/tamil-ie/media/media_files/uploads/2023/01/Senkottaiyan-AIADMK.jpg)
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரை
2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் ஆடவர், மகளிர் பிரிவில் தலா 6 ஆணிகள் பங்கேற்கும், 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை சேர்க்க ஒலிம்பிக் போட்டியின் அமைப்பு குழுவிடம் ஐசிசி பரிந்துரை செய்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் மும்பையில் நடக்கும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.
அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தம்
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும், பா.ஜ.க எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் மீது இளம் மல்யுத்த வீராங்கனைகள், ஒலிம்பிக் வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள மேற்பார்வை கமிட்டி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அனைத்து செயல்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:11 (IST) 22 Jan 2023ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தி.மு.க தேர்தல் பணிக்குழு அமைப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக தி.மு.க தலைமை 31 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளது. இந்த தேர்தல் பணிக் குழுவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, எ.வ.வேலு, நாசர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
- 21:33 (IST) 22 Jan 2023உலகக் கோப்பை ஹாக்கி - வெளியேறியது இந்திய அணி
உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பெனாலிட்டி முறையில் இந்திய அணி தோல்வி அடைந்தது. நாக் அவுட் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் உலகக் கோப்பை ஹாக்கியில் இருந்து இந்திய அணி வெளியேறியது.
- 21:19 (IST) 22 Jan 2023ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மிகுந்த சவாலாக இருக்காது - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மிகுந்த சவாலாக இருக்காது என நினைக்கிறேன்; பா.ஜ.க சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன். மக்கள் ஜி. ராஜன் இடைத்தேர்தலில் சீட் கேட்டது தவறில்லை; என் இளைய கனுக்குதான் சீட் கேட்டு கோரிக்கை வைத்தேன். அகில இந்திய காங்கிரஸ் தலைமை எனக்கு சீட் தந்தது என் மேல் வைத்திருக்கக் கூடிய நம்பிக்கையைக் காட்டுவதாக நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
- 21:15 (IST) 22 Jan 2023ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தலைமை முடிவை ஏற்கிறேன் - காங். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “தலைமையின் முடிவை ஏற்கிறேன். காங்கிரஸ் தலைமை என்மீது நம்பிக்கை வைத்து ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
- 20:04 (IST) 22 Jan 2023சென்னை புத்தகக் காட்சியில் ரூ.16 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை - பபாசி செயலாளர் முருகன்
சென்னையில் ஜனவரி 6-ம் தேதி தொடங்கிய 46வது சென்னை புத்தகக் காட்சி இன்று ஜனவரி 22-ம் தேதி உடன் நிறைவடைகிறது. சென்னை புத்தகக் காட்சியில் இந்த 17 நாட்களில் ரூ. 16 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாக பபாசி செயலாளர் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை 46வது புத்தகக் காட்சியில் சுமார் 15 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக பபாசி செயலாளர் முருகன் தெரிவித்துள்ளார்.
- 20:00 (IST) 22 Jan 2023தரமான சாலைகளே விபத்துக்கு காரணம் - பா.ஜ.க எம்.எல்.ஏ. நாராயண் படேல்
மத்தியப் பிரதேசம், மண்டானா தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ நாராயண் படேல் பேட்டி: “எனது தொகுதியில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. சாலைகள் மிகவும் தரமாக இருப்பதால் வாகனங்கள் வேகமாக சென்று கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குகின்றன. சிலர் மது குடித்துவிட்டும் வேகமாக வாகனத்தை ஓட்டுகின்றனர்.” என்று கூறியுள்ளார்.
- 19:47 (IST) 22 Jan 2023ஜல்லிக்கட்டு திடலுக்கு வெளியே மாடு முட்டி இறந்த 3 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம்
ஜல்லிக்கட்டு போட்டியின்போது, திடலுக்கு வெளியில் மாடு முட்டி, காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 3 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- 19:08 (IST) 22 Jan 2023ஈரோடு கிழக்கு வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: காங்கிரஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அதிகாரபூர்வ அறிவித்துள்ளது.
- 18:59 (IST) 22 Jan 2023குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் 260 கிலோ தங்கம் கையிருப்பு
கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் குருவாவூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலில் உள்ள 1,700 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் ஆக உள்ளது. மேலும், கோவிலில் 260 கிலோ தங்கம் கையிருப்பில் உள்ளது.
இந்தத் தகவல்கள் ஆர்டிஐ பதில் மூலம் வெளிவந்துள்ளன.
- 18:48 (IST) 22 Jan 2023பிராந்திய மொழியில் தீர்ப்புகள்.. உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பிரதமர் பாராட்டு
உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் வழங்குவதற்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தினார்.
இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
- 18:31 (IST) 22 Jan 2023கர்நாடக முதலமைச்சர் மீது சித்த ராமையா குற்றச்சாட்டு
கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்த ராமையா, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.
