78 முறை பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசு
2021-22ஆம் ஆண்டில் பெட்ரோல் விலையை 78 முறையும், டீசல் விலையை 76 முறையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பெட்ரோல் விலை 7 தடவையும், டீசல் விலை 10 முறையும் குறைத்துள்ளது எனத் தகவல்.
பெட்ரோல் – டீசல் விலை
சென்னையில் 64வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
குடியரசு தலைவர் பதவியேற்பு
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக இன்று பதவியேற்கும் திரௌபதி முர்மு. டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்பு ஏற்பாடுகள் தீவிரம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
அதிமுக போராட்டம்
மின்கட்டண உயர்வை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil3.
- 23:10 (IST) 25 Jul 2022இ.பி.எஸ்-க்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை
டெண்டர்களை தனது உறவினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கியதில் சுமார் ரூ. 4000 கோடி ஊழல் என வழக்கு தொடரப்பட்டது.
4 ஆண்டாக நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணை நாளை பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி முறையிட, விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
- 22:10 (IST) 25 Jul 2022ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 15 பேர் நீக்கம் - பழனிசாமி அறிவிப்பு
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் நியமித்த கு.ப.கிருஷ்ணன் உள்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 15 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
- 22:09 (IST) 25 Jul 202210ம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு
10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் வரும் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும்; புதிய மதிப்பெண் சான்றிதழும் தேர்வுத்துறை இணையதளத்தில் 27ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
- 21:12 (IST) 25 Jul 2022தமிழ்நாட்டில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது என அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது குறித்த வழக்கில் தமிழ்நாட்டில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது என அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 21:11 (IST) 25 Jul 2022கோவில்பட்டி அருகே புதுமண காதல் ஜோடி படுகொலை - பெண்ணின் தந்தை கைது
கோவில்பட்டி அருகே வீரப்பட்டி கிராமத்தில் காதல் திருமணம் செய்த மாணிக்க ராஜ் (26) மற்றும் ரேஷ்மா (20) வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில், பெண்ணின் தந்தை முத்துக்குட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் மாணிக்க ராஜ் மற்றும் ரேஷ்மா வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்த இருவரும் 2 நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பிய நிலையில் இருவரும் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
- 20:15 (IST) 25 Jul 2022அதிமுக அலுவலக மோதல்- 70 பேருக்கு முன்பிணை மறுப்பு
அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக 70 பேருக்கு முன்பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.
- 19:14 (IST) 25 Jul 2022கனியாமூர் பள்ளியில் ஆன்லைன் வகுப்பு?
கனியாமூர் பள்ளியில் வருகிற 27ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்கள் எந்தப் பள்ளியில் பயில விரும்பினாலும் அதற்கும் ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறினார். கனியாமூர் பள்ளியில் மாணவி மர்ம மரணத்தையடுத்து பெரும் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
- 18:49 (IST) 25 Jul 2022தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க கோரி முதவர் கடிதம்
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியள்ளார்.
- 18:08 (IST) 25 Jul 2022தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க கோரி முதவர் கடிதம்
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியள்ளார்.
- 18:02 (IST) 25 Jul 2022காங்கிரஸ் கட்சியின் 4 மக்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட்
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மாணிக்கம் தாகூர் ஜோதி மணி உள்ளிட்ட 4 மக்களவை உறுப்பினர்கள் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்வதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் கூறியுள்ளார்.
