென்ற 8 தமிழர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
8 பேருக்கும் கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை; நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தபோது பணம் கட்ட சொல்கிறார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடலூரில் 12ம் வகுப்பு பயிலும் மாணவன், மாணவி பள்ளியில் எறும்பு மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிபதியை மாற்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தனி நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதித் துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
“உத்தரவில் குறிப்பிட்ட தனது கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையில் உங்கள் தரப்பு செயல்பாடு உள்ளது. தன்னை பற்றி தனிப்பட்ட கருத்துக்களை கூறியதால், வேறு நீதிபதிக்கு மாற்ற கோரியதாக ஓபிஎஸ் தரப்பு விளக்கம். தீர்ப்பில் தவறு இருந்தால் மேல் முறையீடு செய்யலாம், திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம்”. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியே விசாரிக்கிறார். வைரமுத்து தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை செய்யப்பட இருக்கிறது.
வி.கே.சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கு கைவிடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ரூ.1 கோடிக்கு குறைவான வழக்குகளை கைவிடுவது என்ற வருமான வரித்துறை சுற்றறிக்கையின் அடிப்படையில் முடிவு எட்டப்பட்டுள்ளது.
வி.கே.சசிகலா செல்வ வரியாக ரூ. 10,13,271 செலுத்த உத்தரவிட்டது தொடர்பான வழக்க்கில், வருமானவரித் துறை விளக்கத்தை ஏற்று, சசிகலாவுக்கு எதிரான வழக்கை முடித்துவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
பேரிடர் மேலாண்மை குறித்து மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான உணவு, குடிநீர் வழங்கிட வேண்டும். தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்களை அமைத்திட வேண்டும். தேவைப்படும் இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
இன்று சீனா தைவானின் ஆறு பகுதிகளில் முன்னோடியில்லாத நேரடி-தீ இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது. இது ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளை மீறுவதாகவும், தைவானின் பிராந்திய இடத்தின் மீதான படையெடுப்பு மற்றும் இலவச வான் மற்றும் கடல் வழிசெலுத்தலுக்கு நேரடி சவால் எனவும் தைவான் கூறியுள்ளது. பயிற்சிகள் 0400 GMT (காலை 9.30 IST) மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை 0400 GMT மணிக்கு முடிவடையும் என்று சீனாவின் மாநில ஒளிபரப்பு சிசிடிவி தெரிவித்துள்ளது.
முன்னதாக, சீன கடற்படைக் கப்பல்கள் மற்றும் இராணுவ விமானங்கள் இன்று காலை தைவான் நீரிணை இடைநிலைக் கோட்டைக் கடந்ததாகவும், பெய்ஜிங்கின் செயல்பாட்டைக் கண்காணிக்க தைவான் ஏவுகணை அமைப்புகளையும் கடற்படைக் கப்பல்களையும் நிலைநிறுத்தியதாகவும் செய்திகள் தெரிவித்தன.
பெய்ஜிங் இன்னும் அதன் நாட்டின் ஒருபகுதியாக கருதும் தைவானுக்கு, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று சுற்றுப்பயணமாக வந்தார். ஒரு நாள் கழித்து சீன – தைவான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் மூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
China is to conduct live fire military drills surrounding Taiwan 4-7 August, aiming to blockade TW. It endangeres regional peace & stability, int flights & maritime navigation is in high risk. China’s acts of bullying & military threats against TW must be stopped immediately. pic.twitter.com/Jt5R3ZI34M
— Laima Andrikienė (@Andrikiene) August 4, 2022
திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொடைக்கானல் மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுக்கம்-பெரியகுளம் மலைச்சாலையில் பல இடங்களில் மண்சரிவு. இதனால் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சி என காவல்துறை தகவல். மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
வெள்ளம் அதிகம் பாதிக்கும் இடங்களில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
தமிழகத்திற்கு ஜிஎஸ்டி தொகை விடுவிப்பு
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகைகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததற்கு மத்திய அரசை குறை சொல்வது எப்படி? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 2 லட்சம் கன அடியாக அதிகரிப்பு. முழுக் கொள்ளளவில் நீர்மட்டம் இருப்பதால் அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறப்பு.
இந்தியாவில் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று. இந்தியாவில் மேலும் 19,893 பேருக்கு கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் 1.36 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சையில் உள்ளனர் .
சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவக்கல்லூரி விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி. மெர்குரி சல்பைடு சாப்பிட்டு தற்கொலை முயற்சி – மருத்துவமனையில் அனுமதி
கொட்டும் மழைக்கு இடையே சபரிமலையில் நடைபெற்ற நிறை புத்தரிசி விழா.
தமிழகத்தில் பெய்ந்து வரும் தொடர் மழையால் தேனி, திருவாரூர், வால்பாறை, கொடைக்கானலில் பள்ளிகள்ளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.