scorecardresearch

Tamil News Highlights: முதுகலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today – 06 September 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil News Highlights: முதுகலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம்

பெட்ரோல்- டீசல் விலை

சென்னையில் 107ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63, ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாத யாத்திரை – தமிழகம் வருகிறார் ராகுல்

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரையை ராகுல் காந்தி நாளை (செப்.7) தொடங்குகிறார். இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணியளவில் சென்னை வருகிறார். நாளை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆசியக்கோப்பை – இந்தியா Vs இலங்கை

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

செப்.10இல் ‘பென்னி குயிக்’ சிலை திறப்பு

தமிழக அரசு சார்பில் லண்டனில் கட்டப்பட்டுள்ள பென்னி குயிக் சிலை வரும் 10ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்க அமைச்சர் ஐ.பெரியசாமி லண்டன் புறப்பட்டு சென்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
20:57 (IST) 6 Sep 2022
சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி

நாளை ஒற்றுமை இந்தியா யாத்திரை தொடங்குகின்ற நிலையில், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி

20:06 (IST) 6 Sep 2022
முதுகலை படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது

20:03 (IST) 6 Sep 2022
காரைக்கால் மீனவர்கள் 12 பேர் துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினரால் கைது

காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது நடவடிக்கை என தகவல்.

19:22 (IST) 6 Sep 2022
தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை

சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 40 முதல் ரூ.42கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தக்காளி விலையைக் குறைக்க திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

18:57 (IST) 6 Sep 2022
அசால்ட் ஆக ஆற்றை கடந்த அஜித் குமார்

நடிகர் அஜித் குமார் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது இருசக்கர வாகனத்தில் பயணிப்பார்.

தற்போது அவர் வட இந்தியாவில் இமயமலை பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டிவருகிறார். இந்நிலையில் அசால்ட் ஆக ஆறு ஒன்றை பைக்கில் அவர் கடந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

18:47 (IST) 6 Sep 2022
ஆன்லைன் ரம்மி நிறுவனங்களும், தி.மு.க.வும் உடன்பாடு – எடப்பாடி பழனிசாமி

ஆன்லைன் ரம்மி நிறுவனங்களும், தி.மு.க.வும் உடன்பாடு உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

18:41 (IST) 6 Sep 2022
பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்பனை

கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

18:32 (IST) 6 Sep 2022
T20 world cup: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

டி20 உலகக்கோப்பைக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியில் தெம்பா பவுமா (கேப்டன்), குவான்டின் டிகாக், ஹெனிரிச் கிளாசின், ரிஸா ஹென்டிரிக்ஸ், கேசவ் மகாராஜ், ஏடன் மார்க்ராம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்ரிச் நார்த் ஜே, வேனே பார்னல், டுவேனே பிரிடோரியஸ், காசிகோ ரபடா, தப்ரிஸ் சம்ஸி, டிரிஸ்டான் டூப்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

18:11 (IST) 6 Sep 2022
திண்டுக்கல் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை (7-9-22) மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

18:10 (IST) 6 Sep 2022
சென்னையில் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு

சென்னையில் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா தொடங்கியது.

விழாவில் கலந்துகொள்ளும் நபர்களுக்கு செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

17:45 (IST) 6 Sep 2022
மாதவரத்தில் சித்த பல்கலைக்கழகம்- மா. சு. தகவல்

மாதவரத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லியில் அளித்த பேட்டியின்போது தெரிவித்துள்ளார்.

17:34 (IST) 6 Sep 2022
டெல்லியில் ரூ.1200 கோடி போதைப் பொருள் பறிமுதல்: ஆப்கானியர்கள் இருவர் கைது

டெல்லியில் ரூ.1200 கோடி மதிப்பிலான 312 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்ணாடி மற்றும் கல் உப்பு வடிவில் காணப்படும் இந்த மெத்தம்பேட்டமைன் போதைப் பொருள் ஒரு கிராம் ரூ.30 ஆயிரத்து விற்கப்படுகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

17:31 (IST) 6 Sep 2022
சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளது: திமுக அரசு தகவல்

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளது வருவாய் ஆவணங்களின்படி 100 சதவீதம் உறுதியாகியுள்ளது என உயர் நீதிமன்றத்தில் திமுக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இடத்தை காலி செய்ய வலியுறுத்தி தஞ்சை வட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக பல்கலைக்கழகம் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு வருகிற 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

17:14 (IST) 6 Sep 2022
போரிஸ் ஜான்சன் ராஜினாமா ஏற்பு

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் ராஜினாமாவை, ராணி எலிசபெத் ஏற்றுக்கொண்டுள்ளார் புதிய பிரதமராக லிஸ் ட்ரூஸ் விரைவில் பதவியேற்க உள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் பதவி போட்டியில் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் தோல்வியை தழுவினார்.

17:10 (IST) 6 Sep 2022
சென்னை மின்சார ரயிலில் அடிபட்டு மாணவி உயிரிழப்பு

சென்னையில் மின்சார ரயிலில் அடிப்பட்டு 10ஆம் வகுப்பு பயின்று வந்த 16 வயதான ஷாரிகா என்ற மாணவி உயிரிழப்பு.

இந்த மாணவி தாமஸ் மவுண்ட் ரயில் நிலையம் இடையே மூடப்பட்டிருந்த கேட்-ஐ கடந்து சென்ற போது ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.

17:10 (IST) 6 Sep 2022
தண்ணீரில் தத்தளிக்கும் பெங்களூரு

கர்நாடகாவில் பெய்த அதிகனமழை காரணமாக பெங்களூருவில் பல்வேறு பகுதிகள் நீரில் மிதக்கின்றன.

இதனால் பொதுமக்கள் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டுவருகின்றனர்.

