பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் தேதி உயிரிழந்த நிலையில் இன்று இறுதிச் சடங்கு செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 120-வது நாளாக இதே விலை தொடர்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் கொரோனா சிறப்புத் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இலவசமாக போடப்படும் பூஸ்டர் தடுப்பூசி இம்மாதம் இறுதி வரை மட்டுமே போடப்படுவதால் மக்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. ஹோவ் கவுன்டி மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 தொடரில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், ஒரு நாள் தொடரை இந்தியா வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:35 (IST) 18 Sep 2022சென்னை ஓபன் டென்னிஸ்; வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார் ஸ்டாலின்
சென்னை ஓபனில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு கேடயம் மற்றும் ரூ26.44 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த போலந்து வீராங்கனை மேக்டா லினெட்-க்கு கேடயம் மற்றும் ரூ.15.73 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது
- 21:26 (IST) 18 Sep 2022மதுரையில் மோசமான வானிலை - வானிலேயே வட்டமடிக்கும் விமானங்கள்
மதுரையில் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் வானிலேயே வட்டமடித்து வருகின்றன. சென்னை, பெங்களூரு, ஐதராபாத் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்து வருகின்றன. மழை மற்றும் மேகம் தெளிவாக இல்லாத காரணத்தினால் சிக்கல் நீடித்து வருகிறது
- 20:17 (IST) 18 Sep 2022சென்னை சர்வதேச மகளிர் டென்னிஸ்; மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை, நுங்கம்பாக்கத்தில் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரின் இறுதி சுற்று ஆட்டம் இறுதி போட்டியை நேரில் பார்வையிட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிசுகளை வழங்க உள்ளார்
- 19:52 (IST) 18 Sep 2022அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
அருணாச்சல பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது
- 19:35 (IST) 18 Sep 2022விளையாட்டு தலைநகராக சென்னையை மாற்ற முயற்சி - அமைச்சர் மெய்யநாதன்
விளையாட்டு தலைநகராக சென்னையை மாற்றும் முயற்சியில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. விரைவில் சர்வதேச தரத்தில் சென்னை ஏ.டி.பி போட்டிகள் நிச்சயமாக நடத்தப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்
- 19:21 (IST) 18 Sep 2022தேசபக்தி நாடகங்களை அனைத்து பள்ளிகளிலும் அரங்கேற்ற வேண்டும் - தமிழிசை
தேசபக்தி நாடகங்களை அனைத்து பள்ளிகளிலும் அரங்கேற்றி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தேசப்பற்றாளர்களின் தியாகங்கள் தெரியாமல் போனதால்தான் இளைஞர்களுக்கு தேசபற்றை பற்றி தெரியவில்லை. நாட்டிற்காக போராடிய தியாகிகள் குறித்து இளைஞர்களுக்கு தெரியாமல் போனது வருத்தமளிக்கிறது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்
- 18:31 (IST) 18 Sep 2022மியான்மரில் சிக்கிய தமிழர்களை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை
மியான்மர் நாட்டுக்கு மாஃபியா கும்பலால் கடத்தப்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்களை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது
- 18:08 (IST) 18 Sep 2022எலிசபெத் ராணி உடலுக்கு திரவுபதி முர்மு அஞ்சலி
இங்கிலாந்து ராணி எலிசபெத் உடலுக்கு இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்
- 17:42 (IST) 18 Sep 2022மனுதர்மத்தை சாடியதற்காக, ஆ.ராசாவை குறிவைத்து தாக்குவதா?– சீமான் ஆவேசம்
மனுதர்மத்தை சாடியதற்காக, ஆ.ராசாவை குறிவைத்து தாக்குவதா? மதவாதிகளின் தாக்குதலை இனியும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என சீமான் கூறியுள்ளார்
- 17:30 (IST) 18 Sep 2022ப்ளூ காய்ச்சல் விடுமுறை அளிக்க ஓ.பி.எஸ்., கோரிக்கை
மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இங்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என்று அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டாலும், தேர்வை காரணம் காட்டி பள்ளிகளுக்கு மாணவர்களை வரச் சொல்வதாக பெற்றோர் கூறுகின்றனர்.
ஆகவே தமிழ்நாட்டிற்கும் ப்ளூ காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்க வேண்டும் என ஓ.பி.எஸ்., கூறியுள்ளார்.
- 17:25 (IST) 18 Sep 2022தமிழ்நாட்டில் 5 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 5 தினங்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 17:24 (IST) 18 Sep 2022சென்னையில் காதல் தோல்வியால் சினிமா நடிகை தற்கொலை!
சென்னையில் காதல் தோல்வியால் சினிமா துணை நடிகை பவுலின் தற்கொலை செய்துகொண்டார்.