- 17:23 (IST) 25 Jul 2022பள்ளியில் சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதில் புதிய சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை
மாணவி உயிரிழப்பை தொடர்ந்து கலவரத்தில் சூரையாடப்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு வரும் ஜூலை 27-ந் தேதி முதல் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
மேலும் பள்ளியில் சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதில் புதிய சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெற்றோர்கள் விரும்பினால் தமிழகத்தில் உள்ள எந்த பள்ளியில் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்
- 17:21 (IST) 25 Jul 2022சிலை கடத்தல் - கூடுதல் மனு தாக்கல்
சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிறப்பு அமர்வில் பட்டியலிட வேண்டும் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். வெவ்வேறு அமர்வுகளில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளால் குழப்பம் ஏற்படுகிறது என அவர் தெரிவித்துள்ள நிலையில் முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- 16:58 (IST) 25 Jul 2022கள்ளக்குறிச்சியில் சூரையாடப்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பை தொடர்ந்து கலவரத்தில் சூரையாடப்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு வரும் ஜூலை 27-ந் தேதி முதல் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், அந்த பள்ளி மாணவர்கள் அவரகள் விரும்பும் பள்ளியில் படிக்க அரசின் சார்பில் பரிந்துரைக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
- 16:29 (IST) 25 Jul 202210 மாவட்ட செயலாளர்களை நீக்கி ஓ.பி.எஸ் உத்தரவு
அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் 10 பேரை நீக்கி ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, சேதுராமன் உள்பட 10 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
- 15:56 (IST) 25 Jul 2022அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் – ஓ.பி.எஸ் அறிவிப்பு
அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் செய்யப்படுவதாக, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை துணை ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்தும் ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார்
- 15:25 (IST) 25 Jul 2022திரௌபதி முர்முவுக்கு இலங்கை அதிபர் ரணில் வாழ்த்து
இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்
- 15:08 (IST) 25 Jul 2022திருவள்ளூர் மாணவி தற்கொலை விவகாரம் - விசாரணை அதிகாரி நியமனம்
திருவள்ளூர் மாணவி சந்தேக மரண வழக்கில் விசாரணை அதிகாரியாக மாவட்ட சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுர சுந்தரி நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரியை நியமித்து டிஐஜி சத்யபிரியா உத்தரவிட்டுள்ளார்
- 14:59 (IST) 25 Jul 2022மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். அவர் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தமிழில் உறுதி மொழி ஏற்று பதவியேற்றுக் கொண்டார்
- 14:52 (IST) 25 Jul 2022மகாராஷ்டிராவில் பயிற்சி விமானம் விபத்து
மகாராஷ்டிரா, புனேவில் விமான பயிற்சியின் போது வயலில் இறங்கி சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. லேசான காயங்களுடன் பெண் விமானி உயிர் தப்பியுள்ளார். இந்த நிலையில் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்
- 14:40 (IST) 25 Jul 2022திருவள்ளூர் பள்ளி மாணவி மரண வழக்கு – சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
திருவள்ளூர் பள்ளி மாணவி மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவி மரண வழக்கை சந்தேக மரணமாக பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது
- 13:42 (IST) 25 Jul 2022பாலியல் புகார்: அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
விருதுநகர் மாவட்டம் புதுச்சூரங்குடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் தாமோதரன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் கல்வி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, ஆசிரியர் தாமோதரன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
- 12:52 (IST) 25 Jul 2022ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கு எதிராக காங்.மனு: விசாரணை மறுப்பு
ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டத்திற்கு எதிரான மனு என்பதால் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தல்.
- 12:28 (IST) 25 Jul 2022மாணவி மரணம்
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 12:28 (IST) 25 Jul 2022கீழச்சேரி பள்ளி வளாகத்தில் போலீசார் குவிப்பு
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் மாணவி இறந்ததாக கூறப்படும் பள்ளியில் பிற மாணவர்களின் பெற்றோர் குவிந்து வருகின்றனர். இதனால், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க கீழச்சேரி பள்ளி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- 12:26 (IST) 25 Jul 2022மாணவி பள்ளி விடுதியில் மரணம்
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 11:26 (IST) 25 Jul 2022அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
சென்னை, நுங்கம்பாக்கத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசு பள்ளியில் உயர்கல்வி படிக்கும் 6.35 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 11:26 (IST) 25 Jul 2022மாணவி மரணம்
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 11:06 (IST) 25 Jul 2022குடியரசு தலைவர் மாளிகைக்கு புறப்பட்ட திரெளபதி முர்மு
தேசிய கீதத்துடன் குடியரசு தலைவர் பதவி ஏற்பு விழா நிறைவடைந்தது. புதிய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, குதிரைப்படை வீரர்கள் புடைசூழ குடியரசு தலைவர் மாளிகைக்கு புறப்பட்டார். அவருக்கு மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- 11:03 (IST) 25 Jul 2022நஞ்சம்மா பாட்டிக்கு தேசியவிருது வழங்கப்பட்டது பெருமகிழ்ச்சி..