17:10 (IST) 6 Sep 2022
ராணுவ மருத்துவமனையில் நுழைந்த யானகள்

மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரி பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் காட்டு யானைகள் நுழைந்துவிட்டன.

இது தொடர்பான காணொலி காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.

17:04 (IST) 6 Sep 2022
சென்னையில் நோ என்ட்ரி : 14 லட்சம் வசூல்

சென்னையில் நோ என்ட்ரியில் பயணித்ததாக 1,300 வாகன ஓட்டிகளிடம் இருந்து 14.3 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

அதாவது நபர் ஒருவருக்கு அபராதமாக ரூ.1100 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

16:58 (IST) 6 Sep 2022
திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை- எடப்பாடி பழனிசாமி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. மக்களுக்கு நன்மை கிடைக்கும் எந்த திட்டத்தையும் திமுக நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் உயர்ந்துள்ளது என பேசியுள்ளார்.

16:27 (IST) 6 Sep 2022
அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகள் ரத்து

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகள் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தியது, சட்டமன்ற தேர்தலின்போது அதிக வாகனங்களை பயன்படுத்தியது உள்ளிட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, அதிமுக ஆட்சியில் உள் நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டதாக மனுதாக்கல் செய்யப்பட்டது

15:39 (IST) 6 Sep 2022
மரக்காணம் அருகே பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்

விழுப்புரம் – மரக்காணம் அருகே ஆலத்தூரில் உள்ள பள்ளியில் மதிய உணவு உண்ட 24 மாணவர்கள் மயக்கமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

15:37 (IST) 6 Sep 2022
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி விடுதிகளில் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி விடுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் பள்ளி விடுதிகளில் சரியான பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

15:36 (IST) 6 Sep 2022
மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி

பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்தது இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

14:59 (IST) 6 Sep 2022
வைகையாற்றில் வெள்ளம்

மதுரை வைகையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், யானைக்கல், மீனாட்சி கல்லூரி இணைப்பு சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கரை பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

14:42 (IST) 6 Sep 2022
கனியாமூர் பள்ளியை திறக்க கோரிக்கை

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை திறக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் பெற்றோர் மனு கொடுத்தனர். பள்ளியை விரைவில் திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பெற்றோரிடம் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

14:42 (IST) 6 Sep 2022
நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை

கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, முல்லைத்தீவு அருகே கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்து இலங்கை திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டது.

14:41 (IST) 6 Sep 2022
ஓபிஎஸ் மேல்முறையீடு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

13:59 (IST) 6 Sep 2022
நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

13:48 (IST) 6 Sep 2022
விரைவில் மாநில கல்விக்கொள்கை வெளியிடப்படும்

தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. மத்திய கல்வி அமைச்சரிடம் எழுத்துப்பூர்வமான எதிர்ப்பை தமிழ்நாடு அரசு பதிவு செய்துள்ளது. விரைவில் மாநில கல்விக்கொள்கை வெளியிடப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

13:12 (IST) 6 Sep 2022
6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

13:11 (IST) 6 Sep 2022
அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ரெய்னா ஓய்வு

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவிப்பு கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரெய்னா ஓய்வு பெற்றார்

13:11 (IST) 6 Sep 2022
மருத்துவ குழுவினர் ஆய்வு

மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் சிகிச்சை அளித்த காரைக்கால் அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் ஆய்வு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஆய்வு

11:28 (IST) 6 Sep 2022
பேரூராட்சி தலைவர் தேர்தல் – தர்ணா

கரூர்: புலியூர் பேரூராட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலாராணி தர்ணா. கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டதால் தர்ணா போராட்டம்

11:27 (IST) 6 Sep 2022
வேளாண் துறை சார்பில் புதிய கட்டடங்கள் திறப்பு

வேளாண் துறை சார்பில் புதிய கட்டடங்களை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார். ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள், ஆய்வக கூடங்கள் உள்ளிட்டவை திறப்பு தாமிரபரணி நதிநீர் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

10:45 (IST) 6 Sep 2022
பெங்களூரு கனமழை – ஐடி நிறுவனங்களுக்கு விடுமுறை

பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை எதிரொலி. ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியில் வெள்ளநீர் வடியாததால் ஊழியர்கள் அவதி. வெளிவட்ட சாலையில் ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளநீர்

பல மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

10:38 (IST) 6 Sep 2022
மேட்டூர் அணையில் 1.25 லட்சம் கன அடி நீர் திறப்பு – வெள்ள எச்சரிக்கை

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம், மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – நீர்வளத்துறை

10:19 (IST) 6 Sep 2022
சென்னையில் 2ஆவது நாளாக டீசல் தட்டுப்பாடு

சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக டீசல் தட்டுப்பாடு. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

10:17 (IST) 6 Sep 2022
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்க அரசாணை

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்க அரசாணை வெளியீடு

சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைப்பு

சமூக நலத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு நல வாரியம்

09:08 (IST) 6 Sep 2022
ஏற்காட்டில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்

தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு. ஏற்காடு – சேலம் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்.

பாதையை சீரமைக்க ஒரு வாரம் வரை ஆகலாம் என தகவல். ஜேசிபி, பொக்லைன் இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றும் பணி தீவிரம்

08:28 (IST) 6 Sep 2022
பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இலக்கு நிர்ணயம்

போக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க உத்தரவு, வருவாயை அதிகரித்து, நிதிச்சுமையை குறைக்க போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் – போக்குவரத்து கழகம்

பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இலக்கு நிர்ணயித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவு

முழுமையான அளவு பயணிகளை ஏற்றிச் சென்று வருவாயை அதிகரிக்கவும் அறிவுறுத்தல்

Web Title: Tamil news today live petrol diesel price congress rahul gandhi bharat jodo yatra asiacup2022 cricket news john pennycuick statue