- 17:05 (IST) 18 Sep 2022ஆந்திரா, தெலங்கானாவில் என்ஐஏ சோதனை
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் ரூ.8 லட்சம் ரொக்கம் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- 16:42 (IST) 18 Sep 2022லண்டன் ஒவல் மைதானத்தில் டி-20 உலக கோப்பை கிரிக்கெட்
இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக கே.எல்., ராகுல் களம் இறங்குவார் என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
- 16:36 (IST) 18 Sep 2022தைவானில் சுனாமி எச்சரிக்கை
தைவானின் யூஜிங் என்ற பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.
- 16:15 (IST) 18 Sep 2022கேரள லாட்டரி விற்பனை: முதல் பரிசு அறிவிப்பு
கேரள லாட்டரி ஓணம் விற்பனையில் முதல் பரிசு ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
- 15:38 (IST) 18 Sep 2022ராகுல் தலைவராக காங்கிரஸ் தீர்மானம்
ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க கோரி ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
- 15:28 (IST) 18 Sep 2022தமிழ்நாட்டில் ப்ளூ் காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது- மா.சு
தமிழ்நாட்டில் ப்ளூ காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது, யாரும் பயப்பட வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
- 15:19 (IST) 18 Sep 2022எடப்பாடி மீது கோவை செல்வராஜ் தாக்கு
அதிமுகவை அழிக்க பிறவியெடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. இந்த ஏழரை சனி விரைவில் விரட்டியடிக்கப்படும் என ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ் கூறினார்
- 14:58 (IST) 18 Sep 2022இரண்டாம் திருமணம் செய்த கணவரை கட்டி வைத்து அடித்த பெண்
தெலங்கானா மாநிலத்தில் இரண்டாம் திருமணம் செய்த கணவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து மனைவி ஒருவர் அடித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகின்றன.
- 14:41 (IST) 18 Sep 2022நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் கூட்டம்
புரட்சி மாத பிறப்பை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
- 14:18 (IST) 18 Sep 2022நாடாளுமன்றத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும்: சீமான்!
டெல்லியில் அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும். மஞ்சப்பை திட்டம் ஒருநாள் தான் செயல்பட்டது. இப்போது அது எங்கு சென்றது என்று தெரியவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
- 13:54 (IST) 18 Sep 2022தைவான்: யூஜிங் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
தைவானில் யுஜிங்கிலிருந்து கிழக்கே 85 கிமீ தொலைவில் இன்று பிற்பகல் 12:14 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.
- 13:27 (IST) 18 Sep 2022அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
- 13:25 (IST) 18 Sep 2022தமிழகத்தில் பன்றி காய்ச்சல்; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!
இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழகத்தில் பன்றி காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. அரசு இதனை மறைப்பது வேதனைக்குரியதாக உள்ளது. இன்ஃப்ளூயன்சா உள்ளிட்ட காய்ச்சலும் அதிகளவில் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் வார்டுகளை அதிகப்படுத்தி காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
- 13:23 (IST) 18 Sep 2022ரெட்டைமலை சீனிவாசன் நினைவு தினம்: டிடிவி தினகரன் ட்வீட்!
ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாளை ஒட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒடுக்கப்பட்டோரின் உயர்வுக்காக ரெட்டைமலை சீனிவாசன் ஆற்றிய அளப்பரிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம். சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காக உழைத்தவர் ரெட்டைமலை சீனிவாசன்" என்று பதிவிட்டுள்ளார்.
- 13:09 (IST) 18 Sep 2022ரெட்டைமலை சீனிவாசன் நினைவு தினம்: இபிஎஸ் ட்வீட்!
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய டுவீட்டரில் ரெட்டைமலை சீனிவாசனின் நினைவுதினம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், "கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்" என்று முழங்கி, விளிம்புநிலை மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்து, வாழ்நாள் முழுவதும் சமூகநீதிக்காக போராடிய சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் ஐயா.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளில் அவர்தம் பெரும்புகழை போற்றி நினைவு கூர்கிறேன். என்று அவர் தெரிவித்துள்ளார்.
- 12:47 (IST) 18 Sep 2022பல கோடிகள் மோசடி செய்த 'யுனிவர் காயின்' - குற்றப்பிரிவில் புகார்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 'யுனிவர் காயின்' என்ற பெயரில் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
- 12:44 (IST) 18 Sep 2022ஆந்திரா, தெலுங்கானாவில் தேசிய புலனாய்வு முகமை சோதனை!
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
- 12:09 (IST) 18 Sep 2022பாஞ்சாகுளம் சிறுவர்கள் மீதான தீண்டாமை ஒடுக்குமுறை: ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த திருமாவளவன்!
