தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 234, செங்கல்பட்டு 90, கோவையில் 122 பாதிப்புகள் பதிவாகின.
பெட்ரோல் – டீசல் விலை
பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும். டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இடுக்கி அணை திறப்பு – எச்சரிக்கை
கேரளா தொடர் மழை காரணமாக இன்று இடுக்கி அணை திறப்பு. முல்லை பெரியாறு கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்.
கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 4வது டி20 போட்டியில் அபார வெற்றிபெற்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றியது இந்தியா. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.
நிதி ஆயோக் கூட்டம்
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம். தேசிய கல்வி கொள்கை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது என்று தகவல்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான, கடைசி டி20 கிரிக்கெட் – இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 189 ரன்கள் இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதன் மூலம், இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 4-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
காமன்வெல்த் – இந்தியா மகளிர் அணி வெள்ளி வென்றது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது இந்திய அணி. 162 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 152 ரன்கள் எடுத்தது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய ஓபன் பி அணி வீரர் பிரக்யானந்தா வெற்றி பெற்றார். இன்றைய ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் களம் இறங்கிய பிரக்யானந்தா, அஜர்பைஜானின் வாசிப் துரார்பெய்லியை 66வது நகர்வில் வீழ்த்தினார்.
காமன்வெல்த் – டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்திய வீரர்கள் சரத்கமல் – சத்யன் ஞானசேகரன் இணை வெள்ளி பதக்கம் வென்றனர்.
காமன்வெல்த் போட்டியில் மகளிர் 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஜரீன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம், காமன்வெல்த் போட்டியில் இன்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
உயர் கல்வியில் தேசிய கல்விக் கொள்கையை கடைப்பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதனை வலியுறுத்தினார்.
சர்வதேச செஸ் போட்டிகளில் தொடர்ந்து 8 போட்டிகளில் இதுவரை குகேஷ் தோல்வியை சந்திக்கவில்லை.
இந்த நிலையில், அஜர்பைஜான் வீரர் சக்ரியார் உடன் வெள்ளை நிற காய்களுடன் விளையாடி 34ஆவது நகர்த்தலில் போட்டியை சமன் செய்தார்.
சென்னை துறைமுகத்துக்கு அமெரிக்க கடற்படை கப்பல் முதல் முறையாக வந்தது.
இந்தக் கப்பல் பழுது நீக்கம் பணிக்காக காட்டுப்பள்ளி துறைமுகம் வந்துள்ளது.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்தப் போட்டிகளின் நிறைவு விழா ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தமிழகம் வருகிறார்.
பாலிவுட் நடிகை ஆலியா பட் தான் சமூக வலைதளத்தில் வெளியிடும் ஒரு விளம்பர பதிவுக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காமன்வெல்த் போட்டியில் மகளிர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் ஆன்னு ராணி வெண்கல பதக்கம் வென்றார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக தங்கள் கருத்துகளை கூற பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பெற்றோர், ஆசிரியர்கள், உளவியலாளர்கள் தங்கள் கருத்துகளை homesec@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
ஆமிர் கானின் லால் சிங் சத்தா படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய உதயநிதி, “ஆமிர்கான் வீடியோ காலில் என்னைத் தொடர்பு கொண்டார். படத்தை பார்க்காமலே வெளியிடுகிறேன் என ஒப்புக்கொண்டேன்” என்றார்.
காமன்வெல்த் போட்டியில் மும்முறை தாண்டுதல் என்னும் டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவின் எல்தோஸ் பால் தங்கமும், அப்துல்லா அபூபக்கர் வெள்ளியும் வென்று அசத்தியுள்ளனர்.
சென்னை ஆலந்தூர் மெட்ரோ அருகே வழிகாட்டி பலகை விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சாலை வழிகாட்டி பலகை சரிந்து மாநகர பேருந்து, வேன் மற்றும் ஆட்டோ மீது விழுந்தது.
இதில் இருவர் காயமுற்றனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
கருமுட்டை விற்பனையில் ஈடுபட்ட ஈரோடு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து மருத்துவத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கல பதக்கம் பெற்றுள்ளது. பெனால்டி ஷூட் அவுட்டில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது
காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்க பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் நீத்து கங்காஸ் தங்கம் வென்று அசத்தியுள்ளார்
காமன்வெல்த் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். சிங்கப்பூரின் யோ ஜியா மின்னை வீழ்த்தி அவர் வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்
SSLV D1 ராக்கெட் மிஷன் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தோல்விக்கு சென்சார் செயலிழப்பே காரணம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது
இந்தியாவின் உயர் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்-இன் முதல் பெண் தலைமை இயக்குனராக கலைச்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியாவின் 75வது கிராண்ட் மாஸ்டரானார் தமிழகத்தை சேர்ந்த வீரர் பிரனவ் வெங்கடேஷ்.
மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 1.20 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
செங்கல்பட்டு: தேர்தல் முன் விரோதம் காரணமாக அச்சரப்பாக்கம் பேரூராட்சி 13ஆவது வார்டு கவுன்சிலர் சுரேஷை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த சுரேஷ்க்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்துவது குறித்து மக்கள் homesec@tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 12ம் தேதி வரை கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தேர் விபத்தில் காயமடைந்த ஒருவர் பலி புதுக்கோட்டை தேர் விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த ராஜகுமாரி(52) உயிரிழப்பு .
தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கிவைக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
தென்காசி, குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.
ஸ்ரீஹரிக்கோட்டவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட SSLV ராக்கெட்டின் சிக்னல் கிடைக்கவில்லை. EOS 2 மற்றும் ஆசாதி-சாட் செயற்கைக்கோள்களின் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் – கருணாநிதி உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மெரினா வந்தடைந்த அமைதிப் பேரணி. ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து புறப்பட்ட திமுகவின் அமைதிப் பேரணி மெரினா வந்தடைந்தது.