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, இருளர் சமுதாயத்தை சேர்ந்த,காந்த குரல் நஞ்சம்மா பாட்டிக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான தேசியவிருது வழங்கப்பட்டது பெருமகிழ்ச்சி- கே. அண்ணாமலை
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, இருளர் சமுதாயத்தை சேர்ந்த,காந்த குரல் நஞ்சம்மா பாட்டிக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான தேசியவிருது வழங்கப்பட்டது பெருமகிழ்ச்சி
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) July 25, 2022
ஒரு ரசிகனாக அவரை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்ததை என்பாக்கியமாக கருதுகிறேன்
- மாநில தலைவர் திரு.@annamalai_k#KAnnamalai pic.twitter.com/4OBTQPe5Pd - 10:47 (IST) 25 Jul 2022வேலு நாச்சியார், ராணி லக்ஷ்மி பாய்.. திரெளபதி முர்மு உரை
வேலு நாச்சியார், ராணி லக்ஷ்மி பாய் ஆகியோர் தேச பாதுகாப்பில் புதிய உயரங்களை அளித்துள்ளனர். கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் காட்டிய ஒத்துழைப்பு, துணிச்சல் மற்றும் வலிமையின் அடையாளம். ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியா 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்தது என நாடாளுமன்றத்தில் புதிய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக திரெளபதி முர்மு உரையாற்றினார்.
- 10:46 (IST) 25 Jul 2022உங்களின் நம்பிக்கை என்னுடைய மிகப்பெரிய பலம்.. முர்மு
75-வது சுதந்திர தின வருடத்தில் குடியரசு தலைவராக பொறுப்பேற்றது மகிழ்ச்சி. உங்களின் நம்பிக்கையும் ஆதரவும் என்னுடைய மிகப்பெரிய பலமாக இருக்கும். கோடிக்கணக்கான நாட்டு மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடே வாக்குகள். குடியரசுத் தலைவராக இளைஞர்கள் மற்றும் பெண்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என திரெளபதி முர்மு உறுதி அளித்தார்.
- 10:30 (IST) 25 Jul 2022இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டார் திரெளபதி முர்மு
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரளபதி முர்மு பதிவி ஏற்றுக்கொண்டார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
- 09:22 (IST) 25 Jul 2022திரெளபதி முர்மு காந்தி நினைவிடத்தில் மரியாதை
புதிய குடியரசு தலைவராக பதவி ஏற்கும் திரெளபதி முர்மு காந்தி நினைவிடத்தில் மரியாதை . டெல்லி, ராஜ்கட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை .
LIVE: President-elect Smt Droupadi Murmu pays homage to Mahatma Gandhi at Rajghat https://t.co/72sto2wDl3
— President of India (@rashtrapatibhvn) July 25, 2022 - 08:49 (IST) 25 Jul 2022ஹர்மோகன் சிங் யாதவின் நினைவு தினம்: மோடி உரை
ஹர்மோகன் சிங் யாதவின் 10வது நினைவு தினத்தை முன்னிட்டு காணொளி வாயிலாக பிரதமர் மோடி இன்று உரை
- 08:39 (IST) 25 Jul 2022மின்கட்டண உயர்வு: அதிமுக போராட்டம்
மின்கட்டண உயர்வை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம். சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
- 08:39 (IST) 25 Jul 2022விஷ்ணு பிரசன்னா முதலிடம்
1,414 பேர் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் பயிற்சி போட்டியில் சென்னை வீரர் அசத்தல். 9 சுற்றுகளிலும் வென்று கிராண்ட்மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா முதலிடம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.