பாஞ்சாங்குளம் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளது. சென்னை, கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஞ்சாங்குளத்தில் கட்டுப்பாடு விதித்த அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
- 12:07 (IST) 18 Sep 2022பாஞ்சாகுளம் சிறுவர்கள் மீதான தீண்டாமை ஒடுக்குமுறை: குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை!
தீண்டாமை ஒடுக்குமுறையை தடுக்கவும், தொடர் பிரச்சனையை தவிர்க்கவும், பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றங்கள் புரிந்த குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டள்ளது. இதற்கான உத்தரவை தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் பிறப்பித்துள்ளார்.
- 11:51 (IST) 18 Sep 2022சிறுத்தைப்புலிகள் வந்துவிட்டது; இளைஞர்களுக்கு 16 கோடி வேலை எப்போது வரும்? ராகுல்காந்தி கேள்வி...!
ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "நமீபியாவில் 8 சிறுத்தைப்புலிகள் வந்து விட்டது. ஆனால் 8 ஆண்டுகளில் வந்திருக்க வேண்டிய 16 கோடி வேலைவாய்ப்புகள் எப்போது வரும்? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது சவாலாக உள்ளது." என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- 11:17 (IST) 18 Sep 2022பசவராஜ் பொம்மை உடன் பினராயி விஜயன் சந்திப்பு
பெங்களூருவில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்திப்பு
- 10:51 (IST) 18 Sep 2022மெகா தடுப்பூசி முகாம் நிறைவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
செப்டம்பர் 30ம் தேதியுடன் மெகா தடுப்பூசி முகாம் நிறைவு. ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
மொத்தமாக 5.37 கோடி தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் தடுப்பூசி செலுத்துவதில் சிறிய மாற்றம்.
அக்டோபர் முதல் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெறும் என சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
- 10:47 (IST) 18 Sep 2022பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடிய வாய்ப்பு தற்போது இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும்.
காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடிய வாய்ப்பு தற்போது இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- 10:18 (IST) 18 Sep 2022புரட்டாசி துவக்கம் - காசிமேட்டில் குறைந்த மக்கள் கூட்டம்
இன்று முதல் புரட்டாசி மாதம் துவக்குவதால், காசிமேட்டில் இறைச்சி வாங்க குறைந்த அளவிலான மக்கள் வந்திருந்தனர்.
அசைவ பிரியர்கள் இன்றி, சற்று கூட்டம் குறைந்து காணப்பட்ட மீன் சந்தை.
மீன்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டாலும் மந்தமான வியாபாரம்
- 10:09 (IST) 18 Sep 2022'ப்ளூ' காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே பரவி வரும் 'ப்ளூ' காய்ச்சல் குறித்து பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
'ப்ளூ' காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
- 10:04 (IST) 18 Sep 2022சென்னையில் துணை நடிகை தற்கொலை - போலீசார் விசாரணை
சென்னை, விருகம்பாக்கத்தில் துணை நடிகை தீபா தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
- 09:07 (IST) 18 Sep 2022போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதாக மேலும் 2 பேர் கைது
தூத்துக்குடி : கோவில்பட்டியில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக மேலும் 2 பேர் கைது
இந்து முன்னணி அமைப்பின் நகர தலைவர் சீனிவாசன், இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட பொது செயலாளர் பரமசிவம் கைது.
- 09:06 (IST) 18 Sep 2022பேரங்கியூர் பகுதியில் கிராம மக்கள் சாலை மறியல்
விழுப்புரம் பேரங்கியூர் பகுதியில் கிராம மக்கள் சாலை மறியல். தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 இளைஞர்களை மீட்க கோரி போராட்டம்
போராட்டத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
- 08:02 (IST) 18 Sep 2022லண்டன் சென்றடைந்தார் திரௌபதி முர்மு
லண்டன் சென்றடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. நாளை நடைபெறும் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக முர்மு லண்டன் சென்றுள்ளார்.
- 08:02 (IST) 18 Sep 2022மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சாதிய பாகுபாடு இல்லை
சங்கரன்கோவில் அருகே ஊர் கட்டுப்பாடு எனக்கூறி, சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த விவகாரம். மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சாதிய பாகுபாடு இல்லை - மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிக்கை.
பள்ளியில் பெஞ்ச் இல்லாததால் அனைத்து மாணவர்களையும் தரையில் அமர வைத்தே வகுப்புகள் நடைபெறுவதாக ஆசிரியர்கள் விளக்கம்.
அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான உணவே வழங்கப்படுவதாக சத்துணவு அமைப்பாளர் விளக்கம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.