அதில், அரசியல் ஆதாயத்திற்காக கடலோர கர்நாடகத்தை இந்துத்துவவாதிகளின் ஆய்வகமாக மாற்ற ஆளும் பாஜக முயற்சிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
- 18:27 (IST) 22 Jan 2023இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன்.. சுட்டு வீழ்த்திய போலீஸ்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகில் போதைப்பொருள் ஏற்றிச் சென்ற ட்ரோன்-ஐ எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பஞ்சாப் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையின் போது சுட்டு வீழ்த்தினர்.
இந்திய பாகிஸ்தான் எல்லையில் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
- 18:03 (IST) 22 Jan 2023பிரதமர் நரேந்திர மோடிக்கு, தேவகவுடா கடிதம்
பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் என எஃகு அமைச்சகம் மற்றும் செயில் அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம் எழுதியுள்ளார்.
- 17:41 (IST) 22 Jan 2023குடியரசுத் தினம்.. மராட்டியத்தில் 189 கைதிகள் விடுதலை
மகாராஷ்டிரா முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 189 கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்,
இதில் தானே மத்திய சிறையில் இருந்து 3 பேர் விடுவிக்கப்பட்ட உள்ளனர். நாட்டின் 75ஆவது குடியரசுத் தினத்தை முன்னிட்டு இந்தக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.
- 17:23 (IST) 22 Jan 2023சென்னை புத்தக கண்காட்சி நிறைவு
சென்னை புத்தகக் கண்காட்சியின் கடைசி நாளான இன்று, திரளாக மக்கள் வருகை. ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
சென்னை புத்தக கண்காட்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
- 16:54 (IST) 22 Jan 2023சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், காரைக்கால் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 16:25 (IST) 22 Jan 2023மும்பையில் ரூ.23 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்.. அதிர்ச்சி சம்பவம்
மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை அருகே உள்ள கோவந்தி பகுதியில் ரூ.23 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக இருவர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
- 16:15 (IST) 22 Jan 2023குடியரசுத் தினம்.. எல்லையில் தீவிர கண்காணிப்பு
குடியரசுத் தினத்தை முன்னிட்டு இந்திய பாகிஸ்தான் எல்லையில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஜன.21ஆம் தேதி தொடங்கிய இந்தத் தீவிர கண்காணிப்பு ஜன.28ஆம் தேதிவரை தொடரும் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 15:52 (IST) 22 Jan 2023மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த கும்பல் சிக்கியது. ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த சிவக்குமார் மற்றும் சதீஷ், ராஜலெட்சுமி கைது செய்யப்பட்டுள்ளனர்
- 15:28 (IST) 22 Jan 2023பணம், பரிசு பொருள் வழங்கினால் கடும் நடவடிக்கை - ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
பணம், பரிசு பொருள் விநியோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேறுபாடுகளை தூண்டும் வகையில் பிரசாரம் கூடாது என ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்
- 15:17 (IST) 22 Jan 2023திருச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை துடிப்புடன் வீரர்கள் அடக்கி வருகின்றனர். வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளை உரிமையாளருக்கு விதவிதமான பரிசு வழங்கப்படுகிறது
- 14:54 (IST) 22 Jan 2023தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா
சென்னையில் கடந்த பருவ மழையின் போது இரவு பகலாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா வரும் 31ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்
- 14:42 (IST) 22 Jan 2023ராமேஸ்வரத்தில் 97 மீன்பிடி விசைப்படகுகள் மீது வழக்கு பதிவு; 4 டன் மீன்கள் பறிமுதல்
ராமேஸ்வரம் வடக்கு கடல் பகுதியில் 97 மீன்பிடி விசைப்படகுகள் மீது மீன்வளத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், 4 டன் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
- 14:22 (IST) 22 Jan 2023சென்னையில் பைக்கில் அதிவேகமாக சென்ற இளைஞர் தடுப்பில் மோதி மரணம்
சென்னை நீலாங்கரை அருகே ஈ.சி.ஆர் ரோட்டில் நண்பர்களுடன் பைக்கில் அதிவேகமாக சென்ற இளைஞர் தடுப்பில் மோதி உயிரிழந்துள்ளார், உடன் சென்று நண்பருக்கு பலத்த காயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
- 13:59 (IST) 22 Jan 2023மழைநீர் வடிகால் பணிகள் முதலமைச்சர் நேரில் ஆய்வு
சென்னை, ஆதம்பாக்கத்தில் 1,420 மீட்டர் நீளத்திற்கு ரூ.15.53 கோடியில் அமைக்கப்படும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்
- 13:33 (IST) 22 Jan 2023ஈரோடு கிழக்கில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன் - சஞ்சய் சம்பத்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத் தெரிவித்துள்ளார்
- 13:27 (IST) 22 Jan 2023தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் புதிய அப்டேட்
நடிகர் தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
- 13:12 (IST) 22 Jan 2023தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- 12:51 (IST) 22 Jan 2023கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக நீதிபதிகள் நேரில் ஆய்வு
கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை முறையாக ஆய்வு செய்யவில்லை என்ற குற்றம்சாட்டப்பட்டவர்கள் வாதிட்ட நிலையில் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
- 12:48 (IST) 22 Jan 2023திமுகவின் பீ டீமாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார் - ஜெயக்குமார்
திமுகவின் பீ டீமாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். அவர், பீகார், ஒடிசா என்று எங்கு போனாலும் அதை பற்றி கவலையில்லை. ஓபிஎஸ் வேட்பாளரை நிறுத்தினால் சுயேட்சை வேட்பாளராக தான் கருத முடியும்" "ஓபிஎஸ் நிறுத்தும் வேட்பாளர் நோட்டாவை விட குறைவான வாக்குகளை தான் பெறுவார்" என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
- 12:47 (IST) 22 Jan 2023ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : 2-வது நாளாக காங்கிரஸ் ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகத்தில் 2வது நாளாக நடைபெற்று வருகிறது
- 12:11 (IST) 22 Jan 2023அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் - பா.ஜ.க விருப்பம்
இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் அண்ணாமலை அறிவிப்பார்" "அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என பாஜக மாநில துணை தலைவர் ராமலிங்கம் கூறியுள்ளார்.
