பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 201-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மாண்டஸ் புயல் உருவானது
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற்றது. 'மாண்டஸ்' எனப் பெயரிடப்பட்ட இந்த புயலானது தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 640 கிமீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கும் இடையே நாளை புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குஜராத், இமாச்சல் வாக்கு எண்ணிக்கை
குஜராத், இமாச்சல் பிரதேசம் சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி எண்ணப்படுகிறது. குஜராத்திலுள்ள 182 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாகவும், இமாச்சல் பிரதேசத்திலுள்ள 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
-
20:14 (IST) 08 Dec 2022
சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் உயிரிழப்பு
சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் கூட்டாளியாக திகழ்ந்தவர் தீனதயாளன். தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் உள்ள சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்த வழக்கில் சிறை சென்ற தீனதயாளன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே இவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
-
17:08 (IST) 08 Dec 2022
சிவந்தி ஆதித்தனார் தலைமையில் தென்காசி கோயில் திருப்பணி - முதல்வர் ஸ்டாலின்
தென்காசி அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் "தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் தலைமையில் தென்காசி கோயில் திருப்பணி நடைபெறும் என்றும், தென்காசி கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டியவர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்றும் கூறிய அவர், ஆன்மிகத்திற்கும், வீரத்திற்கும் புகழ்பெற்ற தென்காசிக்கு வந்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
-
17:03 (IST) 08 Dec 2022
பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை
எந்த ஒரு தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக நிர்வாகிகளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கட்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்றும் கூறியுள்ளார். அண்ணாமலை
-
08:17 (IST) 08 Dec 2022
முதல்வர் ஸ்டாலின் தென்காசி சென்றார்
தென்காசி ரயில் நிலையத்தில் வந்திறங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .
தென்காசியில் ரூ.149 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் இன்று வழங்குகிறார்