Tamil News Today : லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 7-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் என்.புவியரசன் அறிவித்துள்ளார். இந்நிலையில் இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு
சமீப காலமாக விறுவிறுவென ஏறிக்கொண்டிருந்த பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க, பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தீபாவளி நாளான இன்று கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ.5-ம், டீசல் மீதான வரியில் ரூ.10-ம் குறைப்பதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிவித்து உள்ளது. ரூ.106.66 விற்ற பெட்ரோல் ரூ.5.26 குறைந்து ரூ.101.40-க்கும், ரூ.102.59-க்கு விற்ற டீசல் லிட்டர் ரூ.11.16 காசுகள் குறைந்து ரூ.91.43-க்கும் விற்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை 7 ரூபாய் குறைத்து முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருக்கிறார். இதனால், புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.12.85 குறைந்து ரூ.94.94-க்கும், டீசல் விலை 19 ரூபாய் குறைந்து லிட்டருக்கு ரூ.83.58-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு
சட்டப்பேரவையில், கடந்த செப். 13-ம் தேதி நடந்த காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவலர்கள் தங்கள் உடல்நலனை பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என்று அறிவித்தார். காவலர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு அளிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு காவல்துறை சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 20:38 (IST) 04 Nov 2021பசும்பொன் குருபூஜை அன்று அரசு வாகனங்கள் மீது ஏறி நடனம் ஆடிய 5 பேர் கைது
பசும்பொன் குருபூஜை அன்று கமுதி அருகே காவல்துறை மற்றும் அரசு வாகனங்கள் மீது ஏறி நடனம் ஆடிய விவகாரத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 5 இளைஞர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
- 19:43 (IST) 04 Nov 2021பெட்ரோல் டீசல் கலால் வரி குறைப்பு : ப.சிதம்பரம் விமர்சனம்
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 மற்றும் 10 ரூபாய் வீதம் குறைத்து நேற்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முகன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இடைத் தேர்தல்களில் தோல்வியின் எதிரொலியே பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
- 19:41 (IST) 04 Nov 2021கடையநல்லூர் அருகே வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு படையினர் மீட்க முயற்சி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கல்லாறு பகுதிக்கு குளிக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர். வழியில் இரண்டு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் திரும்ப முடியவில்லை; தீயணைப்புத்துறையினர் சிக்கியவர்களை மீட்க முயற்சி செய்து வருகின்றனர்.
- 19:33 (IST) 04 Nov 2021முதலமைச்சர் ஸ்டாலினைப் பாராட்டிய நடிகர் சூர்யா!
எளிய பழங்குடி மக்களின் இல்லம் தேடிச் சென்று முதல்வர் வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்க. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது. எளிய மக்களின் தேவை அறிந்து உடன் செயலில் இறங்கிய வேகம் எங்களை பிரமிக்க வைக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.
- 18:31 (IST) 04 Nov 2021கடையநல்லூர் அருகே வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு படையினர் மீட்க முயற்சி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கல்லாறு பகுதிக்கு குளிக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர். வழியில் இரண்டு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் திரும்ப முடியவில்லை; தீயணைப்புத்துறையினர் சிக்கியவர்களை மீட்க முயற்சி செய்து வருகின்றனர்.
- 18:15 (IST) 04 Nov 2021சமூகநீதியை காப்பதே திராவிட இயக்கப் பணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையுடன் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சகோதரி அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல அது மரியாதை எனவும் அதை மீட்டுத் தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு என்று முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
- 17:14 (IST) 04 Nov 2021பெட்ரோல் டீசல் கலால் வரி குறைப்பு : ப.சிதம்பரம் விமர்சனம்
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 மற்றும் 10 ரூபாய் வீதம் குறைத்து நேற்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முகன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இடைத் தேர்தல்களில் தோல்வியின் எதிரொலியே பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
- 17:08 (IST) 04 Nov 2021விடிய விடிய மது அருந்திய 3 பேர் பலி
கோவை பாபநாயகன் பாளையத்தில் தீபாவளியை கொண்டாடும் வகையில் விடிய விடிய மது அருந்திய சக்திவேல் பார்த்தீபன் முருகானந்தம் ஆகிய 3 பேர் மரணமடைந்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 16:49 (IST) 04 Nov 2021தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசிதழில் வெளியீடு
தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தாம்பரத்துடன் பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உதயமானது
- 16:00 (IST) 04 Nov 2021பூண்டி சத்தியமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
தொடர் மழை காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி அணையிலிருந்து கொஸ்சதலை ஆற்றுக்கு திறந்து விடப்பட்ட உபரி நீர் கரை புரண்டு ஓடுவதால் மெய்யூர் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி
- 15:32 (IST) 04 Nov 2021பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு ரூ. 4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நரிக்குறவர்கள், இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- 15:10 (IST) 04 Nov 2021விழுப்புரம் - புதுச்சேரி எல்லையில் பரபரப்பு!