- 11:54 (IST) 22 Jan 2023இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சியில் பெண் வேட்பாளர் போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் போட்டியிட உள்ளதாகவும், வரும் 29ம் தேதி ஈரோட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
- 11:53 (IST) 22 Jan 2023அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் - பா.ஜ.க விருப்பம்
இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் அண்ணாமலை அறிவிப்பார்" "அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என பாஜக மாநில துணை தலைவர் ராமலிங்கம் கூறியுள்ளார்.
- 11:24 (IST) 22 Jan 2023மழைநீர் வடிகால் பணிகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை ஆதம்பாக்கத்தில் 1,420 மீட்டர் நீளத்திற்கு ரூ.15.53 கோடியில் அமைக்கப்படும் மழைநீர் வடிகால் பணிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்
- 11:23 (IST) 22 Jan 2023கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடர் - சானியா தோல்வி
கிராண்ட்ஸ்லாம் தொடரை தோல்வியுடன் நிறைவு செய்தார் சானியா அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரில் தோல்வி யை துழுவியுள்ளார்.
- 10:44 (IST) 22 Jan 2023உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு
- 10:44 (IST) 22 Jan 2023புதிய மருத்துவமனை - முதல்வர் நேரில் ஆய்வு
சென்னை: கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்படும் புதிய பன்னோக்கு மருத்துவமனை ரூ.230 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 10:30 (IST) 22 Jan 2023மனிதக்கழிவு கலப்பு - சிபிசிஐடி 7ஆவது நாளாக விசாரணை
புதுக்கோட்டை இறையூரில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு வழக்கில் சிபிசிஐடி 7-வது நாளாக விசாரணை. சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் தலைமையிலான போலீஸ் கிராம மக்களிடம் விசாரணை
- 10:00 (IST) 22 Jan 2023திருச்சி கூத்தப்பார் கிராமத்தில் ஜல்லிக்கட்டு
திருச்சி: கூத்தப்பார் கிராமத்தில் களைகட்டும் ஜல்லிக்கட்டு. 700 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை துடிப்புடன் அடக்கும் காளையர்கள் .
வெற்றி பெறும் வீரர்கள், காளை உரிமையாளருக்கு விதவிதமான பரிசு
- 09:22 (IST) 22 Jan 2023சென்னையில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை
குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. முப்படை, தேசிய மாணவர் படை, மத்திய தொழிற் பாதுகாப்பு படை, காவல், தீயணைப்புத்துறையினர் ஒத்திகை செய்தனர்.
- 08:12 (IST) 22 Jan 2023மணிரத்னம் மீது நீதிமன்றத்தில் மனு
இயக்குநர் மணிரத்னம் மீது நீதிமன்றத்தில் மனு.
இயக்குநர் மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு .
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், வரலாற்றை திரித்து எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு
- 08:11 (IST) 22 Jan 2023ஜோ பைடன் வீட்டில் FBI சோதனை
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் FBI அதிகாரிகள் அதிரடி சோதனை.
13 மணி நேர சோதனைக்குப் பின், அவர் வீட்டில் இருந்து ஏராளமான ரகசிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள். அவர் துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்கள் பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு.
- 08:07 (IST) 22 Jan 2023ஈரோடு கிழக்கு தேர்தல்: குஜராத் புறப்பட்டார் ஓ.பி.எஸ்
குஜராத் புறப்பட்டார் ஓ.பி.எஸ்
சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குஜராத் புறப்பட்டார்
குஜராத்தில் பாஜக பிரதிநிதிகளை சந்திக்க இருப்பதாக தகவல்
- 08:06 (IST) 22 Jan 2023தமிழகத்தில் ஆளுநராக பணியாற்றுவது சிறந்த அனுபவம் - ஆர்.என். ரவி
தமிழகத்தில் ஆளுநராக பணியாற்றுவது சிறந்த கற்றல் அனுபவமாக உள்ளது. தமிழகம் உடைக்க முடியாத ஒரு பாரம்பரிய தொடர்பைக் கொண்டுள்ளது. வெளிநாட்டில் குடியேறிய தமிழக மக்கள் கூட அங்கு தமிழ் மரவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர் - சென்னையில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.