புதுச்சேரியை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருந்த நாட்டு பட்டாசு வெடித்து காலைநேசன் என்பவரும், 8 வயது சிறுவனும் சம்பவ இடத்திலே உடல்சிதறி உயிரிழந்தனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் சிதறும் அளவுக்கு நடந்த வெடி விபத்து நடந்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- 14:38 (IST) 04 Nov 2021'இருளர் மற்றும் குறவர் இனமக்கள் வாழ்வில் ஒளியேற்றும்நாள் இது' - முதல்வர் ஸ்டாலின்!
"பூஞ்சேரி இருளர், குறவர் இன மக்களுக்குப் பட்டா, சாதிச் சான்றிதழ் வழங்கினேன்; இம்மக்கள் வாழ்வில் ஒளியேற்றும் நாள் இது, இதேபோல் 2 வார காலத்துக்கு தமிழ்நாடு முழுக்க இம்மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 14:36 (IST) 04 Nov 2021'இருளர் மற்றும் குறவர் இனமக்கள் வாழ்வில் ஒளியேற்றும் நாள்' - முதல்வர் ஸ்டாலின்!
"பூஞ்சேரி இருளர், குறவர் இன மக்களுக்குப் பட்டா, சாதிச் சான்றிதழ் வழங்கினேன்; இம்மக்கள் வாழ்வில் ஒளியேற்றும் நாள் இது, இதேபோல் 2 வார காலத்துக்கு தமிழ்நாடு முழுக்க இம்மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 14:13 (IST) 04 Nov 2021சீனா நினைத்ததை விட மிக வேகமாக அணு ஆயுதங்களை அதிகரித்து வருகிறது -அமெரிக்கா எச்சரிக்கை
எதிர்பார்த்ததைவிட சீனா அதிவேகமாக அணு ஆயுதங்களைப் பெருக்கி வருவதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
சீனாவின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை ஆறு ஆண்டுகளுக்குள் 700 ஆக அதிகரிக்கலாம் என்றும், 2030க்குள் 1,000 ஆக உயரலாம் என்றும் அறிக்கை கூறுகிறது.
மேலும் தைவானின் நிலை குறித்த சீனாவின் நோக்கங்கள் குறித்து தாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 13:42 (IST) 04 Nov 2021உங்களால் தான் மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர் - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு
இந்த ஆண்டு தீபாவளியை காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் நவ்ஷாரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடியுள்ள பிரதமர் மோடி அவர்கள் மத்தியில் பேசுகையில், "ஒவ்வொரு தீபாவளியின் போதும் நமது எல்லைகளை பாதுகாக்கும் வீரர்களுடன் நான் கொண்டாடி வருகிறேன். இன்று நமது வீரர்களுக்காக கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆசியை என்னுடன் கொண்டு வந்துள்ளேன். உங்களால் தான் நமது நாட்டு மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர். பண்டிகை காலங்களில் மகிழ்ச்சி நிலவுகிறது." என்று தெரிவித்துள்ளார்.
- 13:15 (IST) 04 Nov 20219 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
டெல்டா மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 12:53 (IST) 04 Nov 2021விஜயகாந்தின் தீபாவளி வாழ்த்து
துன்பங்களும், துயரங்களும் நீங்கி, மகிழ்ச்சி பெருகுவதோடு, செழிப்பான வாழ்வு வாழ வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 12:31 (IST) 04 Nov 2021ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி
ஜம்மு-காஷ்மீர் ராஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா செக்டாரில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது என பிரதமர் மோடி உரையாற்றினார்.
- 12:11 (IST) 04 Nov 2021தமிழக ஆளுநரின் தீபாவளி வாழ்த்து
தீபாவளி திருநாள் மகிழ்ச்சிகரமாகவும், பசுமை நிறைந்ததாகவும் இருக்கட்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 12:03 (IST) 04 Nov 2021தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து, தற்போது ரூபாய். 35,576க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.22 குறைந்து, ரூபாய் 4,447க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 10:45 (IST) 04 Nov 2021கடந்த 24 மணி நேரத்தில் 4,79,000 பேருக்கு கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4,79,000 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 24,87,88,115 ஆக உயர்ந்துள்ளது.
- 10:38 (IST) 04 Nov 2021பட்டாக்கள் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்
செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நல வாரிய அட்டைகள் வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
- 10:33 (IST) 04 Nov 2021கலால் வரியை குறைத்த பிரதமருக்கு நன்றி
நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
- 10:32 (IST) 04 Nov 2021எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து
தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விடவும் தீபாவளியை உற்சாகத்துடனும் பாதுகாப்புடனும் கொண்டாட வாழ்த்துக்கள் என்று எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி தீபாவளி வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.
- 09:33 (IST) 04 Nov 2021நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி
“தீபாவளி திருநாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள்; இந்த தீபத்திருவிழா உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்வாய்ப்புகளையும் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.